எதிர்வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதியன்று, காயல்பட்டின நகர்மன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அத்தேர்தலில் நகர்மன்றத்தில் உள்ள 18 வார்டுகளுக்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இத்தருணத்தில் 2006 ஆம் நடந்த தேர்தலின் முடிவுகளை - வார்டு வாரியாக - பார்வையிடுவது பொருத்தமாக இருக்கும்.
வார்ட் 13 முடிவுகளை காண்போம். ஹாஜியப்பா தைக்கா தெரு, ஜெய்லானி நகர், வீரசடாச்சி அம்மன் கோயில் தெரு, விசாலாட்சி அம்மன் கோயில் தெரு, வண்ணாகுடி தெரு ஆகிய பகுதிகளை அடங்கியது இவ்வார்டு.
இவ்வார்டில் - 2006 ஆம் ஆண்டு - 8 வேட்பாளர்கள் - போட்டியிட்டனர் . பதிவான 838 வாக்குகளில் - 198 வாக்குகள் பெற்று, இரட்டை இலை சின்னத்தில் நின்ற வேட்பாளர் - சொளுக்கு முகம்மது அப்துல்காதர் மு.நு. - வெற்றிபெற்றார்.
பிற வேட்பாளர்களும், அவர்கள் பெற்ற வாக்குகளும்:-
(2) சம்சுதீன் எம்.எஸ்.எம். (அரிக்கேன் விளக்கு) - 164 வாக்குகள்
(3) புரட்சி சங்கர் (குலையுடன் கூடிய தென்னை மரம்) - 158 வாக்குகள்
(4) முருகன் க. (தீபம்) - 111 வாக்குகள்
(5) மொன்னா அகமது (உதய சூரியன்) - 94 வாக்குகள்
(6) ஸ்டெபிளாக் தி. (வைரம்) - 83 வாக்குகள்
(7) சங்கர சேகர் (எரிவாயு உருளை) - 24 வாக்குகள்
(8) சொளுக்கு மு.அ. (மாம்பழம்) - 10 வாக்குகள் |