எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளோர் - வேட்பு மனு தாக்கல் செய்யும்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள் குறித்து தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
(1) மாநிலத் தேர்தல் ஆணையத்தால் தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்ட பின்பு தேர்தல் அட்டவணைப்படி தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கும், அந்த அறிவிக்கையைத் தொடர்ந்து வெளியிடப்படும் சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலரின் அறிவிப்பின்படி. வேட்புமனுக்கள் குறிப்பிட்ட இடத்தில். குறிப்பிட்ட தேதிகளில். குறிப்பிட்ட நேரத்தில் அதற்கென நியமதிக்கப்பட்ட அலுவலரால் பெறப்படும்
(2) வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளுக்கு அடுத்த நாள் (வேலை நாள்) வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்
(3) வேட்பாளர் விரும்பினால். பரிசீலனை நாளுக்குப் பிறகு இரண்டாம் நாள் மாலை 3:00 மணிக்குள் வேட்புமனுவைத் திரும்பப் பெறலாம்
(4) ஒரு பதவிக்கு அல்லது ஒரு இடத்திற்கு ஒரு நபர் மட்டுமே போட்டியிட்டால். அந்நபர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார், ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் ஒரு இடத்திற்குப் போட்டியிட்டால் அவர்களில் ஒருவரை வாக்காளர்கள் தேர்ந்தெடுப்பதற்காக.
வாக்கெடுப்பு தேர்தல் அறிவிக்கையில் குறிப்பிட்ட நாளில் நடைபெறும்
வேட்பு மனு தாக்கல் :
(1) நீங்கள் தேர்தல் அறிவிக்கையில் குறிப்பிட்ட நாட்களில் (பொது விடுமுறை நாட்களைத் தவிர) எந்த ஒரு நாளிலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்
(2) வேட்புமனு இதற்கென அறிவிக்கப்பட்ட படிவத்தில் இருக்க வேண்டும், இதற்கான படிவங்கள் தேர்தல் அலுவலர்களிடம் கிடைக்கும் அச்சிட்ட படிவம் கிடைக்கப்பெறாத நிலையில் குறிப்பிட்ட படிவத்தினைக் கையால் எழுதியோ. தட்டச்சு செய்தோ வேட்புமனு தயாரித்து தாக்கல் செய்யலாம்
(3) உங்களது பெயரை முன்மொழிபவரது பெயர். நீங்கள் எந்த உள்ளாட்சி வார்டிற்குப் போட்டியிடுகின்றீர்களோ அந்த வார்டின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். ஒரு வாக்காளர் ஒரே தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு முன்மொழிபவராக இருக்கக் கூடாது. மேயர்-தலைவர் தேர்தலைப் பொறுத்தவரை முன்மொழிபவரது பெயர் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பில் எந்த ஒரு வார்டிலும் இடம் பெற்றிருக்கலாம்
(4) ஒரே பதவியிடத்திற்கு நான்கு வேட்புமனுக்கள் வரை தாக்கல் செய்யலாம்
(5) ஒவ்வொரு வேட்புமனுவிலும் அத்தேர்தலில் போட்டியிடுகின்ற உங்களது ஒப்புதலைத் தெரிவிக்கும் வகையில் உரிய இடத்தில் நீங்கள் ஒப்பமிட வேண்டும்
(6) வேட்புமனுவில் உங்களது வயதைக் குறிப்பிடத் தவற வேண்டாம், ஒதுக்கீடு செய்யப்பட்ட எந்த ஒரு பதவியிடத்திற்கும் நீங்கள் போட்டியிட்டால் தேர்தல் அறிவிப்பின்படி எந்த வகுப்பினருக்காக அந்த இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதோ அந்த வகுப்பைச் சார்ந்தவர் என்பதற்கு வேட்புமனுவில் உறுதி மொழி தெரிவித்து நீங்கள் ஒப்பமிட வேண்டும்
(7) நீங்கள் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியின் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளராக இருந்தால் வேட்புமனுவுடன் கூடிய ‘C’ படிவத்தில் எந்தக் கட்சியின் சார்பாக நீங்கள் போட்டியிடுகின்றீர்கள் என்பதைக் குறிப்பிட வேண்டும். அவ்வாறு குறிப்பிடத் தவறினால் நீங்கள் சுயேட்சையாகவே கருதப்படுவீர்கள்
(8) நீங்கள் சுயேட்சை வேட்பாளராக இருந்தால். அத்தேர்தலுக்கென அறிவிக்கப்பட்ட சின்னங்களில் மூன்று தேர்தல் சின்னங்களை உங்கள் விருப்பத்திற்கிணங்க வரிசைப்படுத்திக் கோரலாம்
(9) வேட்புமனு தாக்கல் செய்யும் சமயம் நீங்கள் நிர்ணயிக்கப்பட்ட காப்புத் தொகையை (Deposit) ரொக்கமாக செலுத்தியோ அல்லது சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி கருவூலத்தில் செலுத்தி அச்செலுத்துச் சீட்டுடன் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய வேண்டும், கீழ்க்கண்ட
அட்டவணையில் கண்டவாறு காப்புத் தொகை செலுத்தப்பட வேண்டும்
(10) நீங்கள் ஒரு பதவியிடத்திற்கு எத்தனை வேட்புமனுக்கள் தாக்கல் செய்தாலும் ஒரே ஒரு காப்புத் தொகை மட்டும் செலுத்தினால் போதுமானது, முதன்முதலாக தாக்கல் செய்யப்படும் வேட்புமனுவுடன் காப்புத் தொகை செலுத்தியதற்கான அசல் செலுத்துச் சீட்டை இணைத்தும்,
அதன்பின்பு தாக்கல் செய்யப்படும் வேட்புமனுவுடன் செலுத்துச்சீட்டின் நகலை இணைத்தும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம்
(11) நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பதவியிடங்களுக்கு (ஒன்றுக்கு மேற்பட்ட வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு) வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும்போது தனித்தனியே காப்புத் தொகை செலுத்த வேண்டும்
(12) வேட்புமனுவை நீங்களோ அல்லது உங்கள் பெயரை முன் மொழிபவரோ சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலரிடம் நேரடியாக. குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நாளில். குறிப்பிட்ட நேரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும், வேட்புமனு முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். வேட்புமனுவில் முன்மொழிபவரும் நீங்களும் ஒப்பமிட்டிருக்க வேண்டும், குறிப்பிடப்பட்ட நாட்களுக்கு அல்லது நேரங்களுக்கு முன்னரோ அல்லது பின்னரோ வேட்புமனுக்கள் பெறபடமாட்டா என்பதைத் தொpந்து கொள்ள வேண்டும்
(13) வேட்புமனுவைத் தாக்கல் செய்யும்பொழுது நீங்களோ அல்லது உங்கள் வேட்புமனுவை முன்மொழிபவரோ. தாக்கல் செய்யப்படும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள எல்லா விவரங்களையும் குறிப்பாக உங்கள் பெயர் மற்றும் வாக்காளர் பட்டியல் எண் சரியாக உள்ளதா என்பதையும் அவை
வாக்காளர் பட்டியலில் கண்ட விவரங்களுடன் ஒத்திருக்கிறதா என்பதையும் தேர்தல் அலுவலர் சரிபார்த்து திருப்திபடுத்திக் கொள்ள உதவி செய்ய வேண்டும்
(14) தாக்கல் செய்யப்படும் வேட்புமனுவில் அடித்தல். திருத்தல் மற்றும் பிழைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், வேட்புமனுவில் கண்ட விபரங்களுக்கும் வாக்காளர் பட்டியலில் கண்ட விபரங்களுக்கும் அச்சுப்பிழை காரணமாகவோ எழுத்துப்பிழை காரணமாகவோ ஏதேனும்
வேறுபாடு காணப்பட்டாலும். அவை முக்கிய ஐயப்பாட்டை ஏற்படுத்தாதிருக்குமானால் தேர்தல் அலுவலரால் ஏற்றுக் கொள்ளப்படும், இருந்தபோதிலும். நீங்கள் சிறப்பு கவனம் செலுத்தி வேட்புமனுவை முறையாக தயாரித்து தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனுவைத் தாக்கல்
செய்யும் சமயம் உங்களது வேட்புமனுவின் தொடர் எண். தாக்கல் செய்யும் நேரம் மற்றும் நாள் குறித்து தேர்தல் அலுவலரிடமிருந்து ஒரு ஒப்புதல் கடிதத்தை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும், அதில் வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் நாள் மற்றும் நேரம்
குறித்து ஒரு அறிவிப்பும் இருக்கும்
(15) தொடர்புடைய சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எந்த ஒரு குற்ற செயலுக்காகவும் தண்டிக்கப்பட்டிருந்தால் தகுதியின்மையாக்கிட வகை செய்யப்பட்டுள்ளதால். தாங்கள் இது குறித்து விவரங்கள் அடங்கிய இவ்வாணைய ஆணை Tamil Nadu Local Bodies Elections Rules
(Supplemental and Incidental provisions with regard to nomination of candidature) Order ல் நிர்ணயிக்கப்பட்டுள்ளள படிவத்தையும். அதற்குரிய சாற்றுரையையும் (declaration) வேட்புமனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும் நேரத்திற்கு முன்பாகத் தேர்தல் நடத்தும் அலுவலரிடம்
தாக்கல் செய்ய வேண்டும், இது தொடர்பான படிவங்களையும் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்
இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவத்துள்ளது. |