Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:50:46 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7302
#KOTW7302
Increase Font Size Decrease Font Size
திங்கள், செப்டம்பர் 26, 2011
உள்ளாட்சித் தேர்தல் 2011: காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் பொறுப்பிற்கு இதுவரை பத்து பேர் வேட்புமனு தாக்கல்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4235 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (26) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தமிழக தேர்தல் ஆணையர் அறிவித்தபடி, வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கியது. காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் நகர்மன்றத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொறுப்பிற்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களை, நகர்மன்ற தலைமை தேர்தல் அலுவலராக உள்ள நகர்மன்ற ஆணையரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

வேட்பு மனு தாக்கல் 22.09.2011 அன்று துவங்கியது. இம்மாதம் 29ஆம் தேதி வரை வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம்.

காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் பொறுப்பு இம்முறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டுகளைப் பொருத்த வரை, 14ஆம் வார்டு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பெண்களுக்கும், 02, 03, 04, 08, 09 ஆகிய வார்டுகள் பொதுவாக பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த வார்டுகளைத் தவிர்த்து, 01, 05, 06, 07, 10, 11, 12, 13, 15, 16, 17, 18 ஆகிய ஆண்களும், பெண்களும் போட்டியிடும் பொது வார்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

23.09.2011 அன்று ஒருவரும், 24.09.2011 அன்று இருவரும் என மொத்தம் மூன்று பேர் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேட்புமனு தாக்கல் நடைபெறவில்லை.

இந்நிலையில், இன்று மட்டும் பின்வருமாறு 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்:-

கோமான் தெருக்கள், அருணாச்சலபுரம், கடையக்குடி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 01ஆம் வார்டு நகர்மன்ற உறுப்பினர் பொறுப்பிற்கு, கடையக்குடியைச் சார்ந்த மரிய அந்தோணி என்பவரின் மகள் அமலக்கனி என்பவர் வேடபு மனு தாக்கல் செய்துள்ளார்.

சித்தன் தெரு, ஆஸாத் தெரு, அம்பல மரைக்காயர் தெரு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 06ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பொறுப்பிற்கு, சித்தன் தெருவைச் சார்ந்த ஷேக் அப்துல் காதிர் என்பவரின் மகன் காதர் சாஹிப் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதே வார்டு நகர்மன்ற உறுப்பினர் பொறுப்பிற்கு, சித்தன் தெருவைச் சார்ந்த எம்.எல்.ஷாஹுல் ஹமீத் (எஸ்.கே.) என்பவரின் மகன், நஸீமுல் இஸ்லாம் முஹம்மத் ஸாலிஹ் என்ற எஸ்.கே.ஸாலிஹ் என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.



தீவுத்தெரு, கீழநெய்னார் தெரு (எண்கள் 30-460), கற்புடையார் பள்ளி வட்டம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 07ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பொறுப்பிற்கு, கற்புடையார் பள்ளி வட்டம் சேசு மாதவடியார் என்பவரின் மகன் அந்தோணி என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

அலியார் தெரு, பரிமார் தெரு, சின்ன நெசவுத்தெரு, காயிதேமில்லத் நகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 10ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பொறுப்பிற்கு, அலியார் தெருவைச் சார்ந்த செய்யித் முஹம்மத் புகாரீ என்பவரின் மகன் பத்ருல் ஹக் வேட்பு மனு தாக்கல் செய்தார்.



மங்களவாடி, ஓடக்கரை, தைக்காபுரம், வாணியக்குடி, மேலநெசவுத்தெரு, வண்டிமலைச்சியம்மன் கோயில் தெரு, கண்டிபிச்சை தோட்டம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 12ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பொறுப்பிற்கு, ஓடக்கரை ராகவ நாடார் என்பவரின் மகன் ரெங்கநாதன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பைபாஸ் ரோடு, சீதக்காதி நகர், உச்சினிமாகாளியம்மன் கோயில் தெரு, மங்கள வினாயகர் கோயில் தெரு, சிவன் கோயில் தெரு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 15ஆவது வார்டு நகர்மனற உறுப்பினர் பொறுப்பிற்கு, சிவன்கோயில் தெருவைச் சார்ந்த கே.ஜமால் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.



01 முதல் 09ஆம் வார்டு வரையுள்ள வார்டுகளுக்கான வேட்பு மனுக்களை தேர்தல் துணை அலுவலர் காளிராஜ் பெற்றுக்கொண்டார்.

10 முதல் 18ஆம் வார்டு வரையுள்ள வார்டுகளுக்கான வேட்பு மனுக்களை தேர்தல் துணை அலுவலர் செல்வமணி பெற்றுக்கொண்டார்.

இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளோரின் எண்ணிக்கை விபரம்:-

வார்டு 01 - 01 நபர்
வார்டு 02 - 00 நபர்
வார்டு 03 - 00 நபர்
வார்டு 04 - 00 நபர்
வார்டு 05 - 01 நபர்

வார்டு 06 - 03 நபர்கள்
வார்டு 07 - 01 நபர்
வார்டு 08 - 01 நபர்
வார்டு 09 - 00 நபர்
வார்டு 10 - 01 நபர்

வார்டு 11 - 00 நபர்
வார்டு 12 - 01 நபர்
வார்டு 13 - 00 நபர்
வார்டு 14 - 00 நபர்
வார்டு 15 - 01 நபர்

வார்டு 16 - 00 நபர்
வார்டு 17 - 00 நபர்
வார்டு 18 - 00 நபர்

மொத்தத்தில் காயல்பட்டினத்தின் நகர்மன்ற உறுப்பினர்கள் பொறுப்பிற்கு இதுவரை 10 பேர் வேடபு மனு தாக்கல் செய்துள்ளனர். நகர்மன்றத் தலைவர் பொறுப்பிற்கு இதுவரை யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by M.S.MAHMOOD RAJVI (KAYALPATNAM) [26 September 2011]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 8821

அஸ்ஸலாமுஅலைக்கும்

நண்பர் எஸ் . கே.ஸாலிஹ் வெற்றி பெற வாழ்த்துக்கள்

மஹ்மூத் ரஜ்வி,காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by hasan (khobar) [26 September 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8822

கேள்வி கேட்க கூடிய நபர் சகோதரர் எஸ்.கே சாலீஹின் வேர்புமனு தாக்கல் பாராட்ட பட வேண்டியது. இன்ஷா அல்லாஹ்.இவர் வெற்றி பெற வேண்டும். முக்கியமாக அவையில் நடக்கும் அனைத்து நடப்புகளும் காயல் வெப்சைட் மூலம் நமக்கு தெரிய வரும். ஆனால் என்ன மன்றங்களுக்குதான் வருத்தம் , இவரின் அறிய சேவை நமக்கு சிறிது தடைப்படும். Already he is over loaded.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by K M SHAFEER ALI (CHENNAI) [26 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 8825

அஸ்ஸலாமு அழைக்கும்

S K S

உன் இந்த முயற்சி
வெற்றி பெற
உன் வார்ட் மக்கள்
நலம் பெற
நம் ஊர்
வளம் பெற
உன் நண்பனின்
துவா உடன் கூடிய வாழ்த்துக்கள

அஸ்ஸலாமு அழைக்கும்
K M SHAFEER ALI
CHENNAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by M.சுல்தான் (சூடான்) [27 September 2011]
IP: 41.*.*.* Sudan | Comment Reference Number: 8835

அஸ்ஸலாமு அலைக்கும்....

அன்றும்... இன்றும்.. என்றும்.. நம் உள்ளம் மறவாத S.K. மாமா என்று எல்லோராலும் அன்பாக அழைக்கபடும் காயல் ஷாஹுல் ஹமீது அவர்கள் சமுதாய சிந்தனையுள்ளவராய் இருந்தார்.... நமதூரின் மீது அதிக அக்கறையுள்ளவராய் இருந்தார்.. நமதூருக்கு பெருமை சேர்த்தவர்... நான் படிக்கும் காலங்களில் அரசியலில் அதிக ஆர்வம் கிடையாது ஆனாலும் S.K. மாமா பேசினால் கேட்டுகிட்டே இருக்கலாம்.. அனைவருடனும் அன்பாக பழக கூடியவர்..

S.K.சாலிஹ் அவர்களும் சமுதாய சிந்தனையுள்ளவர்.. நமதூரின் தனி கவனம் செலுத்துபவர்... புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா..

S.K.சாலிஹ் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

இனி கொஞ்ச நாளைக்கு காயல் site ல் சூடானில் இருந்து சுல்தான் சுவையான ஸ்வரஸ்யமான சுட சுட சூடான செய்திகளை சுவைத்து படிக்க முடியாது ஏனென்றால் S.K.சாலிஹ் அவர்கள் இனி Busy ஆயிடுவார்...

M.சுல்தான்.... சூடான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [27 September 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 8838

தம்பி SK ஸாலிஹ் போன்ற கவுன்சிள்ளர்கள் தேர்ந்து எடுக்க பட்டால், நல்ல துணை தலிவரை (சென்ற முறை அல்லாமல்) தேர்ந்து எடுப்பதோடு, நகர் மன்ற தலைவியை, நல்ல ஆலோசனை வழங்கி வழி நடத்தலாம்..இப்படி சொல்வதால், தலைவி பொறுப்புக்கு வருபவருக்கு, ஒன்றும் தெரியாது என்று அருத்தம் அல்ல. நல்ல கூட்டு தலைமையாக விளங்கும்..

வழ்த்தூகலும் துவாகளும்

டாக்டர் கிஸார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by சாளை நவாஸ் (singapore) [27 September 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 8841

அன்பு தம்பி SKS (மாமா) , இப்போ தான் முழு பெயரும் தெரியுது, நஸீமுல் இஸ்லாம் முஹம்மத் ஸாலிஹ், எவ்வளவு அழகான பெயர்.

வெற்றி பெற வாழ்த்துக்கள். தம்பி வெற்றி பெறுவதால் வார்டு எண் 6 க்கு தான் பெருமை. ஊழலற்ற நிர்வாகம் நிச்சயம்.

வாழ்த்த சால்வையோடு வருகிறேன்

- மண்ணின் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by M.E.L.NUSKI (RIYADH -KSA) [27 September 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8842

6 வது வார்டுக்கு போட்டி இடும் அன்பு தம்பி S .K .சாலிக் வெற்றி பெற வாழ்த்துகிறேன். அது போன்று 7 ஆம் வார்டில் போட்டி இட தெரிவு செய்ய பட்டிருக்கும் M.J.செயத் இப்ராஹீம் மற்றும் 8 வது வார்டில் போட்டி இட தெரிவு செய்ய பட்டிருக்கும் பெத்தா தாய் ராத்தா ஆகியோரும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

அது போன்று ஐக்கய பேரவை சார்பில் தலைவர் வேட்பாளராக தெரிவு செய்ய பட்டிருக்கும் சகோதரி மைமூனதுள் மிஸ்ரியா என்ற பட்டதாரி வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன் . அமையும் புதிய மன்றம் ஊழல் அற்ற சிறந்த மன்றமாக அமைய வாழ்த்துக்கள்.

என்றும் ஊர் நலனில்
M .E .L .நுஸ்கி முஹமது ஈஸா லெப்பை
ரியாத்
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohamed Salih (Bangalore) [27 September 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 8846

Salam..

Nice to see the news masha allah..

Advance wishes to Brother S.K . Salih & all other candidate ..

Wassalam,

Mohamed Salih & KWA - Bangalore.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by mohudoom ali sahib (al-hasa) [27 September 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8850

ALL THE BEST SK SALIH .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by mackie noohuthambi (kayalpatnam) [27 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8856

ஷமீமுல் இஸ்லாம் உங்கள் சகோதரர். ஆனால் நசீமுல் இஸ்லாம் என்ற உங்களின் பெயர் இப்போதுதான் வெளிவந்துள்ளது. மறைந்திருந்த உங்கள் பெயர் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதுபோல் உங்களுக்குள்ளே மறைந்துள்ள திறமைகளும் வெளிச்சத்துக்கு வர நீங்கள் நகரமன்ற உறுப்பினராக வர அல்லா அருள்புரிவானாக.

சொந்தக்காரர்கள் எனக்கு ரொம்பப்பேருங்க. நான் சொத்தா மதிக்கிறது உங்க அன்பைதானுங்க என்ற பாடல் வரிக்கு ஏற்ப நீங்கள் எல்லோருடனும் அன்பு பாராட்டி பழகுவதால் உங்களை தேர்ந்தேடுக்கவிருக்கும் உங்கள் வார்ட் மக்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள்.

மக்கி நூஹுதம்பி 9865263588


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. மக்கள் இவர் மூலம் நல்ல பல பயன்கள் பெற வாழ்த்துக்கள்...
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [27 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8868

அன்பு தம்பி S K சாலிஹு அவர்களை அதிகம் வர்ணிக்க வேண்டியது அவசியமில்லை அவரின் நல்ல குணம் அனைவருக்கும் தெரிந்தது தான் - அன்பு தம்பி S K சாலிஹு வெற்றி பெற்று அந்த வார்டு மக்கள் இவர் மூலம் நல்ல பல பயன்கள் பெற வாழ்த்துக்கள்...

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் - வி சி கட்சி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by OMER ANAS. (DOHA QATAR.) [27 September 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 8877

மேகாவின் உறுப்பினர் என்பதனால் இவர் கலத்தில், இறங்க மாட்டார் என்று நினைத்தேன். அதனால்தான் துளிர் ஷேகனா காக்கா போன்றோர் முன் வர வேண்டும் என்று முன்பொரு கருத்தில் பதிவு செய்தேன். எஸ்.கே தம்பிக்காக நாம் உழைப்போம். முன்பு சொன்ன மாதிரி பணம் இங்கு விளையாட முயற்சி செயாது என்று நம்புவோம்!!! வாழ்த்துக்கள்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH, K.S.A) [27 September 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8883

8 வது வார்டில் போட்டி இட தெரிவு செய்ய பட்டிருக்கும் சமூக சேவகி பெத்தா தாய், 7 ஆம் வார்டில் போட்டி இட தெரிவு செய்ய பட்டிருக்கும் சகோதரர் M.J.செயத் இப்ராஹீம் மற்றும் 6 வது வார்டில் போட்டி இட தெரிவு செய்யப்பட்டுள்ள சமூக நல ஊழியர் தம்பி S .K . ஸாலிஹ் ஆகியோர் இறையருளால் வெற்றி பெற்று அவர்களின் வார்டுகளுக்கு மற்றுமல்லாமல் நமதூருக்கே சேவை செய்ய வாழ்த்துகிறேன்.

இவர்கள் மற்றுமல்லாமல் ஐக்கிய பேரவையால் அங்கீகரிக்க பட்ட அணைத்து வேட்பாளர்களும் இறையருளால் வெற்றிபெற்று அவர்களின் தன்னலமற்ற சேவையை செய்திட வாழ்த்துகிறேன்- சாதிக் -ஜித்தாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. சமூக நல ஊழியருமான சகோதரர் S .K . ஸாலிஹ் ஆகியோர் இறையருளால் வெற்றி பெற வாழ்த்துக்கள்
posted by சாலிஹ் (பேங்காக்) [27 September 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 8895

விளையாட்டுகாகக் கூட பொய் சொல்லாதீர்கள், பிறரைச் சிரிக்கவைக்கப் பொய் சொல்லாதீர்கள் என்ற மார்க்கத்தில் இருப்பதாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வெட்கமில்லாமல் பிறரை மகிழ்விக்கவும், பணம், பதவிக்காகவும், அற்ப ஆதாயங்களுக்காகவும் பொய் சொல்வது பரவலாகி விட்டது.

நாம் மிகவும் கண்ணியமாக நடத்தும் தலைவர்கள், நடு நிலையான பத்திரிக்கைகள் கூட கூட்டம் சேர்க்கவும் ஆதரவு திரட்டவும் பேச்சிலும் , எழுத்திலும் மக்களை கவர்ந்திழுக்க உண்மையை மறைப்பதும் , பொய் பேசுவதும் சாதாரணமாகிப் போய் விட்ட இந்த காலத்தில் நடுநிலையோடு செய்திகளை காயல்பட்டணம்.காமில் பதிவுசெய்து வருபவரும் சமூக நல ஊழியருமான சகோதரர் S .K . ஸாலிஹ் ஆகியோர் இறையருளால் வெற்றி பெற்று அவர்களின் 6 வது வார்டுக்கு மற்றுமில்லாமல் நமதூருக்கே சேவை செய்திடவும் அதன் முலம் நம்மூர் மக்களின் தேவைகளை நிறைவேற்றி வைத்திட வாழ்த்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by MAK.JAINULABDEEN. (kayalpatnam) [27 September 2011]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 8896

அஸ்ஸலாமு அலைக்கும். வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் 6 வது வார்டில் போட்டியிடும் எனது நண்பரும், பொதுநல சேவையில் எனது வழிகாட்டிகளில் ஒருவருமான (முக்கியமானவருமான) சகோதரர் எஸ்.கே.ஸாலிஹ் அவர்கள் வெற்றிபெற அல்லாஹ்விடம் பிரார்திக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by N.M. MOHAMED ISMAIL (Dubai) [27 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8905

ALL THE BEST SK SALIHU

போட்டி இன்றி தேர்வு பெற வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. நண்பனே, வா....நல்ல மாற்றம் தா
posted by musthak ahamed (mumbai) [27 September 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 8909

10 வார்டில் களமிறங்கும் பதுருள் ஹக் வெற்றி பெற வாழ்த்துக்கள்....

எளிமையும் உண்மையும் நேர்மையும் நிறைந்த அன்பர் பதுருள் ஹக் தவறு என்றால் எவராயினும் தட்டிக் கேட்கதயங்காதவர்.. சென்ற முறையே வெற்றி பெற்று இருக்க வேண்டியவர்....இந்த முறை இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாய் வெற்றி பெறுபவர்............

பதவியில் இல்ல விட்டாலும் வார்டு மக்களுக்காக எந்த வித பிரதி பலனும் பாராது உழைத்து வருபவர்.............

இவரின் பின்னால் படித்த, நிறைய திட்டங்கள் கொண்ட ஒரு இளைஞர் கூட்டம் உண்டு...........இவர் வெற்றி பெற்றால் கண்டிப்பாய் 10 வது வார்டை நகரின் முன்னுதாரண வாரடாய் மாற்றுவார் என்ற நம்பிக்கை உண்டு..........

உண்மையான உழைப்பு ஜெயிக்க வாழ்த்துக்கள்........

இதே போன்று சகோதரர் சாலிஹு - வெற்றி பெற்றால் அந்த தோல் bagil என்ன உள்ளது என்ற விஷயத்தை மக்களிடம் கண்டிப்பாய் தெரிவிக்க வேண்டும். பல நாட்களாய் எனக்கும் என்போன்ற சிந்தனை உள்ளவர்களுக்கும் சந்தேகம் உண்டு. இதனை sks வாக்குறுதி தந்தால் நல்லம்.

முஸ்தாக் அஹ்மத்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by ABU HURAIRA (ABU DHABI) [27 September 2011]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8911

அன்பு சகோதரர் S.K. ஸாலிஹ் அவர்கள் பொது நல சேவை இல் எவ்வித பிரதிபலன் இன்றி செயல் பட கூடியவர். அவர் வெற்றி பெற வல்ல நாயன் இடம் பிரார்தனை செய்வோம். தொடரட்டும் அவரது சேவை. ஒளிரட்டும் நமது நகர்மன்றம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by ABDUL RAZAAK (CHENNAI) [27 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8922

அஸ்ஸலாமுஅலைக்கும்

சஹோதரர் எஸ் . கே.ஸாலிஹ் வெற்றி பெற வாழ்த்துக்கள்

ரஜாக் .சென்னை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Abumisbah (Jeddah) [27 September 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8927

தம்பி ஸாலிஹ் வெற்றி பெற நல வாழ்த்துக்கள். டாக்டர் கிஸார் அவர்கள் சொன்ன மாதிரி நீங்கள் வெற்றிபெற்று நகர துணைத்தலைவராகவும் வரவேண்டும் என்பது என் அவா. நீங்கள் இக்ரா விற்க்காகவும் மற்ற மன்றக்களுக்காகவும் செய்யும் பணிகளும் தொடரவேண்டும். அயல் நாட்டில் இருக்கும் எங்களது மன்றங்களுக்கு உங்களை போன்றவர்களின் சேவை அவசியம் தேவை.

குளம் அஹமது முஹியதீன்
ஜெட்டாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Salai Syed Mohamed Fasi (AL Khobar Saudi Arabia) [27 September 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8934

Broher S.K.Salih

He is a hard worker and helping tendency peron.We will select him unoppossed.My advance wish to win.

Best regards

Syed Mohamed Fasi
AL Khobar


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (காயல்பட்டினம்) [27 September 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 8935

அருமை தம்பி எஸ்.கே.ஸாலிஹ் அவர்களுக்கு வாழ்த்துக்களுடன் கூடிய பாராட்டுக்கள்.

இவரைப்போல மக்களின் சேவை மீது அன்பும், பிறரின் பணத்திற்கு ஆசைப்படாதவரகவும், இறை பயம் உள்ளவராகவும் தெரிவு செய்து "உள்ளே" அனுப்புங்க..உள்ளே என்றதும் பயந்து விடாதீர்கள், அதான் நகர்மன்றதிற்க்கு.

இன்ஷாஹ் அல்லாஹ், பட்டையை கிளப்புவார் பாருங்க. சும்மாவே காமெராவும் கண்ணுமாக அலைபவர், இப்போ சொல்லவா வேணும். ( மனு தாக்கல் பண்ணும் போது கூட கேமரா பை தொங்குது பாருங்க ).

** இந்த கருத்தை காலை 10 மணிக்கு டைப் பண்ணும் போது சென்ற மின்சாரம், இரவு 7 மணிக்கு தான் வந்தது. எங்கள் தெருவில் மின்சார கம்பம் மாத்தினார்கள். அதான் லேட் **

சாளை S.I.ஜியாவுதீன், காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by SYED OMER KALAMI (colombo) [27 September 2011]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 8946

SKS my best wishes for you thambi by syed omer kalami


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by SUPER IBRAHIM S.H. (RIYADH - K.S.A.) [27 September 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8949

அன்பு மச்சான் S K சாலிஹு அவர்களை அதிகம் வர்ணிக்க வார்தைஹள் இல்லை, அவரின் நல்ல குணம் அனைவருக்கும் தெரிந்தது தான் - அன்பு மச்சான் S K சாலிஹு வெற்றி பெற்று அந்த வார்டு மக்கள் இவர் மூலம் நல்ல பல பயன்கள் பெற வாழ்த்துக்கள்... நோ டவுட், இவருடைய திறைமைக்கு கலெக்டர் ஆபீசிலில் என்றோ பணிபுரியலாம். ஆனால், ஊரின் செல்லப் பிள்ளை. அவர் சேவை வெளி நாட்டு மக்களுக்கு தேவை என்பதை புரிந்து இன்று வரை படுபடுஹிறார் நமக்காஹா!!

அன்புடன் சூப்பர் மச்சான்,

கவிஞ்சர். ஷேய்க் அப்துல் காதர். குளம்.
ஹாபிழ். சடகதுல்லாஹ். நஹ்வி.
இப்ராகிம் ஜமீல். கே.ம.
நஈமுல்லாஹ். ச.ம.
ஜுபைர், மீரான்.
ச.இ. மொகமது ஹரிரி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Sirajudeen Sahul (Dubai) [30 September 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9198

My best wishes for ward No. 10 candidate Mr. Bathurul Haq to win in panjayath election 2011. He is a hard worker & good candidate for this ward. I request people of ward no. 10 to make your ballot to Mr. Bathuru Haq and make him win for this election.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by S.M.Jamal (UAE) [01 October 2011]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9283

Assalamu Alaikkum,

Janab.Bathurul Haq who is contesting in the Ward No:10 is a humble,honest and straight forward person.Insha Allah we all vote for him and make him to win and become the councellor of our ward.

Also he is a hard-working person and also amicable among all the people (Gents,Ladies and Children).We can raise our voice to him at anytime to do the common amenities and daily necessities for our ward without any hesitation.

Moreover he is the person who can respect us all and do the things right for our ward.We all wish him all the best to attain the victory in this election. wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved