ஜித்தா, சவுதிஅரபியா – ஜித்தாவில் உள்ள இந்திய தூதரகம் குறைந்த செலவில் இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்கு சிம் அட்டைகளை வழங்க உள்ளூர் தொலை தொடர்பு ஆபரேட்டர் உடன் இணைந்துள்ளது. அந்த சிம் அட்டைகளில் அனைத்து முக்கிய எண்களை பதிவு செய்துள்ளது.
நமது தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் முதல் ஹஜ் விமானம் இன்ஷா அல்லாஹ் வரும் அக் 17 ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு ஜித்தா வந்தடையும். பெரும்பாலும் சென்னை, வேலூர், திருநெல்வேலி, கோயம்புத்தூர், மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சுமார் 4000 பேர் இந்த வருட புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இந்த ஹஜ் பயணிகளுக்கு பணிவிடை செய்ய ஒரு டஜன் மாநில அரசு ஊழியர்கள் அடங்கிய மாநில ஹஜ் குழு அதிகாரிகள் வருகின்றனர்.
|