புதுப்பள்ளி
தைக்கா தெரு, காயல்பட்டணம்
03-10-2011
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால்...
எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கவிருக்கும் புதுப்பள்ளி ஜமாஅத்தினர் மற்றும் 16வது வார்டு வாக்காளப் பெருமக்களின்
மேலான கவனத்திற்கு ....
அன்புடையீர்!அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எதிர்வரும் நமதூர் நகர்மன்ற தேர்தலில் நமது புதுப்பள்ளி ஜமாஅத்திற்குட்பட்ட 16வது வார்டு உறுப்பினரையும், நகர்மன்ற தலைவரையும்
தேர்ந்தெடுக்கப்பட்டது சம்பந்தமாக சில உண்மைகளை தங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவையில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் 05-09-2011 அன்று பேரவையில் நடைபெற்றது.
அதில் தற்போதைய நகராட்சி நிலவரம் பற்றியும், வருங்காலத்தில் நகர்மன்றம் இயங்க வேண்டிய நிலை பற்றியும் விவாதிக்கப்பட்டது.
நமதூர் நலன் கருதி கலந்தாய்வில் எடுக்கப்பட்ட முடிவின்படி வரும் தேர்தலில் ஒவ்வொரு வார்டுக்கும் ஏகோபித்த ஒரு பொது உறுப்பினரைத்
தேர்ந்தெடுக்கவும் நகரில் நேர்மையான ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் பேரவை ஈடுபடலாமா என்று ஆலோசனை கேட்டார்கள்.
குறைநிறைகளை பலரும் அவரவர் கோணத்தில் சொல்லி காண்பித்தார்கள். இறுதியில் 08-9-2011 அன்று அனைத்து ஜமாஅத்தையும் ஜலாலியாவில்
கூட்டி அனைத்து ஜமாஅத்துக்கள் பொது நல அமைப்புகளின் ஒத்துழைப்புடன் தீர்மானம் முன்மொழிந்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து இந்த செய்திகளை நமது ஜமாஅத்திற்கு தெரிவித்து ஒப்புதல் பெறும் நல்ல நோக்கோடு 11-09-2011 அன்று புதுப்பள்ளி ஜமாஅத் கூட்டம்
நடைபெற்றது. பேரவையில் நடைபெற்ற பதிவுகளை எடுத்துரைத்து, நமது 16வது வார்டுக்கும் பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க
வலியுறுத்தப்பட்டது.
இதற்கிடையில் நமது ஜமாஅத்திற்கு விருப்ப மனு தந்திருக்கும் 16வது வார்டைச் சார்ந்த சகோதரர்கள் பாளையம் செய்யது முஹம்மது, S.A.
சாமு சிகாபுத்தீன், K.M. மூஸா நெய்னா, கலீபா செய்யது முகம்மது லெப்பை, M.M. மஹ்மூது ஆகிய ஐந்து நபர்களின் பெயர்களையும் வாசித்து
காட்டப்பட்டது. கருத்துக்கள் கேட்டதில் பல தரப்பட்ட வாக்குவாதங்கள் நடைபெற்று எந்த முடிவும் எடுக்காமல், 20-09-2011 தேதி கடைசி
நாளாகவும், இதற்குள் வேறு யாரும் மனு தாக்கல் செய்தால் அதையும் சேர்த்து 21,22 தேதிகளில் இன்னொரு கூட்டம் நடத்தி முடிவு செய்ய தீர்மானம்
நிறைவேற்றி கூட்டம் நிறைவானது.
20-09-2011 வரை வேறு யாரும் விருப்ப மனு தராததாலும் அந்த ஐந்து பேரையும் வைத்துத் தான் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற
நிலையில் மீண்டும் பொதுக்குழுவைக் கூட்டும் முன் எந்த முறையில் செயல்படலாம் என்பதை முடிவு செய்ய 22-09-2011 அன்று நிர்வாகக்குழுவை
கூட்டி விவாதிக்கப்பட்டது. நீண்ட நேரம் கருத்துக்களை கேட்டறிந்து வாக்குவாதங்கள் நடைபெற்றது. இறுதியாக விருப்ப மனு தந்துள்ள ஐந்து
நபர்களையும் சந்தித்து நேர்காணல் செய்ய ஜமாஅத்தைச் சார்ந்த ஐந்து நபர் கொண்ட (Negotiators) குழு அமைக்கப்பட்டது. இதில் சகோதரர்கள்
பாளையம் முஹியத்தீன் அப்துல் காதர், P.S.M. இல்யாஸ், S.A. முஸ்தபா, S.M.கலீல், S.A.செய்யது உமர் ஆகியவர்களை நியமிக்க
செயற்குழு முடிவு செய்தது. இதில் பாளையம் முஹ்யித்தீன் அப்துல் காதர் அவர்களின் வர இயலாமையின் காரணமாக சகோதரர் B.M நஜ்முத்தீன்
அவர்கள் அந்த இடத்தில் நியமிக்கப்பட்டார்கள்.
இந்த ஐவர் குழு விருப்ப மனு தந்துள்ள 5 நபர்களையும் அழைத்து கலந்தாலோசித்தார்கள். இக்கூட்டத்திலும் விவாதங்கள் தொடர்ந்து இந்த ஐவரில்
மூத்த இருவர் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பேசி முடிவுக்கு வரும்பட்சத்தில் மற்ற மூவரும் வாபஸ் பெற்றுக் கொள்ள சம்மதித்தார்கள். இதை ஏற்றுக்
கொண்ட ஐவர் குழு நிர்வாகக் குழுவிற்கு தகவல் தந்தது. ஆனால் மூத்த இருவருக்கிடையில் எவ்வித சமரசமும் ஏற்படாததால் நிர்வாகக்குழு 25-09-
2011 அன்று கூடி மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று யோசனை செய்யப்பட்டது. அதன்படி 25-09-2011 அன்று நிர்வாகக்குழு கூடி
கருத்துப்பரிமாற்றங்கள், வாதங்கள் கேட்டறிந்து 27-9-2011 அன்று பொதுக்குழு ஜமாஅத்தை கூட்டி 16வது வார்டுக்கு உட்பட்டவர்கள் மட்டும்
வாக்களித்து விருப்ப மனு தந்த இந்த ஐவரில் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில் 'ஜமாஅத்தாரின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றும் தன்னை தேர்ந்தெடுத்தால் நேர்மையாக பாகுபாடின்றி செயல்படுவேன் என்றும்,
தேர்ந்தெடுக்கப்படாத பட்சத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் வெற்றிக்கு பாடுபடுவேன்' என்ற ஒரு முச்சரிக்கையில் கையெழுத்திட ஆரம்பத்திலேயே இந்த
ஐவரிடமும் கேட்கப்பட்டது. அவர்களில் சகோதரர்கள் K.M. மூஸா நெய்னா, S.A.சாமு சிகாபுத்தீன் ஆகியோர் கையெழுத்திட்டார்கள். மற்ற
மூவரும் கையெழுத்திட மறுப்பு தெரிவித்ததோடு அல்லாமல், அதில் ஒருவர் 'கையெழுத்திடவும் மாட்டேன். ஜமாஅத் கூட்டத்திற்கு வரவும்
மாட்டேன். ஒருவேளை பேரவையின் கவனத்திற்கு கொண்டு போனாலும் அங்கும் வர மாட்டேன்' என்று முடிவாக சொல்லி விட்டார்கள்.
இதனால் நிர்வாகக்குழுவில் உள்ளவர்களில் ஒரு சிலர் முச்சரிக்கையில் கையெழுத்திடாதவர்களை ஏன் தேர்வு செய்ய வேண்டும். கையெழுத்து போட்ட
இருவருக்கு மட்டுமே தேர்வு நடத்தினால் போதும் என்றும் அபிப்பிராயப்பட்டார்கள். அதற்கு தலைவர் அவர்கள் நிர்வாகக்குழுவில் என்ன முடிவு
செய்யப்பட்டதோ அதன்படி ஐந்து நபர்களையும் வைத்துத் தான் தேர்வு நடைபெறும் என்று கூறி விட்டார்கள். இப்பொழுது எதிர்வாதம் பேசுவோர்
பேரவைக்கோ ஜமாஅத்திற்கோ கட்டுப்பட மாட்டோம் என்று முற்கூட்டியே முடிவு செய்திருந்தால் எதற்காக ஜமாஅத் அல்லது பேரவைக்கு ஆதரவு கேட்டு
விண்ணப்பித்தார்கள் என்பது விளங்கவில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட மனுக்கள் வரும் பட்சத்தில் எப்படி ஒருவரை தேர்வு செய்ய முடியும் என்பதை தயவு
செய்து எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.
அந்த அடிப்படையில் தேர்தல் பணி அலுவலர்களாக 16வது வார்டுக்கு அப்பாற்பட்ட சகோதர்கள் P.S.A. பல்லாக் லெப்பை, S.A. முஸ்தபா,
S.M. கலீல், B.M. நஜ்முத்தீன் ஆகியோரை நிர்வாகம் நியமித்தது. அதன்படி முறையாக ஒலிபெருக்கியிலும் தைக்கா தெரு சந்தியில் அறிவிப்பு
பலகை மூலமும் அறிவித்து 27-09-2011 அன்று நேர்மையான முறையில் அமைதியாக காலை 10:30 மணி முதல் மதியம் 12:15 மணி வரை
(லுஹர் பாங்கு சொல்லும் வரை) தேர்தல் நடைபெற்றது.
அவ்வாறே தேர்தல் நடந்து முடிந்த பின்னர் லுஹர் ஜமாஅத்திற்குப் பிறகு அனைவரின் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டன.
மொத்தம் பதிவான வாக்குகள் - 104
செல்லாதவை - 5
செல்லத்தக்க வாக்குகள் - 99
இதில் S.A. சாமு சிகாபுத்தீன் - 72
பாளையம் செய்து முகம்மது - 11
K.M. மூஸா நெய்னா - 10
கலீபா செய்து முகம்மது லெப்பை - 6
M.M. மஹ்மூது - 0
என்றபடி 99 வாக்குகள் என பதிவாகி இருந்தன.
ஆகவே சகோதரர் S.A. சாமு சிகாபுத்தீன் அவர்களை நம் புதுப்பள்ளிக்குட்பட்ட 16வது வார்டின் அங்கீகரிக்கப்பட்ட பொது வேட்பாளராக தேர்வு செய்து
அறிவிக்கப்பட்டது. ஜமாஅத்தில் கூடி இருந்த அனைவரும் இந்தத் தேர்வின் முடிவை ஏகமனதாக ஏற்றுக் கொண்டார்கள்.
நகராட்சி மன்ற தலைவர் தேர்தலுக்கான விண்ணப்பங்களும், தேர்வும்
(நகர்மன்ற தலைவர் தேர்வு)
தலைவர் தேர்வு முறை பேரவையால் எடுக்கப்பட்ட முடிவு யாவரும் அறிந்ததே. இதர வேட்பாளர்களுள் நமது ஜமாஅத்தைச் சார்ந்த பாளையம்
இப்ராஹீம் அவர்களின் மகள் சகோதரி P.M.I. ஆபிதா பேகம் B.Sc.,.B.E.d., அவர்களும் பேரவைக்கு விண்ணப்பம் செய்து நமது
ஜமாஅத்திற்கும் முறைப்படி அறிவித்தார்கள். அதன்படி பேரவையின் ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொண்ட நமது ஜமாஅத் தலைவரும் நமது
ஜமாஅத் வேட்பாளரையே தெரிவு செய்யும்படி சிபாரிசு செய;திருக்கிறார்கள். இந்த சிபாரிசிற்கு பேரவையின் பல உறுப்பினர்கள் மத்தியில் நல்ல
வரவேற்பும் ஆதரவும் இருந்தது. இருப்பினும் பேரவையின் முச்சரிக்கையில் கையெழுத்து வாங்கித் தந்தால் பரிசீலிப்பதாக சொன்னார்கள். இதைத்
தொடர்ந்து பேரவை மூலமாகவும் நமது புதுப்பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் J.A. லரீஃப் அவர்களின் மூலமும் நிர்வாகத்தின் உதவித் தலைவர்
சகோதரர் S.S.M. புகாரி அவர்கள் மூலமும் இறுதியில் தலைவர் அவர்கள் வேட்பாளரின் கணவரின் மூலமும் கேட்டும் முச்சரிக்கையில் கையெழுத்திட
மேற்படி சகோதரி P.M.I. ஆபிதா அவர்கள் மறுத்து விட்டார்கள். ஏன் கையெழுத்து போடவில்லை என்பதற்கு பேரவைக்கு நேரடியாக கடிதமும் எழுதி
விட்டார்கள். இருந்தும் 27-09-2011 அன்று பகல் 2 மணி வரை எதிர்பார்த்தும் கையெழுத்து கிடைக்காத பட்சத்தில், அன்று பின்னேரம்
ஜலாலிய்யாவில் நடந்த அனைத்து ஜமாஅத்தார்கள் கூட்டத்தில் கையெழுத்திட மறுத்தவர்களை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாமா என்று பேரவையால்
கேட்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட அனைத்து ஜமாஅத்தினரும் பொது நல அமைப்புகளும் அதற்கு அனுமதி வழங்கவில்லை. கையெழுத்து போட
மறுத்தவர்களை நீக்கி விட்டு கையெழுத்து போட்ட நான்கு நபர்களின் பிரதிநிதிகளின் முன்னிலையில் வைத்து தேர்வு செய்து முடிவையும்
அறிவித்திருக்கிறார்கள்.
இதன் மூலம் தெரிவிப்பது என்னவென்றால் நமது தலைவரோ அல்லது நிர்வாகமோ அல்லது பேரவையோ யார் பக்கமும் சார்ந்திராமல் பொதுவாகவே
இருந்து வந்தார்கள் என்பது தான் உண்மை. எல்லாமே ஒழிவு மறைவின்றி நடத்தப்பட்டு முடிவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆகவே நகரின் நலன் கருதி நமது 16வது வார்டு அதிகாரப்பூர்வமான வேட்டபாளர் சகோதரர் S.A. சாமு சிகாபுத்தீன் அவர்களை நமது 16வது வார்டு
உறுப்பினராகவும், நமதூர் அனைத்து ஜமாஅத்தார்களின் அதிகாரப்பூர்வமான வேட்பாளர் சகோதரி L.S.M. முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யா
B.Com., அவர்களை நகர்மன்ற தலைவராகவும் தேர்ந்தெடுப்பதன் மூலம் நமது ஜமாஅத்தின் ஒற்றுமையையும், நகரின் ஒற்றுமையையும் நிலைநாட்டி
மரியாதையையும் தேடித்தருமாறு அன்புடனும் பணிவுடனும் வேண்டிக் கொள்கிறேன். நன்றி. வஸ்ஸலாம்!!
' ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - நம்மில்
ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு'
என்றும் உண்மையுள்ள
S.M. உஸைர்
தலைவர் மற்றும் நிர்வாகிகள்,
புதுப்பள்ளிவாசல் ஜமாஅத்தார்,
தைக்கா தெரு
காயல்பட்டணம்
தகவல் : S.M. உஸைர்
தலைவர்
புதுப்பள்ளி ஜமாஅத்.
Mobile : +91 9486491547