புகழ்பெற்ற பன்னூலாசிரியர் முனைவர் எம்.ஏ.ஹாரூன் தொகுப்பில் ‘திருக்குர்ஆன் இயற்கை மருத்துவம்‘, ‘திருக்குர்ஆன் ஆண்-பெண் பாலியல் மருத்துவம்‘ என்ற தலைப்புகளில் நூற்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அண்மையில், கடந்த ஜூலை 08, 09, 10 தேதிகளில் காயல்பட்டினத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள வந்திருந்த முனைவர் எம்.ஏ.ஹாரூன், காயல்பட்டினத்தின் கட்டமைப்பு, கலாச்சார கட்டுக்கோப்பு உள்ளிட்டவற்றால் தான் பெரிதும் கவரப்பட்டதாகவும், தன்னளவில் இந்த ஊருக்கென ஏதாவது ஒரு நன்மையைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், தன்னால் இயற்றி வெளியிடப்பட்ட ‘திருக்குர்ஆன் இயற்கை மருத்துவம்‘, ‘திருக்குர்ஆன் ஆண்-பெண் பாலியல் மருத்துவம்‘ என்ற தலைப்புகளில் நூற்களை, இந்நகரின் பாடசாலைகள், நூலகங்கள், மத்ரஸாக்கள் மற்றும் பொதுநல அமைப்புகளுக்கு அன்பளிப்புச் செய்ய ஆவலுடன் இருப்பதாகவும், சமூக ஆர்வலர்களிடம் தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில், மேற்படி நிறுவனங்களுக்கு நூல் அன்பளிப்புச் செய்யும் நிகழ்ச்சி, 24.09.2011 சனிக்கிழமை மாலை 05.30 மணிக்கு காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
சென்னை தி.நகர் எல்.கே.எஸ். கோல்டு ஹவுஸ் அதிபர் ஹாஜி எஸ்.செய்யித் அஹ்மத் இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். பொதுநல ஊழியர் ஹாஜி எம்.என்.அபூபக்கர் பக்ரீன், எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துளிர் எம்.எல்.ஷேக்னாலெப்பை அனைவரையும் வரவேற்றுப் பேசினார். எல்.டி.இப்றாஹீம் நூல் அறிமுகவுரையாற்றினார்.
பின்னர், காயல்பட்டினம் நகரின் பாடசாலைகள், நூலகங்கள், மத்ரஸாக்கள் மற்றும் பொதுநல அமைப்புகளுக்கு நூல் அன்பளிப்புச் செய்யப்பட்டது. லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன், ஹாஜி எஸ்.செய்யித் அஹ்மத், டாக்டர் முஹம்மத லெப்பை ஆகியோர் நூற்களை வழங்க, நிறுவனங்களின் பிரதிநிதிகள் அவற்றைப் பெற்றுக்கொண்டனர்.
ஜே.ஏ.லரீஃப் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ஆசிரியர் அப்துர்ரஸ்ஸாக் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.
படங்கள்:
எஸ்.ஆர்.பி.ஜஹாங்கீர். |