செய்தி எண் (ID #) 7332 | | |
ஞாயிறு, அக்டோபர் 2, 2011 |
உள்ளாட்சித் தேர்தல் 2011: போட்டியிலிருந்து விலகலாமா? காயலர்களின் கருத்தைக் கேட்கிறார் ம.சே.கரங்கள் நிறுவனர் பா.மு.ஜலாலீ! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 4528 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (37) <> கருத்து பதிவு செய்ய |
|
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.
காயல்பட்டினம் மக்கள் சேவா கரங்கள் அமைப்பின் நிறுவனரான - காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சார்ந்த பா.மு.ஜலாலீ இத்தேர்தலில் 17ஆம் வார்டு நகர்மன்ற உறுப்பினர் பொறுப்பிற்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், தான் போட்டியிலிருந்து விலகுவது குறித்து காயலர்களின் கருத்தை எதிர்பார்த்து இன்று இரவு அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்பான காயலர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மக்கள் சேவாக் கரங்கள் நிறுவனரான பா.மு.ஜலாலீ என்ற நான் நமதூர் 17ஆம் வார்டு நகர்மன்ற உறுப்பினர் பொறுப்பிற்குப் போட்டியிட கடந்த 29.09.2011 அன்று வேட்புமனு தாக்கல் செய்தேன். பரிசீலனை நாளின்போது எனது மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது; இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
வெளியிலிருந்து பல பணிகளை மக்களுக்காக செய்துகொண்டிருக்கும் நான், நகர்மன்ற உறுப்பினர் என்ற மக்கள் அங்கீகாரத்துடன் செயல்பட்டால் மேலும் கூடுதலாகப் பணியாற்றலாமே என்று எண்ணியிருந்தேன்.
இதற்கிடையில், இரட்டை குளத்துப் பள்ளி நிர்வாகத்தினரின் அழைப்பின் பெயரிலும், 17ஆம் வார்டு நகர்மன்ற உறுப்பினர் பொறுப்பிற்குப் போட்டியிடும் குத்துக்கல் தெருவைச் சார்ந்த என்.எம்.எச்.முஹ்யித்தீன் என்பவருக்கு ஆதரவு தெரிவித்து போட்டியினின்றும் விலக வேண்டியதன் பேரிலும் நான் இன்று மஃரிபிற்கு முன்னர் பள்ளிக்குச் சென்றேன்.
அவர்கள், நண்பர் என்.எம்.எச்.முஹ்யித்தீன் என்னுடைய அளவுக்கு ஊழலற்ற நல்ல நிர்வாகத்திற்கு பாடுபட உள்ளதாக தெரிவித்தும், தனக்கு ஆதரவளிக்கும் பொருட்டு போட்டியினின்றும் விலகிக் கொள்ளுமாறும் வேண்டிக்கொண்டுள்ளார்.
என்னை ஆதரிக்குமாறு இரட்டைக்குளத்துப் பள்ளி நிர்வாகத்தினரிடம் வேண்டினேன். அதற்கு பள்ளி நிர்வாகத்தினர், “அடுத்த முறை 02ஆம் வார்டு ஆண் உறுப்பினர் அந்தஸ்துக்கு மாற்றப்படும்போது, எங்கள் ஜமாஅத்திலிருந்து உங்களை (என்னை) போட்டியின்றி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆதரவு தெரிவிப்போம் (இன்ஷாஅல்லாஹ்)” என்றனர்.
இக்கூட்டத்திற்கு, துரை காக்கா, முஹ்யித்தீன் தம்பி காக்கா, எஸ்.ஏ.ஜவாஹிர், வி.என்.எஸ்.முஹ்யித்தீன் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர். “நான் யோசித்து சொல்கிறேன்” என்று அவர்களிடம் தெரிவித்துள்ளேன்.
“ஓட்டுகள் சிதறக்கூடாது... ஊழல் செய்வோர் வரக்கூடாது” என்ற ஒரே நோக்கத்திற்காக விட்டுக்கொடுக்கும்படி வேண்டுகின்றனர்.
நாளை வேட்பு மனுக்களை வாபஸ் பெற இறுதி நாள் என்பதால், இது விஷயத்தில் எனதன்பான காயலர்களின் கருத்துக்களை மிகத் துரிதமாக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் தனதறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார். |