தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் சமச்சீர் கல்வி அறிமுகம் செய்வது குறித்து ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக பள்ளிக்கூடங்கள் கால தாமதமாக துவங்கின. மேலும் பாடபுத்தகங்களும் காலதாமதமாக வழங்கப்பட்டன.
இதனை தொடர்ந்து - உரித்து காலத்தில், பாடங்களை முழுமையாக மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை - பள்ளிக்கூடங்கள் தினமும் 35 நிமிடங்கள் வரை கூடுதலாக பணிப்புரியலாம் என தெரிவித்துள்ளது. மேலும் - மாதத்தில் - இரு சனிக்கிழமைகளில் பணிப்புரியலாம் என்றும் அனுமதித்துள்ளது.
2. பாடங்களை விரைவில் முடிக்க... posted byhasbullah mackie (dubai)[19 September 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8434
பதவி கிடைத்தவுடன் தனது அகங்காரத்தை வெளிப்படுத்தி மக்களின் பணத்தை சமசீர் கல்வி விஷயத்தில் வீணடித்ததை வாக்களித்த மக்கள் கேட்பார்களா என்ன?
இதில் எக்ஸ்ட்ரா டைம் எடுத்து பாடத்தை நடத்தி முடிக்க உத்தரவு ...இது நல்ல காமெடி.
இனி சுமந்து செல்லும் கழுதைகளைப் போல படிக்கும் பிள்ளைகளின் சுமைகள்
4. Re:பாடங்களை விரைவில் முடிக்க... posted byFuad (Singapore)[19 September 2011] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 8445
தமிழக அரசின் பிடிவாதத்தின் காரணத்தினால் பிள்ளைகளின் பாடச்சுமை கூடிக்கொண்டே போகிறது. மாணவர்களுக்கு பாடம் விளங்கினால் என்ன விளங்காவிட்டால் என்ன? அரசு இனிமேலாவது எந்த விஷயத்திலும் பிடிவாதம் பிடிக்காமல் மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டால் தமிழக மக்களின் ஆதரவு எப்பொழுதும் இந்த அரசுக்கு இருக்கும்.
5. அரசியல் நாற்றம் .. posted byM Sajith (DUBAI)[19 September 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8449
எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டை தான்.. நம் நாட்டு அரசியலுக்கே உரிய (நாற்றமெடுத்த)குணம்.
தமிழ் புத்தாண்டை அலைகளித்து,இப்போதைக்கு சித்திரையில் 'பார்க்கிங்' செய்துள்ளார்கள்.. பார்ப்போம் அடுத்தவர் வந்து 'ஆடி' க்கு அனுப்புவாரா இல்லை 'புரட்டாசிக்கு' புரட்டுவாரான்னு ..
மதாரசை சென்னை ஆக்குவதிலும், இங்லிஷின் எல்லா வார்த்தைகளையும் தமிழில் மாத்தறேன்னு வீம்பான தாத்தாவின் தமிழ் பற்றுக்கு மக்கள் பணத்தை வீணடித்து டெலிபோனை "தொலைப்பேசியா" இல்லை "பேசித்தொலையா" என்று பட்டிமன்றம் நடத்தி, தம்மக்களை மட்டும் காண்வென்டுகளில் படிக்கவைத்திருப்பதை கண்டு கொள்ளாமல் கேனத்தனமாக துதி பாட ஒரு கூட்டம் இருக்கத்தானே செய்கிறது..?
அதுபோல அம்மா திமுக, சாரி அண்ணா திமுகவின் அனுதாபிகள் அவங்க 'மோடி' கூடப்போனாலும் மொராஜி தேசாய் கூடப்போனாலும் ரூம் போட்டு யோசிச்சாவது ஒரு விளக்கம் கண்டு பிடிப்பாங்க !!
வழமை போல ரோட்டில் விடப்பட்ட 'லீக்கு' டீம் ரெம்ப வீக் ஆகி போச்சின்னு உம்மத்துக்காக தம் கட்டிகிட்டு நிற்பதா சொல்லி, சார்டுகட்டில சட்டசபையில் உற்காந்து இருக்கும் தமுமுக பேராசியர் என்ன சொல்வாரோ தெரியவில்லை.
எல்லா சாக்கடைக்கும் மூடியா போடமுடியும்.. பேசாம மூக்க பொத்திக்க வேண்டியது தான் !!
அன்பு வாசகர்களே.......... பள்ளிக்கூடங்கள் தினமும் 35 நிமிடங்கள் வரை கூடுதலாக பணிப்புரியலாம் என தெரிவித்துள்ளது. மேலும் - மாதத்தில் - இரு சனிக்கிழமைகளில் பணிப்புரியலாம் என்றும் அனுமதித்துள்ளது.
இதை எந்த ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் எதிர்க்க மாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு ஓவர் டைம்க்குண்டான சம்பளம் கிடைக்கும். நம் பிள்ளைகளுக்கோ.... ஓவர் டென்சன் தான் மிஞ்சும்.
7. அதிகாரப் போக்கு...? posted byM.N.L.முஹம்மது ரஃபீக். (புனித மக்கா.)[19 September 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8473
எதையோ அடிப்பானே? எதையோ செமப்பானே? இது தான் நினைவுக்கு வருகின்றது!அம்மாவின் ஆணையால் கல்வித்துறை எடுத்திருக்கும் இந்த முடிவுக்கு இதைவிடக் கேவலமான வேறு கமெண்ட் கொடுக்க முடியாது!....ச்ச்சீ...நாறிப்போச்சு!!!
8. Re:பாடங்களை விரைவில் முடிக்க... posted bySULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA)[19 September 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8477
இந்த வருடம் நாம் எதை பேசியும் ஒன்றும் ஆக போவது இல்லை. செவிடன் காதில் சங்கு ஊதிய கதை போல் தான். இனி அடுத்த வருடமாவது சமசீர் கல்வியில் நல்ல மாற்றம் வருகிறதா என்று காத்து இருப்போம்.இந்த வருடம் நமது பிள்ளைகள் கொஞ்சம் கஷ்டப்பட்டு படித்து தான் நல்ல மார்க் வாங்க வேண்டும்.
9. Re:பாடங்களை விரைவில் முடிக்க... posted byAbdul (kayalpatnam)[20 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 8489
நண்பர் ஜுபைர் சொல்வது போல் இரண்டு சனிகிழமை,35 நிமிடங்கள் குடுதலாக வகுப்புக்கள் நடத்துவதால் ஆசிரியர்களுக்கு ஒன்றும் extra salary ஒன்றும் கிடைக்க போவதில்லை.இது ஆசிரியர்களுக்கு கொடுக்கும் ஒரு punishment தான்,தவிர வேறு ஒன்றுமில்லை.
Administrator:இனி வருங்காலங்களில் தங்கள் கருத்துக்களை வெளியிடும் பொருட்டு பெயரினை முழுமையாக சமர்பிக்கவும்
11. Re:பாடங்களை விரைவில் முடிக்க... posted byIbrahim Ibn Nowshad (Chennai)[20 September 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 8491
கல்லூரிக்காலங்களில் பேராசிரியர் சொன்ன அறிவுரை ஒன்று தோன்றியது என்னவென்றால்,
ஊதியம் ஆசிரியர்களுக்கு விடுமுறைகாலங்களில் உண்டோ இல்லையோ.. சனிக்கிழமைகளில் வகுப்புக்கள் நடைபெறாமல் பார்த்துக்கொண்டால் கல்லூரியின் EB Bill, கல்லூரி வாகன எரிபொருள் குறைக்கபடும் அல்லது மிச்சம் செய்யப்படும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross