அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், அறிஞர் அண்ணாவின் 103ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம், 16.09.2011 வெள்ளிக்கிழமை இரவு 07.00 மணிக்கு காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற்றது.
எஸ்.எம்.அப்துல் காதிர் என்ற சின்னத்தம்பி கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஹாஜி எல்.எஸ்.அன்வர், என்.பி.முத்து, என்.எம்.அகமது, ஜி.சேகர், கப்பல் சேக் சுலைமான், என்.டி.இஸ்ஹாக் லெப்பை, பி.மனோகரன், எம்.சமுத்திரகனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிமுக ஒன்றிய செயலாளர் மு.இராமச்சந்திரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
கட்சியின் தலைமைக் கழக பேச்சாளர் மருந்தூர் முத்தையா, மீனவரணி இணைச் செயலாளர் எஸ்.ஜெனிஃபர் சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவர் எம்.ஜே.செய்யித் இப்றாஹீம் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுற்றது.
கூட்டத்தில் நகர பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை, அதிமுக நகரச் செயலாளர் எஸ்.எம்.செய்யது காசிம் தலைமையில் கட்சியின் ஒன்றிய - நகர நிர்வாகிகள் செய்திருந்தனர்.
|