எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு இத்திஹாதுல் இஹ்வானுல் முஸ்லிமீன் (ஐ.ஐ.எம்.) அமைப்பு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இன்றிரவு (செப்டம்பர் 25) 8:00 மணி அளவில் - ஐ.ஐ.எம். வளாகத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் - நகர்மன்றத்தின் தற்போதைய வார்ட் 1 உறுப்பினர் திருத்துவராஜ் கலந்துக் கொண்டு - கடந்த ஐந்தாண்டுகளாக நகர்மன்றத்தில் நடந்தது என்ன? என்ற தலைப்பில் - உரை நிகழ்த்த உள்ளார்.
மேலும் - இந்நிகழ்ச்சியில், தற்போதைய நகர்மன்றத்தில் - நேர்மையாக நடந்துக்கொண்ட உறுப்பினர்கள் கௌரவிக்கப்படுவர் எனவும் ஐ.ஐ.எம். நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சி ஐ.ஐ.எம். இணையதளம் - www.iimkayal.org - இல் - இரவு 8:00 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.
2. Re:கடந்த ஐந்தாண்டுகளாக நகர்ம... posted bymackie noohuthambi (kayalpatnam)[25 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 8747
திருத்துவராஜ் அவர்கள் தவறுகளை திருத்துபவராக இருப்பார் என்று நகரமன்ற ஆரம்ப விழாவிலே பேசப்பட்டது. ஆனால் திருத்தவே முடியாமல் திருதிருவென்று முளிப்பவராக தன்னால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்று கையை பிசைந்து கொண்டு இருப்பவராகவே அவரைக் கண்டோம்.
நடந்தது என்ன என்று டிவியிலே வரும் திடுக்கிடும் நிகழ்ச்சிகளை திகைப்பூட்டும் தகவல்களை சொல்லப்போகிறாரா, இரவு 8 மணி இப்போதே வராதா என்று எதிர்பார்த்திருக்கிறோம்.
இனி விடியலை நோக்கி நமது நகர் மன்றம் எப்படி செயலாற்ற வேண்டும் என்பதையும் கூறுங்கள். நிர்வாக அதிகாரிக்கே எல்ல பவரும் உள்ளது, தலைவர் எவ்வளவு திறமைபடைதவராக பொருள் வசதி படைத்தவராக இருந்தாலும் அவர் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் தான் என்ற நிலையை மாற்றி அமைக்க வழியுண்டா, உங்கள் உள்ளக்கிடக்கைகளை காய்தல் உவத்தல் இன்றி தெளிவாக சொல்லுங்கள்.வாருங்கள் வரவேற்கிறோம்.
காரசாரமான கேள்விக்கணைகளையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வாய்மையே வெல்லும் என்று வெறும் சுலோகம் மட்டும் உரக்க சொல்லப்படுவதால் வாய்மை வென்றுவிடாது. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற செய்யாமை செய்யாமை நன்று என்று வள்ளுவம் கூறுகிறது.
நிமிர்ந்த நடையும் நேரிய பார்வையும் யார்க்கும் அஞ்சாத நிலையும் உன்னை மட்டுமே வணங்கும் உனக்கு மட்டுமே அடிபணியும் நெஞ்சுரத்தை எனக்குத தா இறைவா என்று வேண்டிக்கொண்டு உண்மையை உரக்கச் சொல்லுங்கள்.
தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்.
3. Re:கடந்த ஐந்தாண்டுகளாக நகர்ம... posted byShameemul Islam SKS (Chennai)[25 September 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 8748
அல்ஹம்துலில்லாஹ் , இது ஒரு நல்ல யோசனை .
மேலை நாடுகளில் (குறிப்பாக அமெரிக்காவில்) எல்லாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டி போடுபவர்கள் கூட மக்கள் மன்றம் முன்பாக நின்று கோடானு கோடி பேர் TV -இல் பார்த்துக் கொண்டிருக்க அவர்கள் கடந்த காலத்தில் நாட்டுக்கு எப்படி எல்லாம் சேவை செய்தார்கள் எனப் பட்டியலிட்டு வாக்கு கேட்கும் முறை தான் உள்ளது.
IIM -இன் இந்த முயற்சி மிகவும் பாராட்டிற்குரியது.
வாழ்த்துக்கள்.
5. Re:கடந்த ஐந்தாண்டுகளாக நகர்ம... posted byK S Muhamed shuaib (Kayalpatinam)[25 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 8750
கடந்த ஐந்து ஆண்டுக்கால "நினைவோட்டன்களை "அதில் பங்கு பெற்றவர் வாயினால்லேயே சொல்லவைப்பது ஒரு நல்ல முயற்சி. பாராளுமன்ற சட்டமன்ற நிகழ்வுகலேயே தொலைக்காட்சி மூலம் நேரடியாக பார்க்கும் இக்காலத்தில் ஒரு நகராட்சி மன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை மக்கள் நேரடியாக பார்க்கும் ஏற்ப்பாடுகள் எதுவும் இன்னும் செய்யப்படவில்லை.
எனவே இதை அறிவதற்கு அதில் உறுப்பினராக இருக்கும் மக்கள் பிரதிநிதியின் நேரடி அனுபவத்தை தவிர வேறு வழிஇல்லை. அந்த வகையில் திரு.திருத்துவராஜின் உரை உள்ளது உள்ளபடி சொல்லும் "உண்மை"உரையாக இருக்குமானால் அது நிச்சயம் வரவேற்க்கத்தக்கதே.
முயற்சிகள் எடுத்த ஐ .ஐ .எம் முக்கு பாராட்டுக்கள்....!
6. அருமையான ஊடகம்! posted bykavimagan (dubai)[25 September 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8752
ஐ.ஐ.எம்.தொலைக்காட்சி ஊடகம் மக்கள் மனதில் நீங்கா
இடம்பெற்று இருப்பதற்கு,இது போன்ற அவர்களது அரிய,
வித்தியாசமான நிகழ்ச்சிகளே காரணம்.உதாரணத்திற்கு,
புற்று நோய் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில்,நகரில்
அதிக அளவு முயற்சி எடுத்த காட்சி ஊடகம் ஐ.ஐ.எம்.
மக்களுக்கான பணியில் ஒரு ஊடகத்தின் பங்கு எவ்வளவு
முக்கியமானது என்பதை உணர்ந்து சரியான தருணத்தில்,
சரியான நிகழ்சிகளை ஒளிபரப்பிவரும் ஐ.ஐ.எம்.நிர்வாகிகள்
மற்றும் ஊடகப் பிரிவினருக்கு பாராட்டுக்கள்!
7. Re:கடந்த ஐந்தாண்டுகளாக நகர்ம... posted byMohamed Ibrahim (Dubai)[25 September 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8753
10. தடங்கலுக்கு வருந்திகிறோம்.... posted byAbdul Wahid Saifudeen (Kayalpatnam)[25 September 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 8761
இணையதள தொடர்பு துண்டிக்கப்பட்டதன் காரணமாக இணையதள நேரடி ஓளிபரப்பு இடையில் தடைப்பட்டதற்கு வருந்துகிறோம். இன்ஷா-அல்லாஹ். பதிவு செய்யப்பட்டது மீண்டும் நேரம் அறிவிக்கப்பட்டு ஒளிபரப்பப்படும்.
நடந்தது என்ன என்று பெண் உறுப்பினர்களும் திருதுவராஜ் அவர்களும் சொல்ல சொல்ல நேரம் போய்க்கொண்டே இருந்தது. நான்கு சுவர்களுக்குள் நடத்தப்பட வேண்டிய கருத்தரங்கு அல்ல இது. திறந்த வெளியில் எல்லா தரப்பினரும் கட்சி வேறுபாடு, கொள்கை வேறுபாடு இல்லாமல் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சி. காயல்நகர் ஊழல் நகராக இருந்திருப்பதை என்னும்போது அதற்க்கு பொதுமக்கள்தான் முக்கிய பொறுப்பேற்க வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக திருதவராஜ் சொன்னபோது நம்மையே நாம் கிள்ளிப்பார்துக்கொண்டோம்.
இப்போதும என்ன புதிதாக சாதித்துவிடப்போகிறோம் என்ற நினைவுதான் மேலோங்கி நிற்கிறது. ஒரு குடையின் கீழ் ஒரு தலைமையின் கீழ் நாம் இணைந்து வேர்பாளர்களின் யோக்கிதையை தீர்மானிக்க முடியாதுபோல் தெரிகிறது. இப்போது போட்டியில் IIM மும் இனைந்து கொண்டுள்ளது என்பதை தவிர வேறொன்றும் புதிதாய் தெரியவில்லை .
மனம் வேதனைப்படுகிறது. 29m திகதி மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று இருக்கும்போது இன்னும் வேட்பாளர்கள் அறிவிப்பு வரவில்லை. அவரவர்களுக்கு நல்லவர் என்று தெரிபவரை தேர்வு செய்யுமுன் இரண்டு ரகாத் தொழுது அல்லாஹ்விடம் து ஆ செய்து கொள்வோம்.
யா அல்லா யார் இந்த வூருக்கு நன்மை செய்வார்களோ அவர்கள் வெற்றியடையட்டும். வெற்றிபெற்றவரின் உள்ளத்தில் உன்னைப்பயந்து செயலாற்றக்கூடிய நல என்னத்தை கொடுத்து அருள்வாயாக. இந்த ஊர் மக்களுக்கு எதிராக செயல்பட நினைப்பவர்களுக்கு, இந்த பதவியை வைத்து வியாபாரம் செய்ய நினைப்பவர்களுக்கு நீ தோல்வியை கொடுப்பாயாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross