கூடன்குளம் அனுமின் நிலையத்திற்கு எதிராக இடிந்தகரையில் மீனவர்கள் இருக்கும் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக பல்வேறு மீனவ ஊர்களில் ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இப்போராட்டத்தினால் திருச்செந்தூரிலிருந்து வீரபாண்டியன்பட்டினம் வழியாக நமதூருக்கு வரவேண்டிய பேருந்துகள் அனைத்தும் திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி மெயின்ரோடு வழியாக அம்மன் புரம் வந்து ஆறுமுகநேரி வழியாக திருப்பி விடப்படுகின்றன.
திங்கள்கிழமை முதல் இன்று வரை கடந்த மூன்று நாட்களாக நமதூருக்கு அரசு பேருந்துகள் வரவில்லை. தனியார் பேருந்துகள் வழமை போல் இயங்குகின்றன. இதனால் வெளியுர் செல்லும் நமதூர் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றார்கள்.
1. அரசு பேருந்துகள் மூன்று ந... posted bySolukku Seyed Mohamed Sahib SMI (Jeddah, Saudi.)[21 September 2011] IP: 168.*.*.* United States | Comment Reference Number: 8570
திருச்செந்தூரிலிருந்து வீரபாண்டியன்பட்டினம் வழியாக நமதூருக்கு வரவேண்டிய பேருந்துகள் அனைத்தும் திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி மெயின்ரோடு வழியாக அம்மன் புரம் வந்து ஆறுமுகநேரி வழியாக திருப்பி விடப்படுகின்றன - அம்மன் புரம் வழியாக பிரச்னை இன்றி செல்லும் அரசு பேருந்துகள் வீரபாண்டியன்பட்டினம் வழியாக நமதூருக்கு வந்து சென்றால் என்ன தடங்கல் வந்துவிட போகின்றதோ தெரியவில்லை, நண்பர் பாலப்ப பா.மு.ஜலாலி அவர்களிடமிருந்து ஏதேனும் செய்தி உள்ளதா இது தொடர்ப்பாக?.
2. இவர்களின் போராட்டம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.. posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[21 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 8576
இவர்களின் போராட்டம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் - இது போல் ஒரு போராட்டம் காயல்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட D C W ஆலையின் மூலம் பரவி வரும் புற்று நோய்க்கு முற்று வைக்கும் போராட்டம் D C W ஆலையின் முன்பு கூடிய விரைவில் நடக்க வேண்டும்...
நல்ல ஆற்று தண்ணீரில் நச்சு தன்மை கலக்க பற்று இன்று நல்ல நிலத்தடி தண்ணீர் நாசமாகி கொண்டு இருக்கிறது.. அணுஉலைக்கு எதிராக புறப்பட்டு இருக்கும் அங்குள்ள மக்களை போல் கூடிய விரைவில் D C W ஆலையின் சுற்றுவட்டார ஊர் மக்கள் எழுச்சி வீறு கொண்டு வரும் நாள் வெகு தூரம் இல்லை..
3. Re:அரசு பேருந்துகள் மூன்று ந... posted byM.சுல்தான் (சூடான்)[21 September 2011] IP: 41.*.*.* Sudan | Comment Reference Number: 8586
இது போல் ஒரு போராட்டம் காயல்பட்டினத்துக்கும் தேவை .. "ஜப்பானை"திரும்பிப்பார்க்கவும் அங்கேயாவது உதவும் மனிதர்கள் இருக்கிறார்கள்,நல்ல மனப்பான்மை அரசியல் வாதிகளும் இருக்கிறார்கள்,இங்கே எரியும் "தீயில்"பெட்ரோல் ஊத்தும் மட ஜென்மங்கள்தான் இருக்கிறார்கள். பாதிக்கும் மக்களுக்கு இவர்களால் ஒரேஒரு பூ செண்டு மட்டும் கொடுக்க முடியும்,ஜப்பானைப்போல் பாதிக்கும் இடத்தை பழைய இடமாக மாற்ற இவர்களால் முடியாது,ஆகையால் மக்களுக்கு மதிப்பு அளித்து அணுஉலையை மூடுவது நல்லது... நேற்று ஜெர்மனி எல்லா அணு மின் உலைகளையும் மூட முடிவெடுதுவுள்ளது.
4. Re:அரசு பேருந்துகள் மூன்று ந... posted bypallapa Jalali (Kayalpatnam)[21 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 8605
நான் இன்று இரவு 8:30 மணி அளவில் மாவட்ட ஆட்சியரிடம் காயல்பட்டணத்தில் பேருந்துகள் இயக்கப்படாதது குறித்து கைப்பேசியில் பேசினேன். அதற்கு மாவட்ட ஆட்சியர் நிலைமைகளை ஆய்வு செய்து உரிய அதிகாரிகளிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
எஸ்.எஸ்.அரிசிக்கடை அபுசாலிஹ், 16வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சி.எஸ்.சதக்கத்துல்லா ஆகியோர் உடன் இருந்தனர்.
எது எப்படி இருப்பினும் இதுபோன்ற காலகட்டங்களில் சம்பந்தப்பட்ட கிராமங்கள் வழியாக பேருந்துகள் இயக்குவது தடை செய்யப்பட்டுள்ளது. இது நாம் அனைவரும் அறிந்ததே.
இதற்கு நல்ல முடிவு எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோரிடமும் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்க வேண்டும்.
6. Re:அரசு பேருந்துகள் மூன்று ந... posted byM Sajith (DUBAI)[22 September 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8625
கருத்து ஒற்றுமை இல்லாமல், பல்வேறு காரணங்களால் ஏற்படும் நிர்பந்த ஒற்றுமைகள் நிலைப்பதில்லை - இவைகள் வெறும் ADJUSTMENT தான்.
இது போன்ற ADJUSTMENT ல் சிலர் சுலபமாக விலை போவதும், மற்றவர்களை தெருவில் விடுவதும்தான் பெரும்பாலும் நடந்தேரும்.
கருத்து ஒற்றுமை ஏற்பட ஒரு விசயத்தில் நம்பிக்கை ஏற்பட வேண்டும். நம்பிக்கை வர கேள்விகள் கேட்கப்படவேண்டும் அதற்கு பொறுப்பான பதிலும் தரப்பட வேண்டும்.
கேள்வி கேட்காமல் வந்தால் அது 'பயம்' நம்பிக்கை இல்லை. - சிலர் என்ன சொன்னலும் சரியாகத்தான் இருக்கும் என்று நம்புவது என்பது கேள்வி கேட்க தயங்குவதும், எதிர்த்தால் ஏதும் கேடுவருமோ என்ற பயமும் தான். பயம் பதட்டத்தையும் அவசரத்தையும் மட்டுமே தரும் பயத்தால் பலன் ஏதும் எற்படாது.
ஆர்ப்பட்டத்துக்கு ஆள் சேர்ப்பது எளிது - இது எதிர்ப்பை காட்டும் தற்காலிக முயற்சி, போராட்டம் என்பது முடிவு தெரியும் வரை தொடர்வது.
(இன்றய அரசியலில் போராட்டம் அர்தமற்று போய்விட்டது என்பது வேறு விசயம் - காசை வாங்கி கொண்டு பாதியில் முடிக்கும் நடைமுறை மலிந்துவிட்டது - ஒரு வேளை நோக்கமே காசாக்குவதாக இருப்பதால் இது சாத்தியம் போல)
CFFC இது விசயமா எடுத்துள்ள முயற்சிகள் இன்னும் தொடர எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். முதலில் காரணங்கள் உறுதி படுத்தவேண்டும், வெறும் அனுமானங்களின் அடிபடையில் இறங்கினால் பலன் இருக்காது.
ஊரின் அமைப்புக்கள் எல்லோருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சிகளை செய்யட்டும் கேள்விகளுக்கு பொருப்புடன் பதிலளிக்கட்டும். கருத்து ஒற்றுமை தானாக வரும். அப்புறம் 'ஊக்கு' விக்கவும் வேண்டாம், 'PIN' வாங்கவும் வேண்டாம்.
7. தனி மரம் தோப்பாகாது..! அது தோப்பாக துணை புரிகிறது..! posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[22 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 8634
இன்றுடன் நான்கு நாட்களாக அரசு பேருந்து நம்ம ஊருக்கு வரவில்லை இதை எதிர்த்து எந்த அமைப்பும் கண்டனமோ... ! அல்லது மாற்று வழியில் செல்லும் பாதையில் மறியலோ..! செய்யவில்லை.
அரசு பேருந்து நமது ஊர் வழியாக வராதது படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பெரும் இழப்பாகும்.. இதை பயன் படுத்தி வாடகை வேன், ஆட்டோ டிரைவர்கள் கொள்ளை லாபத்துக்கு டிக்கெட் சவாரி அடித்து கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள்...
வயதான முதியவர்கள் மிகவும் சிரமமுடன் வாடகை வேன்களிலும், ஆட்டோக்களிலும் முண்டி அடித்துக்கொண்டு சிரமபட்டு ஏறுகிறார்கள் பார்க்க பரிதாபமாக இருக்கு..
இதற்க்கு யாரு தான் தலைமை தாங்கி மறியல் அல்லது போராட்டம் நடத்துவது...? தனி மனிதன் நான் தான் செய்ய முடியுமா ? அல்லது நீ தான் செய்ய முடியுமா ? தனி மரம் தோப்பாகாது..! அது தோப்பாக துணை புரிகிறது..! எது செய்தாலும் ஒரு அமைப்பு தேவை படுகிறது..!
நண்பர் ஜமாலி ஒருவரால் பாவம் என்ன செய்ய முடியும்.. அவர் அவர் தகுதிக்கு ஜமாலி முயற்சி செய்ய தான் செய்கிறார்..
8. Re:அரசு பேருந்துகள் மூன்று ந... posted byசாளை நவாஸ் (singapore)[22 September 2011] IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 8635
பா.மு.ஜலாலி காக்கா, நீங்கள் தனியே நின்று எந்த பிரதிபலன் பாராமல் செய்யும் இந்த சேவை மகத்தானது. உங்கள் சேவை மேலும் உயர உங்கள் வார்டு சார்பாக உங்களை ஜாமாத் ஏக மனதாக தேர்வு செய்யவேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பம்.
இதை படிக்கும் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிப்பார்களா?
9. Re:அரசு பேருந்துகள் மூன்று ந... posted byK S Mohamed shuaib (Kayalpatnam)[22 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 8648
அரசு பேருந்துகள் கடந்த நான்கு நாட்களாக ஓடாதது நமதூருக்கு பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.நாம் நவ நாகரீக காலத்தில்தான் வாழ்கிறோமா அல்லது கற்காலத்தில் வாழ்கிறோமா என்ற சந்தேகத்தையே அது என்னுள் ஏற்ப்படுத்துகிறது. யாரோ நான்கு பேர் செய்த தவறுக்கு அரசு இப்படி எல்லோரையும் பழிவாங்குவது ஒரு மக்கள்நல அரசு செய்யும் காரியமல்ல. இது அரசுக்கு தேவையற்ற கேட்ட பேரையே உண்டாக்கும் . உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் அரசு வீண் அபவாதத்தை சுமப்பது அதன் எதிர்காலத்திற்கு எவ்விதத்திலும் நல்லதல்ல. அரசு இதை உணர்ந்து போக்குவரத்தை சரி செய்ய முயலவேண்டும்.
10. Re:அரசு பேருந்துகள் மூன்று ந... posted bysalih (Bangkok)[22 September 2011] IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 8653
நமதூர் வழியாக அரசு பேரூந்து செல்லாதது கண்டிக்கதக்கது வருந்ததக்கது.
DCW வை மூடுவதற்கு முயற்சி செய்வதற்கு முன் நமதூருக்குள் ஆங்காங்கே அலை பாய்ந்து அதிக வருமானத்தை ஈட்டி கொண்டிருக்கும் ஈட்டியை விட மோசமான கொடிய தொலைபேசி கோபுரங்களை அகற்றுவதற்கு யார் தயாராக இருக்கிறார்கள்.
கதிர்வீச்சுகளை பரப்பும் தொலைபேசி கோபுரங்களை அகற்றுவதற்கு எந்த ஜமாஅத் முதலில் களமிறங்குகிறது என்று இன்ஷா அல்லாஹ் மொறுத்திருந்து பார்போம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross