காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையால் நியமனம் செய்யப்பட்ட நகர்மன்றத் தலைவர் தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது வேட்பாளரை ஆதரிக்குமாறு நகர பொதுமக்களை காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து, ஐக்கியப் பேரவை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நடைபெறவுள்ள நகராட்சித் தேர்தலில், காயல்பட்டினம் நகராட்சித் தலைவர் பொறுப்பிற்கு, ஊர் சார்பில் ஒரு பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க தேர்வுக்குழுக் கூட்டம் 26.09.2011 அன்று திங்கள் பின்னேரம் 07.00 மணி அளவில் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் நடைபெற்றது.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், ஊரின் ஜமாஅத் மற்றும் பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தலைவர் பொறுப்புக்கு பொது வேட்பாளராக பரிந்துரை செய்ய வேண்டுமென பேரவையில் விருப்பமனு அளித்தவர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது.
நிறைவாக, ஆறாம்பள்ளித் தெருவைச் சார்ந்த சகோதரி ஹாஜ்ஜா எல்.எஸ்.எம்.முத்து மைமூனத்துல் மிஸ்ரியா பி.காம் அவர்கள் நகராட்சித் தலைவர் பதவிக்கு ஊரின் பொது வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இத்தேர்வு குறித்து நமது சகோதர சமுதாய மக்களுக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்களது ஒத்துழைப்பும், ஆதரவும் கோரப்பட்டுள்ளது.
நகராட்சித் தலைவர் தேர்வுக்குழு கூட்டத்திற்கு பிரதிநிதிகளை அனுப்பித் தந்து, பெரும் ஒத்துழைப்பு நல்கிய நகரின் ஜமாஅத்துகள் மற்றும் பொதுநல அமைப்புகளுக்கும், கூட்டத்தில் பங்கேற்ற நகரப் பிரமுகர்களுக்கும் இதயமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இத்தேர்தல் சம்பந்தமாக பேரவை மூலம் எடுக்கும் முடிவுகளுக்கு ஒத்துழைப்பும், ஆதரவும் தருவோம் என எழுத்து மூலம் ஒப்புதல் தந்திருக்கும் நம் நகரின் அரசியல் கட்சியினருக்கு மீண்டும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஊரின் பொது வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டவரை வெற்றி பெறச் செய்வது நமது தார்மீகக் கடமையாகும். எனவே, நாம் அனவைரும் ஒன்றிணைந்து செயல்பட்டு ஊர் ஒற்றுமையை நிலைநாட்டுவோம்.
நகராட்சித் தலைவர் தேர்வுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற ஜமாஅத்துகளின் பட்டியல்:
(01) குத்பா பெரிய பள்ளி
(02)குத்பா சிறு பள்ளி
(03) குருவித்துறைப் பள்ளி
(04) அப்பா பள்ளி
(05) மரைக்கார் பள்ளி
(06) தாயிம்பள்ளி
(07) ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளி
(08) ஷெய்கு ஹுஸைன் பள்ளி
(09) செய்கு ஸலாஹுத்தீன் (மேலப்) பள்ளி
(10) மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளி
(11) அரூஸிய்யா பள்ளி
(12) புதுப்பள்ளி
(13) முஹ்யித்தீன் பள்ளி
(14) மொகுதூம் பள்ளி
(15) மொட்டையார் (கோமான்) பள்ளி
(16) செய்யிதினா பிலால் பள்ளி
(17) கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி
(18) மீக்காஈல் பள்ளி
(19) அஹ்மது நெய்னார் பள்ளி
(20) ஆறாம்பள்ளி
(21) ஹாஜி அப்பா தைக்கா பள்ளி
(22) குட்டியா பள்ளி
(23) பெரிய சம்சுதீன் (ஒலி) பள்ளி
நகராட்சித் தலைவர் தேர்வுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுநல அமைப்புகளின் பட்டியல்:
(01) ஐக்கிய விளையாட்டு சங்கம் (USC)
(02) ரிஜ்வான் சங்கம்
(03) ஃபாயிஸீன் சங்கம்
(04) கவ்திய்யா சங்கம்
(05) மஜ்லிஸுல் கரம் சங்கம்
(06) ஜலாலிய்யா சங்கம்
(07) கே.ஏ.டி.சங்கம்
(08) காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு
(09) மன்பவுல் பறகாத் சங்கம்
(10) அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம்
(11) காயல் ஸ்போர்ட்டிங் கிளப்
(12) இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF)
(13) ரெட் ஸ்டார் சங்கம்
(14) மஜ்லிஸுல் கவ்து சங்கம்
(15) காக்கும் கரங்கள்
வல்ல இறைவன் நம் நன்னோக்கங்கள் நிறைவேற அருள் புரிவானாக, ஆமீன். நன்றி, வஸ்ஸலாம்.
ஓரணியில் ஒன்றுபடுவோம்! ஊர் ஒற்றுமையை நிலைநாட்டுவோம்!!
இவண்,
காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை
(நகரின் அனைத்து ஜமாஅத் மற்றும் பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பு)
கே.டி.எம். தெரு, காயல்பட்டணம்
தொலைபேசி எண்: 04639 - 285200
மின்னஞ்சல்: kayalpatnamperavai@gmail.com
நாள்: 30.09.2011.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை பிரசுரமாக அச்சடிக்கப்பட்டு, நகரின் இரண்டு ஜும்ஆ பள்ளிகளிலும் வினியோகிக்கப்பட்டதோடு, சிறிய குத்பா பள்ளியில் ஜும்ஆ தொழுகை நிறைவுற்றதும் வாசிக்கப்பட்டது.
[செய்தியில் தவறுதலாக விடுபட்ட பள்ளிகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.] |