காயல்பட்டின நகர்மன்றத் தலைவர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கிய அரசாணைக்கு எதிராக, MEGA வின் பிரதிநிதியும், மக்கள் சேவாக்கரங்கள் நிறுவனருமான பாலப்பா ஜலாலி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அது இன்று (அக்டோபர் 11) விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் கே.என். பாஷா மற்றும் எம்.வேணுகோபால் ஆகியோர் முன் MEGA சார்பாக வழக்கறிஞர்கள் ஏ. ஹாஜா முஹியத்தீன் மற்றும் எம். முஹம்மது செர்புதீன் ஆகியோர் வாதிட்டனர். காயல்பட்டின நகர்மன்றம் குறித்த வழக்குடன் ௦பிற ஊர்களின் வழக்கும் இணைந்து விசாரிக்கப்படுகிறது. ஆகவே நாளையும் வழக்கு விசாரணை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. நல்ல வேலை பெண்களுக்கு ஒதுக்க பட்டது.. posted byDR D MOHAMED KIZHAR (chennai)[12 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 10366
நமது நகர் மன்ற தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்க பட்டுடன், சற்று அதிர்ச்சி அடைந்தது உண்மை தான்.. இப்போது தான் தோன்றுகிறது..அல்லாஹ் எதை நாடி இருந்தாலும் நல்லதுக்கே ..... ஒரு சமயம், பெண்களுக்கு ஒதுக்கிய போது போட்டியிட ஆள் இருப்பார்களா என்ற ஆதங்கம் இருந்தது.. ஆனால் பெண்களிடை இப்படி பலமான போட்டி என்றால், பொது (ஆண்களும்,பெண்களும், அலியும் போட்டி இடலாம்) தொகுதி என்று இருந்தால் யோசித்து பாருங்கள்.. நகராட்சி தலைவர் பதவியை குறிபார்த்து பல வல்லூறுகள், பல மாதங்களுக்கு முன்னே காய் நகர்த்த ஆரம்பித்தன..அப்பவே நகராட்சி தலைவர் ஆனா மாதிரி பல வண்ண கனவுகளுடன் வளம் வந்து, தலைவர் பதவி ஒன்றாய் குறிக்கோளாக கொண்டு, வலம் வந்தவர்கள் பல பேர்..ஆனால் தமிழக உள்ளாட்சி துறை ஒரு பெரிய ஆப்பை அதற்க்கு வைத்தது.
மெகா வின் வழக்கு வெற்றிபெற வாழ்த்துக்கள். ஆனால் அதன் பின் விளைவு, அதாவது ஆண்களுக்கிடையில் போட்டி என்பதை நினைக்கும் போது தான்,
வல்ல அல்லாஹ் நமது நாட்டத்தை நிறை வெற்றி வைப்பானாக ஆமீன்
டாக்டர் முஹம்மது கிஸார்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross