தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில், தூத்துக்குடி மாவட்ட தேர்தல் பார்வையாளராக மதிவாணன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் பூங்கொத்து அளித்து வரவேற்றார்.
பின்னர், மாவட்ட ஆட்சியருடனும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நரேந்திரன் நாயருடனும், தேர்தல் நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசனை மேற்கொண்டார்.
|