வரும் அக்டோபர் 17 அன்று காயல்பட்டின நகராட்சிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் நகர்மன்ற தலைவராக ஒரு பெண்மணியும், 18 வார்ட் உறுப்பினர்களும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 21 நடைபெறும் என்றும், புதிய உறுப்பினர்கள் அக்டோபர் 25 அன்று பதவி ஏற்பர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வாகும் 18 வார்டு உறுப்பினர்கள் கலந்துக்கொள்ளும் தேர்தல் மூலம் - அக்டோபர் 29 அன்று துணைத்தலைவர் தேர்வு செய்யப்படுவார்.
இதற்கிடையில் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் - திங்கள் (செப்டம்பர் 26) மாலை 7:00 மணிக்கு ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் வைத்து நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
3. Re:நகர்மன்ற தேர்தல் குறித்த ... posted byசாளை S.I.ஜியாவுதீன் (காயல்பட்டினம்)[24 September 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 8700
முன்னாள் தலைவி சகோ. வாஹீதா அவர்கள் கொடுத்த அறிக்கைகள் நன்றாக உள்ளன.
கூடவே அல்லாஹ்வின் மீது ஆணையாக லஞ்சம் இல்லாதா நகர் மன்றத்தை உருவாக்கவும், நேர்மையான நிர்வாகம் நடப்பதற்கும் உறுதி கூறினால் இவர்களை தேர்ந்து எடுப்பதில் பிரச்சனை இல்லையே.
4. Re:நகர்மன்ற தேர்தல் குறித்த ... posted byV D SADAK THAMBY (Guangzhou(China))[24 September 2011] IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 8701
பொதுவாக நமதூரில், பெண்கள் யாரும் இந்தபதவியை கேட்டு பெறுவதில்லை .நாமாகத்தான் தகுதியான நபரை தெரிவு செய்ய வேண்டும்.
ஐகிய்யபேரவையின் பணியே இதுதான் .
கேட்கும் நபருக்கு இந்த பதவியை கொடுப்பதைவிட , தகுதியான நபர்ரை தெரிவுசெய்து ,பதவியில் அமர்த்துவதே ,நமதூருக்கு நன்மையாக அமையும் .
5. Re:நகர்மன்ற தேர்தல் குறித்த ... posted byN.M. MOHAMED ISMAIL (DUBAI)[24 September 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8702
அஸ்ஸலாமு அலைக்கும்
நகரமன்ற தேர்வு ஒரு ஊரின் அடிப்படை தேவைகளை அரசாங்கத்துக்கு எடுத்துரைக்க அதனை நிவர்த்தி செய்ய மிகவும் உறுதுணையாக இருக்கும்.
இன்றைய கால கட்டம் சமுதாய ஒற்றுமை சீர் குலைந்து உள்ளது.
தயவு செய்து எந்த முடிவு எடுத்தாலும் ஊரின் நலன் கருதி இருக்கவேன்டும்.
வேட்பாளர் ஆண் பெண் என்ற பாகுபாடு வேண்டாம்.
என்றைக்கும் ஆளும் ஆட்சியாளர்களிடம் கட்சி அடிப்படையில் பார்க்க வேண்டாம்.
இன்றைக்கு ஒருவரின் மூன்றில் இரண்டு மடங்கு செயல் திறன் ஆற்றல் குணம் அன்பு பண்பு எல்லாம் எல்லோருக்கும் தெரிய வந்து விடுகிறது அகவே வேட்பாளர் தேர்வு மிகவும் சுலபம். வேட்பாளர் DATAS அணைத்தும் ENTER செய்து DIFFERENTIATE செய்து கம்ப்யூட்டர் மூலம் தேர்வு செய்யுங்கள்.
6. Re:நகர்மன்ற தேர்தல் குறித்த ... posted byM.E.L.NUSKI (RIYADH -KSA)[24 September 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8703
ஐக்கிய பேரவையின் கூட்டம் இரண்டு விசயங்களை அலசி ஆலோசிக்கவும்
1 நமக்கு இழைக்கபட்ட அநீதி
போன்று கீழக்கரை, அதிரை வுள்ளிட்ட பல muslim ஊர்களில் வேண்டும் என்றே திணிக்க பட்டுள்ளது. தற்போது கீழக்கரை ஐக்கிய பேரவை சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது .ஆகவே இது விசயத்தில் அவர்களுடன் தொடர்பு கொண்டு நாமும் அது போல வழக்கு தொடரலாம் .அதே சமயத்தில் தேர்தல் புறகணிப்பு என்பது முயல் ஆமை கதை ஆக ஆகி விடகூடாது.
2 .பெண் வேட்பாளரையும் தெரிவு செய்து வைப்பதும் அவசியம் . திருச்சி மாநகராட்சி உடன் திருவரும்பூர் பேரூராட்சியும் இணைப்பதை எதிர்த்து வழக்கில் திருச்சி மாநகர தேர்தல், கோர்ட்டால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதனையும் நினைவில் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன். இது விசயத்தில் மெகா, மற்றும் அனைத்து ஜமாஅத் , சங்கங்கள் ஒன்று பட்டு கசப்புக்களை மறந்து நமது ஊர் என்ற ஒரே எண்ணத்தோடு ஐக்கிய பேரவையோடு ஒன்று பட்டு குருகிய கால கட்டத்தில் ஒற்றுமையான முடிவு எடுக்க வேண்டும்.
அல்லாஹ் ரசூலுக்கு பயந்து நல்ல முடிவு கிட்ட வேண்டும். நான் பெரியவன் நீ பெரியவன் என்று ஈகோ பார்க்காமல் நமதூர் பிற வூர் களுக்கு எடுத்துகாட்டு ஆக விளங்க நமது முனோர்கள் குறிப்பாக மறைந்த ஆனா.கானா,பாவலர் அப்பா , MKT அப்பா , LK அப்பா VMS லெப்பை மாமா போன்ற தலைவர்கள் எப்படி சிறப்பாக தன்னலம் கருதாது ,லஞ்சம் வாங்காது நமதூரை சிறப்பாக நிருவாகம் செய்தார்களோ அது போன்று அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.ஆமீன்
என்றும் ஊர் நலனில்
M .E .L .நுஸ்கி
ரியாத்
சவுதி அரேபியா
7. A Great Opportunity For MEGA posted byAbdul Rahim (The U.K.)[24 September 2011] IP: 87.*.*.* United States | Comment Reference Number: 8711
MEGA, in its objective clearly stated that they are formed to provide guidance for the forthcoming elections. Now they have a great opportunity to prove their mettle.
MEGA, I am sure is manned and managed by people who are highly educated, social minded selfless and are well placed in different parts of the world. That said they would definitely not be in short of ideas or funds. Since their sole objective is to guide our town for the placement of a right leader they can take up the matter with the court along with the original petitioner.
They can join in the same case as an Intruding Petitioner and thus would have an opportunity to be a party in the case.
Aiykkiya Peravai, I am sure are manned by people who are not as informed or lettered as people in MEGA are and would not have the resources to fight a case as they have just exhausted all the funds for the procurement of land for the Sub-station. Hence, MEGA is a God-sent organization to lift our town from this quagmire.
9. Re:நகர்மன்ற தேர்தல் குறித்த ... posted bymohideen thamby (qatar)[24 September 2011] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 8726
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
ஐக்கிய பேரவைக்கு அன்பான வேண்டுகோள்.
உங்களுக்கு அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொது நல அமைப்புகள் ஒத்துழைப்பும், உறுதியும் தந்தது போல் எந்த சூழ்நிலையிலும் நம் மக்களின் நம்பிகைக்கு மாறாக அரிசியல் சார்பு உள்ளவர்களை தேர்வு செய்யவேண்டாம்.
இக்கருத்தை அனைத்து அன்பர்களும் வலியுறுத்தி இந்த இணையதளத்தில் பதிவு செய்யுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross