கடந்த பல நாட்களாக காயல்பட்டினத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக நகரில் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. நகரின் வடபாதி பகுதியில் தேங்கும் இம்மழை நீர் கடற்கரையையொட்டியுள்ள கீரிக்குளத்தை வந்தடையும்.
அவ்வாறு கீரிக்குளத்தில் தேங்கிய நீரில் சிறுவர் - சிறுமியர் வந்து விளையாடத் துவங்கிவிட்டனர்.
கீரிக்குளத்தின் நீர்மட்டம் ஓர் ஆளை மூழ்கடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளதையடுத்து அச்சமுற்ற சுற்றுவட்டார பொதுமக்கள் நகர்மன்றத்திற்குக் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் நேற்று மாலை 03.00 மணிக்கு அந்நீர் கடலுக்கு வெட்டிவிடப்பட்டது.
இப்பணிகளை நகர்மன்றத் தலைவர் ஆபிதா பார்வையிட்டார். உடன், நகர்மன்ற தொழில்நுட்ப உதவியாளர் செந்தில் குமார், அலுவலக உதவியாளர் (தற்காலிகம்) பட்டாணி ஆகியோர் உடனிருந்தனர்.
3. Re:கீரிக்குளம் வழியாக மழைநீர... posted byKader Sulaiman (Kayalpatnam)[01 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12691
நகர்மன்ற தலைவி ஆபிதாவின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
நகர்மன்றத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மக்களோடு மக்களாக ஒன்றினைந்து மக்களுக்காக பாடுபடவேண்டும். அப்போதுதான் நல்ல திட்டங்களை மக்களுக்காக நிறைவேற்ற முடியும்.
எனவே ஆபிதா மக்களோடு மக்களாக பணியாற்றுவதால் ஒரு முன்மாதிரி நகராட்சியை உருவாக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
4. Re:கீரிக்குளம் வழியாக மழைநீர... posted byMeera sahib (kayalpatnam)[01 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12693
மாட்டுகுளம் அருகில் உள்ள தேங்கை பண்டகசாலை குடியிருப்பு பகுதிகளில் குளமாக தண்ணீர் தேங்கி கிடப்பதை தலைவியும் 8 ஆம் வார்டு கவுன்சிலரும் பார்வையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
நாளுக்கு நாள் தண்ணீர் ஏறிக்கொண்டே போவதை தடுப்பது யார்? சகோதரி பீவி பாத்திமா அவர்களே உங்கள் நடவடிக்கை என்ன?
6. Re:கீரிக்குளம் வழியாக மழைநீர... posted byS.a.cader (Kayalpatnam)[01 November 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 12698
Mattukulam area ia an illegally occupied property that belong to maraikar appaplli mosques. There was a small lake where people used to bath their cattles. Now illegal occupation has sprung thanks to the most courrupt politicians in collusion with criminals and bootleggers.
There are respectable families living in that area but includes criminal elements who are plundering this area including the nearby red star society and the two age old mosques.
These criminal elements are responsible for thefts and illicit liquor as well as prostitution in that area. These criminal elements are not lo al people but settlers who came to eke out a living. Now these guys have become uncontrollable and they even do not hesitate to attack those who question them. The ward member should do something to ensure safety and security in this area.
A concerned resident of the jamath
During rainy season mattukulam used to be full of water. Now these people are complaining about water logging after occupying this area illegally. They never paid a single paise to either of the mosque. But their money went to these local politician who are nothing but thugs.
7. பொறுப்புள்ள கவலை posted byMauroof (Dubai)[01 November 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12699
இச்செய்தி குறித்து முதல் கருத்து தெரிவித்திருக்கும் சகோதரர் முத்து இஸ்மாயீலின் கவலை நியாமான ஒன்றே.
எந்த விலை கொடுத்தும் வாங்கிட முடியாத மழை நீரை சேமிக்க குறைந்த பட்சம் ஒரு குளம் நமதூரில் செயற்கையாக ஏற்படுத்தப்படவில்லை என்றாலும் இயற்கையாக அமைந்துள்ள தாழ்வு பகுதிகளில் தேங்கும் மழை நீரை அது பொது சுகாதாரத்திற்கும் / உரிமையாளரின் பயன்பாட்டிற்கும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வண்ணம் நகராட்சி நிர்வாகம்/உரிமையாளர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அம்மழை நீரானது தேங்கும் வரை விட்டு வைத்தால் நிலத்தடி நீரின் தன்மை மேம்படும் என்பது எனது கருத்து.
8. Re:கீரிக்குளம் வழியாக மழைநீர... posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்)[01 November 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12706
சகோ. முத்து இஸ்மாயில் அவர்களின் ஆதங்கம் நியாயமானதே, அதாவது மழை நீர் வடிய ஒரு குளம் இல்லையே என்று.
நானும் பல கமெண்ட்ஸ்களில் இதை குறிப்பிட்டும் உள்ளேன். நாம் சிறுவயதில் பார்த்து விளையாடி, மீன் பிடித்து மகிழ்ந்த தரவை குளம், சக்கிலி குளம், மாலா குளம், மாட்டுக்குளம்.. போன்ற பல குளங்களை இன்று காணவில்லையே. அவைகள் எல்லாம் எங்கே.
எல்லாவற்றையும் ஆக்கரமித்து, இப்போ தண்ணீர் போகவில்லை, அவர் பார்க்க வரவில்லை, இவர் பார்க்க வரவில்லை என்று நொந்துகொண்டு இருப்பதால் என்ன பயன்.
போலீஸ்யில் கம்ப்ளைன்ட் கொடுங்க, குளங்கள் எல்லாம் காணவில்லை என்று.
நடிகர் வடிவேலு, கிணற்றை காணவில்லை என்றதும் நாம் சிரித்து மகிழ்ந்தோம்தானே, அந்த சிரிப்பு இப்போது உண்மை ஆகி விட்டதா.
9. Re:கீரிக்குளம் வழியாக மழைநீர... posted byfathima (kayalpatnam)[01 November 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 12710
அஸ்ஸலாமு அழைக்கும்
பார்க்கும் போதே கல்புக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது...இத்துனை நாள் காயல் எங்கு இருந்தது அதில் இருக்கும் தலைவர்கள் எங்கு சென்றார்கள். இப்பொது தான் காயல்பட்டினத்தில் நகராசியும் தெரிகிறது அதில் இருக்கும் தலைவியும் தெரிகிறார்கள்.
மக்களோடு மக்களாகவே வாழும் தலைவிக்கு தான் தெரியும் ஏழையின் துயரம்...நம்மில் பணம் இருப்பவர்கள் வீண் விரையம் செய்யாமல் மக்களுக்கு உதவி (நன்மை) செய்து அதன் மூலம் அல்லாவின் அன்பையும் மறுமையில் அதகுரிய கூலியும் பெறலாமே...
10. நடவடிக்கை என்ன? posted byMauroof (Dubai)[01 November 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12715
சுலைமான் நகர் என்று அறியப்படும் மாட்டுக்குளம் ஆக்கிரமிப்பு மற்றும் சமூக விரோத கும்பல்களின் புகலிடமாக விளங்குகிறது என்ற சகோதரர் S.A. காதர் அவர்களின் கருத்து சாதாரணமானது அல்ல. மரைக்காயர் மற்றும் அப்பா பள்ளி ஜமாத்திற்கு இந்நகர் பாத்தியப்பட்டது எனில் இந்த ஆக்கிரமிப்புகள் சம்பந்தமாக பள்ளி நிர்வாகங்கள் என்ன நடவடிக்கைகளை இது வரை மேற்கொண்டுள்ளது என்பதை சகோதரர் S.A. காதர் அவர்களுக்கும் ஏனைய காயல் நகர் நலனில் அக்கறை கொண்டோருக்கும் அறியத்தந்தால் நல்லது.
திருவாளர் அட்மின் அவர்களே! "ஆழமான ஆக்கிரமிப்பின் பிடியில்" சுலைமான் நகர் (மாட்டுக்குளம்), மீட்போர் யார்? என்று ஒரு செய்தி வெளியிடுங்களேன். கருத்து மழை கொட்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross