பிரபல புற்றுநோய் நிபுணரும், சென்னை அடையார் புற்றுநோய் மையத்தின் தலைவருமான டாக்டர் வி.சாந்தா - அக்டோபர் 1 அன்று - காயல்பட்டணம் வருகிறார்.
காயல்பட்டணத்தில் சமீப காலமாக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து - நகரில் உள்ள பல சமுதாய அமைப்புகள் கடந்த சில மாதங்களாக வெவ்வோறு முயற்சிகளை செய்து வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக - நேற்று (செப்டம்பர் 16) எல்.கே.எஸ். கோல்ட் ஹவுஸ் அதிபர் ஹாஜி எஸ். செய்யத் அஹ்மத் ஏற்பாட்டில் - குழு ஒன்று டாக்டர் வி.சாந்தாவை - சென்னை அடையாரில் உள்ள புற்று நோய் மையத்தில் - சந்தித்தது.
CANCER FACT FINDING COMMITTEE (CFFC) சார்பாக சமர்பிக்கப்பட்ட அறிக்கையை பார்வையிட்ட டாக்டர் சாந்தா - வரும் அக்டோபர் 1 (சனிக்கிழமை) அன்று காயல்பட்டணம் வருவதாக தெரிவித்தார். அதற்கான ஏற்பாடுகள் - CFFC - ஒருங்கிணைப்பில் செய்யப்பட உள்ளன. இந்நிகழ்ச்சி கே.எம்.டி. மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும்.
இச்சந்திப்பின் போது எல்.கே.எஸ். கோல்ட் ஹவுஸ் அதிபர் எஸ். செய்யத் அஹ்மத், எல்.டி இப்ராஹீம், பல்லாக் சுலைமான் (CFFC), முஹம்மது ஸாலிஹ் (CFFC), முஹம்மது ஆதம் சுல்தான் (KAYALPATNAM WELFARE TRUST), முஜாஹித் அலி (KAYALPATNAM WELFARE TRUST) ஆகியோர் உடன் இருந்தனர்.
ஜித்தாஹ் காயல் நல மன்றம் ஏற்பாட்டில் - தயாரிக்கப்பட்ட புற்றுக்கு வைப்போம் முற்று என்ற குறுந்தகுடு -அவ்வேளையில் டாக்டர் சாந்தாவிடம் வழங்கப்பட்டது.
84 வயதை நிரம்பிய டாக்டர் வி.சாந்தா - 1986 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் பத்மஸ்ரீ விருதும், 2005 ஆம் ஆண்டு, சமூக சேவைக்காக உலகளவில் வழங்கப்படும் RAMON MAGSAYSAY AWARD FOR PUBLIC SERVICE ஆகிய விருதுகளையும் பெற்றவர்.
மேலும் - இவர் - இயற்பியல் துறையில் நோபல் பரிசினை வென்ற சர். சி.வி. ராமானின் பேத்தியும், நோபல் பரிசினை வென்ற வானவியல் விஞ்ஞானி டாக்டர் எஸ். சந்திரசேகரின் தந்தை வழி மருமகளும் ஆவார்.
புகைப்படங்கள் உதவி:
பல்லாக் சுலைமான்,
முஹம்மது ஆதம் சுல்தான் மற்றும்
முஜாஹித் அலி.
தகவல்:
CANCER FACT FINDING COMMITTEE (CFFC)
[செய்தி திருத்தப்பட்டது] |