Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:10:03 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7462
#KOTW7462
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, அக்டோபர் 30, 2011
மழ்ஹருல் ஆபிதீன் சார்பாக நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினருக்கு பாராட்டு விழா!
செய்திமாஸ்டர் கம்ப்யூட்டர்
இந்த பக்கம் 3792 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையின் செயலாளர் பாளையம் இபுறாஹீம் அவர்களின் மகளும், நகர்மனறத்தலைவியுமான P.M.I. ஆபிதா B.Sc., B.Ed., அவர்களுக்கும், 5வது வார்டு உறுப்பினர் ஜஹாங்கீர் அவர்களுக்கும் மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையின் சார்பாக பாராட்டு விழா மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையில் வைத்து நடைபெற்றது. 16வது வார்டு உறுப்பினரான S.A. சாமு சிஹாபுத்தீன் அவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியூரில் இருந்ததால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிகழ்ச்சியை ஆரம்பமாக இறைமறை ஒதி மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை மாணவர் S.M. முத்து மொகுதூம் துவக்கி வைத்தார். தொடர்ந்து இறைவாழ்த்து மத்ரஸா மாணவர்களால் பாடப்பட்டது.அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் ‎‎எல்.கே.மேல்நிலைப்பள்ளி ஆசிரியரும் மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க ‎‎சபையின் உறுப்பினருமான கலீபா சதக்கத்துல்லா B.Sc., B.Ed., அவர்கள் ‎‎வரவேற்று பேசினார். தொடர்ந்து ‎மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையின் முதல்வர் A.H.M.A. மிஸ்கீன் சாஹிப் ஆலிம் ஃபாஸி அவர்கள் தலைமைத்துவத்தின் பொறுப்புகள் பற்றி சிறிது நேரம் உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து நகர்மன்றத்தலைவர் ஆபிதா அவர்களை மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையின் துணைத் தலைவரும் புதுப்பள்ளியின் முன்னாள் தலைவரும், நகர்மன்றத்தலைவரின் பெரியப்பாவுமாகிய பாளையம் முஹ்யித்தீன் அப்துல் காதர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள்.

பின்னர் 5வது வார்டு உறுப்பினர் ஜஹாங்கீர் அவர்களை மத்ரஸாவின் முதல்வர் A.H.M.A. மிஸ்கீன் சாஹிப் ஆலிம் ஃபாஸி அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள். இறுதியாக சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி ஆசிரியரும் மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையின் உறுப்பினருமான Z.A. சேக் அப்துல் காதர் M.A.,B.Ed., M.Phil., அவர்கள் நன்றி நவில பாளையம் நயீம் உதுமான் அவர்களின் துஆ பிரார்த்தனையோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

நிகழ்ச்சிகள் யாவையும் எல்.கே. மேல்நிலைப்பள்ளி ஆசிரியரும், மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையின் உறுப்பினருமான கலீஃபா சதக்கத்துல்லாஹ் அவர்கள் நெறிப்படுத்தினார். நிகழ்ச்சியில் மத்ரஸா ஆசிரியர்கள், நிர்வாகிகள் மற்றும் மாணவர்களும் ரிஜ்வான் சங்க உறுப்பினர்களான M.S. சதக்கத்துலலாஹ், அப்துல் காதர் நெய்னா, அமீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



















தகவல் மற்றும் போட்டோ உதவி :
நூஹு சாஹிபு,
உறுப்பினர், மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நகரமன்ற தலைவரின் தகப்பனார் இந்த புது பள்ளியில் வைத்து பல நபருக்கு பாராட்டு விழா நடத்தி பிறரை கவுரவ படுத்தியவர் என்பது குறிபிடத்தக்கது...!
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [31 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12625

முன்னாள் புது பள்ளி நிர்வாகி ஜனாப் சூரத் அவர்கள் இவ்விழாவில் கலந்து இருப்பது சந்தோசம் ஆனால் இந்நாள் புது பள்ளி நிர்வாகிகள் யாரும் வரவில்லையா? இந்நாள் புது பள்ளி நிர்வாகிகளுக்கு மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையில் இருந்து அழைப்பு விடுக்க இல்லையா ?

நகரமன்ற தலைவருக்கு அவரின் சொந்த புது பள்ளி ஜமாஅத் மற்றும் நிர்வாகிகள் சார்பாக பாராட்டு விழா எப்போது..? நகரமன்ற தலைவரின் தகப்பனார் இந்த புது பள்ளியில் வைத்து பல நபருக்கு பாராட்டு விழா நடத்தி பிறரை கவுரவ படுத்தியவர் என்பது குறிபிடத்தக்கது...!

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:மழ்ஹருல் ஆபிதீன் சார்பாக ...
posted by M.A. MOHAMED THAMBY B.Sc., (CHENNAI) [01 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12700

அஸ்ஸலாமு அலைக்கும்.

எமது மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையின் அழைப்பை ஏற்று கலந்து கொண்ட எமது சபையின் செயலாளர் பாளையம் இபுறாஹீம் அவர்களின் மகளும், நகர்மனறத்தலைவியுமான P.M.I. ஆபிதா B.Sc., B.Ed., அவர்களுக்கும், 5வது வார்டு உறுப்பினர் ஜஹாங்கீர் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை 100 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளி கூட விடுமுறை நாட்களில் நமதூர் மாணவர்களுக்கு அடிப்படை மார்க்க கல்வியை போதிக்கும் நிறுவனமாகும் என்பதை நாம் அறிந்ததே.

மழை காலங்களில் மழை தண்ணீர் முழுவதுமாக ஒழுகுவதால் மத்ரஸா நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை அறிந்தேன். மத்ரஸா இடித்துத்தான் கட்ட வேண்டும் என்பதையும் அறிந்தேன். மத்ரஸா photo பார்த்தாலே தெரிகிறது. நோன்பு முடிந்த பின் கட்டிட வேலை ஆரம்பிப்பதாக அறிந்தேன். ஆனால் இது வரை ஆரம்பிக்க வில்லை போல் தெரிகிறது.

கூடிய விரைவில் கட்டிட வேலையை ஆரம்பிக்க வேண்டுகிறேன். நிதி பற்றாக்குறை காரணமாக தாமதமாகி கொண்டு இருக்கிறது என நினைக்கிறேன். இன்ஷா அல்லாஹ் நமதூர் மக்கள் புரிவார்கள். அதற்கு எல்லா முயற்சிகளையும் எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன். அதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி புரிவானாக. ஆமீன்.

இன்றைய காலத்தில் அடிப்படை மார்க்க கல்வியாகிய ஓத, தொழுக கூட தெரியாத நிலையில் இன்றைய மாணவ சமுதாயம் உருவாகி கொண்டு இருக்கிறது. நாளை மறுமையில் தம் பிள்ளைகள் குறித்து, பெற்றோர்கள்தான் இறைவனிடத்தில் பதில் சொல்ல வேண்டும். எனவே பெற்றோர்கள் தம் பிள்ளைகளை மார்க்க கல்வி பயில இது போன்ற மார்க்க கல்வி கூடங்களுக்கு அனுப்பி பயன் பெறுங்கள். நம் பிள்ளைகளை சாலிஹான பிள்ளைகளாக வளர்க்க அல்லாஹ் உதவி புரிவானாக. ஆமீன்!

வஸ்ஸலாம்.

80. 'கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும் அறியாமை நிலைத்து விடுவதும் மது அருந்தப் படுவதும் வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார். Volume :1 Book :3


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:மழ்ஹருல் ஆபிதீன் சார்பாக ...
posted by Malharul Aabideen (Kayalpatnam) [01 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12722

சகோதரர் முஹம்மது தம்பி அவர்களே! வணிக ரீதியாக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தாலும் மத்ரஸாவின் வளர்ச்சியில் என்றுமே அக்கறை கொண்டுள்ள தங்களைப் போன்ற மத்ரஸா அபிமானிகளின் உதவி கொண்டு விரைவில் மத்ரஸாவை புதுப்பித்துக் கட்ட முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம்.

தாங்களும் மற்றும் நமது மத்ரஸா அபிமானிகளும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் மத்ரஸாவின் நிலையினை எடுத்துக்கூறி அதற்காக நிதி திரட்டித் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். மேலும் மத்ரஸாவை புதுப்பித்துக் கட்ட தங்களின் பங்களிப்பை செலுத்த விரும்புவோர் கீழ்க்காணும் இணையதளத்தை பார்வையிடும்படி கேட்டுக் கொள்கிறோம்.

http://www.freewebs.com/malharulaabideen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
மீண்டும் ‘செங்கடல்‘ !  (1/11/2011) [Views - 5223; Comments - 14]
மும்தாஜ்தான் மிஸ்ஸிங்! (?!)  (30/10/2011) [Views - 5307; Comments - 16]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved