அண்மையில் நாகர்கோயிலில் நடந்த கராத்தே போட்டிகளில் காயல் மாணவர்கள் பலர் பரிசுகள் வென்றுள்ளனர். இது குறித்து கராத்தே ஆசிரியர் A. இர்ஃபான் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
நாகர்கோவில் பைரவி ஆடிட்டோரியத்தில் ஷோட்டாகான் கராத்தே டோ இன்டர் நேஷனல் பெடரேஷன் இந்தியா சார்பில் ஏழாவது அகில இந்திய ஒபன் கராத்தே- டோ சாம்பியன்ஷிப் 2011 போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உத்திரபிரதேசம், மும்பை, டில்லி, ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட கராத்தே வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணம் ஹயாஷி ஹா சிட்டோரிய-காய் கராத்தே பள்ளியின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட
தலைமை பயிற்சியாளர் சென்செய் இர்ஃபான், பெண்கள் அணி பயிற்சியாளர் சென்செய் சுலைஹா மற்றும் காயல்பட்டணம் கராத்தே அணி
மேலாளர் ஹாஜா முஹைதீன் தலைமையில் நமதூர் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர் (17 மாணவர்கள், 2 மாணவிகள் மொத்தம் 19 பேர்கள்).
இப்போட்டியில் 13 மாணவர்கள், 2 மாணவிகள் - மொத்தம் 15 பேர் பதக்கம் வென்றனர். இதில் 3 மாணவர்கள், 1 மாணவி தாங்கள் போட்டியிட்ட 2 பிரிவுகளிலும் பதக்கம் வென்றனர்.
தனி நபர் குமித்தே (Fight) போட்டியில் சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி மாணவன் முஹம்மது அப்துல் ரஷீத் - 40 கிலோ எடைப்பிரிவில் தங்கமும், சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆறுமுகராஜா 35 கிலோ எடைப்பிரிவில் தங்கமும், சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி மாணவன் மூஸாநெய்னா ரிஜ்வான் 40 கிலோ எடைப்பிரிவில் வெள்ளியும், அல்-அமீன் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி மாணவன் அப்துல்கலாம் ஆஷித் 25 கிலோ எடைக்கு கீழ் வெள்ளியும்,
அல்-அமீன் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி மாணவன் அபுல்கலாம் ஆசாத் 25 கிலோ எடைக்கு கீழ் பிரிவில் வெண்கலமும், சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி மாணவன் முஹம்மது அலி 45 கிலோ எடைப்பிரிவில் வெண்கலமும், சென்ட்ரல் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவன் முஹம்மது ரோஷன் 30 கிலோ எடைப்பிரிவில் வெண்கலமும், அல்-அமீன் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி மாணவன் அப்துர் ரஹ்மான் 25 கிலோ எடைப்பிரிவில் வெண்கலமும், அல்-அமீன் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி மாணவி (பெண்கள் குமித்தே பிரிவில்) உம்முஹபீபா 30 கிலோ எடைப்பிரிவில் வெண்கலமும் ஆக மொத்தம் ஒன்பது பதக்கங்கள் வென்றனர்.
ஒபன் குமித்தே பிரிவில் அல்-அமீன் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி மாணவன் அப்துல் கலாம் ஆஷித் ஜீனியர் பிரிவில் தங்கமும், சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி மாணவன் அப்துல் ஹக்கீம் சீனியர் பிரிவில் தங்கமும், பெண்கள் ஜீனியர் பிரிவில் அல்-அமீன் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி மாணவி உம்மு ஹபீபா தங்கமும், L.K. மேல்நிலைப்பள்ளி மாணவன் சலீம் மாலிக் சீனியர் பிரிவில் வெள்ளியும், சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி மாணவன் தெராகின் ஜீனியர் பிரிவில் வெள்ளியும், அல்-அமீன் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி (பெண்கள் குமித்தே பிரிவில்) ஜீனியர் பிரிவில் அல்-அமீன் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி மாணவி சித்தி பாத்திமா வெள்ளியும், L.K. மேல்நிலைப்பள்ளி மாணவன் முகம்மது அலி சீனியர் பிரிவில் வெண்கலமும், L.K. மேல்நிலைப்பள்ளி மாணவன் முகைதீன் சாகிப் சீனியர் பிரிவில் வெண்கலமும், அல்-அமீன் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி ருமுபு மாணவன் அப்துல்லாஹ் சப்-ஜீனியர் பிரிவில் வெண்கலமும், அல்-அமீன் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி மாணவன் அபுல்கலாம் ஆசாத் ஜீனியர் பிரிவில் வெண்கலமும் ஆக மொத்தம் 10 பதக்கங்கள் வென்றனர்.
தனிநபர் மற்றும் ஒபன் குமித்தே (Fight) பிரிவுகளில் ஐந்து தங்கம், ஐந்து வெள்ளி, ஒன்பது வெண்கலமும் உட்பட, 19 பதக்கங்கள் வென்று சாதனை புரிந்தனர். இந்த அகில இந்திய கராத்தே போட்டியில் இந்தியாவின் இளம் கராத்தே வீரராக அல்- அமீன் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி மாணவன் அப்துல்லாஹ் (5 வயது) (Blue Belt) தேர்வு செய்யப்பட்டு, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் முதன்மை மேலாளர் இளங்கோவன் அவர்களிடம் கராத்தே ஊக்கத் தொகை ரூபாய் 1500/- ரொக்கப் பரிசாக வென்றார்.
பரிசுகளை மாவட்ட கல்வி அதிகாரி சிவகுமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெபராஜ் வழங்கினர். போட்டிகளை மாவட்ட ஜீடோ சங்கத் தலைவர்
ஐ. கேட்சன் துவங்கி வைத்தார்.
போட்டி ஏற்பாடுகளை அகில இந்திய ஷோட்டாகான் கராத்தே இந்தியா பெடரேஷன் பொதுச் செயலாளர் ஸ்டீபன் செய்திருந்தார்.
இந்த அகில இந்திய கராத்தே போட்டியில் நமதூர் மாணவ, மாணவிகள் சென்று வர பொருளாதார உதவியும், துஆவும் செய்த நல்லுள்ளங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சென்செய் A. இர்ஃபான் (மூன்றாம் நிலை கருப்புப்பட்டை),
75/13G, சின்ன நெசவுத்தெரு.
மொபைல்: 99656 50008
ஈமெயில்: irfankarade@rediffmail.com |