தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.
காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் நகர்மன்றத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொறுப்பிற்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களை, நகர்மன்ற தலைமை தேர்தல் அலுவலராக உள்ள நகர்மன்ற ஆணையரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
வேட்பு மனு தாக்கல் 22.09.2011 அன்று துவங்கியது. இம்மாதம் 29ஆம் தேதி வரை வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் பொறுப்பு இம்முறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டுகளைப் பொருத்த வரை, 14ஆம் வார்டு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பெண்களுக்கும், 02, 03, 04, 08, 09 ஆகிய வார்டுகள் பொதுவாக பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த வார்டுகளைத் தவிர்த்து, 01, 05, 06, 07, 10, 11, 12, 13, 15, 16, 17, 18 ஆகிய ஆண்களும், பெண்களும் போட்டியிடும் பொது வார்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் பொறுப்பிற்கு இதுவரை 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், இன்று மட்டும் பின்வருமாறு 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்:-
கோமான் தெருக்கள், அருணாச்சலபுரம், கடையக்குடி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 01ஆம் வார்டு நகர்மன்ற உறுப்பினர் பொறுப்பிற்கு, கோமான் மொட்டையார் பள்ளி நிர்வாகிகளும், ஜமாஅத்தினர் புடைசூழ, கோமான் தெருவைச் சார்ந்த அஹ்மத் என்பவரின் மகன் லுக்மான் நகர்மன்ற அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கே.எம்.கே. தெரு, ஆறாம்பள்ளித் தெரு, மகுதூம் தெரு, முஹ்யித்தீன் தெரு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 05ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, கே.எம்.கே. தெருவைச் சார்ந்த காதர் சுலைமான் என்பவரின் மகன் கே.எஸ்.ஜாஃபர் ஸாதிக் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
சித்தன் தெரு, ஆஸாத் தெரு, அம்பல மரைக்காயர் தெரு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 06ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பொறுப்பிற்கு, சித்தன் தெருவைச் சார்ந்த பி.நாகூர் மீரான் என்பவரின் மகன் என்.எம்.ஜெய்னுல் ஆப்தீன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, அம்பல மரைக்கார் தெருவைச் சார்ந்த அபுல் காஸிம் என்பவரின் மகன் ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் என்ற ஹாஜியார் மம்மி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, கீழ நெய்னார் தெருவைச் சார்ந்த மன்சூர் என்பவரின் மகன் என்.எம்.அப்துல் அஜீஸ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு கே.எம்.கே. தெருவைச் சார்ந்த ஷாஃபீ என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தீவுத்தெரு, கீழநெய்னார் தெரு (எண்கள் 30-460), கற்புடையார் பள்ளி வட்டம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 07ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பொறுப்பிற்கு, எஸ்.எம்.செய்யித் என்பவரின் மகன் முஹம்மத் ஹஸன் என்ற டீக்கடை ஹஸன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அப்பாபள்ளித் தெரு, மரைக்கார் பள்ளித் தெரு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 09ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, அப்பாபள்ளித் தெருவைச் சார்ந்த ஏ.எல்.பஷீருல்லாஹ் என்பவரின் மனைவி ஃகைரிய்யா வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, அப்பாபள்ளித் தெருவைச் சார்ந்த செய்யித் இப்றாஹீம் என்பவரின் மனைவி எம்.கே.ஜெஸீமா வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, மரைக்கார் பள்ளித் தெருவைச் சார்ந்த என்.எம்.அஹ்மத் அப்துல் காதிர் என்பவரின் மனைவி ஏ.ஜி.ஃபாத்திமா வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கே.டி.எம்.தெரு, பெரிய நெசவுத் தெரு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 11ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, மரைக்கார் பள்ளித் தெருவைச் சார்ந்த ஏ.கே.நெய்னா முஹம்மத் என்பவரின் மகன் என்.எம்.அஹ்மத் அப்துல் காதிர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, பெரிய நெசவுத் தெருவைச் சார்ந்த முஹம்மத் அப்துல் காதிர் என்பவரின் மகன் எம்.ஏ.கே.ஹஸன் அப்துல் காதிர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு எஸ்.எம்.ஸலாஹுத்தீன் என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மங்களவாடி, ஓடக்கரை, பூந்தோட்டம், தைக்காபுரம், வாணியக்குடி, மேல நெசவுத்தெரு, வண்டிமலைச்சியம்மன் கோயில் தெரு, கண்டிப்பிச்சை தோட்டம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 12ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பொறுப்பிற்கு, பூந்தோட்டத்தைச் சார்ந்த எஸ்.ஜெயபாண்டி என்பவரின் மகள் ஜே.பாலமுருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு கே.சபாபதி என்பவரும் வேட்பு மனு தாக்க்ல் செய்தார்.
இலட்சுமிபுரம், அழகாபுரி, இரத்தினபுரி பகுதிகளை உள்ளடக்கிய 14ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, அழகாபுரி தெற்கு - எல்.ஆர்.நகர் பகுதியைச் சார்ந்த ஆர்.ஆனந்த் என்பவரின் மனைவி ஏ.பாக்யஷீலா வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பைபாஸ் ரோடு, சீதக்காதி நகர், உச்சினிமாகாளியம்மன் கோயில் தெரு, மங்கள வினாயகர் கோயில் தெரு, சிவன் கோயில் தெரு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 15ஆவது வார்டு நகர்மனற உறுப்பினர் பொறுப்பிற்கு, உச்சினிமாகாளியம்மன் கோயில் தெருவைச் சார்ந்த பால்ராஜ் என்பவரின் மகன் பி.கணேசன் பால்ராஜ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
முத்தாரம்மன் கோயில் தெரு, சேதுராஜா தெரு, கோமான்புதூர், டி.சி.டபிள்யு.காலனி, குருசடி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 18ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, வீரசடைச்சியம்மன் கோயில் தெருவைச் சார்ந்தவரும், எஸ்.சண்முகத் தேவர் என்பவரின் மகனும், அந்த வார்டின் நடப்பு நகர்மன்ற உறுப்பினருமான எஸ்.காசிராஜன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, வடக்கு முத்தாரம்மன் கோயில் தெருவைச் சார்ந்த ஆர்.இசக்கி ஆசாரி என்பவரின் மகன் இ.எம்.முண்டசாமி என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, வடக்கு முத்தாரம்மன் கோயில் தெருவைச் சார்ந்த தங்கவேல் என்பவரின் மகன் பாலசங்கர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
01 முதல் 09ஆம் வார்டு வரையுள்ள வார்டுகளுக்கான வேட்பு மனுக்களை தேர்தல் துணை அலுவலர் காளிராஜும், 10 முதல் 18ஆம் வார்டு வரையுள்ள வார்டுகளுக்கான வேட்பு மனுக்களை தேர்தல் துணை அலுவலர் செல்வமணியும் பெற்றுக்கொண்டார்.
இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளோரின் எண்ணிக்கை விபரம்:-
வார்டு 01 - 02 நபர்
வார்டு 02 - 00 நபர்
வார்டு 03 - 00 நபர்
வார்டு 04 - 00 நபர்
வார்டு 05 - 02 நபர்
வார்டு 06 - 07 நபர்கள்
வார்டு 07 - 02 நபர்
வார்டு 08 - 01 நபர்
வார்டு 09 - 03 நபர்
வார்டு 10 - 01 நபர்
வார்டு 11 - 03 நபர்
வார்டு 12 - 03 நபர்
வார்டு 13 - 00 நபர்
வார்டு 14 - 01 நபர்
வார்டு 15 - 02 நபர்
வார்டு 16 - 00 நபர்
வார்டு 17 - 00 நபர்
வார்டு 18 - 03 நபர்
மொத்தத்தில் காயல்பட்டினத்தின் நகர்மன்ற உறுப்பினர்கள் பொறுப்பிற்கு இன்று மட்டும் 20 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்துள்ள மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 30.
நகர்மன்றத் தலைவர் பொறுப்பிற்கு இதுவரை யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. |