புற்றுநோய் மருத்துவத்தில் புகழ்பெற்ற நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தின் தலைவருமான டாக்டர் வி.ஷாந்தா, வரும் அக்டோபர் மாதம் 01ஆம் தேதியன்று காயல்பட்டினம் வருகை தருகிறார்.
அவரது வருகையையொட்டி நடைபெறவுள்ள நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்க கூட்ட அரங்கில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, இந்நிகழ்ச்சியை வழிநடத்த பொறுப்பேற்றுள்ள காயல்பட்டினம் Cacncer Fact Finding Committee - CFFC சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
புற்றுநோய் மருத்துவத்தில் புகழ்பெற்ற நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தின் தலைவருமான பத்மஸ்ரீ டாக்டர் வி.ஷாந்தா அவர்கள் எதிர்வரும் அக்டோபர் 01ஆம் தேதி சனிக்கிழமையன்று காயல்பட்டணம் வருகிறார்.
இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்வது குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் 20.09.2011 அன்று இக்ராஃ கூட்ட அரங்கில் நடைபெற்றது.
CFFCயின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மது கூட்டத்தை ஒருங்கிணைத்தார். கே.எம்.டி. மருத்துவமனையின் செயலாளர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் கூட்டத்தின் நோக்கம் குறித்தும், நகரின் புற்றுநோய் பரவல் மற்றும் தடுப்பு முயற்சியில் பல்வேறு அமைப்புகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் சுருக்கமாக எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்நது CFFCயின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், டாக்டர் ஏ.ஷாந்தா அவர்களின் காயல்பட்டினம் வருகையை மிகவும் சிறப்பான முறையில் பயனுள்ள நிகழ்ச்சியாக அமைக்க வேண்டியது குறித்தும், இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் எவ்விதத்தில் அமைக்கப்படவுள்ளது என்பது குறித்தும் விரிவாக விளக்கினார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் உள்ளூர் மருத்துவர்கள் அனைவரும் அழைக்கப்பட வேண்டும் என்றும், காயல்பட்டினத்திலிருந்து பொதுமக்கள், சென்னை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி, நாகர்கோவில், ஆத்தூர், திருச்செந்தூர், ஆறுமுகநேரி ஆகிய பகுதிகள் உட்பட எங்கெங்கெல்லாம் மருத்துவ சிகிச்சைக்காக வழமையாக சென்று வருகின்றனரோ அந்த மருத்துமனைகளின் மருத்துவர்களும் அழைக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அவ்வாறு அழைக்கப்படும் மருத்துவர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்படுமெனவும், மதியம் 02.15 முதல் 03.15 மணி வரை, காயல்பட்டினம் நகரில் புற்றுநோய் பரவல் தடுப்பு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தல் உள்ளிட்டவற்றுக்கான நிரந்தர செயல்திட்டம் அமைப்பது குறித்து, அழைக்கப்பட்ட இம்மருத்துவர்களுடன் மருத்துவ மாமேதை டாக்டர் ஏ.ஷாந்தா அவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுமென ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் மேலும் தெரிவித்தார்.
இவ்வமர்வில், "காயல்பட்டினத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிகள் பற்றிய மேலோட்ட குறிப்பு" கேட்டறியப்படுமெனவும், இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்குப்பின் பொதுமக்களுடன் டாக்டர் ஷாந்தா கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படும், "காயல்பட்டினத்தில் புற்றுநோய் பிரச்சனையை எதிர்கொள்வதில் பொதுமக்களின் பங்கு" என்ற தலைப்பில் இந்நிகழ்ச்சியின் கலந்துரையாடல் அமையும் எனவும், இந்நிகழ்ச்சிக்கு நகரின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள - பொதுமக்களுடன் விரிவான தொடர்புடைய - விவரமறிந்த பிரதிநிதிகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்படி அழைக்கப்படுவர் எனவும், இந்த அமர்வில், பெண்களின் பங்கேற்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிக்குப் பின் டாக்டர் சாந்தா அவர்களின் மருத்துவக் குழுவினருடன் காயல் நகரை ஆட்டிப் படைக்கும் கொடிய புற்று நோயிலிருந்து மக்களை காத்திடுவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து செயல்திட்டம் வகுப்பதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர் என ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் மேலும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட அமைப்பினர் பல்வேறு நீண்ட கருத்துப் பரிமாற்றங்கள் செய்தனர். அதனைத் தொடர்ந்து, டாக்டர் ஷாந்தா அவர்களின் இந்த காயல் நகர வருகையை நமதூர் மக்களின் நலன்களுக்காக நல்ல முறையில் பயன்படுத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதெனவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டிற்காக துறை வாரியாக பல்வேறு குழுக்களுக்கு பின்வருமாறு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்:-
நிகழ்ச்சி புரவலர்:
ஹாஜி எஸ்.செய்யித் அஹமத் (தி.நகர் எல்.கே.எஸ். கோல்டு ஹவுஸ்)
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
Cancer Fact Finding Committee - CFFC
நிகழ்ச்சிக்கு உதவி:
1. இக்ராஃ கல்விச் சங்கம் - காயல்பட்டினம்
2. காயல் நல மன்றம்- கத்தார்
3. காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங்
4. காயல் நற்பணி மன்றம் - ரியாத்
5. காயல் நற்பணி மன்றம் - ஜித்தா
6. காயல் நற்பணி மன்றம் - தம்மாம்
7. K.M.T மருத்துவமனை - காயல்பட்டினம்
8. தி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் - காயல்பட்டினம்
9. காயல்பட்டணம் வெல்ஃபர் டிரஸ்ட் – காயல்பட்டினம்
நிகழ்ச்சி ஆலோசனைக்குழு:
ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர்
ஹாஜி எஸ்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ் (ஹாஜி காக்கா)
அப்துல் லத்தீஃப் (மேலாளர், K.M.T. மருத்துவமனை)
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்:
ஹாஜி A. தர்வேஷ் முஹம்மத்
M.S முஹம்மத் ஸாலிஹ்
நிகழ்ச்சி பல்துறை ஏற்பட்டுக்குழு உறுப்பினர்கள்:
01. பல்லாக் சுலைமான்
02. ஆதம் சுல்தான்
03. M.M முஜாஹித் அலி
04. சொளுக்கு செய்யது முஹம்மது ஸாஹிப் (சேம்ஸா)
05. M.W ஹாமித் ரிஃபாய்
06. S.I புகாரீ
07. V.I புகாரீ
08. M.A.S. ஜரூக்
09. M.M முஹம்மது முஹ்யித்தீன் ஃபஸல்
10. ஷாஹீல் ஹமீது
11. S. அப்துல் வாஹித்
12. M.A.C முஹம்மது நூஹ்
13. S.K. ஸாலிஹ்
14. L.T. இப்ராஹீம்
15. சட்னி ஸெய்யித் மீரான்
16. நூஹ் ஸாஹிப்
17. முஹம்மத் நூஹ்
18. பல்லாக் அப்துல் காதிர் நெய்னா
19. K.M.T சுலைமான்
20. N.S.E. மஹ்மூது (அனைத்துக் குழு ஒருங்கிணைப்பாளர்)
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயலாளர் K.J.ஷாஹுல் ஹமீத், சுலைமான் (ரியாத்). ஸெய்யித் முஹியத்தீன் (கத்தார்) முஹம்மது அபூபக்கர் ஸித்தீக் (தம்மாம்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நீண்ட ஆலோசனைக்குப் பின், இரவு 10.30 மணியளவில், துஆ, ஸலவாத், கஃப்ஃபாராவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு CFFC ஒருங்கிணைப்பாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |