தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் 22.09.2011 அன்று துவங்கி, 29.09.2011 தேதியுடன் நிறைவுற்றது.
காயல்பட்டினத்தின் நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கு 7 பேரும், நகர்மன்ற உறுப்பினர்கள் பொறுப்புகளுக்கு ஏராளமானோரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
சதுக்கைத் தெரு கதவிலக்கம் 85 முதல் 291 வரையுள்ள பகுதிகளை உள்ளடக்கிய 02ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, ஆறாம்பள்ளித் தெருவைச் சார்ந்த முத்து முஹம்மத் என்பவரின் மனைவி முஹம்மத் செய்யித் ஃபாத்திமா (வயது 44) வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
வேட்பு மனு செய்வதற்கான காலக்கெடு முடியும் வரை அவரை எதிர்த்து வேறெவரும் வேடபு மனு தாக்கல் செய்யாததால், முஹம்மத் செய்யித் ஃபாத்திமா போட்டியின்றி தேர்வானதாக நேற்று நடைபெற்ற வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
1. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byVilack SMA (Hetang)[01 October 2011] IP: 69.*.*.* United States | Comment Reference Number: 9229
ஊரின் முதலாவதாக வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த சகோதரிக்கு என் வாழ்த்துக்கள் . அல்லாஹ் உதவியால் உங்கள் பணியின் காலங்கள் மிக சிறப்பாக அமையும் .
4. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byFuad (Singapore)[01 October 2011] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 9233
இரண்டாவது வார்டு வாக்களர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. இதேபோல் எல்லா வார்டுகளிலும் நகரமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்தால் சந்தோஷம். ஐக்கியப்பேரவையால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு உங்களின் வாக்குகளை செலுத்தி அவர்களை வெற்றி பெறச்செய்வது நமது கடமையாகும்.
7. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byFasi Ismail (Jiangmen, China.)[01 October 2011] IP: 69.*.*.* United States | Comment Reference Number: 9243
மம்செய்து ராத்தாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் நீங்கள் இப்பணியை தொடர்வதுக்கு அல்லாஹ் உங்களுக்கு உதவியாக இருப்பான் அவனே போதுமானவன். ஆகையால் நீங்கள் தைய்ரியத்துடனும், துணிச்சலடனும் முக்கியமாக நேர்மையுடனும் இப்பணியாற்றுங்கள் இறைவன் நாடினால் உங்களுக்கு நன்மைகள் பல உண்டு.
அல்லா உங்களுக்கு மேன்மேலும் பரக்கத்தை கொடுத்து அவனே உங்கள் பணியைய் வழி நடத்தி செல்வானாக ஆமீன்.
8. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byAhamed Shahul Hameed(Abusabu) (kayalpattinam)[01 October 2011] IP: 141.*.*.* United States | Comment Reference Number: 9244
9. உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bySolukku Seyed Mohamed Sahib SMI (Jeddah, Saudi.)[01 October 2011] IP: 168.*.*.* United States | Comment Reference Number: 9245
வாழ்த்துக்கள், நீங்கள் மேற்கொள்ளும் எல்லா நடவடிக்கைகளையும் உங்களை நீங்களே கேட்டு செய்வது சரிதான என்று சிந்தித்து முடிவெடுத்து செயல்படுங்கள். இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், தெளிவான சிந்தனையையும், ஆக்கபூர்வமான செயல் திறனையும் தந்தருள்வானாக, ஆமீன்.
10. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byV D SADAK THAMBY (Guangzhou (China))[01 October 2011] IP: 59.*.*.* China | Comment Reference Number: 9250
போட்டியின்றி தேர்தேடுக்க வழிகாட்டிய ஜலாலியா சங்கம் மற்றும் ஐக்கியபேரவைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இதுபோன்று ஒவ்வொரு வார்டிலும் ஐக்கியபேரவையின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டால்,தரமான ஊழலற்ற நகர்மன்றம் எளிதாக அமைக்கமுடியும்.
இப்போதுள்ள நிலவரந்த்தை பார்த்தால், மிகக்கடுமையான போட்டியை நாம் எதிநோக்கவேண்டியதிருக்கிறது.அதிலும் ஊழல்பேர்வழிகள் மிக கணிசமான எண்ணிக்கையில் போட்டியிடுகின்றனர்.
ஊழல் பேர்வழிகளை உள்ளே நுழையவிட்டுவிட்டு, பிறகு நகர்மன்றதலைவரையும், ஐக்கியபேரவையையும் குற்றம்சாட்டி என்ன பயன்? சென்ற நகரமன்ற தேர்தல்களிலும் இதுதானே நடந்தது .
எனவே, நாம் மிகமுக்கியமாக கடைபிடிக்கவேண்டியது , ஐக்கியபேரவை மற்றும் அந்தந்த பகுதி ஜாம அத் ஆதரவு பெற்ற வேட்பாளர்களுக்கு மட்டுமே நாம் வாக்களிக்க வேண்டும்.
இதர போதுனலமன்றங்களும் , நன்கு சிந்தித்து , ஐக்கியபேரவையுடன் இணக்கமாக இருந்து /ஒத்துழைத்து ஊர் ஒற்றுமைக்காக பாடுபடவேண்டியது.
11. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byALS maama (Kayalpatnam)[01 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 9259
அஸ்ஸலாமு அலைக்கும்,
இன்றைய செய்தியின் பின்னணியில், வாசகர் கருத்து பகுதியில், நமதூர் 2 ஆவது வார்டில் தேர்வு செய்யப்பட்ட முத்து முஹம்மத் அவர்களின் மனைவியை போட்டியின்றி தேர்வு செய்த சதுக்கை தெரு இலக்கம் 85 முதல் 291 வரை உள்ள மக்கள் அனைவர்களுக்கும் எங்களது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும், பிராத்தனை(துஆ)களையும் மனதார செய்கின்றேன். ஊருக்கே ஒரு வழிகாட்டியாய் முத்திரைபதித்த உங்களுக்கு நகராட்சியில் செல்லும் போது வரவேற்ப்பும் அன்பு மகுடமும் அங்கு காத்திருக்கிறது. இன்ஷாஅல்லாஹ் அந்த இனிய நாளை நாங்களும் ஊர்மக்களாகிய அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம், அல்ஹம்துலில்லாஹ்.
ஓவியர் ALS மாமா,
எழுத்தாளர், பொதுசேவை,
ஆலோசகர் ரஹ்மானியா பள்ளி கல்வி வளர்ச்சிக்குழு,
ALS School of Arts, KTM street,
அயர்ன் மாஸ்டர் ஜின்னா, பெரிய நெசவு தெரு.
14. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bySalai Syed Mohamed Fasi (AL Khobar)[01 October 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9275
Congratulation
My hearty wish to the ward members to select unopposed.It shows unity.The other ward member also emulate such a good things.It is one of the achievement and triumph for us.If one who select unopposed no confuse and chaos and avoid fight we will peace of mind.
16. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bykatheeja (kayalpatnam)[01 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 9286
அஸ்ஸலாமு அழைக்கும்
மாஷா அல்லாஹ் போட்டி இல்லாமலே வெற்றி பெற்ற வேட்பாளரே வாஆஆஆஅவ் இந்த மாதுரி எல்லா ஜமாஅத்தாளரும் இருந்தால் இந்த ஊரை யாராலும் அசைக்க முடியாது ஒற்றுமையே இந்த ஜமாஅத்தாலர்களுக்கு ஒரு குறிக்கோள்
17. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bypirabu.n.s.sulthan (dubai)[01 October 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9295
அஸ்ஸலாமு அலைக்கும்
பாத்திமா லாதாவிட்கு வாழ்த்துகள் அவர்களை போட்டி இன்றி தேர்வு செய்த ஜமாத்தார்,தெரு மக்களுக்கும் நன்றி.இன்று பலர் தலைவர் தேர்விலும் உறுப்பினர் தேர்விலும் ஆர்வம்காட்டி விவதிகுஹின்றனர் ஆனால் எலக்சென் முடிந்தபின் எத்தனை பேர் ஊருகஹவும் தெருவுகஹவும் நேர்மையான உருபினர்ஹளுக்கு துணை நிட்கிரர்ஹல் என்பதை பார்க்கவேண்டும்.இன்ஷா ஆல்லாஹ் ஜமாதார்களும், ஐக்கிய பேரவையும் தேர்தூ எடுக்கும் நபர்ஹல் வெற்றி பெற ஊர் நன்மையை நாடி துஆ செய்வோமாக ஆமீன்.
18. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bypirabu.n.s.sulthan (dubai)[01 October 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9296
அஸ்ஸலாமு அலைக்கும்
பாத்திமா லாதாவிட்கு வாழ்த்துகள் அவர்களை போட்டி இன்றி தேர்வு செய்த ஜமாத்தார், தெரு மக்களுக்கும் நன்றி.இன்று பலர் தலைவர் தேர்விலும் உறுப்பினர் தேர்விலும் ஆர்வம்காட்டி விவதிகுஹின்றனர் ஆனால் எலக்சென் முடிந்தபின் எத்தனை பேர் ஊருகஹவும் தெருவுகஹவும் நேர்மையான உருபினர்ஹளுக்கு துணை நிட்கிரர்ஹல் என்பதை பார்க்கவேண்டும்.
இன்ஷா ஆல்லாஹ் ஜமாதார்களும், ஐக்கிய பேரவையும் தேர்தூ எடுக்கும் நபர்ஹல் வெற்றி பெற ஊர் நன்மையை நாடி துஆ செய்வோமாக ஆமீன்.
எங்கள் வார்டு மக்களே, யார் வேண்டுமானாலும், வரட்டும். எங்கள் ஜமாஅத் வேறு இல்லை, நாங்கள் வேறு இல்லை என்று, இப்பவும் நிரூபித்து உள்ளீர்கள்.
மக்களின் ஒற்றுமைக்கு மட்டும்தான் எங்கள் ஜமாஅத் அன்றி வேறில்லை, என்று மூன்று ஜமாத்தும் ஒன்று பட்டு செயல் பட்டு இருக்கிறது. எங்கள் முதுகில் பயணம் செய்திட யாராலும் முடியாது!!! எங்கள் ஜமாத்து கட்டுப் பாடான ஜமாத்துதான். வாழ்க ஒற்றுமை!
எனது சிறிய வேண்டுகோல் நம் ஜமாதினருக்கு, இனி ஒரு ஐக்கிய பேரவை கூட்டம் என்றாலும், எந்த கூட்டம் என்றாலும், வேறு இடங்களில் வையுங்கள். இது நான் அறிந்த பொதுவான வேண்டுகோள். பொது நலவாதியை விட சுயநல வாதிகள்தான் சாஸ்தி!!!. புரிந்தும் இருப்பீர்கள்!.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross