தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இத்தேர்தலையொட்டி, தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சார்பில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை, காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் விளக்குவதற்கான கூட்டம் 07.10.2011 அன்று (நேற்று) மதியம் 02.30 மணிக்கு, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியிலுள்ள ஹாஜி எஸ்.ஏ.சுலைமான் ப்ளாக்கில் நடைபெற்றது.
காயல்பட்டினம் நகர்மன்ற ஆணையாளரும், நகர்மன்றத் தேர்தல் அலுவலருமான கண்ணையா ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நகர்மன்றத் தேர்தல் துணை அலுவலர்களான சக்தி குமார், செல்வமணி ஆகியோர், தேர்தல் நடத்தை விதிமுறைகளை விளக்கினர். பின்னர், வேட்பாளர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதனிடையே, இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களை முன்மொழிந்தவர்கள் அனைவரின் தொலைதொடர்பு எண்களைக் கைவசம் வைத்திருந்த நிலையிலும், இக்கூட்டம் நடத்துவது குறித்து அவர்களுக்கு எந்த முன்னறிவிப்பும் செய்யப்படவில்லையென்றும், அதிகாரிகள் அவர்களின் பணியை இலகுவாக்கி, வேட்பாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திவிட்டதாகவும், ஏதோ ஒரு வழியில் தகவலைக் கேள்விப்பட்டே கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாகவும் பெரும்பாலான வேட்பாளர்கள் முறையிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இக்கூட்டத்தில், காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இத்தேர்தலையொட்டி, தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நடத்தை விதிமுறைகள் பின்வருமாறு:-
|