எதிர்வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதியன்று, காயல்பட்டின நகர்மன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அத்தேர்தலில் நகர்மன்றத்தில் உள்ள 18 வார்டுகளுக்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இத்தருணத்தில் 2006 ஆம் நடந்த தேர்தலின் முடிவுகளை - வார்டு வாரியாக - பார்வையிடுவது பொருத்தமாக இருக்கும்.
வார்ட் 5 முடிவுகளை காண்போம். கே.எம்.கே. தெரு, ஆரம்பள்ளி தெரு, மக்தூம் தெரு, முஹைதீன் தெரு ஆகிய பகுதிகளை அடங்கியது இவ்வார்டு.
இவ்வார்டில் - 2006 ஆம் ஆண்டு - 7 வேட்பாளர்கள் - போட்டியிட்டனர் . பதிவான 581 வாக்குகளில் - 355 வாக்குகள் பெற்று, மேஜை விளக்கு சின்னத்தில் நின்ற வேட்பாளர் - செய்யிது அப்துர்ரஹ்மான் - வெற்றிபெற்றார்.
பிற வேட்பாளர்களும், அவர்கள் பெற்ற வாக்குகளும்:-
(2) சேக்சுலைமான் பி.ஏ. (கை பை) - 82 வாக்குகள்
(3) முத்து முஹம்மது கே.ஏ.எஸ். (தண்ணீர்க்குழாய்) - 64 வாக்குகள்
(4) ஜாபர் சாதிக் கா.சு. (குலையுடன் கூடிய தென்னை மரம்) - 45 வாக்குகள்
(5) இல்யாஸ் எஸ்.ஏ. (அரிக்கன் விளக்கு) - 24 வாக்குகள்
(6) ஹாமீது ரஹ்மத்துல்லா எம்.எஸ். (துப்பாக்கி) - 1 வாக்கு
(7) பைசுற் றஹ்மான் சு.அ. (வைரம்) - 1 வாக்கு
|