எதிர்வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதியன்று, காயல்பட்டின நகர்மன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அத்தேர்தலில் நகர்மன்றத்தில் உள்ள 18 வார்டுகளுக்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இத்தருணத்தில் 2006 ஆம் நடந்த தேர்தலின் முடிவுகளை - வார்டு வாரியாக - பார்வையிடுவது பொருத்தமாக இருக்கும்.
வார்ட் 15 முடிவுகளை காண்போம். பைபாஸ் ரோடு, சீதக்காதி நகர், உச்சிமாகாளியம்மன் கோவில் தெரு, மங்கள விநாயகர் கோயில் தெரு, சிவன் கோயில் தெரு ஆகிய பகுதிகளை அடங்கியது இவ்வார்டு.
இவ்வார்டில் - 2006 ஆம் ஆண்டு - 13 வேட்பாளர்கள் - போட்டியிட்டனர் . பதிவான 1110 வாக்குகளில் - 248 வாக்குகள் பெற்று, அலமாரி சின்னத்தில் நின்ற வேட்பாளர் - கணேசன் பால்ராஜ் பா - வெற்றிபெற்றார்.
பிற வேட்பாளர்களும், அவர்கள் பெற்ற வாக்குகளும்:-
(2) ஜமால் கே. (அசைந்தாடும் நாற்காலி) - 217 வாக்குகள்
(3) அப்துல்ரசீது இ. (கை) - 140 வாக்குகள்
(4) செய்யது இஸ்மாயில் எஸ்.எம் (தீப்பெட்டி) - 85 வாக்குகள்
(5) சுகுமார் சு. (அரிக்கேன் விளக்கு) - 76 வாக்குகள்
(6) பொன்னுசாமி செ (மத்தளம்) - 72 வாக்குகள்
(7) ஜின்னா ஜ. (இரட்டை இலை) - 61 வாக்குகள்
(8) அக்பர் கான் கு. (உலக உருண்டை) - 55 வாக்குகள்
(9) சம்சுதீன் ஆர்.பி. (தீபம்) - 52 வாக்குகள்
(10) பல்லாக் லெப்பை ஹெச். (கைப்பை) - 46 வாக்குகள்
(11) இக்பால் அ.மு. (வைரம்) - 30 வாக்குகள்
(12) அபூசாலிஹ் ஏ.எல்.எஸ் (தண்ணீர்க்குழாய்) - 17 வாக்குகள்
(13) கிதிர் மெய்தீன் எஸ்.ஏ. (குலையுடன் கூடிய தென்னை மரம்) - 11
|