காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தல் வரும் 17.10.2011 அன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில், நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான - காயல்பட்டினம் மகுதூம் தெருவைச் சார்ந்த பி.எம்.ஐ.ஆபிதா, தனக்கு ஆதரவளிக்கக் கோரி, நகர பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லாப்புகழும் இறைவனுக்கே! வல்லோன் அவனே துணை நமக்கே!
அல்லாஹ்வே! ஆட்சியாளர்களுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கிறாய். (திருக்குர்ஆன் - 3:26)
இன்ஷாஅல்லாஹ் எதிர்வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் நமது நகராட்சி மன்றத் தலைமைக்கு எந்த ஒரு கட்சியையோ, அமைப்பையோ, தனிப்பட்ட நபர்களையோ சார்ந்திராமல் மக்களின் வேட்பாளராக போட்டியிட விரும்பி 28.09.2011 அன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன்.
ஜனநாயகத்தின் மாபெரும் சக்தியான மக்கள் சக்தியின் மூலம் இறைவன் தரும் மகத்தான தீர்ப்பை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன்.
அனைத்து ஜமாஅத் மக்களின் அன்பான ஆதரவையும், முழுமையான ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன்.
நல்லவர்கள், பெரியவர்கள் நல்வழிகாட்டுதலில், நேர்மையான முறையில் சிறப்பான வகையில் நல்ல செயல்பாடுகளைக் கொண்டு, காயல்பட்டினத்தை முன்மாதிரி நகரமாக்கும் முயற்சியில் ஒன்றுபடுவோம்! வெற்றி பெறுவோம்!!
இவண்,
பி.எம்.ஐ.ஆபிதா
க/பெ. எம்.எம்.ஷேக் அப்துல் காதர்
த/பெ. பாளையம் இப்ராகிம்
படிப்பு: பி.எஸ்ஸி., பி.எட்.
தொழில்: 12 ஆண்டுகளாக ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளி ஆசிரியை
முகவரி: 28, மகுதூம் தெரு, காயல்பட்டினம்.
இவ்வாறு அவர் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை பிரசுரமாக அச்சிடப்பட்டு, நகரின் இரண்டு ஜும்ஆ பள்ளிகளிலும் இன்று பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.
1. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byfathima (kayalpatnam)[30 September 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 9199
அஸ்ஸலாமு அழைக்கும்
தலைவி ஆபிதா ஷேய்க் உங்கள் வெற்றியை நாங்கள் ஆவலோடு எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்...
நல்லம் உள்ளம் கொண்ட மங்கையே உன் புகழ் பரவக்கூடிய நாள் இதோ அருகில்.
உன் சேவையை எதிர் நோக்கி கொண்டு இருக்கும் நாள் இதோ அருகில்
லஞ்சம் வாங்காத ஒரு நல்ல தலைவியை இதோ நாங்கள் காணப்போகிறோம்
எல்லா தலைவருக்கும் ஒரு உதாரணமாக இருக்கும் ஒரு நல்ல பண்புடையவலை சமுக சேவையை தனது மூச்சாக கொண்டு இருக்கும் ஒரு நல்ல தலைவி இதோ வரப்போகிறார்கள்...
ஏழை பணக்காரர் என்ற பாகு பாடு பாக்காத உத்தம அரசி இதோ வரப்போகிறார்கள் ....
யாருக்கும் அடங்காத மழலை செல்வங்களை பொறுமையோடும் கண்ணியத்தோடும் அவர்கள் செய்யும் குறும்புகளை அன்போடு ஏற்றுக்கொள்ளும் ஆபிதா (ரபியாஸ் ரோசரி ) அவர்கள் ஊர் மக்களின் தேவைகளையும் அவர்கள் நச்சரிப்புகளையும் அன்போடும் பண்போடும் பக்குவத்தோடும் சமாளிக்கும் உள்ளம் கொண்டவளே..யாருடைய ஆதரவும் இல்லாமல் மக்கள் ஆதரவு ஒன்றே போதும் என்று மக்களை நம்பி மக்களுக்காக போர் தொடுக்கும் நீர் வாழ்க உன்புகள் வாழ்க உன் எண்ணம் வாழ்க நீங்கள் வெற்றி பெற வல்ல இறைவனும் நம்ம ஊர் மக்களும் உனக்கு துணை நிற்ப்பார்கள்....உன் நம்பிக்கையை அந்த இறைவன் உண்மையாக்குவான் இன்ஷா அல்லாஹ்
4. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bySadam hussain (Kayalpatnam)[30 September 2011] IP: 141.*.*.* United States | Comment Reference Number: 9209
5. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byjafarullah (soudi arabia(madinah))[30 September 2011] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9216
ஆபிதா ஷேய்க் அவர்கள் போட்டிஇடுவதை நினைத்து மிக மிக சந்தோஷமான விஷயம் .தன் தந்தை போன்று சமூக சேவையில் ஈடுபாடு அதிகம் உள்ளவர் .அவர் வெற்றி பெற்றால் நம் ஊர் நலனுக்கு பாடுபடுவார்.
6. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byVilack SMA (Hetang)[01 October 2011] IP: 59.*.*.* China | Comment Reference Number: 9220
அஸ்ஸலாமு அழைக்கும் .
அன்பு சகோதரி ஆபிதா , நீங்கள் படித்த பண்பாளர் , ஒரு பள்ளியை திறம்பட நடத்தி , பொதுச்சேவை செய்து வருபவர் , இந்தவகையில் நீங்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர் . ஆனால் , ஊரின் ஒற்றுமை என்று வரும்போது , அதை மதித்து நடக்கவும் தெரிந்திருக்க வேண்டும் . இது உங்கள் அந்தஸ்தை மேலும் உயர்த்தும்.
நல்ல உள்ளம் கொண்ட நீங்கள் , சில விசமிகளின் சூழ்ச்சியாலும் , அவர்களது நயவஞ்சக வார்த்தைகளாலும் கவரப்பட்டு இவ்வாறு செய்து விட்டீர்கள் என்று நெருங்கிய சில நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன்.
இன்னும்கூட ஒன்றும் கெட்டுப்போகவில்லை .. போட்டியில் இருந்து விலகி , உங்கள் அந்தஸ்தை மேலும் உயர்த்துங்கள் . " முன் வைத்த காலை பின் வாங்க மாட்டேன் " என்றெல்லாம் பழைய பஞ்சாங்கம் பாடி , விசமிகள் உங்களை வழிகெடுக்க முயல்வார்கள் . படித்த நீங்கள் அதையெல்லாம் கண்டுகொள்ளாதீர்கள் .
முன் வைத்த காலை , ஊர் ஒற்றுமையை கருதி சில நேரங்களில் பின் வைப்பதில் தவறில்லை .இவ்வாறு நீங்கள் செய்யும் பட்சத்தில் , இன்ஷா அல்லாஹ் , அடுத்த தேர்தலில் ஊர் மக்களின் அனைவரது ஆதரவும் உங்களுக்கு உண்டு .
8. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byAbdulKader (Abu Dhabi)[01 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9231
அஸ்ஸலாமு அழைக்கும்....
நான் என்ன நினைத்தேனோ அதைத்தான் VSM அலி கக்கா சொல்லிவிட்டார்கள். இப்படிப்பட்ட ஒரு கருத்தை நான் முதலில் முன்மொழியாத காரணம்.... என்னைக்கொண்டு தங்கள் மனதில் குழப்பம் வேண்டாம் என்றுதான்!!?
மக்களில் பலர் தங்களை கொண்டு நல்ல அபிப்பிராயம் வைத்துள்ளார்கள். இன்றுவரை தாங்கள் நடத்தும் பள்ளியை கொண்டு உங்களுக்கு நல்ல பெயர்தான்..... அனால் ஊரின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு... பெரியோர்களின் முடிவுக்கு தாங்கள் சம்மதம் தெரிவித்து போல் நீங்கள் இந்த போட்டியில் இருந்து விலகிகொண்டால்.... ஊர் மக்களின் முன், பெரியோர்களின் முன், என்னைப்போல் ஊரின் ஒற்றுமைக்காக இந்த ஊடகத்தில் குரல் எழுப்புபவர்கள் முன்... கண்டிப்பாக அல்லாஹ் உதவியால் உயர்ந்து நிப்பீர்கள். உங்களின் ஊர் மக்கள் உங்களை மேலும் போற்றுவார்கள்.
மேலே குறிப்பிட்டது எல்லாம் உங்கள் நன்மைக்காக!
என்னுடைய கருத்துக்கு சிலர் மறுப்பு தெரிவிக்கக்கூடும். மேலும்... உங்களை என்னுடைய்ய கருத்தை நிராகரிக்கச்சொல்லலாம்.
முன்னால் நகரமன்ற தலைவர் வஹீதா ரத்தா அவர்கள் எடுத்த முடிவை சற்று சிந்தனையில் கொள்ளுங்கள்?! அவர்கள் ஊருக்காக, ஊரின் ஒற்றுமைக்காக, ஊரின் நன்மைக்காக... அல்லாஹ்வின் பாதையில், நன்மையை நாடி தேர்தலில் போட்டியிடவில்லை! தேர்தலில் இருந்து விலகிக்கொண்டால்... அடுத்த ஐந்து ஆண்டுகள் நீங்கள் உங்களின் பள்ளியின் மீது அதிகம் கவனம் செலுத்தலாம்!
நீங்களும் சிந்திப்பீர்களாக... செயல்படுவீர்களாக.
தயவு செய்து நம்முடைய்ய முஸ்லிம் சமுதாயத்தின் ஓட்டை பிரிக்காதீர்கள்.
அல்லாஹ் எல்லோருடைய்ய எண்ணங்களையும் நன்கு அறிந்தவன்.
9. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bymackie noohuthambi (kayalpatnam)[01 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 9238
அன்பு சகோதரி ஆபிதா அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் வேண்டுகோளை இணையதளத்தில் பார்த்தேன். அல்லா நாடியவர்களுக்கே அவன் ஆட்சி அதிகாரத்தை கொடுக்கிறான் எனபதுதான் சத்தியமானது. சாத்தியமானது.
இரண்டு கண்களில் எந்த கண் முக்கியம் என்று யார் சொல்லமுடியும். போட்டியில்லாமல் நடக்க வேண்டிய தேர்தல் இப்படி மாறிவிட்டதே என்று வேதனயாக் உள்ளது வெற்றி தோல்விகளை அல்லாஹ்வே நிர்ணயிப்பான்.
நீங்கள் நகராட்சி தலைவியாக தேர்ந்து எடுக்கப்படும் பட்சத்தில் நீங்கள் இந்த ஊருக்கே முன் மாதிரியாக இருந்து ஜனநாயக வழியில் கடமையாற்றினால் எல்லோருடனும் கலந்து ஆலோசிக்கும் மஷூரா முறையை கடைபிடித்தால் அதில் வஹீயுடைய பரக்கத்தை காண்பீர்கள்.
போட்டியிலிருந்து விலகிக்கொள்ளும்படி சில சகோதரர்கள் உங்களை வேண்டிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி செய்தால் ஹுதைபிய்யா உடன்படிக்கையில் நபிகள் நாயகம் விட்டுக்கொடுத்ததால் பின்னர் அவர்கள் பெற்ற பெரும் வெற்றியை நீங்கள் இருவரும் பெறலாம். யார் முந்துகிறார்களோ அவர்களுக்கே சுப சோபனம்.
10. எந்த விதத்தில் நியாயம் ,தர்மம்,நீதி,......?????????? posted byமுத்துவாப்பா (அல்-கோபர்)[01 October 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9240
ஆபிதா லாத்தா அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் . எக்காரணம் கொண்டும் தங்கள் இத்தேர்தலில் பின் வாங்க வேண்டாம் . வெற்றி தோல்வி என்பது இறைவன் கொடுப்பது . அவன் கொடுப்பதை யாராலும் தடுக்கவும் முடியாது ,அவன் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது .
அடுத்து ஊரின் ஒற்றுமை , ஊரின் ஒற்றுமைக்காக வஹிதா லாத்தா எடுத்த முடிவை போன்று எடுங்கள் என்று வார்த்தைகளால் சொல்ல அழகாகத்தான் இருக்கின்றது . சரி நீங்கள் அந்த வஹிதா லாத்தா அவர்களுக்கு என்ன செய்தீர்கள் , அதாவது பேரவையால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டாலும் படலாம் என்று தெரிந்தபின் ,அவருக்கு அடுத்து அதிக வாக்குகள் பெற்ற வஹிதா லாத்தாவை அல்லவா நீங்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வைத்திருக்க வேண்டும்? அதை விட்டுவிட்டு முதல் வேட்பாளரின் தாயாரை வேட்புமனு தாக்கல் செய்ய வைத்தது எந்த விதத்தில் நியாயம் ,தர்மம்,நீதி,......??????????
11. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byBathool (Kayalpatnam)[01 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 9248
எந்த விஷிமிகளும் அவரை நிறுத்தவில்லை... எந்த சக்திகளும் அவர்களை பின்னிருந்து இயக்கவும் இல்லை!!!! எந்த பேரவையின் பலத்தையும் நம்பி அவர் நிற்கவும் இல்லை... சொந்த திறமையை நம்பி, அவரின் ஆற்றலில் மீது நம்பிக்கை கொண்டு... அவரால் திறமையான நிர்வாகம் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் நிற்கிறார்!! ஊர் மக்களில் ஆதரவை நேரடியாக கேட்டு வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கையில் நிற்கிறார்!! இதனால் நீங்க வாய் அளவில் சொல்லி கொண்டு இருக்கும் இந்த ஒற்றுமைக்கு எந்த பங்கமும் வர போவதில்லை .. அவரில் திறமை மீது நம்பிக்கை உள்ளவர்கள் அவர்களை ஆதரிக்கிறார்கள்!!!
சரி இவ்வளவு ஒற்றுமை பற்றி பக்கம் பக்கமா பேசும் சகோதரர் அங்கே தாய் மகள் இருவரும் போட்டிக்கு நிற்கிறார்களே அதில் என்ன ஒற்றுமை!! அதிகார(!!)பூர்வ வேட்பாளரின் மனு ஏற்று கொள்ள பட வில்லையென்றால்,,ஒற்றுமைக்காக எந்த திறமை பற்றியும் கவலை படாமல் அவர்களில் உம்மாவிற்க்கு ஒட்டு போட்டு ஊர் தலைவியா ஆக்கலாமா?
மொத்தத்தில் என்ன சொல்ல வருகிறீர்கள்...ஒற்றுமைக்கா அங்கே ஒரு அதிகாரவர்க்கம் கை காட்டும் எந்த நபரையும் நாம் கண்ணை மூடி கொண்டு தேர்ந்தெடுக்க வேண்டும் அவ்வளவு தானே!!
திறமையும் தன்னம்பிக்கையும் மக்களில் ஆதரவும் உள்ள ஆபிதா அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
12. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byNUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA)[01 October 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9252
மதிப்புக்குரிய சகோதரி ஆபிதா அவர்களே அன்பான வேண்டுகோள். அரசியலிலும், பொது வாழ்விலும் புடம் போட்ட, ஆளும் கட்சி தலைமையுடன் நேரடி தொடர்பு கொண்ட சகோதரி வஹீதா அவர்களே ஊர் ஒற்றுமையை கருத்தில் கொண்டு போட்டியிடாமல் ஐக்கிய பேரவை வேட்பாளருக்காக வேண்டி போட்டியில் இருந்து விலகி கொண்டது அவர்களின் ஊர் ஒற்றுமையும், விட்டுகொடுக்கும் மனப்பான்மையும், தெளிவாக காட்டுகிறது .அவர்களுக்கு எங்கள் மனபூர்வமான நன்றியினை தெரிவிக்கிறோம்.
அன்பு சகோதரி ஆபிதா அவர்களே நீங்களும் பொது வாழ்வில் உங்கள் தந்தை நான் எந்நாளும் மதிக்கும் பாளையம் இப்ராஹீம் காக்கா அவர்களை போன்று பணியாற்றுகின்றீர்கள் என்பது உண்மை. உங்கள் தந்தை பாளையம் இப்ராஹீம் காக்கா அவர்களும் நமது ஊர் ஒற்றுமைக்கு அரும்பாடு படகூடியவர்கள் என்பது என் போன்று அவர்களுடன் பழகியவர்களுக்கு நன்கு தெரியும்.
அன்பு சகோதரி அவர்களே ஊர் ஒற்றுமையை கருத்தில் கொண்டு விட்டு கொடுக்கும் மனப்பான்மை உடன் வாபஸ் பெற்றால் அல்லாஹ் உங்கள் வாழ்வை சிறப்பாக்குவான் என்பதில் ஐயம் இல்லை. காலம் இத்துடன் முடிவதில்லை. உங்கள் சேவை நகர சபை மூலம் தற்போது இல்லை என்றாலும் பல வழிகளில் தொடர வேண்டும். விட்டுகொடுப்பவர்கள் கெட்டு போவதில்லை என்ற பழமொழி மற்றும் யார் வரகூடாது என்பதிலும் கவனமாக இருந்து அனைத்து ஜமாஅத் சார்பில் தெரிவு செய்ய பட்டு இருக்கும் சகோதரி மைமூனதுள் மிஸ்ரியா வெற்றிக்கு பாடுபட ஊரின் நலன் கருதி ஆதரிக்குமாறு நமதூர் நலனில் அக்கறை உங்கள் அன்பு சகோதரர்கள் சார்பில் வேண்டி விரும்பி கெட்டு கொள்கிறோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நமதூர் மக்களின் கசபுனர்வுகளை நீக்கி ஒற்றுமையுடன் செயல் பட அருள் புரிவானாக ஆமீன் .
என்றும் ஊர் நலனில்
M .E .L . நுஸ்கி
மற்றும் காயல் அன்பர்கள்
ரியாத்
சவுதி அரேபியா
13. கண்கெட்ட பின்னே.. posted byM Sajith (DUBAI)[01 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9255
அருமையான முயற்சி, இப்போ சகோதரர்கள் ஆப்துல் காதரும், விளக்கு SM அலியும் செய்யத்துடிக்கும் வேலயை முன்னர் ஐக்கியப்பேரவை செய்திருக்க வேண்டும்.
ஒற்றுமை விட்டுக்கொடுத்தால்தான் வரும் வீம்பால் இல்லை என்பது முன்பே புரிந்திருந்தால்.. இந்த "ஊக்கு"விக்கும் வேலையும், 'PIN' வாங்கும் வேலையும் அவசியமில்லை.
______________________________________
மனத்தொடு வாய்மை மொழியின், தவத்தொடு
தானம்செய் வாரின் தலை
இது திருக்குறள், நம்ம ஊரு நடையில சொல்லனுமுன்னா..
கல்பு அறிய ஹக்கா பேசுரவங்க, இத்திகாஃப் இருக்குறவங்களை விட, ஜகாத் சதக்கா கொடுக்குறவஙளை விட ரொம்ப ரொம்ப மேலானவங்கன்னு வள்ளுவர் சொல்லுறாரு..
14. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byM. Salih (New Delhi)[01 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 9256
தயவுசெய்து உங்கள் நிலைபாட்டை மற்றவர்கள் மீது அறிவுரை அல்லது ஆலோசனை என்ற பெயரில் திணிக்காதீர்கள். சகோதரி ஆபித் ஷேக் ஐக்கிய பேரவையின் நிபந்தனையை ஏற்காததால் ஐக்கிய பேரவை நடத்திய தேர்தலிலிருந்து நீக்கப்பட்டார். சகோதரி வஹீதா அவர்கள் நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார். நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டவர்களுக்கு அது சரி என்று நினைத்திருக்கலாம். அதை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு அது தவறு என்று நினைத்திருக்கலாம். ஆகையால் இருவர்களையும் ஒப்பிட்டு எழுதாதீர்கள்.
நான் கேள்விபட்டவரையில் சகோ, ஆபிதா சேக் அவர்கள் நிபந்தனைக்கு ஒப்புக் கொள்ளாததற்குறிய காரணங்களையும் ஐக்கிய பேரவைக்கு அவர் எழுத்து மூலம் தெரிவித்துள்ளர்ர். அதில் சொல்லபடாத காரணங்களில் ஒன்று "பேரவையின் ஓட்டெடுப்பை சிலர் தங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்ற முயலுகிறார்கள் என்பதுதான்.
இன்று எனக்கு ஊரிலிருந்து வந்த செய்தி அதை ஊர்ஜிதப்படுத்துகிறது. ஒட்டேடுப்பிற்க்கு முதல் நாள் ஓட்டெடுப்பில் ஓட்டுபோடும் உரிமையுடன் கலந்து கொண்ட, கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தக்கூடிய செல்வந்தர் ஒருவர் (வாக்காளர்) தன்னுடைய ஆணையை நிராகரிக்காமல் ஏற்றுக்கொள்ளக் கூடிய பிற ஜமாத்தினால் ஒட்டேடுப்பிற்க்காக தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு (வாக்காளர்களுக்கு) போன் செய்து குறிப்பிட்ட ஒரு மனுதாரர்க்கு (வெற்றிபெற்றவருக்கு) மட்டும் ஒட்டு போடும்படி கட்டளை இட்டுள்ளார். உறுதிமொழியும் வாங்கியுள்ளார்
இங்கு எனது கேள்வி,
1 ) ஓட்டெடுப்பில் கலந்துகொண்ட சில பிரதிநிதிகளுக்கு வேட்பாளர்கள் யார் என்று ஓட்டெடுப்பு நடைபெறும் நிமிடம் வரை தெரியாத விஷயம், அந்த செல்வந்தருக்கு ஒரு நாள் முன்பாக எப்படி தெரிந்தது?
2 ) ஏன் அந்த செல்வந்தர் (வாக்காளர்) குறிப்பிட்ட (வெற்றியடைந்த) அந்த மனுதாரருக்காக பிற வாக்காளர்களிடம் ஒட்டு சேகரிக்கவேண்டும்?
குறிப்பு : அந்த செல்வந்தர் ஒரு ஜமாஅத் பள்ளியிலிருந்து ஒட்டேபோடும் உரிமையுடன் தேர்வு செய்யப்பட்டவர் மட்டும் அல்ல பேரவையுடன் மிகுவும் நெருங்கியவரும் ஆவார்.
என்னுடைய தாழ்மையான கருத்து என்னவெனில் சகோதரி ஆபிதா ஷேக்கின் முடிவு (நிபந்தனையில் ஒப்பமிடாதது , தனியாக் தேர்தலை சந்திக்க முடிவு செய்தது) சிறந்ததாகும்.
Best wishes to Sis. Abidha Sheik
அல்-குரானில் உள்ள ஒரு வரி என் ஞாபகத்திற்கு வருகிறது.
"அவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள், அல்லாஹுவும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சியாளர்களில் சிறந்த சூழ்ச்சியாளன் அல்லாஹ்." இவர்களின் சூழ்ச்சி தெரிந்துவிட்டது. இன்ஷா-அல்லாஹ், அல்லாஹ்வின் சூழ்ச்சி என்னவென்று பொருத்திருந்து பார்ப்போம்.
15. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bySalih (New Delhi)[01 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 9260
China மற்றும் Abu dhabi யில் இருப்பவர்களுக்கு நான் அறிந்தவிஷயம் தெரிவதற்கு வாய்ப்புக்கள் மிக மிக குறைவு. ஆனால் தெரிந்துகொள்ள முயற்ச்சி செய்வோருக்கு அது கடினமில்லை.
16. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byV D SADAK THAMBY (Guangzhou (China))[01 October 2011] IP: 59.*.*.* China | Comment Reference Number: 9264
சகோதரி ஆபிதா அவர்களுக்கு,
நகரமன்ற தலைவி பொறுப்புக்கு, உங்கள் பெயரை முதன்முதலில் இந்த இணையதளத்தில் மும்மொளிந்தது நான்தான் என்ற அடிப்படையில் நான் உங்களுக்கு விடுக்கும் கனிவான வேண்டுகோள் :
ஐக்கியபேரவை மற்றும் அனைத்து ஜமா அத்தினர் வேறு ஒருவரை தெரிவுசெய்தாகிவிட்டது . தனினபரைவிட ஊர் ஒற்றுமையே பிரதானம்.ஒற்றுமையின் பக்கமே அல்லாஹ் இருக்கிறான்.
நாம் பதவியை தேடி செல்வதை விட, பதவி நம்மை தேடி வருவதே மிகவும் சிறப்பானது.இந்தபதவி உங்களுக்கு இல்லையென்றால் , இதைவிட சிறப்பான பதவி எதிர்காலத்தில் இன்ஷால்லாஹ் உங்களை தேடி வரும்.
இப்போதும் உங்களுக்கு நன்கு சிந்தித்து முடிவுக்க போதிய நேரமிருக்கிறது ..உங்கள் தந்தையும் ஒரு சமூக ஊழியர்தான் . நீங்கள் அவர்களிடமும் நன்கு கலந்து ஆலோசனை செயுங்கள்.
இனிமேல் என்ன, நாங்கள் எதிபார்ப்பது , உங்கள் பெருந்தன்மையைத்தான் . நீங்கள் போட்டியிலிருந்து வாபஸ் வாங்குவதன் மூலமாக .உங்களின் பெருந்தன்மையை நிலைநிறுத்த முடியும். வைராக்கியத்தை விட்டொழிக்கலாம்.
ஒற்றுமையின் கையிற்றை பற்றி பிடித்துகொள்ளுங்கள் என்ற குரான் ஆயத்திற்கு ஒப்பாக நீங்கள் போட்டியிலிருந்து விலகுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதில் அல்லாஹ் உங்களுக்கு நன்மையையே நாடியிருப்பானாக
18. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byVilack SMA (Hetang)[01 October 2011] IP: 69.*.*.* United States | Comment Reference Number: 9269
லஞ்சம் வாங்காத முஹ்சீன் தெருவை சேர்ந்த ஆபிதா லஞ்சம் வாங்கமாட்டார் என்றால் லஞ்சம் வாங்காத ஹாஜி அப்துல் ரஹ்மான் அவர்கள் தெருவை சேர்ந்த சகோதரி மிஸ்ரியா அவர்களும் லஞ்சம் இல்லா நகராட்சியை தரமுடியாதா? என்னே உங்கள் வாதம்!
19. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bySHAIK (colombo)[01 October 2011] IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 9270
அஸ்ஸலாமு அலைக்கும்
நகர் மன்றத்திற்கு தலைவர் பொறுப்பிற்கு போட்டிவிடும் நம் சகோதரிகளுக்கு அன்பான வேண்டுகோள். ஊர் நலன் கருதி பொது வேட்பாளரை தவிர மற்றவர்கள் போட்டிவிலிருந்து விலகிகொள்வது நல்லது
தமிழ்நாட்டிலுள்ள 125 நகராட்சிகளில் 124 நகராட்சிக்கு வேட்பாளர்களை அறிவித்த அரசியல் கட்சிகள் அனைத்தும் நம் ஐக்கிய பேரவையின் வேண்டுகோளை ஏற்று காயல்பட்டினத்தில் போட்டிவிடாத நிலையில் நம் சகோதரிகள் போட்டிவிலிருந்து விலகி ஊர் ஒற்றுமையை காப்பது நன்று.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு
22. தாய் vs மகள் போட்டி!! posted byAbdulKader (Abu Dhabi)[01 October 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9276
அஸ்ஸலாமு அழைக்கும்....
தாய் vs மகள் போட்டி!!
எனதருமை வாசகர்களே....
தாய்க்கும் மகளுக்கும் போட்டி நடக்கிறது என்று சிலர் கூறி... ஒற்றுமையை குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். ஒற்றுமையுடன் செயல் படுவதால்தான் இப்படி ஒரு வித்தியாசமான போட்டியை நீங்கள் வெளிக்கண்ணால் பார்க்கின்றீர்கள்.
பொறுத்திருந்து பாருங்கள்... ஊரின் பெரியவர்களின் புத்திகூர்மை உங்களுக்கு புரியும்!! வஸ்ஸலாம்
23. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byjafarullah (soudi arbia(madinah))[01 October 2011] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9278
சகோதரர் நுஸ்கி அவர்கள் கருத்தை ஏற்று கொள்ள முடியாது . காரணம் யாரும் போட்டிபோட கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அவரவர்கள் மெஜாரிட்டி நிருபிக்கட்டும்.
சகோதரி ஆபிதா அவர்கள் எந்த தருணத்திலும் முன் வைத்த காலை பின்வைக்க வேண்டாம். யார் வெற்றி ,யார் தோல்வி என்பது அலலாஹ் ஒருவனுகே தெரியும். உங்கள் சமுதாய பனி வளரட்டும்.சமூக பனி தொடரட்டும். ஆவலுடன் எதிர்பார்போம் உங்கள் வெற்றிவிழாவை.
24. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byJAHIR HUSSAIN VENA (BAHRAIN)[01 October 2011] IP: 89.*.*.* Bahrain | Comment Reference Number: 9280
Dear Sister, Asslamu Alaikum.
Please align with Kayal Ikkiya Paravai
We confirm that you will be going to divide our Votes, if you not with draw ..not only our votes but also divide our unity.... So .Pls think it...still the time is there... .
25. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byM.N.L.முஹம்மது ரஃபீக், ராபியா மணாளன். (புனித மக்கா.)[01 October 2011] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9284
இது ஜனநாயக நாடு! நிற்பதுவும்,தவிர்ப்பவுதும் அவரவர் பிறப்புரிமை! மக்கள் ஓர் மாற்றத்தை எதிபார்க்கின்றனர்,அதில் தவறில்லை!
கவனமாக காயை நகர்த்தியிருக்க வேண்டும்! தவறிவிட்டோம்!இதன் விளைவு நம்மைத் தீங்காக வந்து தீண்டமலிருக்க ஆண்டவனை வேண்டுகின்றேன்!
நண்பர்,எம்.சாஜித் அவர்களின் கருத்துக்கள் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே வருகிறது. “மனத்தொடு வாய்மை மொழியின், தவத்தொடு தானம்செய் வாரின் தலை”,-குறள்.
பொருள்: உளத்தூய்மையுடன் உண்மையெய் மட்டும் பேசுபவர்கள்,நீண்டகாலம் வணக்கவழிபாடு செய்பவர்,மற்றும்,வாரிவழங்குபவர்,இவர்களை விட மேன்மையானவர்.இப்படி அழகான அர்த்தம் உள்ளபோது,இஃத்திகாஃ,ஸதக்கா,போன்ற வார்த்தைகளைத் தவிர்தல் நலம். நண்பரே! கனியிருப்ப காய் கவருவதேன்?
26. அன்புடன் ஆபிதா:... posted byKAMILA KIZHAR (chennai)[01 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 9285
என் அன்பு தோழி ஆபிதா, அஸ்ஸலாமு அலைக்கும்... நீ வெற்றி பெற என் கனிவான வாழ்த்துக்களும், துவாக்களும்.. உன் போன் நம்பர் எனக்கு தெரிய வில்லை.. உன் போன் நம்பரை எனக்கு தெரிய படுத்து..என் போன் நம்பர் 044 25266464 அல்லது என் husband மொபைல் நம்பர் 9444114664 .... வஸ்ஸலாம்
27. ஐக்கிய பேரவை .. posted byKAMILA KIZHAR (chennai)[01 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 9288
HEARTY WISHES AND PRAYERS FOR THE VICTORY OF AABIDHA SHAIK...
NOW THERE R MANY VOICES HEARD FROM SOME SEGMENT TO WITHDRAW THE NOMINATION OF AABIDHA FOR THE SAKE OF UNITY FORWARDED BY EIKKIYA PERAVAI..
LET US FORGET ALL INITIAL EVENTS LIKE 25 MEMBERS BY EIKKIYA JAMATH..
FOR FINAL TOUCH, WHEN EIKKIYA PERAVAI WAS THINKING THAT OFFICIAL CANDIDATE"S NOMINATION MIGHT BE REJECTED, THEY OPT HER MOTHER TO FILE NOMINATION AS DUMMY CANDIDATE(I THINK SO)..HOW THIS CONCLUSION ARRIVED.. DID MOTHER OF OFFICIAL CANDIDATE, APPROACH AND GIVE OFFICAL APPLICATION FOR CONTEST...
WHAT SHOULD THEY HAVE DONE BE...THEY MIGHT HAVE ASKED SISTER WAHIDHA TO FILE NOMINATION AS ALTERNATE CANDIDATE.. IF THIS NOT HAPPENED, THEY SHOULD CONSIDERED AABIDHA OR OTHER CANDIATE WHO GAVE APPLICATION TO AIKKIYA PERAVAI, BUT REJECTED BECAUSE THEIR UNWILLINGNESS TO SIGN AGREEMENT..THIS IS DEMOCRATIC WAY...
THE WAY AIKKIYA PERAVAI CHOOSE THE ALTERNATIVE CANDIDATE ..VIOLATING ALL NORMS ..WAS THEY GOT THE SUGGESTION OR IDEA OF THOSE PEOPLE WHO VOTED AND CHOOSE OFFICIAL CANDIDATE,,,,, SO IT IS NOT FAIR TO ASK AABIDHA SHAIK TO WITHDRAW HER NOMINATION FOR THE UNITY PROPOSED BY AIKKIYA PERAVAI...
28. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bykatheeja (kayalpatnam)[01 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 9290
அஸ்ஸலாமு அழைக்கும் திருமதி ஆபிதா அவர்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... யார் தன போட்டி போட்டாலும் கடைசியில் வெற்றி பெறுவது நீங்கள் தன nigal மட்டும் தான் ...
இது வரை நாங்கள் நம்பி ஏமாந்தது பொது இனியும் ஏமாற மாட்டோம்...நாங்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்றால் அது உங்கள் வெற்றியாக தன இருக்க வேண்டும் எங்கள் மூச்சு எல்லாம் உங்கள் வெற்றியை நோக்கித்தான்
29. அப்பாவி காயல் மக்கள் posted byMohammed Aarif (Sri Lanka)[01 October 2011] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 9291
பாவம் கயல் மக்கள்...... எல்லோரும் அன்று பிறந்த பாலகர்கள் போல் ஆகிவிட்டார்கள். அதனால் நீங்கதான் யாவருக்கும் பாடம் கற்பிக்கனும். ஒற்றுமை என்றால் என்னவென்று லேட்டஸ்ட் முறைப்படி நம்ம ஊரு பாப்பாக்களுக்கு புரிய வைக்கணும்....
30. எனதருமை சகோதரி அபிதா அவர்களே posted byAbdulKader (Abu Dhabi)[01 October 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9294
அஸ்ஸலாமு அழைக்கும்....
எனதருமை சகோதரி அபிதா அவர்களே....
இங்கு பலர் ஊரின் ஒற்றுமைக்காக உங்களிடத்தில் பணிவான வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்..
ஆனால் இன்னும் சிலர் தங்களிடத்தில் கொண்டுள்ள பாசத்தால், நட்பால், பிரியத்தால், மரியாதையால், கண்ணியத்தால், தங்களை போட்டியில் இருந்து விலகவேண்டாம் என்று கருத்து பதிவு செய்துள்ளார்கள். சிந்திக்க வேண்டிய நீங்கள்... சற்று நிதானத்தோடு செயல்படுங்கள்.
அல்லாஹ்வின் நாட்டம்..... வெற்றி உங்களுக்கு என்றால்... நானும் சந்தோஷப்படுபவர்களில் ஒருவன்.
அன்பு சகோதரர் VD Sathack தம்பி கூறியதுபோல்....
" நாம் பதவியை தேடி செல்வதைவிட, பதவி நம்மை தேடி வருவதே மிகவும் சிறப்பானது. இன்று இந்தபதவி உங்களுக்கு இல்லையென்றால், இதைவிட சிறப்பான பதவி எதிர்காலத்தில் இன்ஷால்லாஹ் உங்களை தேடிவரும்."
கருத்து பதிப்பவர்களே..... தங்களுடைய நல்ல யோசனைகளை சகோதரி ஆபிதாவிற்கு சொல்லுங்கள்.
எல்லாவற்றிக்கும் மேலாக....கண்டிப்பாக நாளை மறுமைநாளில் உங்களின் முடிவிற்கு நீங்கள்தான் அல்லாஹ்விற்கு பதில் சொல்வீர்கள். இன்றுபோல் அந்நாளில் உங்களுக்காக... உங்களின் சொந்தமோ, பந்தமோ, நண்பர்களோ, பரிந்துரை செய்ய முடியாது.
இதற்க்கு மேலாக எல்லாவற்றையும் அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இருக்கிறான். வஸ்ஸலாம்
32. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byYousuf Sahib (Coimbatore)[01 October 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9299
சஹோதரி ஆபிதா வெற்றி பெற வாழ்த்துக்கள்! இன்ஷா அல்லா எக்காரணம் கொண்டும் தங்கள் இத்தேர்தலில் பின் வாங்க வேண்டாம்
சஹோதரர் முத்து வாப்பா வின் கறுத்து மிகவும் சரி,
"அடுத்து ஊரின் ஒற்றுமை , ஊரின் ஒற்றுமைக்காக வஹிதா லாத்தா எடுத்த முடிவை போன்று எடுங்கள் என்று வார்த்தைகளால் சொல்ல அழகாகத்தான் இருக்கின்றது . சரி நீங்கள் அந்த வஹிதா லாத்தா அவர்களுக்கு என்ன செய்தீர்கள் , அதாவது பேரவையால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டாலும் படலாம் என்று தெரிந்தபின் ,அவருக்கு அடுத்து அதிக வாக்குகள் பெற்ற வஹிதா லாத்தாவை அல்லவா நீங்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வைத்திருக்க வேண்டும்? அதை விட்டுவிட்டு முதல் வேட்பாளரின் தாயாரை வேட்புமனு தாக்கல் செய்ய வைத்தது எந்த விதத்தில் நியாயம் ,தர்மம்,நீதி,......??????????"
இதன் முலம் எதன் அடிபடியில் வேட்பாளரை தேர்ந்து எடுத்தார்கள் என்பது ஊர் அறிந்த ரகசியம் ஆனது.
33. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byHaja A (KayalPatnam)[02 October 2011] IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 9301
எனது முந்தைய கமெண்ட் (#7)-ஐ செய்தி ஆசிரியர் எடிட் பண்ணியதால் அதன் அர்த்தமே மாறியிருக்கிறது.
கமெண்ட் #17 பதித்தவற்கு,
நான் எழுதியது, ஆபிதா அவர்கள் வெற்றி அடைந்தால் முஹ்சின் அவர்கள் பணியாற்றியது போல் அவர்களும் ஊழல் இல்லாத ஆட்சியை தாருங்கள் என்பதே. தாங்கள் எழுதியது போல் விவாதம் பண்ணவில்லை.
34. குழப்பத்தை தவிப்பது நன்று.... posted byShaik Dawood (Hong Kong)[02 October 2011] IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 9302
கண்ணியத்திற்குரிய ஆபிதா லாதாவிற்கு...
யாரின் தூண்டுதலின் பேரில் நீங்கள் நிற்கின்றீர்கள் என்பதை நாம் அறியோம்... எனினும் ஊர் ஒற்றுமையை மனதிற் கொண்டு... (தம் கண்ணியத்தையும்).... வாபஸ் வாங்குவது மிக்க நன்று.
சகோதரி பத்தூல் அவர்களின் கூற்றின்படி அல்லாஹ்வின் நம்பிக்கை என்ன ஆயிற்று???
சகோதரர் முத்துவாப்பா அவர்களுக்கு... பெரியவர்களோ / பேரவைகளோ எதுவும் செய்திருக்கட்டும்... அவர்கள் அல்லாஹ்விற்கு பதில் சொல்ல கடமை பட்டிருக்கிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் நமக்கு தேவை நம் ஊர் (சமுதாய) ஒற்றுமை... அதை மட்டும் கருத்தில் கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
சகோதரர் சாஜித்தின் கருத்துக்கள் மிகவும் அருமையாக இருக்கிறது... எனினும் இறுதியாக என்ன சொல்ல வருகிறார் என்பது கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது... ஆதரவு??? யாருக்கு?...
சகோதரர் jafarullaah அவர்களே... யாரும் யாரையும் போட்டியிட வேண்டாம் என்பது இங்கு கருத்தல்ல... மேலும் மெஜாரிட்டி மைனாரிட்டியும் இங்கு முக்கியமில்லை... ஊஊஊர் ஒற்றுமை மட்ட்ட்ட்ட்டுமே...
இன்னும் சொல்லப்போனால்.... சகோதரி மிஸ்ரியாவை விட சகோதரி ஆபிதாவை பற்றியே அதிகம் கேள்வி பட்டிருக்கின்றேன்... எனினும் (ஐக்கியம்) ஒன்றை மட்டுமே நான் கருத்தில் கொண்டுள்ளேன்... சிந்திப்போம்... செயல்படுவோம்....
ஊர் (நம் சமுதாய) நலன் நாடும்....
அன்பு தம்பி
தாவூன் பின் ஷாபிஈ
ஹாங்காங்
35. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byV D SADAK THAMBY (Guang Zhou (China))[02 October 2011] IP: 113.*.*.* China | Comment Reference Number: 9303
""இது ஜனநாயக நாடு! நிற்பதுவும், தவிர்ப்பவுதும் அவரவர் பிறப்புரிமை! மக்கள் ஓர் மாற்றத்தை எதிபார்க்கின்றனர்,அதில் தவறில்லை! கவனமாக காயை நகர்த்தியிருக்க வேண்டும்! தவறிவிட்டோம்!"" என்று ஒரு சகோதரர் குறிப்பிட்டிருப்பது மிகமிகத் தவறு.
அப்படியானால் ஒற்றுமையை என்ற வார்த்தையே இல்லாமல் போய்விடுகிறது. இன்னும் நமக்கு போதிய அவகாசமிருக்கிறது நமது தவறை திருத்திகொள்வதற்கு.
ஒற்றுமையின் பக்கம் சகோதரி அபிதா நிர்பாறேயானால் , அவருக்கு அல்லாஹ் நிச்சியமாக நன்மையே நாடியிருப்பான் என்று உறுதியாக நம்புகிறோம்.
37. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byseyed (Saudi Arabia)[02 October 2011] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9313
“மனத்தொடு வாய்மை மொழியின், தவத்தொடு தானம்செய் வாரின் தலை”,-குறள் என்ற குரலுக்கு நண்பர் rafeek நல்ல விளக்கம் கொடுக்கிறார். அதேவேளை, இஃத்திகாஃ,ஸதக்கா,போன்ற வார்த்தைகளைத் தவிர்தல் நலம் கனியிருப்ப காய் கவருவதேன்? என்று சொன்னால், இங்கே இஃத்திகாஃ,ஸதக்கா,போன்ற போன்ற செயல்களுக்கு "காய்" என்று உங்கள் விளக்கப்படி பொருள் வரும். இதை அவசரத்தில் கவனத்தில் கொள்ளாமல் பதித்து விட்டீர்கள்.
சரி, இப்ப நாம் சப்ஜெக்ட்க்கு வருவோம். நானும் ஐக்கிய பேரவை ஆதரவாளன்தான். அதே நேரம், அவர்கள் செய்ததது சரியா? அவர்கள் எல்லா ஜமாத்துக்கும் வேற்பாளர் அடங்கிய பெயர்கள் (profile ) உடன் தந்தார்களா? எந்த அடிப்படியில், 50 -60 மட்டும் கூடி, தேர்ந்தடுக்கும் நபரை (ஜமாஅத் உள்ள எல்லோரும் கலந்து ஆலோசிக்க விடாமல்) திணிப்பது நியாயமா? ஒற்றுமை யாரும் எதிர்க்கவில்லை, அதுக்கு நியாயம் என்று ஒன்று உள்ளதே, நீதி என்று உள்ளதே? வேர்பாளர்கள் யார் என்று தெரியாமல், அங்கு போய் சும்மா வோட்டுபோட்டு விட்டால் வந்தால், ஜமாஅத் எல்லோரும் ஏத்துகொண்டு விட்டால், இது கலிபாக்களின் தேர்ந்தெடுக்கும் முறைக்கு மாற்றமல்லவா?
Moderator: சகோ. செய்யித் அவர்களே! தங்களது கருத்துக்களை தொடர்ந்து வெளியிடும் பொருட்டு தங்கள் முழுப் பெயரை பதிவு செய்யவும். ஒத்துழைப்புக்கு நன்றி.
38. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byMohamed Cnash (Kayalapatnam)[02 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 9318
என்னத்தே பொருத்து இருந்து பாக்க!! பொறந்த புள்ளே கிட்டே கேட்டாலும் சொல்லும்!! என்ன 3ம் தேதிக்கு பிறகு மகளில் வேட்பு மனு ஏற்றுகொள்ளபட்டால் உம்மா வாபஸ் வாங்க போறாங்கா!! எதுலே என்ன பெரிய புத்திகூர்மையே கண்டு புடிச்சிலோ தெரியலே!!
இது புத்தி கூர்மை இல்லே சூழ்ச்சி!!! அறிவிக்க பட்ட வேட்பாளர் மனு தள்ளுபடி ஆகும் என்று நெனச்சா அதற்கு அடுத்த வேட்பாளர் போட்டியில் நின்றவர்களை ஒற்றுமையோடு தேர்ந்து எடுத்து இருக்க வேண்டும்....அதே விட்டுட்டு உம்மா உம்மம்மா என்று பதவிக்கு வர இங்கே ஒன்னும் மன்னர் ஆட்சி நடக்க வில்லை!!
மொத்தத்தில் அவர்கள் நினைப்பவர்கள் ஆள வேண்டும்... பொருத்து இருந்து பாப்போம் மக்கள் தீர்ப்பு என்ன என்பதை!!
39. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byAbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA)[02 October 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9320
பொது வேட்பாளரை ஆதரிக்க சொல்பவர்களுக்கு ஒரு கேள்வி?
பொது வேட்பாளர் அவர்களின் தாயார் தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க காரணம் என்ன?
(இது கேள்வி தான் விவாதம் அல்ல.........)
கோவை -இல் இருந்து சகோ. யூசுப் சாஹிப் அவர்களின் கேள்விக்கு விளக்கம் தேவை.....
"பேரவையால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டாலும் படலாம் என்று தெரிந்தபின் ,அவருக்கு அடுத்து அதிக வாக்குகள் பெற்ற வஹிதா லாத்தாவை அல்லவா நீங்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வைத்திருக்க வேண்டும்? அதை விட்டுவிட்டு முதல் வேட்பாளரின் தாயாரை வேட்புமனு தாக்கல் செய்ய வைத்தது எந்த விதத்தில் நியாயம் ,தர்மம்,நீதி,......??????????""
"ஒற்றுமையின் கையிற்றை பற்றி பிடித்துகொள்ளுங்கள் என்ற குரான் ஆயத்திற்கு ஒப்பாக நீங்கள் போட்டியிலிருந்து விலகுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் அல்லாஹ் உங்களுக்கு நன்மையையே நாடியிருப்பானாக" என்று கூறும் சகோ. சதக் தம்பி அவர்கள், இதே வசனத்தை ஏன் பொது வேட்பாளர் என்று கூறப்படும் சகோதரி அவர்களின் தாயாருக்கு எடுத்து கூறவில்லை?????
40. Re: நான் அவன் இல்லை !! posted byarabi haja (Hong Kong)[02 October 2011] IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 9321
அன்பு நண்பர்களுக்கு !! அஸ்ஸலாமு அழைக்கும் !!
இந்த வளைய தலத்தில் காஜா. எ. எனும் பெயரில் ஒருவர் கருத்துக்களை பதிவு செய்கிறார். ஹாங் காங் கை சார்ந்த சகோதர்கள் அது எனது கருத்துக்கள் என கருதுவதாக எனக்கு இன்றுதான் தெரிய வந்தது. அவை எனது கருத்துக்கள் அல்ல என்பதை இந்த விளக்கத்தின் மூலம் பதிவு செய்ய விரும்புஹிறேன்.
இவன்,
ஹாஜா அரபி
ஹாங் காங்
சகோதரி ஆபிதாவிற்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் !!
காயலின் புதிய விடியல் மேற்கிலிருந்து மீண்டும் புறப்படட்டும்.
41. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byS.A.Muhammad Ali (Dubai)[02 October 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9325
அவர்களும் செய்கின்றனர், அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்வதில் அல்லாஹ் சிறந்தவன். (திருக்குர்ஆன், 008:030)
பொருத்து இருந்து பாருங்கள். உப்பு தின்னவன் தண்ணி குடித்தே ஆக வேண்டும்.
42. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byM Sajith (DUBAI)[02 October 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9327
அன்பின் சகோதர சகோதரிகளுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்த தேர்தல் குறித்த, (ரிஸல்ட் வரும் வரை) இதை கடைசி பதிப்பாகிக்கொள்ள விரும்புகிறென் (பதிலலிக்கும் நிற்பந்தம் ஏற்படாமல் இருந்ததால்).
ஐக்கிய பேரவையின் சில அனுகுமுறைகளால் தான் இப்போது ஏற்பட்டுள்ள போட்டியும், கமென்டு வழியாக நலம் பல நலம் நாடுவோர், சகோதரி ஆபிதாவை பின்வாங்க வேண்டிக்கொள்ளும் நிர்பந்தத்தமும் எற்பட்துள்ளது என்பது மறுக்க இயலாது (காரணங்கள் வேண்டுமானால் சொல்லலாம்)
ஆதமின் மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள், அதை திருத்திக்கொள்பவர் சிற்ந்தவர்" என்னும் நபி(ஸல்) அவர்களின் அறிவுரையை ஏற்று நடக்க நாம் அனைவரும் கடமை பட்டுள்ளோம்
போட்டி நல்லதுதான் என்றாலும், சேர்த்திருப்பது அதைவிட நல்லது என்பதில் நமக்கு மாற்று கருத்திருக்க வாய்ப்பில்லை.
இது நடந்தேர கடைசி முயற்சியாக 'ஈகோ' வை சற்று ஓரமாக வைத்துவிட்டு, எல்லோரும் பேரவைக்கு ஓர் வேண்டுகோள் வைப்போம்.
பேரவையின் பெரியவர்களே, ஊரின் நன்மை கருதி, சகோதரி ஆபிதாவையும் மற்ற வேட்பாளர்களையும் அவரவர் ஜமாத்து பெரியவர்களுடன் நேரில் சந்தித்து விலகிகொள்ள வேண்டுங்கள். நல்ல இஹ்லாசுடன் இறைவனின் பொருத்தம் கிடைக்க இதை செய்யுங்கள். ஒரு தவறுக்கு இன்னொரு தவறு பரிகாரம் அல்ல என்பதை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.
மற்ற வேட்பாளர்களை 'வாபஸ்' வாங்க கமெண்டுகளில் வலியுருத்தும் சகோதரர்கள் அனைவரும் தயவு செய்து பேரவைக்கு kayalpatnamperavai@gmail.com என்ற முகவரியில் ஈமெயில் அனுப்புங்கள், இதை செய்ய வலியுறுத்துங்கள்.
சகோதரி ஆபிதா அவர்களே, அவ்வாறு பேரவை செய்யும் பட்சத்தில், தயவு செய்து வயதில் பெரியவர்கள் என்னும் காரணத்துக்காக, இறைவனுக்காக (வாய்பளிக்காமல்) தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீக்கு மனம் பொறுத்துக்கொள்ளுங்கள், இறைவன் இதைவிட சிறந்ததைத்தருவான்.
பயத்தினாலோ, மிரட்டலுக்கு பனிந்தோ நீங்கள் பின்வாங்க சொல்லவில்லை. சம்பந்தபட்டவர்கள் வேண்டுகோள் விடும் பட்சத்தில் நீங்கள் விட்டுக்கொடுப்பது பயமோ, மிரட்டலுக்கு பனிதலோ ஆகாது.
காயலர்களின் சிந்தனைக்கு,
சகோதரி ஆபிதாவோ, மற்ற வேட்பாளர்களோ வெற்றிவய்ப்பை இழந்தால், அது வெறும் செய்தி.. ஒருவேளை வெற்றிபெற்றால் பேரவையின் CREDIBILITY என்னவாகும்? தயவுசெய்து பேரவையை வலியுருத்தி எல்லோரும் ஈமெயில் அனுப்புங்கள்.
இந்த தேர்தல் முடிந்தததும், பேரவை சிறப்பான அவையாக செயல்பட, அதன் நிர்வாக தேர்தல் நடத்த தொடர்ந்து வலியுருத்தி நல்ல, நியாமான, எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் ஜனநாயாக அமைப்பாக்க மாற்றும் முயற்சியில் இறங்குவோம்.
நன்மைக்கும் இறையச்சத்திற்கும் ஒருவருக்கொருவர் துனையிருங்கள், தீமைக்கும் வரம்பு மீறலுக்கும் துணை போகாதீர்கள் (5:2) இறைவசனத்தை அனைவருக்கும் நினைவில் நிறுத்தி செயல்படுங்கள்.
இறைவன் மட்டுமே போதுமானவன், நீதியானவன், தவறிழைக்காதவன், மன்னிப்பவன்.
45. நப்சுக்கும், புத்திக்கும் இடையில் நடக்கும் தேர்தல்..... posted byzubair (riyadh)[02 October 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9334
அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு ஆபிதா லாத்தா அவர்களே.......... நீங்கள் நகர்மன்ற தலைவர் பதவிக்கு போட்டியில் ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் சரியான உண்மையான போட்டியை சந்தித்து கொண்டு இருக்குறீர்கள் என்பது எங்களை போலுள்ளவர்களுக்கு (நடுநிலையாளர்களுக்கு) வெளிச்சம். அதுதான்.... நப்சுக்கும், புத்திக்கும் இடையில் நடக்கும் தேர்தல்..... இதிலாவது தாங்கள் வெல்லனும் என்பதற்கு ஒரு சின்ன சிந்தனையை கூறுகிறேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லாவற்றையும் படைத்து ஒவ்வொன்டிர்க்கும் தனித்தனி குணம்களை கொடுத்து அதை வெள்ளோட்டம் பார்க்கையில் புத்தியிடம் கேட்டான் நான் யார்? - நீ யார்? என்று? புத்தி சொன்னது.... நீ என் ரப்பு, நான் உன் அடிமை என்றது. அதேபோல் நப்சை அழைத்து நன் யார்? - நீ யார்? என்று கேட்டபோது நப்சு சொன்னது நீ..... நீதான். நான்.... நான்தான் என்று திமிராக பதில் அளிக்க அதற்க்கு தண்டனை வழங்கி... மீண்டும் கேட்க்க மீண்டு அவ்வாறே... பதில் அளிக்க. மீண்டும் தண்டனை வழங்கி. மூன்றாவதும் கேட்டபோது நீ என் ரப்பு, நான் உன் அடிமை என்றது. இப்படிப்பட்ட நப்சோடு போராடுவது தான் இறைவன் நமக்கு வாழ்க்கையாக அமைத்து இருப்பதாலும், அவனின் கயிறாக (ஒற்றுமையை) சேர்ந்து பிடிக்க சொல்லி இருப்பதாலும் தாங்கள்.... தங்களின் நப்சோடு போராடி இறைவனின் கயிறாகிய ஒற்றுமைக்கு ஒத்துழைக்கனும் என்பதே..... என் தாழ்மையான கருத்து. நான் ஒரு சாதாரண ஊர் ஒற்றுமை,சமுதாய ஒற்றுமை விரும்பி மட்டுமே............... வஸ்ஸலாம்.
46. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byA.M. Syed Ahmed (Riyadh)[02 October 2011] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9335
Here most of our people blaming Aaikiyya peravai & candidates selection, may be there is a mistake in the procedure, I too admit, Let us forget
If SISTER ABIDA gets the written support from All the Jamat who stands behind sister Misriyya? Let us re-consider to get back MISRIYYA'S application...Are you guys?
Or let us compete and see who will win, which is a real democracy.
47. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byV D SADAK THAMBY (Guangzhou (China))[02 October 2011] IP: 113.*.*.* China | Comment Reference Number: 9337
அன்பு சகோதரர் AbdulKader ThaikaSahib MSS அவர்களுக்கு,
தங்களின் கனிவான ஆலோசனைக்கு நன்றி.
ஐக்கியபேரவையின் அதிகாரபூர்வ வேட்பாளாரைதவிர, மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும், போட்டியிலிருந்து வாபஸ்வாங்க பலமுனைகளிலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு கொண்டிருக்கப்படுகிறது. என்பதினை இதன்மூலம் நான் உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன்.
அதன் பயன்கள் இன்ஷாஅல்லாஹ் நாளை தெரியவரும். உங்களை போன்றவர்களின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம். அனைவர்களும் அதிகாரபூர்வ வேட்பாளர்களை ஆதரித்து ஒத்துழைக்க வேண்டுகிறேன். அல்லாஹ் நன்மையை நாடி இருப்பானகவும். ஆமீன்
48. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byV D SADAK THAMBY (Guangzhou (China)Download: eType1.com/f.php?F5KimF)[02 October 2011] IP: 113.*.*.* China | Comment Reference Number: 9339
அன்புசகோதரர் M . SAJITH அவர்களின் கருத்துக்களை நான் முழுமனதோடு வரவேற்கிறேன். அவை நன்மையை நாடி எழுதி இருப்பதாக தெரிகிறது. நாம் அனைவர்களும் ஐக்கியபெரவைக்கு வேண்டுகோள் விடுத்து ஈமெயில் அனுப்புவோம்.
ஐக்கியபேரவையும் எந்தவொரு கவுரவமும் பார்க்காமல் எதிர்வேட்பாளர்கள் அனைவரையும் போட்டியிலிருந்து விலகிக்கொள்ள வேண்டுகோள் விடுப்பது மிகமிக அவசியமானதும் அவசிமானதுமாகும்.
நகரமன்ற தலைவரை ஒருமனதாக தேர்ந்தெடுக்க ஐக்கிய பேரவை அனைத்துவிதமான் முயற்சிகளையும் செய்யவேண்டும். நாம் ஒற்றுமைஎன்னும் கையிற்றை பற்றிபிடிப்போமாக. அல்லாஹ் நன்மையையே நாடி இருப்பானகவும். ஆமீன்
49. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byfathima (kayalpatnam)[02 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 9350
அஸ்ஸலாமு அழைக்கும்
என்னபா இது மக்கள் மனதில் ஒரு பயம் வந்து விட்டது போல..போட்டியில் இருந்து விலக சொல்லும் படி பேசுறதை விடுவிடு எப்படி ஜெய்க்கனும் என்று யோசிக்கவேண்டும்...
போட்டி இல்லாமல் ஒரு தேர்தலா திருமதி ஆபிதா அவர்கள் நேற்று நடந்த புற்று நோய் விழிப்புணர்வில் டாக்டர் ஷாந்தா அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி அசத்திவிட்டார்கள். சிறுவயதிலேயே அவர்கள் எந்த விழாவிற்கும் வரும்போது அவர்கள் கை பையில் ஒரு பொன்னாடை வைத்து இருப்பது ஒரு வழக்கம் யாரவது பெரியவர்கள் உயர் மிகு தகுதியில் இருக்கும் ஒருவரை கண்ணியப்படுத்துவது சிறுவயதில் உள்ள பழக்கம்.... இது சிறு வையத்தில் உள்ள பழக்கமாக இருப்பதால் மட்டுமே எபோதும் எந்த நேரத்திலும் ஒரே மாதுரியாக இருக்க முடியுமே தவிர நேரத்துக்கு தகுந்தாற்போல் மாறவும் முடியாது பதவிக்கு வந்தாலும் பதவிமேல் ஆசையும் இருக்காது...
சிறுவயதிலே இருக்கும் தொன்று சேவை செய்யும் மனம் பெரியவர்களை கொவ்ரவிப்பது போன்று இருப்பதால் தான் இறுதி வரை உண்மையலரகவும் ஒரு நல்ல தலைவியாகவும் இருக்க முடியுமே தவிர மற்ற யாராலும் முடியாது......
50. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bysyed hasan (khobar)[02 October 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9353
ஒற்றுமை தான் முக்கியம். சில தவறுகள் ஐக்கிய பேரவையால்
நடாட்ட பெற்று விட்டது. ஆனால் ...அவர்கள் பெரியவர்கள் ...
அவர்களை முழுமையாக நிராகரிக்கும் வண்ணம் ஏதும் நடைபெற வில்லை... ஆதலால் நம் அன்பு சகோதரி ஆபிதா நாளை வாபஸ் பெறுவதுதான் சால சிறந்தது...
ஆனால் கண்டிப்பாக இந்த தேர்தல் முடிந்த உடன் ஐக்கிய பேரவையின் முதியவர்கள் பதவி விலகி இளையவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். அறுபது வயதில் பெரியவர்கள் பதவிகளில் இருந்து விலகுவது நல்லது. அது இல்லாமல் ஆரம்பித்ததில் இருந்து ஒரே நபர் தலைவராகவும் அதே குழு பொறுப்பிலும் இருப்பது எங்கும் சரியில்லை. யோசிக்கும் நல்ல உள்ளங்கள் யோசிக்கட்டும்.
51. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byMoosa Naina (Madina (K.S.A))[02 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9354
இங்கே ஆதரித்து கருத்து சொன்ன பெரும்பாலோர் சகோதரி ஆபிதா அவர்களின் நண்பிகளும், சுற்றத்தாரும், சொந்தக்காரர்களும், அந்த ஏரியாவை சேர்ந்தவர்களும் தான் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.
ஊரின் ஒற்றுமையை கொஞ்சம் கூட கருத்தில் கொள்ளாமல் ஏதோ பிடிவாதமாக தேர்தலில் நிற்கிறார்கள். ஒரு வேளை (அல்லாஹ் காப்பாற்றுவான்) அவர்கள் ஜெயித்தால் ஊரின் நன்மைக்காக வேண்டி ஊர் பெரியவர்களோ, சங்கங்கள்,ஜெமாத்தார்களோ அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தால் அதனை எந்த அளவிற்கு மதிப்பார்கள் என்பது கேள்விக்குரியே. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், சகோதரி அவர்களை சிலர் தூண்டி விட்டு, தங்களது பழைய கசப்புகளை எடுத்து சொல்லி,தேர்தலில் நிற்க வைத்து உள்ளார்கள்.
மேலும், ஆபிதா அவர்கள் படித்தவர்கள், நிர்வாக திறமை உள்ளவர்கள், பண்பாளர் என்றெல்லாம் வர்ணித்தார்கள். ஏன் இதே குண்ங்கள் ஒட்டுமொத்த ஊர் ஜெமாத் வேட்பாளர் சகோதரி மிஸ்ரிய்யா அவர்களுக்கு இல்லையா?.
ஐக்கிய பேரவையில் நடந்த சில நடைமுறை தவறுகளை மட்டும் சுட்டி காட்டி கருத்து எழுதுகிறார்கள். எந்த ஒரு நடவடிக்கையும் முதல் தடவை செய்யும் போது சில தவறுகள் நடக்க சந்தர்ப்பம் உண்டு. அதை இனி வரும் காலங்களில் எல்லோரும் கூடி பேசி சரி செய்ய பார்ப்போம். எனவே உள் நோக்கம் கற்ப்பிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.
தேர்தல் முடிந்த பின்னர் பேரவையின் நிர்வாக சிக்கலை போக்க நமது கருத்தை எடுத்துரைத்து ஆவன செய்வோம்.இப்பொழுது பேரவையின் மூலம் ஊர் ஜெமாத்தால் தேர்ந்து எடுக்கப்பட்ட பொது வேட்பாளரையே ஆதரிப்பது தான் நமதூருக்கு நாம் செய்யும் கடமை. இதில் ஈகோ பார்ப்பதில் அர்த்தமில்லை. ஊரின் ஒற்றுமையை மற்றவர்களுக்கு எடுத்து காட்ட இது நல்லதொரு சந்தர்ப்பம்.
52. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byRayyan's Dad (USA)[03 October 2011] IP: 63.*.*.* United States | Comment Reference Number: 9372
ஆபிதா ஷேய்க் ஐக்கிய பேரவையின் வேட்பாளார் தேர்தலில் கடைபிடிக்க பட்ட விதிமுறைகளில் உடன்பாடு இல்லாததாக கருதியதால் தான்... மக்கள் மன்றம் முன் தனியாக போட்டியிட முன்வந்தார். ஊர் ஒற்றுமை மற்றும் ஐக்கிய பேரவைக்கு கட்டுபடுதல் என்பதனை காரணம் காட்டி, தலைவி பதவிக்கு மிகவும் பொருத்தமான (போட்டியிடுபவர்கள் 7 பேரில்) என்று எல்லோராலும் கருதப்படும் ஒருவரை.... வாபஸ் வாங்க சொல்வது நியாயமற்றதாக நினைக்க தோன்றுகிறது. மிகச்சரியான ஒருவரை தேர்ந்தெடுத்து பதவிக்கு அனுப்புவதே சாலசிறந்தது
இந்த போட்டி நிலைமையை உருவாக்கியது... நமது ஐக்கிய பேரவையின் 'Transparency ' யின்மையே (எந்த ஒரு விசயமாக இருக்கட்டும்) மற்றும் பொது வேட்பாளார் தேர்வின்பொது நடைப்பெற்ற குளறுபடிகள் (தாயே மகளுக்கு போட்டி (பேரவையின் மாற்று??) வேட்பாளர் என்றால்... எங்கேயோ எதோ இடிக்கிறது) தான் காரணம் என்றே நினைக்க தோனுகிறது.
ஐக்கிய பேரவை... ஊரில் உள்ள அணைத்து ஜமாத்துகளாலும் மற்றும் பொதுமக்களால் ஏற்று கொள்ளபட்ட/ அங்கீகரிக்க பட்ட அமைப்புதானா?
நமது ஐக்கிய பேரவையின் தலைமை மற்றும் அதன் செயல்பாடுகள் ஒருசார்பற்றதாகவும் (Unbiased ) சுய்னலமற்றதாகவும் , எல்லோரையும் ( குறிப்பிட்ட முஹல்லா/ஜமாத்/கொள்கை வாசிகள் என்ற பாரபட்சமின்றி) அரவணைத்து செல்லகூடியதாகவும், transparency யுடனும், நியாயமானதாகவும், ஊரின் அணைத்து விசயங்களுக்கும் (அரசியல்/முனிசிபாலிட்டி தேர்தல் முடிவுகளையும்) முடிவு எடுக்கும் அங்கீகாரம் மற்றும் பெரும்பாலான மக்களால் ஏற்றுகொள்ள பட்டதாக அமைந்து உள்ளதா?
ஒரு வேளை அப்படி செயல்பட்டு வருகின்றது என்றால்.... நிச்சயமாக நமது ஐக்கிய பேரவை ஒரு வெற்றிகரமான மற்றும் ஊரே கட்டுபடுகின்ற அமைப்பாக இருந்திருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. மேலும் இது போன்ற சூழ்நிலைகள் உருவாகி இருக்காது என்றே நினைக்க தோனுகிறது.
ஒரு வேளை.... அப்படி பட்ட அமைப்பாக செயல்படவில்லையென்றால், then there is some problem with our peravai which must undergo the change first . ஐக்கிய பேரவையின் இது போன்ற முடிவுக்கு ஊர்மக்கள் அனைவரும் கட்டு படவேண்டுமா அல்லது கட்டு படுங்கள் என்று நிர்பந்திபபதில் நியாயம் இருக்கிறதா. நமது பேரவை ஒரு தவறான முன்னுதாரணமாக ஆகி விடக்கூடாது. இதற்க்கு என்னதான் தீர்வு??
நாம் முதலில் செய்யவேண்டியது நமது ஐக்கிய பேரவை எல்லோராலும் (குறிப்பாக அணைத்து ஜமாத்துகளாலும்) ஏற்றுகொள்ள பட்ட, முறைப்படி register பண்ண பட்ட மற்றும் தலைமை/உறுப்பினர்கள் தேர்வு செய்ய பட்ட அமைப்பாக மாற்ற வேண்டும்.
சுருக்கமாக சொன்னால்.... ஊர்மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் அமைப்பாக மாற்ற வேண்டும் என்பதே நம் பெரும்பாலானோரின் ஆவல். இவைகள் நடக்காதவரை இது போன்ற குழப்பங்களும் ஒற்றுமையின்மையும் தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிடும். இதை யார் எப்பொழுது செய்யபோகிறார்கள் என்பது ஒரு கேள்வி குறியாகவே போய்விடக்கூடாது.
PS : என்னுடைய கருத்துக்கள் ஒரு தனிநபருக்கு சப்போர்ட் பன்னுவதட்காகவோ அல்லது பேரவையை குறைகூற வேண்டும் என்ற நோக்கு அல்ல. பெரும்பாலான மக்கள் விரும்பும்... பதவிக்கு பொருத்தமான ஒருவர் செல்ல வேண்டும் என்பதே நம் ஆவல்!!
53. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byAbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA)[03 October 2011] IP: 109.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9397
சகோ. சதக் தம்பி அவர்களின் பதிலுக்கு நன்றி.
இருப்பினும் தங்களின் முந்தய பதிப்புகள் அனைத்தும், ஆபிதா லாத்தா அவர்களை மட்டுமே போட்டியில் இருந்து விலக சொல்வது போல் அமைந்துள்ளது.
ஆனால் என்னுடைய கேள்வி, பொது வேட்பாளரின் தாயார் போட்டியிடுவதன் நோக்கம் என்ன?
இவர் ஐக்கிய பேரவையால் நிருத்தப்பட்டவரா?
அப்படி என்றால் எந்த அடிப்படையில் நிறுத்தப்பட்டுள்ளார்?
இதை ஐக்கிய பேரவை விளக்கினால் நல்லது.
ஐக்கிய பேரவையால் நிறுத்தப்படவில்லை என்றாலும், அதை ஐக்கிய பேரவை ஒரு அறிக்கை மூலம் பொது மக்களுக்கு தெரிவிக்கலாமே? அதாவது ஐக்கிய பேரவையின் பொது வேட்பாளர் சகோதரி மிஸ்ரியா மட்டும் தான் என்று?
இத்தனை கருத்து பரிமாற்றத்திற்கு பின்னும் ஐக்கிய பேரவை ஏன் இவ்விடயத்தில் மௌனமாக் இருக்கின்றது?
சகோ. செய்து ஹசன் அவர்களே, தாங்களும் போட்டியிடும் ஏழு வேட்பாளர்களில் ஆபிதா லாத்தாவை மட்டும் குறிப்பிட்டு சொல்லியிருபதால், முடிந்தால் தங்களும் என் கேள்விக்கு விடை கூறுங்களேன்?
54. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bySamu.A.B (Dubai)[03 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9464
சகோதரர் சயீத் ஹசன் அவர்கள் கருத்து சரியானது. பேரவையில் நிறைய குளறு படிகள் நடத்து உள்ளது, சில முடிவுகள் controversial , அதனால் பேரவையை முற்றிலுமாக reject பண்ணும் அவசியம் இருபதாக தெரிவில்லை.
In AP there may be plus and minus, when there is a problem with Mr. X , there is always a choice of Y to approach and share. Sister Abida is a one man army. It could be her father, who may guide her in her future course of action. How far her father's past actions are uncontroversial is debatable.
To the least, AP is governed by group of peoples; chances are less for everyone to be a villain there. Some seniors in AP are so pious and God fearing, I know about them through my dad. So it is impossible to dismiss them all together.
55. உள்ளாட்சித் தேர்தல் 2011 posted byYousuf Sahib (Coimbatore)[03 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9468
Though I'm not directly concerned with ward 16 candidates.. a bit of interest in chairman's candidacy still remains.
It would be interesting to know the content of undertaking and the reply from sister Abidha to peravai. In getting the general public to understand what was that clause that is objectionable this and other sisters who have decided to contest against..
Will AP publish this (both) ? Let the voters know and make the right decision before the elections.
I second Br. M Sajith’s suggestion that AP and their respective Jamaaths should pursue directly ‘in person’ to all other candidates including peravai candidate’s mother as a last rescue attempt – if they are really for kayal welfare and nothing to hide.
I really doubt if AP will make this attempt. Option left is to face the tune
57. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byKALEEL (madina)[03 October 2011] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9480
அரசியல் துண்டுதல் தான் காரணமஹா இருக்கும் இல்லை என்றால் தலைவர் பொறுப்புக்கு போட்டியிட ஊரை எதிர்த்து 7 மா தார்ஹல் போட்டி இட மாட்டார்ஹல் ஊருக்கு நல்லது செய்ஹீரோம் யன்று ....... ஊர் ஒற்றுமை யை கூறு போடா வா ண்டாம்
அன்பு நன்பர் செய்யிது அவர்கள் சுட்டிக்காட்டிய “ கனியிருப்ப காய் கவருவதேன்?”எனும் பதத்தை நான் உபயேகப்படுத்தியமைக்கு வருந்துகின்றேன்.இது,இருக்கும் போது அது எதற்கு? எனும் அர்த்தத்தில் தான் பதித்தேன்.மன்னிக்கவும்!இனி இது போன்ற பதிவுகளில் கவனமாக இருப்பேன்.நன்றி!!!அல்லாஹ்வின் கருனை நம் அனைவர்க்கும் உண்டாவதாக! ஆமீன்.
59. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byNoohu sahib (Dubai)[03 October 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9485
Dear Sister Mrs.Abidha,
Please withdraw your nomination in the sake of Allah.Allah will raise your fame.Insha Allah.We know you are well educated,social minded and talented woman specially in the education of children.
May Allah will give your highest place in future.
Please for the sake of unity of Ummah, you can withdraw from your contest.
60. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bySYED OMER KALAMI (colombo)[06 October 2011] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 9766
Pls my brothers Shaik Dawood kaka ,V.D.Sadak Thambi kaka and others. Don't talk about again n again 'SOCALLED UNITY'.GETTING VOMIT. What ABITHA did all correct."MAMAIYAR UDAITHAAL MANPANNAI, MARUMAAGAL UDAITHAAL POONPANNAI"This justice you talking about.Look out first wat AIKKIYA PERAVAI did, is it acceptable? Cross your heart you will feel the truth. The system of AIKIYA PERAVAI should change from the bottom of it. So let it get lesson from this election.And don't stamp people supporting ABITHA are against unity.We want to smell the real not reel UNITY.
Hope you all support for ABITHA and tell your families,friends to vote for 'BOOK' to get a change.INSHAALLAH, ALLAH WILL SHOWER HIS BLESSING TO ALL OF IN RIGHT PATH.
61. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bySeyed Ibrahim S.R. (Dubai)[06 October 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9774
Advance Congrats to Sister Abidha for the forth coming election.
Sister Abidha, May we know your agenda in upbringing our town, if you are elected as the president. It would have been even better if you could have quoted some future plans in your election campaign notice.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross