தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் 22.09.2011 அன்று துவங்கி, 29.09.2011 தேதியுடன் நிறைவுற்றது.
காயல்பட்டினத்தின் நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கு 7 பேரும், நகர்மன்ற உறுப்பினர்கள் பொறுப்புகளுக்கு ஏராளமானோரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சார்ந்த எஸ்.எம்.எஸ்.சுல்தான் ஜமாலுத்தீன் என்பவரின் மனைவி கே.பி.செய்யித் மர்யம் என்பவரும் இம்முறை நகர்மன்றத் தலைவர் பொறுப்பிற்குப் போட்டியிடுகிறார்.
அனைத்துலக காயலர்களின் கவனத்திற்காக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்புடையீர்! அஸ்ஸலாம் அலைக்கும்.
நான் 126னு/278 குத்துக்கல் தெரு> காயல்பட்டினம் குடியிருந்து வருகிறேன். நான் கூஸ் பிஸ்தாமி மகள். என் கணவர் சோனா சுல்தான் ஜமாலுதின். எனக்கு ஊர் மக்கள் ஆதரவு இருப்பதால் நான் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புகிறேன். வர இருக்கின்ற அக்டோபர் மாதம் 17 தேதி தேர்தலில் நகர் மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளேன். அதற்காக நாமினேசன் செய்து உள்ளேன்.
என்னை தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுத்தால் நமதூர் அனைத்துத்தர மக்களுக்கும் அவர்கள் எதிர்பார்க்கின்ற அனைத்து தேவைகளையும் என்னால் முடிந்தவற்றை வாக்கு மாறாமல் செய்து கொடுப்பேன்.
நான் மக்களுக்கு ஆற்ற இருக்கும் பணிகள்:
நமதூல் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள 2வது பைப் லைன் திட்டத்தை நான் முயற்சி செய்து கொண்டு வந்து 5 நாட்களுக்கு ஒருமுறை தண்ணர் வருவதை 2 நாட்களுக்கு ஒருமுறை தண்ணர் வரும் என்பதை வாக்குறுயளிக்கிறேன்.
நமதூல் மின்சாரம் பற்றாக்குறையால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு மக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அதை சீர்படுத்தி நமதூல் மின் உபநிலையம் அமைத்திட நான் அயராது பாடுபடுவேன்.
நமதூர் அரசு மருத்துவமனையில் நிரந்தரமாக மருத்துவர் தங்கி மக்களுக்கு வேலை செய்ய மருத்துவமனையின் உள்ளே மருத்துவர்களுக்கு குவாட்டர்ஸ் கட்டிதர பாடுபடுவேன்.
நமதூல் (ஏயுழு) கிராம நிர்வாக அதிகாக்கு என நிரந்தர கட்டிடம் புதிய பேருந்து நிலையத்திற்குள்ளே அமைந்திட பாடுபடுவேன்.
பொதுமக்கள் மாதம் தோறும் மின்கட்டணம் செலுத்தும் தற்போது உள்ள அலுவலகம் மிகவும் சிறியதாக இருப்பதால் நல்ல விசாலமான புதிய கட்டிடம் புதிய பேருந்து நிலையத்திற்குள் கொண்டுவர பாடுபடுவேன்.
புதிய பேருந்து நிலையத்திற்குள் செயல்படாமல் புட்டிக்கிடக்கும் கழிப்பறையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்க பாடுபடுவேன்.
நமதூல் உள்ள அனைத்துப் பள்ளிகூடங்களுக்கும் குடிநீர் இணைப்பு வசதி ஏற்படுத்தித்தர பாடுபடுவேன். நமதூல் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள குடும்ப அட்டைகள் உள்ள ரேசன் கடையை இனம் கண்டு அதை மக்கள் நீண்ட நேரம் காத்துக்கிடக்காமல் எளிதாக பொருட்கள் வாங்கிச் செல்ல கடையை இரண்டாகப்பித்து செயல்பட பாடுபடுவேன்.
ஒவ்வொரு தெருவிற்கும் பொது குடிநீர் இணைப்பு தேவைக்கு ஏற்ப கொண்டு வர பாடுபடுவேன்.
தமிழக அரசு அறிவிக்கும் அனைத்து சமுதாய நலத்திட்டங்களை நமதூருக்குக் கொண்டுவர பாடுபடுவேன்.
என்னை தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுத்தால் நமதூர் நகராட்சியை ஊழலற்ற நகராட்சியாக மாற்றுவேன். தூய்மையான நகரமாக மாற்றிட முனைப்புடன் பாடுபடுவேன்.
உங்கள் ஆதரவை பெரிதும் எதிர்பார்க்கும்,
கே.பி..செய்யது மரியம்,
க/பெ. எஸ்.எம்.எஸ். சுல்தான் ஜமாலுதின்,
126-D/278, குத்துக்கல் தெரு,
காயல்பட்டினம்.
கைபேசி எண்: 98653 45580
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |