மலேசிய நாட்டில் 20க்கும் மேற்பட்ட காயலர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பல இடங்களிலும் பரவியிருக்கும் காரணத்தால் ஒன்றுசேர அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமலேயே இருந்து வருகிறது.
இந்நிலையில், அவ்வாறு தனித்தனியே வசித்து வரும் காயலர்களின் இருப்பிடம் சென்று, அவர்களை நகர மக்களுடன் ஒருங்கிணைக்கும் முயற்சியில் சிங்கப்பூரிலுள்ள காயலர்கள் இறங்கினர். இதற்காகவென்றே அவர்கள் அண்டை நாடான மலேசியாவுக்கு பயணமும் மேற்கொண்டனர்.
இப்பயண அனுபவம் குறித்து சிங்கை காயலர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
மலேசியாவில் பல காயலர்கள் இருந்தும் தொடர்பு கிடைக்காமல் பல ஆண்டுகளாய் தனித்தனியே இருந்து வருகின்றனர். அவர்களை ஒருங்கிணைக்கும் பொருட்டு, சிங்கப்பூர் காயலர்களான சாளை நவாஸ், சிங்கை காயல் நல மன்ற செயலாளர் மொகுதூம் முஹம்மத், பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை, உறுப்பினர்கள் முஹ்ஸின், ஜவஹர் இஸ்மாஈல், எஸ்.ஐ.பாக்கர் ஸாஹிப், ஹாஃபிழ் செய்யித் அஹ்மத் ஆகியோர், தனிப்பட்ட பயணமாகச் சென்று, கடந்த 23ஆம் தேதி சிங்கப்பூர் அடுத்துள்ள மலேசியாவிலுள்ள Johor Bahru என்னும் இடத்தை அடைந்தோம்.
அங்கே எங்களை அன்புடன் வரவேற்ற காட்டு தைக்கா தெருவை சேர்ந்த ஜனாப் ஷாகுல் ஹமீது. இரவு வேலை முடித்து எங்களை அழைக்க வந்து இருந்தார். வேலை களைப்பில் இருந்த அவர் எங்களை பார்த்ததும் அடைந்த பூரிப்பையும், சந்தோசத்தையும் அவரின் முகமே காட்டிக் கொடுத்தது.
சிற்றுண்டி முடித்து விட்டு அவரின் தொழிற்சாலை இருக்குமிடம் நோக்கி விரைந்தோம். 40 கீ. மீ பயணத்திற்கு பிறகு அவரின் இல்லம் வந்தடைந்தோம். தேநீர் உபசரிப்புக்கு பின்னர் அவரின் நண்பர்களிடம் கலந்துரையாடினோம். அல்ஹம்துலில்லாஹ், யாவரும் நன்றாகவே இருந்து வருகின்றனர்.
மனதிருப்தியுடன் அங்கே இருந்து இன்னும் 10 கீ.மீ. தொலைவில் ஒரு உணவு விடுதியில் மூத்த சமையல் கலை வல்லுனராக பணிபுரியும் கீழ நைனார் தெருவை சேர்ந்த ஷாகுல் ஹமீது எங்கள் வருகைக்காக காத்திருந்தார்.
மதிய உணவு உபசரிப்புக்கு பின்னர் சந்தோசமாக உட்கார்த்து பேசிகொண்டிருந்தோம். அவரின் உணவு விடுதியின் முதலாளியும் எங்களோடு உட்கார்த்து அளவளாவினார். சாகுல் ஹமீது நம்பத் தகுந்த கடின உழைப்பாளி எனவும் அவரை நான் நன்றாகவே கவனித்து கொள்கிறேன் என்று சொன்னதும் எங்களுக்கு நெஞ்சம் நெகிழ்ந்தது.
பின்னர் அவர் கவனித்து வரும் மன நலம் குன்றிய மற்றும் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் காப்பகம் சென்று பாத்தோம். அவரும் நம்மூர் துளிருக்கு வருவதாக சொன்னார். துளிருக்கு வெளிநாட்டு நிதி கிடைக்க ஏற்பாடு செய்ய கேட்டு இருந்தோம், முயற்சி செய்வதாக சொன்னார்.
இரவு ஒன்றாக உணவு அருந்தி விட்டு கனத்த இதயத்துடன் விடைபெற்றோம்.
அவர்களின் தொடர்பு எண்கள்:-
சாகுல் ஹமீது ( காட்டு தைக்கா தெரு - +60134007161 )
சாகுல் ஹமீது ( கீழ நைனார் தெரு - +60108807475 )
இவ்வாறு சிங்கை காயலர்கள் தமதறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
தகவல் & படங்கள்:
கே.எம்.டி.ஷேக்னா லெப்பை,
சிங்கப்பூர். |