மலபார் காயல் நல மன்றத்தின் 27ஆவது செயற்குழுக் கூட்டத்தில் நோயாளி ஒருவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் பத்தாயிரம் வழங்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கேரள மாநிலம், கோழிக்கோடு நகரில் செயல்பட்டு வரும் மலபார் காயல் நல மன்றத்தின் (MKWA) 27ஆவது செயற்குழுக் கூட்டம் 18.09.2011 அன்று காலை 11.00 மணிக்கு அமைப்பின் அலுவலகத்தில் கூடியது. கூட்டத்தலைவரும் மன்றத் தலைவருமான மஸ்ஊத் துவக்கவுரையாற்றினார்.
வரவு-செலவு கணக்கறிக்கை:
அதனைத் தொடர்ந்து, கடந்த 14.08.2011 அன்று இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியின்போது உணவு ஏற்பாடு செய்வதற்காக வசூலிக்கப்பட்ட தொகை, அவை செலவழிக்கப்பட்ட விபரம் உள்ளிட்ட வரவு-செலவு கணக்கறிக்கையை மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் யு.எல்.செய்யித் அஹ்மத் சமர்ப்பித்து தேவையான விளக்கங்களை வழங்கினார். அக்கணக்கறிக்கையை கூட்டம் ஒருமனதாக அங்கீகரித்தது.
மருத்துவ உதவி:
இக்கூட்டத்தில், மருத்துவ உதவி கோரி காயல்பட்டினத்திலிருந்து பெறப்பட்ட மனு ஒன்று முறைப்படி விசாரிக்கப்பட்டு, மருத்துவ உதவியாக ரூ.10,௦௦௦000 வழங்க தீர்மானிக்கப்பட்டது.
புகையிலை பழக்கத்திற்கெதிரான செயல்திட்டம்:
மது அருந்துபவர்கள் மட்டுமே போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்று என்னுவது தவறு. மாறாக, புகை பிடிப்பது, தூள் போடுவது, போன்றவையும் போதை பழக்கத்திற்கு உட்பட்டவையே. எனவே இந்த வகை போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்பது குறித்து செயல்திட்டம் வகுக்க வேண்டுமெ, இச்செயற்குழுவில் நீண்ட கலந்தாலோசனைக்குப் பின் பற்றி செயற்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இதற்கான முயற்சிகளை அனைத்துலக காயல் நல மன்றங்களும், சமூக ஆர்வலர்களும் இணைந்து மேற்கொள்ள வேண்டுமெனவும், அவ்வாறு மேற்கொள்ளப்படும் செயல்திட்டத்திற்கு மலபார் காயல் நல மன்றம் (MKWA) முழு ஒத்துழைப்பளிக்கும்எ ன்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
நிறைவாக நன்றியுரைக்குப் பின், அனைவரின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.E.செய்யித் ஐதுரூஸ் (சீனா),
செய்தித் தொடர்பாளர், (MKWA), |