Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:18:23 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7314
#KOTW7314
Increase Font Size Decrease Font Size
புதன், செப்டம்பர் 28, 2011
காயல்பட்டின நகர்மன்றம் குறித்த வழக்கு: அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 5230 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (20) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டின நகர்மன்றத் தலைவர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கிய அரசாணைக்கு எதிராக, MEGA வின் பிரதிநிதியும், மக்கள் சேவாக்கரங்கள் நிறுவனருமான பாலப்பா ஜலாலி செப்டம்பர் 26 அன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அது இன்று (செப்டம்பர் 28) விசாரணைக்கு வந்தது

வழக்கினை நீதிபதிகள் பி.பி.எஸ். ஜனார்த்தன ராஜா மற்றும் அருணா ஜெகதீசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. MEGA சார்பாக வழக்கறிஞர்கள் ஏ. ஹாஜா முஹியத்தீன் மற்றும் எம். முஹம்மது செர்புதீன் ஆகியோர் வாதித்திட்டனர்.

அரசாங்கம் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் - தேர்தல் அறிவிப்புக்கு பின் வழக்கு போடப்பட்டிருப்பதாகவும், ஆகவே வழக்கினை தள்ளுபடி செய்யும்படியும் கூறினார். அதனை ஏற்றுக்கொள்ளாத நீதிபதிகள், இது குறித்த பதிலினை தாக்கல் செய்யும்படி - அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

அக்டோபர் 1 முதல் அக்டோபர் 9 வரை - தசரா விடுமுறைக்காக உயர்நீதிமன்றம் பணிபுரியாது. ஆகவே - வழக்கு மீண்டும் அக்டோபர் 10 அன்று விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
சாளை சலீம்,
ஒருங்கிணைப்பாளர், MEGA.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:காயல்பட்டின நகர்மன்றம் கு...
posted by Mohamed Salih (Bangalore) [28 September 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 8993

எல்லா புகழும் வல்ல இறைவனுக்க ... கலக்குங்க MEGA..

வித் பெஸ்ட் விஷேஸ் ..

பெங்களூர் ரில் இருந்து ..
முஹம்மத் ஷாலிஹ்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:காயல்பட்டின நகர்மன்றம் கு...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (காயல்பட்டினம்) [28 September 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 8994

தேர்தல் அறிவிப்புக்கு பின் வழக்கு போடப்பட்டிருப்பதால் தள்ளுபடி ஆகிவிடும் என்று சற்று கவலை இருந்தது. ஆனால் நீதிபதிகள், அரசுக்கு பதில் தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பிய செய்தியை பார்த்து சற்று நிம்மதி.

லேசாக குளிர்ந்த காற்று அடிக்கின்றது, மழை வருமா என்று பார்ப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:காயல்பட்டின நகர்மன்றம் கு...
posted by M Sajith (DUBAI) [28 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9002

எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக, உணர்ச்சி இன்னமும் ஊரில் இருக்கத்தான் செய்கிறது என்பதை அரசுக்கும் அதிகாரிகளுக்கும் தெரிவிக்க இந்த வழக்கு அவசியமான ஒன்றுதான். இதற்காக சிரமம் எடுத்துக்கொண்ட 'மெகா' டீமுக்கும் குறிப்பாக ஜலாலி காக்கா அவர்களுக்கும் நாம் எல்லோரும் கடமைபட்டிருக்கிறோம்.

என்றாலும்,

இந்த தேர்தலில் இல்லை என்றால் அடுத்த தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்கப்படுவது தவிர்க்க இயலாது..

ஒற்றுமையாகவோ அல்லது உடன்பாடு இல்லாமல் திடீரென்றோ ஒருவரை முன்முழிந்தாகிவிட்டது.

இறைவனிடம் பொறுப்பை விட்டுவிட்டு நல்லது நடக்கட்டும் என தொடர்ந்து செல்ல வேண்டிய இந்த நிலையில் இதில் வரும் நியாமான தீர்ப்பால் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறின கதையா இன்னொரு ரவுன்டு "அரங்கேற்றம்" செய்யவேண்டியது வருமோ என்ற கவலையும் வரத்தான் செய்கிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Suggestion
posted by Salai.S.L.Khaja Muhyideen (Dubai) [28 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9004

Assalamu Alaikum

O.k.Insha Allah we can think positive on OCT 10TH 2011. Meanwhile why can't Mega & UFM form a advisory board (3 Gents+ 2Ladies) to guide our lady chairman in the critical issues?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. முத்து எடுக்க முங்கி இருக்கும் மெகா......
posted by zubair (riyadh) [28 September 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9005

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு "மெகா" அன்பர்களே......... சத்தியத்தை வெல்ல வழக்கு போட்டு இருப்பதை மனமார பாராட்டுகிறேன். நன்றிகள். மேலும் தாங்கள் வெற்றிவாகை சூட இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:காயல்பட்டின நகர்மன்றம் கு...
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [28 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9006

ஊரில் மொத்த ஜமாத்துக்களும், அமைப்புகளும் தலைவியை தேர்ந்து எடுப்பதில் கொடுக்கும் ஆர்வத்தை இந்த அநீதிக்கு எதிரான நடவடிக்கையை எடுபதற்கு (வழக்கு போடும் சம்மந்தமாக) ஊரில் செயல்படும் எந்த அமைப்பும் கலந்து பேசியதாக செய்திகள் இல்லை..

அன்பு சகோதரர் ஜலாலி அவர்களே..

நீங்கள் நியாயத்துக்காகவும் ஊரின் நன்மைக்காகவும் நீதி மன்றம் சென்றுள்ளீர்கள்.. நீதிபதியின் தீர்ப்பு என்ன..? அரசுக்கு சாதகமா...? - அல்லது - அமீகரத்தில் இயங்கும் மெகாவின் ஊர் பிரதிநிதி சகோதரர் ஜலாலி அவர்களே உங்களுக்கு ( நமது காயல் மக்களுக்கு) சாதகமா...? நமது வெற்றிக்காக நாம் அனைவர்களும் துவா செய்வோமாக..

நட்புடன் - முத்து இஸ்மாயில். (வி சி கட்சி)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:காயல்பட்டின நகர்மன்றம் கு...
posted by Pirabu Mubarak (Hong Kong) [28 September 2011]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 9007

Dear Administrator,

With due regards i want to bring to your notice, One Guy Named Sajith from Dubai, His comments are always rubbish, I think he have some problem with the whole Kayal Community, This is the first time am writing comments in this website and he is the one who made me to do so. Please delete these type of comments which will mislead the people.

There are many peoples who is not aware of many things happening in Kayalpatnam, If those peoples see his comments then they will come to the conclusion that, all messages conveyed by this Brother(Sajith) is true. So i feel that this will mislead the People mainly youngsters. he always happy to write negative comments...I also dont know what is the Real problem with him with Muslim United Forum - Kayalpatnam.

Dear Brother, I dont know how many times you have contacted Muslim United Forum - Kayalpatnam to clear all you unnecessary doubts. My Humble request to you, Think well before you write any thing, as if you have freedom to write any thing dont write like this, If all people think like you nothing will happen in the end of the Day.

Our Result will be ZERO..... U can Not find any Resolutions

With Regards
Pirabu Mubarak


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:காயல்பட்டின நகர்மன்றம் கு...
posted by Peena Abdul Rasheed (Riyadh) [28 September 2011]
IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9008

மச்சான் உன் பலன் அல்லாஹ் உதவி தூரத்தில் இல்லை. இன்ஷால்லாஹ் நம் உருக்கு நன்மை எதுஒ அது நடக்கட்டும்.

உன் அன்பு மச்சான்
பீனா அப்துல்ரஷீத்
பத்ஹா ரியாத்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:காயல்பட்டின நகர்மன்றம் கு...
posted by Zainul Abdeen (Dubai) [28 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9011

உடன்பாடு இல்லாமலா 40 வாக்காளர்கள் ஒரு பெண்மணியை முன்மொழிந்தர்கள்?????? இப்படி கூறுவதனால் அவருக்கு என்ன கிடைத்தாயிற்று என்று தெரியவில்லை.

பேரவையில் உள்ள பெரியவர்கள் மற்றும் அவர்களின் அழைப்பை ஏற்று வந்து ஒவ்வொரு முஹல்லாவின் பிரதிநிதியும் எந்த ஒன்றுக்காக பாடுபடுகின்றர்களோ அதேயே இவர் கொச்சை படுத்தும் வண்ணம் அவருடைய கருத்து இருகின்றது.

அவருடைய எண்ணத்தை மாற்றுவது நல்லது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. இதயத்தால் ஒன்றானோம்!
posted by kavimagan (CHENNAI) [28 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 9013

அன்பு நண்பர், முத்து இஸ்மாயில் அவர்களே!

நீங்கள் குறிப்பிட்டதைப் போல MEGA அமீரகத்தில் இருந்து இயங்கவில்லை. தாய் மண்ணிலும்,அகிலத்தின் அனைத்து பாகங்களிலும் பரவிக் கிடக்கின்ற ஒவ்வொரு மண்ணின் மைந்தனின் இதயத்தில் இருந்தும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இறைவனின் அருளால், இந்த நகராட்சித் தேர்தலில் ஏற்படப்போகும், மகத்தான பல திருப்பங்களுக்கு MEGA முக்கியமான காரணியாக அமையும்.

அல்லது விரும்புவோரின் சூழ்ச்சி, இறைவனால் முறியடிக்கப்படும் நல்ல பல செய்திகள் இன்னமும் வெளிவர ஏராளம் இருக்கிறது. உண்மைக்கும், நேர்மைக்கும் உன்னத வெற்றிகள் பல காத்து இருக்கிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:காயல்பட்டின நகர்மன்றம் கு...
posted by Salai Syed Mohamed Fasi (AL Khobar Saudi Arabia) [28 September 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9036

This is fruitful and cheerful news for us. By the grace of Almighty of Allah we will get favour result.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:காயல்பட்டின நகர்மன்றம் கு...
posted by Vilack SMA (Hetang) [28 September 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 9044

ஒற்றுமையாகவோ அல்லது உடன்பாடு இல்லாமல் திடீரென்றோ ஒருவரை முன்முழிந்தாகிவிட்டது. -- Sajith

சகோதரர் sajith , ஊரில் உள்ள அத்தனை ஜமாத்துகள் மற்றும் முன்னணி நல மன்றங்கள் , தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் , இவர்கள் அத்தனை பேரும் ஒரே இடத்தில் கூடி , ஓட்டெடுப்பின் மூலம் , முழு மனதுடன் ஒருவரை தேர்ந்தேடுத்தாகிவிட்டது. இவையெல்லாம் ஒற்றுமையும் , உடன்பாடும் இல்லாமலா நடந்திருக்கிறது ?

உங்களின் இந்த வார்த்தைகள் , அங்கே கலந்து கொண்டவர்களை கேலி பண்ணுவதுபோல் இருக்கிறது .. ஊர் ஒற்றுமையை குலைக்க நினைக்கும் உங்களைப் போன்றவர்களை இந்த இணையதளத்தின் மூலம் மக்கள் தெரிந்து கொள்வார்கள்.

" காயல் மண்ணின் மைந்தன் "
Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:காயல்பட்டின நகர்மன்றம் கு...
posted by ABU AHMED SAMU (RIYADH - S.ARABIA) [28 September 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9045

நமது ஊரில், ஒரு பக்கம் நம் நகரமன்ற தலைவியை நம் காயல் மக்களளுக்கு அடையலாம் காட்ட எல்லோரும் கூடி அடையாளம் காட்டிய காட்சிகள், மறுபக்கம் நமது காயல் நகர்மன்றம் குறித்த வழக்கு தொடர்ந்த காட்சிகள். எதையும் புரியாமல் விளித்து தவிக்கும் அப்பாவி மக்கள் பலர். எல்லாம் புரியாத புதிராகவே உள்ளது ?

புரிந்தவர்கள் மட்டும் தான் இதை புரிந்து வியாக்கியானம் பேசுகிறார்கள். எல்லாம் புரிந்தவன் வல்ல நாயன் ஒருவனே. அல்ஹம்து லில்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:காயல்பட்டின நகர்மன்றம் கு...
posted by Meera Sahib (kayalpatnam) [28 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9051

வெற்றிபெற வாழ்த்துக்கள்

நம் ஊரில் இன்னமும் சமூக சிந்தனையோடும் பொது நலன் நாடியும் ஜலாலி போன்ற சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதனை நினைக்கும்போது மிக சந்தோசமாக இருக்கிறது . வளர்க அவர் பணி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:காயல்பட்டின நகர்மன்றம் கு...
posted by Samu.A.B (Dubai) [28 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9055

Dear Administrator,

With due respect i want to bring to your notice, One Guy Pirabu Mubarak from HK, entered inside the forum and feel free name a brother and insult him as, “His comments are always rubbish”, how did you accept and publish such a comment? Will you accept if someone calls this guy’s comment as BULLSHIT? Do you think these strong words will ensure much required sanity in this forum….i wonder? Please exercise balance in your editing.

Everyone has the right to say what he thinks in his mind. Aykiya peravai is neither above criticism nor guided by divine inspirations. Instead of clamping down the voice of dissidence, it would be better their concerns were addressed in the first place.

A much inspiring quote from Famous Urdu poet Faiz Ahmed Faiz, as quoted by David Barsamian in an interview about free speech to Rajesh Joshi in OUTLOOK,

Speak, for your lips are free;
Speak, your tongue is still your own..
Speak, for truth is living yet……


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:காயல்பட்டின நகர்மன்றம் கு...
posted by M Sajith (DUBAI) [28 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9057

எல்லோரும் ஒருமணதாக தேர்வு செய்தால் அது 'ஒற்றுமை'யாக தெர்ந்தெடுப்பது.. வாக்களிக்கும் அவசியம் ஏற்பட்டால் 'உடன்பாடு’ இல்லாமல் பெரும்பான்மை தேர்ந்தெடுப்பது. - இது ஜனநாயகத்தின் அடிப்படை (and Dictionary Meaning too..).

நடப்பில் உள்ள தேசிய, மாநில ஆட்சிகள் ஒற்றுமையாக வந்ததா? பெரும்பான்மை தேர்ந்தெடுத்ததால் வந்ததா? - சகோ ஜெய்னுலாபிதீன் அவர்களே, நீங்களே உங்களை கேட்டுப்பாருங்கள் - யார் எண்ணத்தை மாற்றவேண்டும் என்பது தெளிவாகும்.

And to Bro.Mubarak,

Thanks for rubbishing out all my comments. And for sure you need to do that… in view of the so called Traditional Heritage of submission in the name of the so called ‘Unity’ gets disturbed by people like us for asking basic questions on transparency and legitimacy of a fairly new organization created for a specific ‘reason’ (hope you know that) portraying a picture as if every other age old Jamath’s are to work only under them.

FYI: Few qualities of such organization are missing here and hence the ‘zeal’ and the Mis-trust. (need more info. shoot a mail and I have tons of details to share why I feel so..)

A framework set of Mission Statement.

A democratically elected management team with tenure

Transparency in its activity

Correspondent/s to explain and respond to public query and grievances.

Do you see anywhere this fits the bill? If these don’t matter to most, I proudly differ.

And thanks again for not being dormant like most other kayalites and coming forward to comment – great keep doing it..

என் பதிவுகளில் சகோதரியின் தெரிவை நான் ஒருபோதும் நிராகரிக்கவில்லை - இது உடன்பாடு இல்லை, ஜனநாயக கோட்படின் மேல் உள்ள மதிப்பு, பெரும்பன்மையின் முடிவை ஏற்றுக்கொள்ளும் பக்குவம். இதில் முறைகேடு இல்லை என உறுதி செய்யத்துடிப்பதில் வெட்கம் வேண்டியதில்லை.

உண்மை கசக்கவில்லை என்றால்தான் ஆச்சர்யம், அதன் தன்மை அதுதான்.!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:காயல்பட்டின நகர்மன்றம் கு...
posted by Mohamed Salihu (New Delhi) [29 September 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 9083

கிழக்கு பகுதியிலுள்ள சில ஜமாஅதினர்கள் மற்றும் மேற்கு பகுதியிளுல் சில ஜமாஅதினர்களால் தேர்வு செய்து பேரவைக்கு ஒட்டுரிமையுடன் அனுப்பப்பட்ட பல பிரதிநிதிகளுக்கு தெரியாத பல விசயங்கள் தேர்வின் பொது volunteers ஆக வேலை செய்த பலருக்கு உள்தேர்தல் நடைபெற பல மணி நேரத்திற்கு முன்பே தெரியும் என்ற செய்தியை நம்பத்தகுந்த எனது நீண்ட நாள் நண்பர் மூலமாக அறிந்தபோது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

உதாரணத்திற்கு: யார் யாரெல்லாம் பேரவையால் தேர்தலுக்கு தகுதியானவர்கள் என்று முடிவு செய்யப்பட்டவர்கள் போன்ற விபரங்கள்.

மேலும் ஒரு பொதுநல சங்கத்திலிருந்து தேர்தலுக்கு பல மணி நேரத்திற்கு முன்பாக பல வாக்காளர்களுக்கு குறிப்பிட்ட ஒரு நபருக்கு ஓட்டு போடும்படி அன்பு கட்டளை தொலைபேசியின் மூலம் போடப்பட்டு உறுதிமொழியும் வாங்கப்பட்டிருப்பதாகவும் அறியும்பொழுது வேதனை அதிகரித்தது.

இதில் எந்த அளவுக்கு உண்மை/பொய் உள்ளது என்று எனக்குத் தெரியாது. அனால் எனக்கு அறிவித்த நண்பர் மிகவும் நம்பத்தகுந்தவர். ஆனால் அவருக்கு கிடைத்த செய்தியை என்னால் verify பண்ணமுடியவில்லை.

ஒரு வேலை சகோ., சாஜித் (துபாய்) அவர்களுக்கும் இந்த செய்தி கிடைத்திருக்கலாம் . அதன் வெளிபாடு அவருடை பதிவில் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். (இது என்னுடைய யூகந்தான்)

அப்படி நடந்திருந்தால் அது வண்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். அப்படி நடக்கவில்லை என்றால், இந்த பொய்யான தகவலை பரப்பியவர(கள்) நிச்சயமாக அல்லாஹ்விற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:காயல்பட்டின நகர்மன்றம் கு...
posted by சாளை நவாஸ் (singapore) [29 September 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 9092

முஹம்மத் ஸாலிஹ் இந்த செய்தியை நானும் ஊர் நண்பர் மூலம் அறிந்தேன். ஒரு பேரவையின் கண்மூடி தனமான செய்கையை ஊர் ஒற்றுமை என்று நம்பிக்கொண்டிருக்கும் பலரி பார்த்து மனம் வெதும்புவது தவிர வேறொன்றும் இல்லை. இதையெல்லாம் பண்ணி என்ன சாதிக்க போகின்றார்கள் என்று தெரிய வில்லை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:காயல்பட்டின நகர்மன்றம் கு...
posted by P N IBRAHIM NASER (KOTTAYAM) [29 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9129

தம்பி சாஜித் சொல்வதில் உண்மை இருக்க நிறைய வாய்ப்பு உண்டு. இதே இணையதளத்தின் வேறு வேறு பக்கங்களில் இந்த உண்மையை நான் போட்டு உடைதுள்ளேன்.

ஏனெனில் சற்றும் அறிமுக இல்லாத ஒரு பெண்மணிக்கு எடுத்த எடுப்பில் நாற்பது வாக்குகள் விழ ஒருபோதும் சாத்தியம் இல்லை. இது முன்கூட்டியே சொல்லிவைத்த ஒரு ஏற்ப்பாடு.

ஒரு அறியாப்பென்மணியை தனது ஆதிக்க வலயத்தினுள் வைத்துக்கொண்டு எதிர் காலத்தில் ஆட்டம் போட நினைக்கிறது இந்த :பெரிய மனிதர்களின் பேரவை. "இதற்கு "வக்காலத்து" நமது வாசகர்களில் பலரும் கனஉலகில் வாழ்பவர்கள். வெளிநாடுகளில் இருந்து கொண்டு "இன்டெர் நெட் "மூலம் மட்டுமே கற்பனை உலகில் சஞ்சரிப்பவர்கள். எந்த ஒன்றையும் மனதார வாழ்த்தி விட்டால் மட்டுமே போதும் நல்லது நடந்து விடும் என்ற நல்ல உள்ளம் படைத்தவர்கள். எனவே இணய வாசகர்களாகிய நம் சகோதரர்கள் நிறைய அறிந்து கொண்டு எழுதினால் அது நன்மை பயக்கும் எனபது எனது தாழ்மையான வேண்டுகோள்.

Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:காயல்பட்டின நகர்மன்றம் கு...
posted by K S MUHAMED SHUAIB (KAYALPATNAM) [30 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9184

சகோதரர்கள் இப்ராஹீம் நாசர் சாஜித் இருவர்களின் பதிவையும் தொடர்ந்து வாசித்து வருகிறேன். எனக்கே கூட இது போன்ற ஒரு சந்தேகம் உண்டு. என்றாலும் ஊரின் அதி முக்கிய மனிதர்கள் நிறைந்திருக்கும் ஒரு சபையில் இது போன்று நடக்க வாய்ப்பு இல்லை என்று என்னை நானே சமாதானப்படுதிக்கொள்வேன்.

ஆதாரபூர்வமற்ற செய்திகள் எதையும் நம்பக்கூடாது என்ற அடிப்படையில் இதை நான் நம்பவில்லை, என்றாலும் "சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற் பட்டவராக இருக்கவேண்டும்" என்று சொல்ல்வதைப்போல இந்த சந்தேகத்தை போக்குவது ஐக்கிய பேரவையின் கடமை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved