காயல்பட்டினம் சொளுக்கார் தெரு - மவ்லானா அப்பா சின்ன் கல் தைக்கா வளாகத்தில் இயங்கி வரும் முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியில், வெளியூர் மாணவியருக்கான தங்கும் விடுதி அடிக்கல் நாட்டு விழா 29.09.2011 வியாழன் மாலை 05.30 மணிக்கு நடைபெற்றது.
முன்னதாக மாலை 05.00 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இமாம் ஹாஜி டி.எம்.கே.சுல்தான் அப்துல் காதிர் தலைமை தாங்கினார்.
ஹாஃபிழ் வெள்ளி முஹம்மத் முஹ்யித்தீன் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். மாணவியர் விடுதி கட்டிடக் குழு தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பின்னர், மாணவியர் விடுதி கட்டப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், கட்டிட அமைப்பு குறித்த விபரங்கள் குறித்தும் கல்லூரியின் நிறுவனர் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ விளக்கிப் பேசினார்.
பின்னர் நபிகளார் புகழ்பாடும் அரபி பைத்துகள் பாடப்பட்டன. நிறைவாக, மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
பின்னர் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில், நகரப் பிரமுகர்கள் கட்டிடக் கலவைகளை எடுத்துக்கொடுக்க, மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் பாக்கவீ ஃபாழில் அஹ்ஸனீ அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் நகரின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கம்பல்பக்ஷ் ஹாஜி எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத், நஹ்வீ எம்.எம்.முத்துவாப்பா, எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய், ஹாஃபிழ் அமீர், எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆபிதீன், ஹாஃபிழ் ஈஸா ஷஃபீக் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
|