கொலை முயற்சி மற்றும் சதி வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருச்செந்துர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் இன்று ஜாமீனில் விடுதலை ஆனார்.
தன் மீதான வழக்குக் பொய்யானவை என்றும், அவற்றில் ஜாமீன் கேட்டும் தூத்துக்குடி அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, அவருக்கு ஜாமீன் வழஙகினார். சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு செல்லக்கூடாது என அவருக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது.
விசாரணையின்போது, அவரிடம் நீங்கள் எங்கே இருக்க விரும்புகிறீர்கள் என்று நீதிபதி கேட்டதற்கு, சென்னையில் தங்குவதாக பதிலளித்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு ஜாமீன் வழங்கினார் நீதிபதி. ஜாமீன் உத்தரவை இன்று அனிதா ராதாகிருஷ்ணன் உதவியாளர் கிருபாகரன், திருச்சி சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
அதன் அடிப்படையில், அனிதா ராதாகிருஷ்ணன் ஜாமீனில் வெளியே வந்தார்.
புகைப்படம்/தகவல்:
www.tutyonline.net
|