காயல்பட்டின நகர்மன்றம் வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதியன்று, தேர்தலை சந்திக்கவுள்ளது. ஒரு நகரமன்றத்தின் - அடிப்படை சேவைகளான - குடிநீர் விநியோகம், தெரு விளக்குகள், குப்பைகளை அகற்றுதல் மற்றும் கழிவு நீரை அப்புறப்படுத்துதல் - ஆகியவற்றில் - காயல்பட்டின நகராட்சியின் - தற்போதைய நிலை என்ன?
குறிப்பு: கீழே தரப்படும் தகவல்கள், நகர்மன்றத்தின் அதிகாரப்பூர்வ தகவல்கள் ஆகும். நடைமுறையில் இருந்து வேறுபடலாம்.
குடிநீர் விநியோகம் ...
தினமும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. சராசரியாக தலைக்கு - தினமும் 90 லிட்டர் குடிநீர் என்ற அளவில் விநியோகம் நடைபெறவேண்டும். இருப்பினும் - நகர்மன்ற தகவல்படி - தினமும், தலைக்கு 60 லிட்டர் குடிநீர் - விநியோகம் செய்யப்படுகிறது.
மூன்று நாளைக்கு ஒரு முறை என - ஒரு மணி நேரத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
வீட்டு உபயோகத்திற்கு மாதம் 50 ரூபாய் என்றும், பிற உபயோகத்திற்கு மாதம் 100 ரூபாய் என்றும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தெரு விளக்குகள் ...
நகரில் 1247 தெரு விளக்குகள் - நகர்மன்ற தகவல்படி - உள்ளன. அதில் -
ட்யூப் லைட் - 979, சோடியம் வேப்பர் லைட் - 263, உயர் கோபுர விளக்குகள் - 5.
குப்பைகள் ...
தினமும் நகரில் - சராசரியாக் 8 மெட்ரிக் டன் அளவு குப்பை சேருகிறது. அதனை அப்புறப்படுத்த 3 டிப்பர் லாரியும், 2 டிப்பர் ஆட்டோவும், 25 தள்ளுவண்டியும் உள்ளன. அவைகளின் கொள்ளளவு 3 மெட்ரிக் டன். ஆகவே - நகர்மன்றத்தின் தகவல்படி - தினமும் 3 முறையாக பணி செய்து குப்பைகள் அள்ளப்படுகின்றன.
கழிவு நீர் ...
கழிவு நீரை அகற்றும் திட்டம் நடைமுறையில் இல்லை
மூலம்:
காயல்பட்டினம் நகர்மன்றம் |