எதிர்வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதியன்றும், 19 ஆம் தேதியன்றும் தமிழகம் முழுவதும் உள்ளாட்சிமன்றங்களுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இத்தேர்தலில் - காயல்பட்டின நகரமன்றத்தின் தலைமை பொறுப்புக்கு - பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சியாக காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை - தேர்வுக்குழு ஒன்றினை அமைத்திருந்தது. அக்குழு - நேற்றிரவு (செப்டம்பர் 26) ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் வளாகத்தில் கூடியது.
சுமார் 7:30 மணி அளவில் துவங்கிய கூட்டத்திற்கு பேரவை தலைவர் ஹாஜி எம்.எம். உவைஸ் தலைமை தாங்கினார். துவக்கமாக ஹாஜி எம்.எம்.
நூஹு கிராஅத் ஓத, தொடர்ந்து பொது செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான் வரவேற்புரை நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து - தேர்வுமுறை குறித்து - காயல் எஸ்.ஈ. அமானுல்லாஹ் அறிமுகவுரையாற்றினார்.
26 பள்ளிகளுக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. 23 பள்ளிகள் தலா இரு பிரதிநிதிகளை அனுப்பியிருந்தனர். 18 பொது நல அமைப்புகளுக்கு அழைப்பு
விடப்பட்டிருந்தது. 15 பொது நல அமைப்புகள் தலா ஒரு பிரதிநிதி அனுப்பியிருந்தனர். அவர்கள் மட்டும் வாக்கெடுப்பில் கலந்துக்கொண்டனர்.
ஐக்கியப்பேரவை தேர்வு செய்திருந்த 25 நகர பிரமுகர்கள் - பார்வையாளர்களாக கலந்துக்கொண்டனர். அவர்கள் போக 15 பேர்
ஒருங்கிணைப்பாளர்களாக கலந்துக்கொண்டனர்.
நகர்மன்ற தலைமை பொறுப்புக்கு போட்டியிட 7 பெண்கள் விண்ணப்பம் கொடுத்திருந்தனர். அதில் 3 பேர் - பேரவையின் தேர்வுக்குழு முடிவினை
ஏற்று, தாங்கள் தேர்வுசெய்யப்படாத பட்சத்தில், தேர்தலில் போட்டியிடமாட்டோம் என்ற வாக்குறுதியினை (முச்சரிக்கை) வழங்காததால், அவர்கள்
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. மீதம் இருந்த 4 விண்ணப்பதாரர்களின் விபரங்கள் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.
ரகசிய வாக்கெடுப்பு தொடர்ந்தது. வாக்கெடுப்பின் போது - நான்கு விண்ணப்பதாரர்கள் சார்பாக - பிரதிநிதிகள் கண்காணிப்பாளர்களாக இருக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. வாக்கெடுப்பின் முடிவில் வாக்குகள் எண்ணப்பட்டன. முடிவுகள் கீழ்க்காணுமாறு அமைந்தது:-
எல்.எஸ்.எம். மைமுனத்துல் மிஸ்ரிய்யா (ஆறாம்பள்ளி தெரு) - 40 வாக்குகள்
ஏ. வஹீதா (முன்னாள் நகர்மன்ற தலைவர்; அப்பாபள்ளி தெரு) - 16 வாக்குகள்
எம்.ஹச். செய்யது (முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்; காட்டு தைக்கா தெரு) - 3 வாக்குகள்
எம்.ஹச் ரோஸியா பானு (காட்டு தைக்கா தெரு) - 2 வாக்குகள்
40 வாக்குகள் பெற்ற மைமுனத்துல் மிஸ்ரிய்யா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். இவர் என்.டி.சலாஹூத்தீன் என்பவரின் மனைவி ஆவார்.
மௌலவி பி.எம்.ஆர் இஸ்மாயீல் ஆலிமின் துவாவுடன் கூட்டம் நிறைவுற்றது.
நிகழ்ச்சி முழுவதும் - வீடியோ பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
1. Re:ஐக்கியப்பேரவை தேர்வுக்குழ... posted byAbdul Majeed (Mumbai)[27 September 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 8952
18 பொது நல அமைப்புகளின் பெயரையும் , அந்த அமைப்புகளுக்கு மட்டும் எந்த அடிபடையில் அங்கிஹர்ரம் கொடுக்க பட்டது என்பதையும் தெரிவிக்கலாமே. நமது ஊரில் அமைப்புகள் எல்லாம் ஒரு பகுதியில் அதிகம் ஆகவும் மற்ற பகுதயில் குறைவு. மேலும் புது புது அமைப்புகள் உருவாகும் பொழுது அங்கிஹர்ரம் பெற என்ன தகுதி? விளையாட்டு அல்லது பொழுது போக்கு சார்பாக இயங்கும் சங்கம்களையும் பொது நல சங்கம்களையும் எவ்வாறு பிரிதரிந்தீர்கள் ? என்பவற்றையும் விளக்கினால் நன்றாக இருக்கும்.
2. Re:ஐக்கியப்பேரவை தேர்வுக்குழ... posted byM Sajith (DUBAI)[27 September 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8955
I'm posting the same comment I made in another news item - questions are still open..!!
"விண்ணப்பித்தது யார் யார்? ஒட்டேடுப்புக்கு தகுதியானோர் யார்? இதெல்லாம் தெரியபடுதுவார்களா? இதுவும் சிதம்பர ரகசியம்தான? "
விடியோ பதிவு செய்ததை குறிப்பிடுவதை விட இது போன்ற தகவல்கள் முக்கியமானது இல்லையா?
எதோ அமானுல்லா மாமாவை மக்கள் நம்பாதது போல இருக்கிறது அறிக்கை. நாங்கள் தெரிய விரும்புவது "நடந்ததைத்தான்" - transparent ஆக நடந்தால் விடியோவும் வேண்டாம் சாட்சியும் வேண்டாம்.
தேர்வு செய்யப்பட்ட அன்பின் சகோதரிக்கு எனது நல் வாழ்த்துக்கள்.
கேட்பதிற்கு எல்லாம் நல்லா தான் இருக்கிறது, ஐக்கிய பேரவை மீது அணைத்து ஜமாத்துக்களும் நம்பிக்கை வைத்து ஒத்துழைப்பு வழங்கியது போல் ஐக்கிய பேரவையும் தேர்வு செய்யப்பட்ட சகோதரியை தவிர்த்து பின் வழியாக வேறு ஒருவரை எக்காரணம் கொண்டும் தேர்தலுக்கு நிறுத்த கூடாது.
சாக்கு போக்கு சொல்லி தேர்வு செய்யப்பட்ட சகோதரியை எக்காரணம் கொண்டும் அவர்களின் வேட்பு மனுவை வாபஸ் வாங்க வற்புறுத்த கூடாது.
இது என்ன புதுசா இருக்கு? தம்பிஜி, என்ற மச்சான்ஜி!!! இப்படியும் ஒரு கருத்து இருக்கா? இது புரளியாக் கூட இருக்கும்.!!! அப்படி இருக்க வேண்டும் என்று துஆச் செய்வோம்.!
EGO என்ற நினைப்பு யாருக்கும் முதலில் வரக் கூடாது. அது வந்து விட்டாலே பசாதும் வந்து விடும். யூகங்களுக்கு முதலில் அனுமதிக்க கூடாது. அது யாராக இருந்தாலும் சரி. தேர்ந்தெடுத்த சகோதரிக்கு நன்றி சொல்லும் நாம் யாரோ ஒருவர், யூகித்த கருத்து அவர் நினைத்தவர் வராமல் இருந்ததால் ஏன் இருக்கக் கூடாது?
ஆனாலும் தம்பியின், முற்போக்கு சிந்தனைக்கு பாராட்டுக்கள். தம்பிஜி.!!! போட்டியின் முடிவுதான் இறுதியானது! மாற்றத்தை இங்கு கொண்டு வர ஐக்கிய பேரவய்யே நினைத்தாலும்,முடியாது! மற்றவை நேரில் பேசிக்கொள்வோம். நாளை.!!!
5. ஒற்றுமை posted byzubair (riyadh)[28 September 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8968
அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு காயல் வாசிகளே...........
நம் ஐக்கியப்பேரவையை எதோ ஒரு பணம்,காசு கொள்ளை அடிக்கும் முஸ்லிம் இயக்கமாக பார்கிண்டனர் சிலர். எங்களிடையே... ஒரு சிறிய ஐக்கியத்தைகூட உண்டாக்க உதவும் கரம்களுக்கு இப்படி ஒரு சோதனையா....? யா.... அல்லாஹ்....!
ஒரு சில நபர்கள் எதுக்கெடுத்தாலும் கமாண்டு அடித்து குழப்பம் உண்டாக்கவே.... யோசித்து கொண்டு தானும் நிம்மதி இல்லாமல், பிற நல்லவர்களின் மனதிலும் சைத்தானின் என்னத்தை ஊண்ட நடக்கிறார்கள். ஊர் ஒற்றுமையை நாடி நம்மில் சிலர் வாய் மூடி இருக்கும் இந்த நேரத்தில் காயல் பதியின் ரிபெல்சாக செயல் பட்டு ஒற்றுமைக்கு குந்தம் விளைவிப்பவர்களை வாசகர்கள் இனம் கண்டு கொண்டு எதிப்பை தெரிவிக்கவும். வஸ்ஸலாம்.
6. Re:ஐக்கியப்பேரவை தேர்வுக்குழ... posted byமுத்துவாப்பா (அல்-கோபர்)[28 September 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8979
ஐக்கியப்பேரவையின் விளக்கத்திற்கு மிக்க நன்றி. ஆனால் நாங்கள் உங்களிடமிருந்து இன்னும் எதிர் பார்க்கின்றோம் . அந்த நிராகரிக்கப்பட்ட மூன்று வேட்பாளர்கள் யார் யார் ..? அது போல சகோதரி எல்.எஸ்.எம். மைமுனத்துல் மிஸ்ரிய்யா அவர்களை தவிர மற்ற மூன்று வேட்பாளரும் தேர்தலிலிருந்து விலகி கொள்வார்களா...? குறிப்பாக அஇஅதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரும் போட்டியிலிருந்து விலகுவாரா..?. அது போன்று பதிவு செய்யப்பட்ட வீடியோ வெளியிடப் படுமா ...? கண்டிப்பாக பதிவு செய்யப்பட்ட வீடியோ வெளியிடப் பட வேண்டும் ஏன் என்றால் இது ஐக்கியப்பேரவையின் தலைவருக்கான தேர்தல் அல்ல ரகசியமாய் பாதுகாக்க .. இது நகர்மன்ற தலைவருக்கான தேர்தல் ஆகையால் நடந்தது என்ன என்பதை அறிந்து கொள்ளும் உரிமை கூட்டத்தில் கலந்து கொண்ட 101 பேருக்கு இருப்பது போன்று தான் எங்களுக்கும் உள்ளது என்று நம்புகிறேன் .
7. Re:ஐக்கியப்பேரவை தேர்வுக்குழ... posted byZainul Abdeen (Dubai )[28 September 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8986
அஸ்ஸலாமுஅலைக்கும்
ஐக்கியப்பேரவை தேர்வுக்குழு கூட்டம் சிறப்பாக முடிந்ததை இந்த செய்தியின் வாயலக அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி. சகோதரி மைமூன் அவர்களை 61 நபர்களில் 40 பேர் தேர்வுசெய்து இருகிறர்கள். அந்த 40 பேருக்கும் இன்னும் சொல்லப்போனால் வாக்களித்த 61 நபர்களுக்கும் ஐக்கிய பேரவைக்கும் எந்த சம்மந்தமும் இருக்கவில்லை என்பது தெளிவாக இருகின்றது.
இன்னமும் ஐக்கிய பேரவையை குறை கூறும் கண்ணோட்டத்திலேயே பார்த்துகொண்டு இருகிறார்கள் சிலர் .
இதற்கு ஒரு தமாசாக ஒரு புது மொழியும் உண்டு
" நீட்டம் பத்தலே நீளம் பத்தலே சுறாமீன் கொழம்புக்கு சோறு பத்தலே " என்று சொல்லுவாங்க.
எல்லா விசயத்திலும் குறையை மட்டுமே பூத கண்ணாடி போட்டு பார்ப்பார்கள்.
ஆக இப்படி மக்கள் முன்னலையில் நடந்த தேர்வு குழு கூடத்தையும் விமர்சனம் செய்யும் சிலர்கள் இருந்துகிட்டுதான் இருப்பார்கள்.
எது எப்படியோ பேரவை மூலம் சகோதரி ஒருவர் தேர்ந்தேடுதாயிற்று . எனவே அவர்களின் வெற்றிக்கு நம் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்க அல்லாஹ் உதவி புரிவானாக ....
8. Re:ஐக்கியப்பேரவை தேர்வுக்குழ... posted byDR D MOHAMED KIZHAR (chennai)[28 September 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 8997
சகோதரியை தலைவர் வேட்பாளர் ஆகா தேர்ந்தெடுத்த ஐக்கிய பேரவைக்கும் நன்றியும், சகோதரிக்கும் வாழ்த்துக்கள் ..நடந்தவை நல்லதாகவே யுக்கட்டும்.. நடக்க போவது இன்னும் நல்லதாக இருக்கணும். ..KAYAL THE FIRST மற்றும் KAYALPATNAM.COM போன்ட்ராஸ் நல அமைப்புக்கு வாக்குரிமை வழங்கப்பட்டதா என்று இந்த மெடிக்க மூலம் அறிய விரும்புகிறேன்... வாக்குரிமை அளிக்கபடவில்லையன்றால், பெரிய அநீதி இழைக்க பட்டுள்ளது.. இந்த அமைப்பு பல வருன்டகள நம் ஊர் நலனுக்கும், நம் ஊர் செய்திகளை உடனுக்குடன், உலகில் உள்ள எல்லா கயலர்களுக்கும் தெரிவிக்கிறது.. நகர்மன்ற தலைவர் பதவி பற்றி முதலில் அக்கறையு எடுத்து, அதற்கென கருது கேட்பு நடத்தியதும் இந்த அமைப்பே..
இனி வரும் காலம் ,,,,, நல மன்ற அமைப்பு வக்குரிமி பெற என்ன criteria என்பதை வரை அருக்கனும்.. இனி பல லெட்டர் PAD அமைப்புகள் தோன்றி, வாக்குரிமை கேட்டு, பிறகு இதே ஒரு சூதாட்டம் ஆக்க வைப்பு உள்ளது...
ஐக்கிய பேரவைக்கு இதற்க்கு பிறகு, புதிய ரத்தம் பாய்ச்சப்பட்டு, இளைஞர்களுக்கு அதிகம் பொறுப்பு தரப்பட வேண்டும..
தம்பி SAALIH PLEASE DONOT EDIT THIS COMMENT... LET ALL KNOW THE TRUE FACT
9. Re:ஐக்கியப்பேரவை தேர்வுக்குழ... posted bymackie noohuthambi (kayalpatnam)[28 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 9018
26 .9 .2011 இல் ஐக்கிய பேரவை கூட்டம் நடைபெற்ற செய்தியும் அங்கு 40 வாக்குகள் பெற்று எனது இனிய மைத்துனன் மனைவி நமது நகர் மன்ற தலைவர் வேட்பாளராக ஐக்கிய பேரவையால் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள செய்தியை நண்பர் அமானுல்லாஹ் அவர்கள் இனைய தளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.
சில நியாயமான சந்தேகங்கள் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அவற்றை விளக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் ஐக்கிய பேரவை தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. அதனை உதாசீனம் செய்யாமல் தக்க விளக்கம் கொடுத்தால் எல்லோரும் மனசாந்தியுடன் ஐக்கிய பேரவை வேட்பாளரை ஆதரிக்க வாய்ப்பு ஏற்படலாம்.
சந்தேகக்கண் கொண்டு பார்க்காதீர்கள். 4 பேர்கள் போட்டிக்கு களத்தில் இருந்தார்கள். அவர்களின் PROFILES அங்கு வந்திருந்த ஒவ்வொரு ஜமாத்தில் 2 நபர், பொது நல அமைப்பில் ஒருவர் ஆகியோரிடம் காண்பிக்கப்பட்டது. இந்த 4 PROFILES பார்த்தவர்கள் அவற்றைக்கொண்டு வந்து அந்தந்த ஜமாதைக் கூட்டி அவர்களிடம் ஒப்புதல் பெற்று வந்து பின்பு ஓட்டுப்போட அவர்களுக்கு ஐக்கிய பேரவை அவகாசம் அளிக்கவில்லை.
ஜமாத்தில் பள்ளிவாசலில் ஒரு லைட் மின்விசிறி போடுவதென்றால் ஜமாத்தை கூட்ட தேவை இல்லை. இது மிக முக்கியமான ஊர் பிரச்னை. இந்த ஊரின் நாற்பது ஐம்பது ௦ ஆயிரம் மக்களின் தலைவராக அடுத்த ஐந்து வருடங்களுக்கு யார் இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் தேர்தல். இதை மிக சாதாரணமாக நினைத்து ஜமாத்தார்கள் கருத்தை கேட்காமல் ஜமாத்தில் முன் ஒப்புதலும் பெறாமல் அவர்கள் இஷ்டப்படி 3 பேர் ஒரு ஜமாத்தின் தலைவிதியை நிர்ணயிக்க முடியுமா.
ஐக்கிய பேரவையில் இப்படி ஒரு வாக்கெடுப்பு நடந்து ஐக்கிய பேரவையை கூட்டாமல் அவர்களின் ஒப்புதல் பெறாமல் ஒரு உறுப்பினர் தன இஷ்டத்துக்கு ஒட்டுப்போட்டு இது ஐக்கிய பேரவையின் கருத்துதான் என்று சொல்ல முடியுமா,
தவறு எங்கே நடந்தது, பார்வையாளர்களாக இருந்த 25 ஊர் பிரமுகர்களாவது இந்த தவறை சுட்டிக்காட்டி இருக்க வேண்டாமா என்ற வேதனையான கேள்விக்கு விடை கிடைக்குமா?
10. சாதுரியப்பூனை மீன் இருக்க, புளியங்காயத் திங்கிறதாம்... posted byமுத்துவாப்பா (அல்-கோபர்)[28 September 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9021
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோ. ஆப்தீன் அவர்களே "நீட்டம் பத்தலே நீளம் பத்தலே சுறாமீன் கொழம்புக்கு சோறு பத்தலே" பழமொழி எல்லாம் நல்ல தான் இருக்கு ... இங்கு யாரும் ஐக்கிய பேரவையை குறை கூறவில்லை விளக்கம்தான் கேட்டுள்ளோம்.
அதுதான் பக்காவா வீடியோ ஆதாரம் எல்லாம் இருக்கே அதை வெளியிடுறத விட்டுட்டு எதுக்கு சாதுரியப் பூனை மீன் இருக்க, புளியங்காயத் திங்கிறதாம் என்றுதான் கேட்கின்றோம்.
11. Re:ஐக்கியப்பேரவை தேர்வுக்குழ... posted byP N IBRAHIM NASER (KOTTAYAM)[28 September 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 9032
ஐக்கிய பேரவையின் தேர்வு உள்நோக்கமுடையது. ஒரு குறிப்பிட்ட பெண்ணை மனு தாக்கல் செய்ய வைத்து ஜனநாயக போர்வையில் அந்த பெண்ணுக்கு வாய்ப்பளித்து இருக்கிறார்கள். யாரேன்று அறியாத ஒரு பெண்மணி நாற்பதற்கும் அதிகமாக வாக்குகள் பெற்றது எப்படி?
ஒரு முன்னால் பஞ்சாயத்து தலைவி பதினாறு வாக்குகள் பெற்றது எப்படி? இந்த அறியா பெண்ணை தங்களது பகடைக்காயாக வைத்து எதிர்காலத்தில் நகராட்சியை தங்களது "விளையாட்டு களமாக" உபயோகப்படுத்த இப்போதே இந்த பேரவை திட்டமிடுகிறது. இதை அறியாத இந்த பக்கத்தில் எழுதும் அப்பாவி வாசகர்கள் ஐக்கிய பேரவையை வாழ்த்தி போற்றி எழுதுவதை பார்க்கும் போது இவர்களின் அறியாமையை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
ஜனநாயக முறையில் நடைபெறப்போகும் ஒரு தேர்தலில் யார் வேண்டுமானால்லும் போட்டி போடலாம். வேட்பாளரை நாங்கள்தான் தேர்ந்தெடுப்போம் என்று சொல்ல இந்த பேரவைக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இதவே முதலில் கட்டபஞ்சயத்து அல்லவா?
ஒரு மக்கள் நல பேரவை தேர்தலில் வழி காட்டலாமே தவிர எங்கள் வேட்ப்பாளருக்குத்தான் ஒட்டு போடவேண்டும் என்று சொல்ல்வது அதிகார துஸ்பிரயோகம் அல்லவா? எனவே இந்த அதிகார தரகர்களை அடையாளம் காண்பது நமது கடமை. நண்பர்களே... இந்த அதிகார மோகிகளை தூக்கி ஏறிய தயாராகுங்கள். வெற்றி உங்கள் பக்கம். ...!
Moderator: சர்ச்சைக்குரிய வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.
12. Re:ஐக்கியப்பேரவை தேர்வுக்குழ... posted byRayyan's Dad (USA)[29 September 2011] IP: 68.*.*.* United States | Comment Reference Number: 9085
ஐக்கிய பேரவையின் பொது வேட்பாளர் வெற்றி பெற வாழ்த்துக்கள்!! தேர்தல் முடிந்ததுக்கு அப்புறம் தான் தெரியும் நம்ம பேரவையின் முடிவுக்கு நம்ம மக்கள் எந்த அளவுக்கு கட்டு படுகின்றார்கள் என்று.
அது என்னமோ தெரியலே... ஐக்கிய பேரவை நியூஸ் என்றாலே எதாவது ஒரு சர்ச்சை அல்லது எதாவது ஒரு குழப்பம். வழக்கம்போல் விமர்சனங்களுக்கும் பஞ்சமே இல்லை. ஐக்கிய பேரவை என்னைக்குதான் தெளிவா மற்றும் எல்லோரும் போற்றும் வண்ணம் பெயர் எடுக்கபோகுதோ.
ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது...ஐக்கிய பேரவையை விமர்சனம் பண்ணுகிறவர்கள் ஐக்கிய பேரவையை வெறுப்பதில்லை. எல்லோரும் ஐக்கிய பேரவை எப்போதும் நம் ஊரில் நல்லபடி செயல்பட வேண்டும் என்றே எண்ணுகிறார்கள்.எல்லாருடைய அதிருப்தி...அதனுடைய செயல்பாடும் மற்றும் தலைமையும் தான் என்று நினைக்க தோனுகிறது.
ஒருவேளை முறைப்படி ஐக்கிய பேரவை தேர்தல் நடந்து....தலைமை (reorganization ) மாற்றம் ஏற்பட்டால் நல்லதொரு ஐக்கியத்தை உருவாக்குமோ என்னமோ. விடிகின்ற விடியல் வெகுதூரத்தில் இல்லை!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross