திருச்செந்தூரிலிருந்து சென்னை எழும்பூர் வரை வாரம் ஒருமுறை இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் - நாளை (செப்டம்பர் 27) முதல் தினசரி சேவையாக இயக்கப்படவுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.
திருசெந்தூரில் இருந்து இரவு 7:35 மணிக்கு இவ்வண்டி (எண்:16736) தற்போது புறப்படுகிறது. இனி இரவு 7:45 மணிக்கு புறப்படும். காயல்பட்டினதிற்கு இவ்வண்டி தற்போது இரவு 7:44 மணிக்கு வருகிறது. இனி 7:52 மணிக்கு, வந்து 7:54 மணிக்கு புறப்படும். திருநெல்வேலியில் இருந்து புறப்படும் நேரத்தில் (இரவு 9:15) மாற்றம் எதுவும் இல்லை. இவ்வண்டி சென்னையை மறுநாள் காலை 11:40 மணிக்கு சென்றடையும்.
சென்னை எழும்பூரில் இருந்து இவ்வண்டி (எண்:16735) - மாலை 4:05 மணிக்கு புறப்பட்டு, காயல்பட்டினத்தை மறுநாள் காலை 7:24 மணிக்கு வந்தடையும். இதில் எந்த மாற்றமும் இல்லை.
இவ்வண்டிக்கான முன்பதிவு இன்று மதியம் 12 மணி முதல் துவங்கியது.
4. Re:செந்தூர் எக்ஸ்பிரஸ் - நாள... posted byABU HURAIRA (ABU DHABI)[26 September 2011] IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8818
ஒரு இனிமையான செய்தி. அல்லாஹ்விற்கே எல்லா புகழும்.
இதற்காக வேண்டி முயற்சி செய்த அணைத்து பொது நல அமைப்புகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் மிக்க நன்றி.
6. Re:செந்தூர் எக்ஸ்பிரஸ் - நாள... posted bymackie noohuthambi (kayalpatnam)[27 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 8853
நேற்று முன்தினம் தினத்தந்தியில் வந்த செய்தி இன்று முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்து லில்லாஹ்.
இந்த வருடம் புனித ஹஜ் பயணம் மேட்கொள்பவர்கள் ஊரிலிருந்தே பயணம் புறப்பட நல்ல வாய்ப்பு.இதற்காக நடைப்பயணம் மேற்கொண்டவர்கள், ரயில் நிறுத்தப்போராட்டம் செய்தவர்கள், தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்த அரசியல் கட்சிகள், பொது நல அமைப்புக்கள், ஐக்கிய பேரவை மற்றும் ஊரில் உள்ள எல்லா தொண்டு நிறுவனங்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.
நமதூரிளிருந்தே பயண சீட்டை முன் பதிவு செய்வது முக்கியம். நம்மூரிலிருந்து எவ்வளவு நிதி ரயில்வேக்கு கிடைக்கிறது என்ற புள்ளிவிவரம் நிர்வாகத்துக்கு கிடைக்கும் பட்சத்தில் ரயிலில் மென்மேலும் வசதிகள் செய்துதரும்படி நாம் ரயில்வே நிர்வாகத்தை உரிமையுடன் அணுக முடியும். நிம்மதியான் சந்தோஷமான பாதுகாப்பான பயணத்தை நம் மக்களுக்கு அல்லாஹ் தந்தருள் வேண்டுமென இந்த நல்ல வேலையில் நாம் எல்லோரும் துஆ செய்வோமாக.
7. Re:செந்தூர் எக்ஸ்பிரஸ் - நாள... posted byK S Mohamed Shuaib (kayalpatnam)[27 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 8873
குட் நியூஸ்தான். ஆனால் வண்டி மறுநாள் முற்பகல்தான் சென்னையை சென்று அடையும் என்ற செய்திதான் பேட்நியூஸ் சென்னைக்கு மதிய வேலையில் சென்று சேர்வதைப்போல் கொடுமை வேறு எதுவுமில்லை. இதையும் மாற்றி ஒரு எட்டு மணி சுமாருக்காவது சென்னை சென்று சேர்ந்தால் பாராட்டலாம்.
8. Re:செந்தூர் எக்ஸ்பிரஸ் - நாள... posted byMskaja Mahlari. (Singapore.)[27 September 2011] IP: 175.*.*.* Singapore | Comment Reference Number: 8907
மிகவும் சந்தோசமான செய்தியாகும். அல்ஹம்துலில்லாஹ்.
இந்த முயற்சியில் ஈடுபட்ட மத்திய,மாநில அதிகாரிகளுக்கு பலகோடி நன்மைகளும், நன்றிகளும் உரித்தாகட்டும். ! அதுபோல் சமுதாய நலன்மிக்க அனைவருக்கும், இதற்காக யார்,யாரெல்லாம் எந்தெந்த முயற்சியில் ஈடுபட்டார்களோ, அனைவருக்கும் இறைவன் நல்லருள் புரிவானாக !
நமதூரில் இருந்து "புனித ஹஜ்ஜுக்கு செல்வோருக்கும் மிகவும் பிரயோசனமானதாகும். ஆகவே ! இந்த வாய்ப்பை நமது மக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். குறித்த நேரத்தில் பயணிகள் நிலையத்தில் ஆஜராகி, சில நிமிடமே நிற்கும் ரயிலில் ஏறி ,நமது பிரயாண ஒழுங்குகளை சரியாக பேணிக்கொள்ள வேண்டும். ஏனெனில் நாம் நமது விருப்பம் போல் பிரயாண ஒழுங்குகளை பேணவில்லை என்றால், அதன் மூலம் ,அதிகாரிகள்,டிரைவர்கள் மூலம் தேவையில்லாத சில அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். அவைகளுக்கு நாம் ஒரு போதும் இடம் கொடுக்கக் கூடாது.
பல இன,நிற,மத,மொழி மக்கள் என பலரும் பலவிதமாக பயன்படுத்தும்,இந்த வாய்ப்பை நாம் நமது ஒழுக்கம்,மரியாதை, மனித நேயம், மார்க்க போதனை பிரகாரம் இந்த முறைகளை நாம் பயன்படுத்திட வேண்டும். சிலசமயம் அதிக மக்கள், அதிக சுமைகள், சற்று நிதானமாக,இரயில் பெட்டியில் ஏறவேண்டும் என நினைப்பவர்கள் "திருச்செந்தூர்" இரயில் நிலையத்தை பயன்படுத்திகொள்ளலாம்.எனவே நாம் நமது கடமையை சரியாக செயல்படுத்தி வருவோமாக !
9. Re:செந்தூர் எக்ஸ்பிரஸ் - நாள... posted bySalai Syed Mohamed Fasi (AL Khobar Saudi Arabia)[27 September 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8950
Very good news for us.If they change of departure time 4.30 instead of 7.30 Early arrival is comfortable to all peoples.Other wise we will loss one day.
Any way some thing is better than nothing.
10. Re:செந்தூர் எக்ஸ்பிரஸ் - நாள... posted byMOHAMED ADAM SULTAN (KAYAL PATNAM)[27 September 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 8956
கண்ணியமிகு காயல்நகரவாசிகளே. நீங்கள் ஊரிலிருந்து புறப்பட போகும் சரி, ஊருக்கு வரும்போதும் சரி பயணசீட்டை பெரும்பொழுது "காயல் பட்டணம்" என்று சொல்லி எடுக்கவும். சாமான் அதிகமாக இருந்தால் திருசெந்துரிளிருந்து புறப்படவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் திருசெந்துரிளிருந்து காயல் வரை லோக்கல் பயணசீட்டைஎடுத்துகொள்ளவும். இந்த வழிமுறை காயல்பட்டண மக்களின் ஒட்டுமொத்த உபயோகிக்கும் சதவிகிதம் ரயில்வேக்கு தெரிய வாய்ப்பாக அமையும்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross