காயல்பட்டினத்தின் நீண்டகால குடிநீர் பிரச்சினையைத் தீர்த்திடும் முகமாக செயல்படுத்தப்படவுள்ளது 2ஆவது பைப்லைன் குடிநீர் வினியோகத் திட்டம். இத்திட்டத்தின் கீழ், பொன்னன்குறிச்சியிலிருந்து காயல்பட்டினத்திற்கென தனிக்குழாய் அமைத்து, நேரடியாக குடிநீர் நகர் முழுக்க வினியோகிக்கப்படும்.
இத்திட்டத்திற்கான மொத்த செலவு மதிப்பீட்டுத் தொகை ரூ. 29 கோடியே 67 லட்சம். இத்தொகையில் மத்திய அரசு மானியமாக - Urban Infrastructure Development Scheme for Small And Medium Towns (UIDSSMT) திட்டத்தின் கீழ் - 80% தொகை வழங்கும். மாநில அரசு மானியமாக 10% தொகை வழங்கும். நகர்மன்றம் செலுத்த வேண்டிய எஞ்சிய 10% தொகை ரூ. 2 கோடியே 96 லட்சத்து 70 ஆயிரம்.
இத்தொகையில், நகர்மன்ற பொதுநிதியிலிருந்து ரூ. 1 கோடியே 50 லட்சம் கொடுக்கப்படவுள்ளது.
இத்திட்டம் - மாநில அரசின் STATE LEVEL SCRUTINY COMMITTEE (SLSC) இன் ஒப்புதல் பெற்றுவிட்டதாகவும், தற்போது அது மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் - முனிசிபல் நிர்வாகம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.பி. முனுசாமி வெளியிட்டுள்ள - தனது துறைக்கான செயல்திட்ட அறிக்கையில் (Policy Note) - தெரிவித்துள்ளார். மேலும் - ஒப்புதல் கிடைக்கப்பெற்றால், நடப்பாண்டிலேயே (2011 - 2012) இத்திட்டம் துவக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் 131 பக்க அறிக்கையில் காயல்பட்டினம் குடிநீர் திட்டம் குறித்த பக்கம் ...
|