கடந்த ஆகஸ்ட் 1 அன்று முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். கொலை முயற்சி உட்பட பல வழக்குகள் அவர் மீது போடப்பற்றுள்ளன.
சமீபத்தில் அவரது மனுவை விசாரித்த தூத்துக்குடி செசன்ஸ் நீதிமன்றம் - அவரை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டது. நேற்று (புதன்கிழமை) அனிதா விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் - நீதிமன்ற உத்தரவில், குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒரு பிரிவின் கீழ் வழங்கப்பட்ட ஜாமீன் விபரம் விடுப்பட்டுள்ளதால், நேற்று அனிதா வெளிவரவில்லை.
அவரின் வழக்கறிஞர் - இது அச்சு பிழையினால் ஏற்பட்ட தற்காலிக பின்னடைவு என்றும், அது இன்று (வியாழக்கிழமை) நிவர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்தார். ஆகவே இன்று அனிதா ஜாமீனில் விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல்:
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
|