செய்தி எண் (ID #) 7303 | | |
திங்கள், செப்டம்பர் 26, 2011 |
உள்ளாட்சித் தேர்தல் 2011: ஐக்கியப் பேரவை தேர்வுக்குழுக் கூட்டத்தில் நகர்மன்றத் தலைவருக்கான வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 4897 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (47) <> கருத்து பதிவு செய்ய |
|
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் சார்பில், நகரின் அனைத்து ஜமாஅத்துகளின் பிரதிநிதிகள், பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் வாக்குரிமையுடனும், ஐக்கியப் பேரவையால் தேர்ந்தெடுக்கப்படும் நகரப் பிரமுகர்கள் 25 பேர் அடங்கிய குழு வாக்குரிமையின்றியும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
நகர்மன்றத் தலைவர் பொறுப்பு இம்முறையும் ஆண் - பெண் யாரும் போட்டியிடும் பொதுவானதே என்று கருதப்பட்ட நிலையில், காயல்பட்டினம் உள்ளிட்ட பல நகர்மன்றங்களின் தலைமைப் பொறுப்பு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழக அரசால் திடீரென அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நகர்மன்றத் தலைவியைத் தேர்ந்தெடுப்பதற்கான காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின், நகர்மன்றத் தலைவர் தேர்வுக்குழு கூட்டம் இன்றிரவு கூடியது. இதில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், காயல்பட்டினம் ஆறாம்பள்ளித் தெருவைச் சார்ந்த என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் என்பவரின் மனைவி - பி.காம் பட்டப்படிப்பு முடித்துள்ள ஹாஜ்ஜா எல்.எஸ்.எம்.மைமூனத்துல் மிஸ்ரிய்யா அதிக வாக்குகள் பெற்று நகர்மன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |