தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் 22.09.2011 அன்று துவங்கியது. இம்மாதம் 29ஆம் தேதி (நாளை) வரை வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் பொறுப்பு இம்முறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டுகளைப் பொருத்த வரை, 14ஆம் வார்டு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பெண்களுக்கும், 02, 03, 04, 08, 09 ஆகிய வார்டுகள் பொதுவாக பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த வார்டுகளைத் தவிர்த்து, 01, 05, 06, 07, 10, 11, 12, 13, 15, 16, 17, 18 ஆகிய ஆண்களும், பெண்களும் போட்டியிடும் பொது வார்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. வேட்பு மனு தாக்கல் 22.09.2011 அன்று துவங்கி, 29.09.2011 வரை நடைபெற்றது.
பெற்ப்பட்ட வேட்பு மனுக்கள் இன்று காலை 11.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரை பரிசீலிக்கப்பட்டது.
காயல்பட்டினம் 06ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, கீழ நெய்னார் தெருவைச் சார்ந்த அப்துல் அஜீஸ் என்பவர் தாக்கல் செய்திருந்த வேட்பு மனு மட்டும், அவரை முன்மொழிந்தவர் 06ஆவது வார்டைச் சார்ந்தவரல்ல என்ற காரணத்தை அடிப்படையாகக் கொண்டு நிராகரிக்கப்பட்டது.
அதைத் தவிர, நகர்மன்ற உறுப்பினர் பொறுப்புகளுக்காக பெறப்பட்ட வேட்பு மனுக்கள் அனைத்தும் ஏற்கப்பட்டன. நகர்மன்றத் தலைவருக்காக தாக்கல் செய்யப்பட்டிருந்த ஏழு வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நகர்மன்ற கூட்டரங்கின் வெளிப்பகுதியில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
|