செய்தி எண் (ID #) 7315 | | |
புதன், செப்டம்பர் 28, 2011 |
உள்ளாட்சித் தேர்தல் 2011: காயல்பட்டினம் நகர்மன்ற தலைவர் பொறுப்பிற்கு இதுவரை 4 பெண்கள் வேட்புமனு தாக்கல்! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 7850 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (56) <> கருத்து பதிவு செய்ய |
|
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.
வேட்பு மனு தாக்கல் 22.09.2011 அன்று துவங்கியது. இம்மாதம் 29ஆம் தேதி வரை வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் பொறுப்பு இம்முறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டுகளைப் பொருத்த வரை, 14ஆம் வார்டு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பெண்களுக்கும், 02, 03, 04, 08, 09 ஆகிய வார்டுகள் பொதுவாக பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த வார்டுகளைத் தவிர்த்து, 01, 05, 06, 07, 10, 11, 12, 13, 15, 16, 17, 18 ஆகிய ஆண்களும், பெண்களும் போட்டியிடும் பொது வார்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
நகர்மன்றத் தலைவர் பொறுப்பிற்கு நேற்று வரை யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், வேட்பு மனு செய்ய நாளை கடைசி நாள் என்றிருக்கையில், இன்று நான்கு பெண்கள் நகர்மன்ற தலைவர் பொறுப்பிற்கு பின்வருமாறு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்:-
காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சார்ந்த இறைச்சிக்கடை சுல்தான் ஜமாலுத்தீன் என்பவரின் மனைவி கே.பி.செய்யித் மர்யம், இன்று காலை 11.14 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் நகர்மன்றத் தலைவர் தேர்வுக்குழு சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொது வேட்பாளரான - காயல்பட்டினம் ஆறாம்பள்ளித் தெருவைச் சார்ந்த என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் என்பவரின் மனைவி முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யா (வயது 44) இன்று காலை 11.35 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை நிர்வாகிகளும், நகரப் பிரமுகர்களும் வந்திருந்தனர்.
காயல்பட்டினம் காயிதேமில்லத் நகரைச் சார்ந்த சிங்கப்பூரார் முஹ்யித்தீன் அப்துல் காதிர் என்பவரின் மனைவி எச்.எம்.முஹம்மத் இப்றாஹீம் உம்மா (வயது 57) இன்று நண்பகல் 12.00 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.
காயல்பட்டினம் மகுதூம் தெருவைச் சார்ந்த பொதுநல ஊழியர் பாளையம் இப்றாஹீமின் மகளும், ஷேக் அப்துல் காதிர் என்பவரின் மனைவியுமான ஆபிதா ஷேக் (வயது 38) இன்று மதியம் 02.55 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இவர்களின் வேட்பு மனுக்களை, நகர்மன்றத் தேர்தல் துணை அலுவலர் சக்தி குமார் பெற்றுக்கொண்டார். வேட்பு மனு செய்துள்ள அனைவரும் தனித்துப் போட்டியிடுவது (சுயேட்சை) குறிப்பிடத்தக்கது.
படங்களில் உதவி:
காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் |