தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் 22.09.2011 அன்று துவங்கியது. இம்மாதம் 29ஆம் தேதி (நாளை) வரை வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் பொறுப்பு இம்முறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டுகளைப் பொருத்த வரை, 14ஆம் வார்டு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பெண்களுக்கும், 02, 03, 04, 08, 09 ஆகிய வார்டுகள் பொதுவாக பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த வார்டுகளைத் தவிர்த்து, 01, 05, 06, 07, 10, 11, 12, 13, 15, 16, 17, 18 ஆகிய ஆண்களும், பெண்களும் போட்டியிடும் பொது வார்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் பொறுப்பிற்கு இதுவரை 30 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், இன்று மட்டும் 42 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்:-
அலியார் தெரு, பரிமார் தெரு, சின்ன நெசவுத் தெரு, காயிதேமில்லத் நகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 10ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, காயிதேமில்லத் நகரைச் சார்ந்த முஹம்மத் ஹனீஃபா என்பவரின் மகன் எம்.எச்.அப்துல் வாஹித் (42) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே பொறுப்பிற்கு, காயிதேமில்லத் நகரைச் சார்ந்த முஹம்மத் ஸாலிஹ் என்பவரின் மகன் எம்.எஸ்.செய்யித் முஹம்மத் என்ற மாஷா அல்லாஹ் செய்யித் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே பொறுப்பிற்கு, ஆறாம்பள்ளித் தெருவைச் சார்ந்த முஹம்மத் சித்தீக் என்பவரின் மகன் ஹாமித் ரஹ்மத்துல்லாஹ் என்ற டில்லி (வயது 52) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே பொறுப்பிற்கு, பரிமார் தெருவைச் சார்ந்த இக்பால் என்பவரின் மனைவி முஹம்மத் நூர் ஆயிஷா உம்மா (வயது 55) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே பொறுப்பிற்கு, பரிமார் தெருவைச் சார்ந்த முஹம்மத் அபூபக்கர் என்பவரின் மகன் எம்.ஏ.முஜீபுர்ரஹ்மான் என்ற முஜீபுர் (வயது 32) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கே.டி.எம்.தெரு, பெரிய நெசவுத் தெரு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 11ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, அந்த வார்டின் நடப்பு உறுப்பினரும், கே.டி.எம். தெருவைச் சார்ந்த செய்யித் முஹம்மத் என்பவரின் மகனுமான எஸ்.எம்.முஹ்யித்தீன் (வயது 49) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே பொறுப்பிற்கு, பெரிய நெசவுத் தெருவைச் சார்ந்த எஸ்.கே.யூனுஸ் என்பவரின் மகன் ஒய்.பஷீர் அஹ்மத் (வயது 59) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே பொறுப்பிற்கு, பெரிய நெசவுத் தெருவைச் சார்ந்த கே.எம்.எஸ்.ஹமீத் என்பவரன் மகன் எச்.ஷம்சுத்தீன் (வயது 31) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே பொறுப்பிற்கு, அம்பல மரைக்கார் தெருவைச் சார்ந்த பீர் முஹம்மத் என்பவரின் மகன் பி.எம்.காதர் (வயது 42) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மங்களவாடி, ஓடக்கரை, பூந்தோட்டம், தைக்காபுரம், வாணியக்குடி, மேல நெசவுத்தெரு, வண்டிமலைச்சியம்மன் கோயில் தெரு, கண்டிப்பிச்சை தோட்டம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 12ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பொறுப்பிற்கு, மங்களவாடியைச் சார்ந்த ஹரிராமன் என்பவரின் மகன் ராஜ் (வயது 38) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே பொறுப்பிற்கு, தைக்காபுரத்தைச் சார்ந்த பாலன் என்பவரின் மகன் செல்வன் (வயது 33) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஹாஜியப்பா தைக்கா தெரு, ஜெய்லானி நகர், வீரசடைச்சியம்மன் கோயில் தெரு, விசாலாட்சியம்மன் கோயில் தெரு, வண்ணாக்குடி தெரு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 13ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, ஆஸாத் தெருவைச் சார்ந்த எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் (வயது 51) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே பொறுப்பிற்கு, விசாலாட்சியம்மன் கோயில் தெருவைச் சார்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் புரட்சி சங்கர் (வயது 42) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே பொறுப்பிற்கு, வண்ணாக்குடி தெருவைச் சார்ந்த வாவரமுத்து என்பவரின் மகன் சரவணன் (வயது 37) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இலட்சுமிபுரம், அழகாபுரி, இரத்தினபுரி பகுதிகளை உள்ளடக்கிய 14ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, கீழ லெட்சுமிபுரத்தைச் சார்ந்த முத்துராஜ் என்பவரின் மனைவி தேவி (வயது 39) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பைபாஸ் ரோடு, சீதக்காதி நகர், உச்சினிமாகாளியம்மன் கோயில் தெரு, மங்கள வினாயகர் கோயில் தெரு, சிவன் கோயில் தெரு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 15ஆவது வார்டு நகர்மனற உறுப்பினர் பொறுப்பிற்கு, சீதக்காதி நகரைச் சார்ந்த வி.எஸ்.எம்.முஹம்மத் தம்பி என்பவரின் மகன் சாமு ஷிஹாபுத்தீன் என்ற டீக்கடை சாமு (வயது 52) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே பொறுப்பிற்கு, உச்சினிமாகாளியம்மன் கோயில் தெருவைச் சார்ந்த நாராயணன் என்பவரின் மகன் பேச்சிமுத்து (வயது 37) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே பொறுப்பிற்கு, மருத்துவர் தெருவைச் சார்ந்த எஸ்.பீர் முஹம்மத் என்பவரின் மகன் பி.எம்.ஷரீஃப் (வயது 40) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே பொறுப்பிற்கு, உச்சினிமாகாளியம்மன் கோயில் தெருவைச் சார்ந்த தர்மலிங்க நாடார் என்பவரின் மகன் டி.சுயம்பு (வயது 33) வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார்.
அதே பொறுப்பிற்கு, உச்சினிமாகாளியம்மன் கோயில் தெருவைச் சார்ந்த சுந்தர நாடார் என்பவரின் மகன் எஸ்.தர்மர் (வயது 33) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தைக்கா தெரு, புதுக்கடைத் தெரு, மருத்துவர் தெரு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 16ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, தைக்கா தெருவைச் சார்ந்த ஹாஜி ஏ.எஸ்.செய்யித் அஹ்மத் என்பவரின் மகன் சாமு ஷிஹாபுத்தீன் என்ற கரடி சாமு (வயது 57) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே பொறுப்பிற்கு, தைக்கா தெருவைச் சார்ந்த சதக்கத்துல்லாஹ் என்பவரின் மகன் பி.எஸ்.செய்யித் முஹம்தம் என்ற கோப்பி செய்யித் (வயது 56) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே பொறுப்பிற்கு, தைக்கா தெருவைச் சார்ந்த கலீபா அப்துல் ஹமீத் என்பவரின் மகன் கே.ஏ.செய்யித் முஹம்மத் லெப்பை என்ற கலீபா செய்யித் (வயது 36) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே பொறுப்பிற்கு, மருத்துவர் தெருவைச் சார்ந்த கிதுரு முஹம்மத் என்பவரின் மகன் கே.எம்.மூஸா நெய்னா (வயது 59) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே பொறுப்பிற்கு, புதுக்கடைத் தெருவைச் சார்ந்த முஹம்மத் முஹ்யித்தீன் என்பவரின் மகன் மஹ்மூத் (வயது 42) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
குத்துக்கல் தெரு கதவிலக்கம் 1 முதல் 217 வரை, காட்டுத் தைக்கா தெரு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 17ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, காட்டுத் தைக்கா தெருவைச் சார்ந்த எம்.எம்.அப்துல் அஜீஸ் என்பவரின் மகன் அபூபக்கர் அஜ்வாத் (வயது 36) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே பொறுப்பிற்கு, குத்துக்கல் தெருவைச் சார்ந்த கோனா சதக்கத்துல்லாஹ் என்பவரின் மகன் கோனா ஷம்சுத்தீன் (வயது 55) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே பொறுப்பிற்கு, அந்த வார்டின் நடப்பு நகர்மன்ற உறுப்பினர் - குத்துக்கல் தெருவைச் சார்ந்த முஹம்மத் இப்றாஹீம் என்பவரின் மகன் நோனா ஜாஃபா (வயது 46) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
முத்தாரம்மன் கோயில் தெரு, சேதுராஜா தெரு, கோமான்புதூர், டி.சி.டபிள்யு. காலனி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 18ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, வடக்கு முத்தாரம்மன் கோயில் தெருவைச் சார்ந்த என்.பிச்சை ஆசாரி என்பவரின் மகன் ஆதி நாராயணன் (வயது 53) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே பொறுப்பிற்கு, பாஸ் நகரைச் சார்ந்த ரெங்கையா தேவர் என்பவரின் மகன் ஆர்.முருகேசன் (வயது 40) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
[செய்தி திருத்தப்பட்டுள்ளது. நாள்: 03.10.2011] |