சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் காயலர் குடும்ப சங்கமம் நிகழ்ச்சி, வரும் அக்டோபர் மாதம் 01, 02 (சனி, ஞாயிறு) தேதிகளில், சிங்கப்பூரிலுள்ள Fairy Point Chalet 5இல் நடைபெறவுள்ளது. இதற்கான நிகழ்முறை விளக்கம் மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அம்மன்றத்தின் செயலாளர் மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
பாசத்திற்குரிய நமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் உறுப்பினர்களுக்கும், இதர காயலர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நம் மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் காயலர் குடும்ப சங்கமம் நிகழ்ச்சி, வரும் அக்டோபர் மாதம் 01, 02 (சனி, ஞாயிறு) தேதிகளில், சிங்கப்பூர் Aloha Changiயிலுள்ள Fairy Point Chalet 5இல் இன்ஷாஅல்லாஹ் நடைபெறவுள்ளது.
வாகன ஏற்பாடுகள்:
பீச் ரோடு ப்ளாக் 01இல், 01.10.2011 அன்று 15.00 மணிக்கு, சகோ. பி.எஸ்.எம்.அப்துல் காதிர் (கைபேசி எண் - 97110934) அப்பகுதி மக்களை அழைத்துச் செல்வார்.
Bedok பகுதி உறுப்பினர்களுக்காக, BLK 98, Bedok North Avenue #4 என்ற பகுதியிலிருந்து 16.00 மணிக்கு, சகோ. முஹம்மத் உமர் ரப்பானீ (கைபேசி எண் - 82966366) பொறுப்பேற்று அழைத்துச் செல்வார்.
சங்கமம்:
16.30 மணிக்கு, அனைவரும் தம் குடும்பத்தினர் மற்றும் விருந்தினருடன், கூட்ட நிகழ்விடமான Fairy Point Chalets - 5 பகுதியை வந்தடைவர்.
17.00 மணிக்கு அஸ்ர் தொழுகை கூட்டாக (ஜமாஅத்துடன்) நிறைவேற்றப்படும்.
பெயர் பதிவு:
17.30 மணிக்கு, சகோ. ஜவஹர் இஸ்மாஈல், உறுப்பினர் மற்றும் விருந்தினர்களைப் பதிவு செய்வார். பின்னர், அனைவருக்கும் தேனீர் - சிற்றுண்டி பரிமாறப்படும்.
19.10 மணிக்கு மஃரிப் தொழுகை கூட்டாக (ஜமாஅத்துடன்) நிறைவேற்றப்படும்.
பொதுக்குழுக் கூட்டம்:
19.30 மணிக்கு பொதுக்குழுக் கூட்டம் துவங்கும்.
21.30 மணிக்கு கூட்டம் நிறைவுறும்.
21.30 மணிக்கு இஷா தொழுகை கூட்டாக (ஜமாஅத்துடன்) நிறைவேற்றப்படும்.
21.45 மணிக்கு இரவு உணவு பரிமாறப்படும்.
22.00 மணிக்கு பெண்கள் நிகழ்ச்சி துவங்கும். அதில், வினா-விடை எழுத்துப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறும்.
22.30 மணிக்கு ஆண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து போட்டிகளில் வென்றோருக்கு பரிசளிக்கப்படும்.
அக்டோபர் 02இல்...
02.10.2011 அன்று 08.30 மணிக்கு தேனீருடன், பசியாற உணவு பரிமாறப்படும்.
13.00 மணிக்கு மதிய உணவு பரிமாறப்படும்.
அரட்டை:
இடைப்பட்ட நேரத்தில், நகர்நலன் குறித்த சாதாரண விவாதங்கள், நண்பர்களுக்குள் அரட்டைகள், குழந்தைகளுடன் பொழுதைக் கழித்தல் என அவரவர் விருப்பப்படி நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
15.30 மணிக்கு, பேருந்தில் அனைவரும் இல்லம் திரும்பலாம்.
அன்பான அழைப்பு:
இயந்திரத்தனமான சிங்கை வாழ்வில் இன்பமயமாக இரண்டு நாட்களைக் கழிக்கும் இவ்வினிய நிகழ்வில் அன்பான மன்ற உறுப்பினர்கள் மற்றும் இதர காயலர்கள் அவசியம் தம் குடும்பத்தினருடன் கலந்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள்.
Dear Members,
Assalamu Alaikaum
Insha Allah, our association General body meeting & Family Gathering event is scheduled to held on 01-Oct-2011 (Saturday) to 02-Oct-2011 (Sunday) @ Fairy Point Chalet 5.
All members are requested to attend this event with their family members.
GENERAL BODY MEETING ITINERARY
VENUE: FAIRY POINT CHALET 5, ALOHA CHANGI
DATE: 01-10-11 to 02-10-11
01 October 2011
Transport Pickup from Beach Road BLK#1 @ 15:00Hrs. Person –In-Charge: PSM Abdul Cader, HP: 97110934
Transport Pickup from BLK98, Bedok North Ave#4 @ 16:00Hrs, Person-In-Charge: Mohamed Omar Rabbani, HP # 82966366
Arrival of Members, families, Guests to Fairy Point chalets- 5 by 16:30Hrs
Asar Prayer @ 17:00 Hrs
Member & Guest Registration @ 17:30 Hrs by Jawahar Ismail.
Serving tea with Snacks.
Magrib Prayer @ 19:10 Hrs
General Body Meeting start @ 19:30Hrs
General Body Meeting ends @ 21:30 Hrs
Isha Prayer @ 21:30 Hrs
Dinner Served @ 21:45Hrs
Ladies Program starts @ 22:00Hrs (Quiz written test & Games)
Games for Mens @ 22:30 Hrs
Prize Distribution
02 October 2011
Breakfast with Tea @ 08:30Hrs
Lunch @ 13:00 Hrs
Return to Home by bus @ 15:30 Hrs
Best Regards
Magdoom Muhamed
Mobile: +65-83369781
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். |