தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் 22.09.2011 அன்று துவங்கியது. இம்மாதம் 29ஆம் தேதி (நாளை) வரை வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் பொறுப்பு இம்முறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டுகளைப் பொருத்த வரை, 14ஆம் வார்டு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பெண்களுக்கும், 02, 03, 04, 08, 09 ஆகிய வார்டுகள் பொதுவாக பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த வார்டுகளைத் தவிர்த்து, 01, 05, 06, 07, 10, 11, 12, 13, 15, 16, 17, 18 ஆகிய ஆண்களும், பெண்களும் போட்டியிடும் பொது வார்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான 29.09.2011 அன்று (நேற்று) காலை 11.00 மணி முதல், மதியம் 03.00 மணி வரை, நகர்மன்றத் தலைவர் பொறுப்பிற்கு மூவரும், உறுப்பினர்கள் பொறுப்பிற்கு 26 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்:-
கோமான் தெருக்கள், அருணாச்சலபுரம், கடையக்குடி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 01ஆம் வார்டு நகர்மன்ற உறுப்பினர் பொறுப்பிற்கு, அருணாச்சலபுரத்தைச் சார்ந்த அன்பு என்பவரின் மகன் கதிரவன் (வயது 32) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
நெய்னார் தெரு கதவிலக்கம் 1 முதல் 136 வரையும், கீழ நெய்னார் தெரு கதவிலக்கம் 1 முதல் 29 வரையிலுமுள்ள பகுதிகளை உள்ளடக்கிய 03ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, நெய்னார் தெருவைச் சார்ந்த காதிரி என்பவரின் மனைவி உதுமான் நாச்சி (வயது 44) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
சதுக்கைத் தெரு கதவிலக்கம் 1 முதல் 84 வரையிலும், குத்துக்கல் தெரு கதவிலக்கம் 218 முதல் 281 வரையிலும், குறுக்கத் தெரு கதவிலக்கம் 1 முதல் 106 வரையிலுமுள்ள பகுதிகளை உள்ளடக்கிய 04ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, குத்துக்கல் தெருவைச் சாந்த நோனா ஜாஃபர் என்பவரின் மனைவி கே.எம்.ஓ.செய்யித் அலீ ஃபாத்திமா (வயது 42) வேடபு மனு தாக்கல் செய்தார். இவர் நகர்மன்றத்தின் நடப்பு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே பொறுப்பிற்கு, சதுக்கைத் தெருவைச் சார்ந்த பா.மு.ஜலாலீ என்ற பாலப்பா ஜலாலீயின் மனைவி எஸ்.டி.ஜெய்புன்னிஸா (வயது 47) வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
கே.எம்.கே. தெரு, ஆறாம்பள்ளித் தெரு, மகுதூம் தெரு, முகைதீன் தெரு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 05ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, ஆறாம்பள்ளித் தெருவைச் சார்ந்த கத்தீப் அஹ்மத் ஸாலிஹ் என்பவரின் மகன் கே.ஏ.எஸ்.முத்து முஹம்மத் (வயது 41) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே பொறுப்பிற்கு, அம்பல மரைக்கார் தெருவைச் சார்ந்த முஹம்மத் முஹ்யித்தீன் என்பவரின் மகன் எம்.எம்.அஹ்மத் ஹுஸைன் (வயது 53) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தீவுத்தெரு, கீழநெய்னார் தெரு (எண்கள் 30-460), கற்புடையார் பள்ளி வட்டம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 07ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பொறுப்பிற்கு, பண்டகசாலை காரனார் தெரு என்ற தீவுத்தெருவைச் சார்ந்த செய்யித் இஸ்மாஈல் என்பவரின் மகன் எஸ்.ஐ.செய்யித் முஹம்மத் ரஃபீக் (வயது 53) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, கீழ நெய்னார் தெருவைச் சார்ந்த முஹம்மத் அப்துல் காதிர் என்பவரின் மகன் எம்.கே.மொகுதூம் (வயது 60) வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதே வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, கீழ நெய்னார் தெருவைச் சார்ந்த முஹம்மத் லெப்பை என்பவரின் மகன் சிக்கந்தர் (வயது 43) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
சொளுக்கார் தெரு, கொச்சியார் தெரு, முத்துவாப்பா தைக்கா தெரு, தேங்காய் பண்டகசாலை, மாட்டுக்குளம், கடற்கரை பூங்கா வடக்கு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 08ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, சொளுக்கார் தெருவைச் சார்ந்த ஃபக்ருத்தீன் என்பவரின் மனைவி வஹீதா (வயது 43) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அலியார் தெரு, பரிமார் தெரு, சின்ன நெசவுத் தெரு, காயிதேமில்லத் நகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 10ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, அப்பாபள்ளித் தெருவைச் சார்ந்த நாகூர் மீரான் என்பவரின் மகன் என்.ஷாஜஹான் (வயது 50) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கே.டி.எம்.தெரு, பெரிய நெசவுத் தெரு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 11ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, கே.டி.எம். தெருவைச் சார்ந்த எஸ்.டி.கமால் என்பரின் மகன் எஸ்.எம்.கே.முகைதீன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மங்களவாடி, ஓடக்கரை, பூந்தோட்டம், தைக்காபுரம், வாணியக்குடி, மேல நெசவுத்தெரு, வண்டிமலைச்சியம்மன் கோயில் தெரு, கண்டிப்பிச்சை தோட்டம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 12ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பொறுப்பிற்கு, ஓடக்கரை வடக்கு தெருவைச் சார்ந்த நாராயணன் என்பவரின் மனைவி அருணாச்சலகனி (வயது 65) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே பொறுப்பிற்கு, பூந்தோட்டத்தைச் சார்ந்த ஆர்.பால் நாடார் என்பவரின் மகன் பி.மனோகரன் (வயது 38) அ.இ.அ.தி.மு.க. சார்பில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஹாஜியப்பா தைக்கா தெரு, ஜெய்லானி நகர், வீரசடைச்சியம்மன் கோயில் தெரு, விசாலாட்சியம்மன் கோயில் தெரு, வண்ணாக்குடி தெரு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 13ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, நெய்னார் தெருவைச் சார்ந்த முஹம்மத் நூஹ் என்பவரின் மகன் எம்.என்.சொளுக்கு முஹம்மத் அப்துல் காதர் என்ற எம்.என்.சொளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர் நகர்மன்றத்தின் நடப்பு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே பொறுப்பிற்கு, விசாலாட்சியம்மன் கோயில் தெருவைச் சார்ந்த இசக்கி முத்து பேச்சிமுத்து (வயது 28) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே பொறுப்பிற்கு, விசாலாட்சியம்மன் கோயில் தெருவைச் சார்ந்த திபூசியோஸ் என்பவரின் மகன் ஸ்டெஃபினாக் (வயது 64) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே பொறுப்பிற்கு, பெரிய நெசவுத்தெருவைச் சார்ந்த ஏ.எம்.ஹனீஃபா என்பவரின் மகன் ஏ.யாஸர் அரஃபாத் (வயது 31) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இலட்சுமிபுரம், அழகாபுரி, இரத்தினபுரி பகுதிகளை உள்ளடக்கிய 14ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, இரத்தினபுரியைச் சார்ந்த ஆர்.முத்து கிருஷ்ணன் என்பவரின் மனைவி மகேஷ்வரி (வயது 40) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே பொறுப்பிற்கு, கீழ லெட்சுமிபுரத்தைச் சார்ந்த எஸ்.நடராஜன் என்பவரின் மனைவி என்.பூங்கொடி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பைபாஸ் ரோடு, சீதக்காதி நகர், உச்சினிமாகாளியம்மன் கோயில் தெரு, மங்கள வினாயகர் கோயில் தெரு, சிவன் கோயில் தெரு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 15ஆவது வார்டு நகர்மனற உறுப்பினர் பொறுப்பிற்கு, உச்சினிமாகாளியம்மன் கோயில் தெருவைச் சார்ந்த பால் நாடார் என்பவரின் மகன் ரவி ஜவஹர் (வயது 28) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
குத்துக்கல் தெரு கதவிலக்கம் 1 முதல் 217 வரை, காட்டுத் தைக்கா தெரு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 17ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, குத்துக்கல் தெருவைச் சார்ந்த என்.எம்.கே.டி.முஹம்மத் ஹஸன் என்பவரின் மகன் என்.எம்.எச்.முஹ்யித்தீன் (வயது 49) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே பொறுப்பிற்கு, சதுக்கைத் தெருவைச் சார்ந்த எம்.எம்.பி.முஹ்யித்தீன் என்பவரின் மகன் பா.மு.ஜலாலீ என்ற பாலப்பா ஜலாலீ வேட்பு மனு தாக்கல் செய்தார்.
முத்தாரம்மன் கோயில் தெரு, சேதுராஜா தெரு, கோமான்புதூர், டி.சி.டபிள்யு. காலனி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 18ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, முத்தாரம்மன் கோயில் தெருவைச் சார்ந்த அரபி முஹம்மத் முஹ்யித்தீன் என்பவரின் மகன் ஹபீபுர்ரஹ்மான் (வயது 38) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே பொறுப்பிற்கு, காட்டு தைக்கா தெருவைச் சார்ந்த காசிராஜன் என்பவரின் மகன் கே.ரமேஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
[செய்தி திருத்தப்பட்டுள்ளது.] |