பொறியியல் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு, ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் கல்வி உதவித்தொகை, இக்ராஃ அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
காயல்பட்டினத்திலிருந்து பொறியியல் கல்லூரிகளில் பயிலும் - பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள மாணவர்கள் பலர் கல்வி உதவித்தொகை கோரி ஜித்தா காயல் நற்பணி மன்றத்திடம் விண்ணப்பித்திருந்தனர். அவற்றில், பரிசீலனைக்குப் பின் தேர்வு செய்யப்பட்ட 12 மாணவ-மாணவியருக்கு அம்மன்றத்தின் சார்பில், 06.09.2011 அன்று கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
இதற்காக, உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்க கூட்ட அரங்கில் நடத்தப்பட்ட சிறு நிகழ்ச்சிக்கு, ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி ஹாஜி ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப் தலைமை தாங்கினார். அதன் இணைச் செயலாளர்கள் எம்.ஏ.செய்யித் இப்றாஹீம், சட்னி செய்யித் மீரான், துணைச் செயலாளர் அரபி எம்.ஐ.முஹம்மத் ஷுஅய்ப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் யான்பு மண்டல ஒருங்கிணைப்பாளர் எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய், கே.ஏ.முஹம்மத் நூஹ், என்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் ஆகிய மன்ற உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் உடனிருந்தார்.
படங்கள்:
M.W.ஹாமித் ரிஃபாய். |