Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:18:05 PM
புதன் | 20 ஜுன் 2018 | ஷவ்வால் 6, 1438 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4012:2503:5206:4307:59
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:00Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:15
மறைவு18:37மறைவு---
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4305:1005:37
உச்சி
12:19
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0019:2719:55
 (1) {20-6-2018} காயல்பட்டினத்தில் முதலாவது புத்தகக் கண்காட்சி! (ஜூன் 18, 19, 20 இல்!!) அனைவருக்கும் அழைப்பு!!!
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7217
#KOTW7217
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், செப்டம்பர் 13, 2011
முன்னாள் நகர்மன்ற தலைவி வஹீதா மீண்டும் போட்டியிட முடிவு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3720 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (32) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டின நகர்மன்றத்தின் முன்னாள் (2001 - 2006) தலைவி ஏ. வஹீதா மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளார். இது குறித்த கடிதத்தினை நகரில் உள்ள அனைத்து ஜமாஅத்துக்களுக்கும் அவர் அனுப்பியுள்ளார். அதன் முழு விபரம் வருமாறு:-

பேரன்புடையீர்,

உங்கள் அன்புச் சகோதரி உடைய அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் காயல்பட்டணம் நகராட்சித் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளேன். அதற்காக எனக்கு அனைத்து ஜமாஅத் தலைவர்களும், ஊர் பொதுமக்களும் நல்லாதரவு வழங்கிட வேண்டுகிறேன். சென்ற 2001 - 2006 ஆண்டு காலங்களில் (என்னுடைய பதவி காலத்தில்) இந்நகரம் அடைந்த பலன்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ளேன். எனவே ஆற்றிய பணிகளுக்கு அங்கீகாரமும், ஆற்ற வேண்டிய பணிகளுக்கு உங்களின் ஆலோசனையும் பெற ஆவலாய் இருக்கிறேன்.

மேலும் நமதூருக்கு அடிப்படை தேவையான குடி தண்ணீர், மின்சாரம் இவைகள் தங்கு தடையின்றி கிடைக்க பாடுபடுவேன். அதற்காக 2வது பைப் லைன் திட்டத்தையும், காயல் துணை மின் நிலையம் ஒன்றையும் அமைப்பதற்கும் பெரும்ப்பாடுபடுவேன். அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய பாடுபடுவேன். இதன் முயற்சியாக தமிழக முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் நேரடி பார்வைக்கு கொண்டு சென்று திட்டத்தை நிறைவேற்றுவேன். மாண்புமிகு தமிழக முதல்வருடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருக்கின்ற காரணத்தால் இந்நகருக்குத் தேவையான அனைத்துக் காரியங்களையும் என் பணிக்காலத்தில் செய்து முடிப்பேன். எனவே தாங்கள் 2011 நகராட்சித் தேர்தலில் என்னை தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்க அன்பாய் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி,
இப்படிக்கு,
உங்கள் அன்பு சகோதரி,
வஹீதா.


இவ்வாறு அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:முன்னாள் நகர்மன்ற தலைவி வ...
posted by Abdul Cader (India) [13 September 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8053

அன்பானவர்களே, ஊருக்கு நல்லது செய்ய வேண்டியது நிறைய உள்ளதை கருத்தில் கொண்டு நல்லவர்களை தேர்ந்தெடுப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:முன்னாள் நகர்மன்ற தலைவி வ...
posted by OMER ANAS. (DOHA QATAR.) [13 September 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 8055

அவர் விருப்பத்தை அவர் சொன்னாலும், நமக்கு லுக்மான் பாய் போல் வாக்குறுதி வேண்டும். சென்ற முறை பொதுவானவர் என்று நின்று விட்டு டைவ் அடித்தவர். கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விஷயம்! யாரோ இதில் மூக்கை நுழைப்பது போல் தெரிகிறது. தயவு செய்து வேண்டாம் பதவி என்று ஓடுபவரை பாருங்கள். புது ஆட்கள் நிச்சயம் கிடைப்பார்கள். கழகம் வேண்டாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:முன்னாள் நகர்மன்ற தலைவி வ...
posted by SyedAhmed (HK) [13 September 2011]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 8057

தானாக வந்து தலையை காட்டுரவங்களை தேர்ந்து எடுக்க கூடாது என்பது என் கருத்து.

ஒருமித்த ஆதரவு இல்லாவிட்டால் நான் போட்டியிட மாட்டேன் என்று அறிவிக்கவில்லையே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:முன்னாள் நகர்மன்ற தலைவி வ...
posted by Mohamed Salih (Bangalore) [13 September 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 8059

Salam..

My suggestion is no more ladies to elect for president post...

We done a big mistake in previously elect ladies for president post. She didn give any commitment like Koman jammath candidate. She tell do this , that only..

We already given land for Sub station ( electricity board )

i think some one from AIADMK control her.

If she having good relationship with AIADMK also no probs.. we have many people they have good contact with AIADMK higher level .

So my humble request to all jammath , Societies, welfare association etc., plz take more action and discuss properly and elect the candidate for president post..

May allah full fill all our needs and wants in right way insha allah..

Nagar nallam nadum ,

Mohamed Salih.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. ஊரில் சிலரின் எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும்..
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [13 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8060

வருக...! வருக...! வருக... ! நம் ஊருக்கு 2 ஆம் குடிநீர் திட்டம் தமிழக முதல்வர் ஜெயா அம்மாவிடம் முறையிட்டு குடிநீர் பெற்று தருக..!

முன்னாள் நகர்மன்ற தலைவி திருமதி. வஹீதா சின்ன தம்பி அவர்கள் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருப்பது சந்தோஷமான செய்தி..! உங்களை காயல்பட்டினம் நகர்மன்றத்தில் தலைவர் பொறுப்பு வகிக்க வருக... வருக.. என வரவேற்கிறோம்.. உங்கள் நிர்வாக திறமை சுறுசுறுப்பு நம் நகர்மன்றதுக்கு தேவை.. ஊரில் சிலரின் எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும்.. காரணம் கடந்த முறை நீங்கள் அரசியல் கட்சிக்கு தாவியது சிலரக்கு கோபத்தை உண்டாக்கி இருக்கலாம்.. இனி வரவிருக்கும் நகர்மன்றத்தால் உங்கள் முயற்சியில் நம் ஊர் பயனடைய வேண்டும் முக்கியமாக குடிநீர் பிரச்னை தீர்க்க பட வேண்டும் அது உங்களால் மட்டுமே 100 சதவீதம் முடியும் என்று நம்புகிறேன்..

முக்கிய வேண்டுகோள் :- ஊரில் அணைத்து ஜமாஅதுக்கும் உங்களின் உறுதி மொழி கடிதம் கொடுக்கவும்..

தாங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

என்றும் நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. தலைவர் பதவி யாருக்கு?
posted by AbdulKader (Abu Dhabi) [13 September 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8066

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி .......

அன்புடையீர்,

இவர்கள் எல்லா ஜமாத்தார்களுக்கு கடிதம் எழுதியது போல் ஐக்கிய முஸ்லிம் பேரவையுடன் தொடர்பு கொண்டு தனக்கு முதல் அமைச்சருடன் உள்ள தொடர்பை எடுத்துரைத்து மேலும் தன்னால் கடிதத்தில் குறிப்பிட்ட காரியங்களை செய்து முடிக்க இயலும் என்று நிரூபித்துகாட்டினால்.... ஐக்கிய முஸ்லிம் பேரவையே இவர்களை தேர்வு செய்ய எல்லா முயற்ச்சிகளையும் எடுக்கும்.

வஸ்ஸலாம்
அப்துல்காதர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:முன்னாள் நகர்மன்ற தலைவி வ...
posted by V D SADAK THAMBY (Guangzhou(China)) [13 September 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 8071

செய்தித் தலைப்பை பார்க்கும்போதே பகீர் என்கிறது .

நாம் நகரமன்ற தலைவரை "ஒருமனதாக" தேர்வு செய்ய முயற்சிக்கிறோம்.

இவர் "ஒருதலைபட்சமாக" போட்டியிட முடிவு செய்ததுபோல தெரிகிறது.

அதிர்டவஷ்மாக இம்முறை நம்மூர் நகரமன்ற தலைவர் பதவி பெண்கள் இடவொதுக்கீட்டில் இல்லை.

எனவே பெண்களுக்கு வாய்ப்பளித்து, ஆண்களின் வாய்ப்பை பறித்துவிடக்கூடாது.

நகரின் முன்னேற்றதிட்டங்கள் நிறைய செயல்படுத்தவேண்டியதிருக்கிறது.

பெண்களை நாம் தலைவராக தேர்ந்து எடுத்தால் அவர் dummy தலைவராகவே செயல்படமுடியும்.அவர்களுக்குப்பின்னால் நிழல் தலைவர் செயல்படுவார்.

எனவே பொதுநல இயக்கங்கள் இவைகளை கவனத்தில் கொள்ளவேண்டுகிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:முன்னாள் நகர்மன்ற தலைவி வ...
posted by mackie noohuthambi (kayalpatnam) [13 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8073

சகோதரி வஹீதா அவர்கள் நகரமன்ற தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் எனபது முன் காலத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வருக்கு நமதூரின் மீது சில மனத்தாங்கல்கள் உண்டு. புரட்சி தலைவி அவர்களை அரசியல் ரீதியாக எதிர்ப்பவர்கள் இருக்கலாம். ஆனால் அவர்கள் நம் எல்லோருக்கும முதல்வர் என்பதை மறுக்க முடியாது. நமதூருக்கு வேண்டிய நலத்திட்டங்களை பெற்று தருவதற்கு அவர்களுடன் தொடர்பு உள்ள ஒருவர் தேவை என்பதை மறுக்க முடியாது.

2016 வரை நமதூருக்கு எதையும் பெற வேண்டுமென்றால் அரசியல் சாணக்கியம் ஆளும் கட்சியுடன் தொடர்பு உள்ளவர்களுடன் நமது நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு காரியங்களை சாதிப்பதுதான் . எனவே சகோதரி அவர்களும் முதல்வர் அவர்களும் பெண்களாக இருப்பதால் அவர்களை தேர்ந்தெடுப்பது பொருத்தமானதே.

ஆனால் சகோதரி அவர்கள் கோமான் ஜமாஅத் லுக்மான் ஹாஜி அவர்களைப்போல் ஒரு உன்னதமான வாக்குறுதியை மக்களிடம் அல்லது எல்லா ஜமாத்களுக்கும் ஐக்கிய பேரவைக்கும் அனுப்பினால் சால சிறப்பு எனபது என் அபிப்பிராயம்.

வாருங்கள் சகோதரி அவர்களே, நமதூர் முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு நல்லாட்சி தாருங்கள். கட்சியா ஊர் நலமா என்று வரும்போது ஊர் நலனே உங்களிடம் மேலோங்கி நிற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மக்கி நூஹுதம்பி 9865263588


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:முன்னாள் நகர்மன்ற தலைவி வ...
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [13 September 2011]
IP: 119.*.*.* India | Comment Reference Number: 8074

I would like all to spend a few mins on the below link http://www.islamicperspectives.com/HowToOrganize.htm

பதவி தாருங்கள் என்று கேட்பவரை விட, பதவி கொடுத்தால் திறம்பட செய்வார் என நினைப்பவருக்கு கொடுப்பது நலம்.

எங்கேயோ கேட்ட ஹதீஸ் போல் உள்ளது. அறிந்தவர்கள் எனக்கு தனிப்பட்ட முறையிலோ இந்த கருத்து பகுதி மூலம் விளக்கம் தர வேண்டுகிறேன்.

ஹதீஸ் கேள்வியுறும் பொது உறைக்கவில்லை. இப்போது உறைத்தது போல் உள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:முன்னாள் நகர்மன்ற தலைவி வ...
posted by V D SADAK THAMBY (Guangzhou(China)) [13 September 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 8076

ஒருவருக்கு முதல்வரிடத்தில் செல்வாக்கு இருக்குமெனில், அவர் நகர் மன்ற தலைவராக இருந்துதான் தன் செல்வாக்கை உபயோகிக்கவேண்டும் என்பதில்லை.
ஒரு சாதாரண காயல் குடிமகனாக/ குடிமகளாக இருந்து முதல்வரிடம் தனக்கிருக்கும் செல்வாக்கை உபயோகிக்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:முன்னாள் நகர்மன்ற தலைவி வ...
posted by syed omer kalami (chennai) [13 September 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 8078

mrs wahida has taken gud decision to stand for president election.hope kpm should support to elect her,becos she has gud relation with present chief minister.this will help to bring all government schemes to our native.people should think of future not the past activities 0f her.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:முன்னாள் நகர்மன்ற தலைவி வ...
posted by Javed Nazeem (Chennai) [13 September 2011]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 8079

முதலில் தான் சார்ந்துள்ள ஜமாஅத்தின் அனுமதியைப் பெற்று விட்டாரா? அப்படிப் பெற்றிருந்தால் ஜமாஅத் மூலமாகவே ஐக்கியப் பேரவை மற்றும் அனைத்து ஜமாஅத்களையும் அணுகி இருக்கலாமே? பிறகு அனைவருடைய கருத்துக்களையும் ஏற்று செயல் பட்டு இருக்கலாமே? ஒரு வேளை பொது வேட்பாளராகத் தேர்வு பெற்றிருந்தால் அனைவரும் ஒன்றிணைந்து இவரது வெற்றிக்காகப் பாடு பட்டிருக்கலாமே?

போட்டி இல்லாத சூழ்நிலையைத் தவிர்க்க அனைவரும் முயற்சி செய்து வரும் வேளையில், தானாகவே நிற்பதாக அறிவித்து இருப்பது ஒரு தவறான முன்னுதாரணமாக மட்டுமன்றி, அவருடைய தேர்வுக்கான முதல் கோணலாவும் தெரிகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:முன்னாள் நகர்மன்ற தலைவி வ...
posted by lareefa syed omer (chennai) [13 September 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 8087

Assalamu alaikum

"Men are the protectors and maintainers of women, becos Allah has made one of them to excel other" (An-Nisa 3:34). it also clearly indicated by the hadees of Abu Bakhra (rali) who said that when the Prophet (saw) heard that the Persians had appointed the daughter of Chosroes as their queen "he said No people who appointed a woman as their leader will ever prosper. (al-Bukhari)

This is proven by reality. People know from experience that only men are fit for leadership, because women by nature are more emotional and more easily swayed by their feelings and compassion. These qualities have been created in women to enable them to carry out their most important duty, which is that of motherhood and nurturing children.

My opinion is, women are not fit for the leadership, so we should think for the best male candidate.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:முன்னாள் நகர்மன்ற தலைவி வ...
posted by sak shahulhameed (malaysia) [13 September 2011]
IP: 60.*.*.* Malaysia | Comment Reference Number: 8088

ஆரம்பமே அபத்தமாக உள்ளதே ஐக்யபேரவை அனைத்து காயல்சங்கங்கள் ஏன் ஒட்டுமொத்த ஊர்மக்களும் ஏகமனதோடு ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கும் முயற்ச்சியில்இருக்கும்போது அனைத்தயும்மீறி தன்னிச்சையாக போட்டிபோட அதுவும் அரசியல்(சாக்கடையோடு)மன்னிக்கவும்வாடையோடு, முந்திரிகொட்டைத்தனமாக தெரிகிறதே


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:முன்னாள் நகர்மன்ற தலைவி வ...
posted by mohideen thamby (qatar) [13 September 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 8089

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

தமிழக அரசு உள்ளாட்சி மன்றத்திற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பெண்களுக்கு இடஒதிக்கீடு செய்ய தீர்மானித்து எந்த எந்த ஊர்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்குவது என்று முடிவு செய்வதற்கு அதிகாரிகள் திக்கு முக்காடி போனார்கள் காரணம் அனைவரும் அறிந்ததே! ஆனால் பெண்களுக்கு என்று வரும் போது மிக எளிதாக இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் காயல்பட்டணம், அதிராம்பட்டணம்,முத்துபேட்டை என்று நமது மக்கள் அதிகம் வாழும் பகுதியை ஒதிக்கினர்கள் ஏனோ தெரியவில்லை? அப்படி ஒதிக்கியத்தில் நமதூருக்கும் இரு முறை அந்த வாய்ப்பு கிடைக்க பெற்று சகோதரி அவர்களும் ஒரு முறை பஞ்சயாத்தின் தலைவியாக பதவி வகித்துள்ளார்கள். இன்னும் நமது மக்கள் வாழும் பெரும் பகுதியான வார்டுகள் சுழற்ச்சி முறையின்றி பெண்களுக்கு என்று ஒதுக்கபடுகிறது ( ரகசியம் தெரிந்தவர்கள் அன்புடன் கூறவும்). ஆகவே சகோதரியை அதற்க்கான வாய்ப்பு வரும் போது நமது மக்கள் பரிசிலனை செய்யலாம்.

பல்வேறு அமைப்புகள் கொண்ட( மெகா ,ஐக்கிய பேரவை , காக்கும் கரங்கள் ) சகோதர்கள் அனைத்து ஜமாஅத்துகளும் ஒருகிணைந்து அரசியலுக்கு அப்பாற்பட்டு பொதுவான நல்ல வேட்பாளர்களை தேர்ந்து எடுக்க முயற்ச்சி செய்து வரும் வேலையில் அதன் பலனாக ஒன்றாவது வார்டில் உள்ளவர்கள் தேர்வு செய்தவிதமும் அதன் வேட்பாளர் கொடுத்த வாக்குறுதியும் கவனத்தில் கொள்ளவேண்டியது.

சமுக சேவை செய்வதற்கு அரசியல் பின் பலம் ஒன்றும் அவசியமில்லை. வள்ளல் சீதக்காதி, கொடைவள்ளல்கள் லெப்பை அப்பாக்கள் மற்றும் பல்வேறு தனவந்தர்கள் வாழ்ந்த நமதூரில் பல்வேறு சமுக பணிகளை செய்துவருபவர்கள் தனிநபர்களே அன்றி அரசியல் வாதிகள் அல்ல ஆகேவ இந்த பொறுப்புக்கு வருபவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்கவேண்டும். அதலால் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து செயல்ப்பட்டால் அரசு நமது கோரிக்கைகளை செயல்படுத்தும், இதற்க்கு முதல்வரை தெரிந்தவரை தான் தேர்வு செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை.

நல்ல வேட்பாளர் கிடைக்கும் வரை மீண்டும் தண்ணீர் தாகம் தீர்த்த நமது மண்ணின் மைந்தன் மாசற்ற குணாளன் ஒழுக்க சீலன் அன்பின் ஹாஜி வாவு செய்யது அப்துல்ரஹ்மான் அவர்களை மீண்டும் தேர்வு செய்யலாம்.

முஹைதீன் தம்பி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:முன்னாள் நகர்மன்ற தலைவி வ...
posted by Vilack SMA (kangxi) [13 September 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 8094

பதவி ஆசை எல்லோருக்கும் உண்டுதான் . தவறேதும் இல்லை . ஆனால் இந்த அம்மையாரின் அணுகுமுறைதான் சரி இல்லை . ஊர் ஒன்று பட்டு , நாமெல்லாம் ஒருமனதாக ஒருவரை போட்டி இன்றி தேர்ந்தெடுக்க முயற்சி செய்யும் இந்த நேரத்தில் , இந்த அம்மையார் இப்படி தனியாக ஆதரவு கேட்பது , ஊர் நலனுக்கு ஆரோக்கியமானதாக இல்லை . வேண்டுமானால் , இவர் சார்ந்திருக்கும் ஜமாத்தின் அனுமதி பெற்று , காயல் ஐக்கிய சங்கத்தில் விருப்ப மனு அளிக்கலாம் . அவர்கள் பரிசீலித்து முடிவ அறிவிப்பார்கள்

இது , ஊர் ஒற்றுமையை குலைக்க , அம்மையாரின் " பின் புலம் " ஆக யாரோ செயல்படுவது போல தெரிகிறது. ஏனெனில் , தேர்தல் செய்திகள் , சில வாரங்களாக வெளிவந்து , சூடு பிடித்திருக்கும் இந்த வேளையில் , திடீரென இப்போது , நானும் நிற்கிறேன் , எனக்கு ஆதரவு தாருங்கள் என்று கேட்டால் , இது , இவருக்கு பின்னால் இருக்கும் , ஊர் நலனை விரும்பாத சில விசமிகளின் வேலையே !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:முன்னாள் நகர்மன்ற தலைவி வ...
posted by OMER ANAS. (DOHA OATAR.) [14 September 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 8097

மீண்டும் வருவதற்கு மன்னிக்கவும். இங்கு அரசியல் வாடை உள்ளவர்களின் புகழ்ச்சியும் அது இல்லாதவர்களின் கருத்தையும் பார்த்து விட்டு நம் நக்ர்ராட்சிக்கு இவர் அவசியம் என்று மக்கள் கருதுவார்கள் என்றால், JD SADAK சொன்ன மாதிரி இந்த காயல் மக்களுக்கு பஞ்சாயத்திற்கு வெளியில் இருந்து செய்யலாமே!

முன்றாம் அணி வேண்டும் என்று வேறு கருத்தில் சொன்னவர்,(முஸ்லிம் லீக்) இப்ப இந்த அம்மாவிற்கு சாதகமாக கருத்தை பதிவது எதனால்? மதராஸ் பட்டினத்திற்கு தண்ணீர் தர முடியாத அம்மா (யாருக்கு?)தாமர பரணிக்கு தண்ணி காட்டுவது, நடக்கிற காரியமா? நாங்களும் தமிழன்தான்! அரசியலான் யாரையும் நிச்சயம் வர விட மாட்டோம்! நம் ஊரான் உசாராகி விட்டான்! இனி விலை போக மாட்டான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. முன்னாள் நகர்மன்ற தலைவி வ...
posted by hasbullah (dubai) [14 September 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8105

தலைவரை தேர்ந்து எடுக்கலாம் தலைவியை அல்ல அது தலை வழியாய் முடிந்து போக வாய்ப்பு உள்ளது, பின்னால் ஒரு காலம் வரும் அதில் பெண்களே அதிகம் ஆட்சியில் இருப்பார்கள் இது ஒரு கியாமத் நாளின் அடையாளம் என்பதை மறந்து விடாதீர்கள்.

அல்லாஹ்வை அஞ்சி சகோதரர் லுக்மான் அவர்களை போன்று வாக்குறுதி அதோடு மட்டுமல்லாமல் ஜமாத்தின் அங்கீகாரம் உள்ள ஒருவரை தேர்ந்தெடுங்கள்.

தேர்தலில் நிர்க்கவிருப்பவர் முதலில் பள்ளிக்கு வந்து தொழுகையை நிறைவேற்றுபவரா?

இதன் முன்னர் இவர் செய்த சமுதாய பணிகள் ஏதேனும் உள்ளதா அதில் இவருடைய முயற்சி எத்தகையது என்பதை பார்த்தல் நல்லது.

தேர்தலில் போட்டியிடும் நபரை பற்றி அந்தந்த ஜமாஅத் இன் அங்கீகாரம் அல்லது அபிப்பிராயம் தெரிந்து வாக்களியுங்கள்

இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து நியாமாக நடந்து கொண்டு முழு முயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். இதற்க்கு அம்மாவின் ஆதரவோ அனிதா வின் ஆதரவோ தேவை இல்லை என்பது எனது அபிப்பிராயம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. அரசியல் கட்சிகள் பயன்படுத்தும் பிளாக்மெயில்
posted by Salih (Chennai) [14 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 8106

ஆளுங்கட்சியை சார்ந்தவர்/அனுதாபி தான் நகர்மன்ற தலைவராக வரவேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதம் அல்ல. இன்னும் சொல்லப்போனால் ஜனநாயகத்திற்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய சிந்தனை.

அந்த வாதம் சரி என்றால், மத்தியில் ஆட்சி செய்யும் கட்சியே, நாடு முழுவதும், எல்லா மாநிலங்களிலும் ஆட்சி செய்யவேண்டும். மாநிலத்தில் தேர்தலில் வெற்றிபெறும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் - உடனடியாக ராஜினாமா செய்து, இடைதேர்தலில் ஆளும் கட்சி உறுப்பினர் வெற்றிபெற ஆவன செய்யவேண்டும். இது ஜனநாயகம் அல்ல, அரசியல் கட்சிகள் பயன்படுத்தும் பிளாக்மெயில் நடைமுறை.

இந்திய ஜனநாயகம் கட்சிகள் அடிப்படையில் தான் அமைந்துள்ளது. இருப்பினும் - அதிலும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு (MP / MLA) இடம் உண்டு.

தேவை ஊழலற்ற நகர்மன்றம். அரசியல் சாயல் உள்ள எந்த நகர்மன்றதாலும் அதனை தரமுடியாது. மாவட்ட அளவில் வசூல் செய்யவே எல்லா கட்சிகளும், உள்ளாட்சிகளை பயன்படுத்துகின்றன. கட்சி சார்பாக தேர்வாகும் எந்த உறுப்பினரும் / தலைவரும் ஊழலை எதிர்த்து கேட்கமாட்டார்.

ஆளும் கட்சி ஆதரவு தலைவர் இருந்தால் திட்டங்கள் கிடைக்கும் என்பது ஒரு வாதம். ஆனால் சரியான வாதம் அல்ல. சுறுசுறுப்பான, சுத்தமான, விஷயம் தெரிந்த, செயல்புரிய அறிந்த எந்த தலைவராலும் - வரவேண்டிய - நியாயமான - திட்டங்களை வரவைக்க முடியும் - எந்த கட்சியின் தயவும் இன்றி, சட்டத்தின் துணைக்கொண்டு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:முன்னாள் நகர்மன்ற தலைவி வ...
posted by Seyed Ibrahim S.R. (Dubai) [14 September 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8109

We can give a chance to an energetic youth male who will have creative ideas to upbring our town. But will any youth male will contest in this election and that will be a big question mark.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. வள்ளல்கள்,சீமான்கள் இருக்கும் மண்ணு......இது
posted by A.W.Abdul Cader Aalim bukhari (Mumbai) [14 September 2011]
IP: 114.*.*.* India | Comment Reference Number: 8112

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பான காயலர்களே!

ஒரு நபர் எனக்கு பதவி வேண்டும் நான் உங்களுக்கு (நமதூருக்கு) தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் நான் பெற்றுத்தருவேன் என்று சொல்லி தம்மை தலைவராக தேர்ந்தெடுங்கள் என்று நம்மிடம் வேண்டுகின்றார்.

அவருடைய வேண்டுதலை ஒரு பக்கம் வைத்துவிட்டு சற்றுப் பின்னோக்கி நமதூருக்கு இதுவரை வந்துள்ள அனைத்து நலத்திட்டங்களையும் ஒரு கண்ணோட்டம் பார்க்க வேண்டியது நம்மீது முக்கியமான கடமைகளில் ஒன்று....அவற்றின் சிலவற்றை நாம் இங்கு காண்போம்....

1) நாம் இப்போது எந்த ஒன்றுக்காக பாடுபடுகின்றோமோ அது எந்த அரசியல் கட்சியால் நமதூருக்கு வந்தது (நகராட்சி கட்டிடம்)..

2) நமதூருக்கு தேவையான கல்விச்சாலை (பள்ளிக்கூடம் )உருவாக எந்த கட்சியின் மூலம் நமதூர் பெற்றது.....

3 )நமதூருக்கு ஆரம்பமாக குடிநீரை கொண்டு வந்தது.......எந்த கட்சிங்கோ!!!!.....

4) மருத்துவமனை........

5) தெருவிளக்கு..........

6) தற்போது துணைமின் நிலையம் அமைக்க இடம் வாங்கி கொடுத்தது எந்த கட்சி........

இவ்வாறு அடிக்கொண்டே போகலாம் சகோதரர்களே!!

ஆகவே சமுக சேவை செய்வதற்கு அரசியல் பின் பலம் ஒன்றும் அவசியமில்லை. வள்ளல் சீதக்காதி, கொடைவள்ளல்கள் லெப்பை அப்பாக்கள் மற்றும் பல்வேறு தனவந்தர்கள் வாழ்ந்த நமதூரில் பல்வேறு சமுக பணிகளை செய்துவருபவர்கள் தனிநபர்களே அன்றி அரசியல் வாதிகள் அல்ல ஆகேவ இந்த பொறுப்புக்கு வருபவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்கவேண்டும். அதலால் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து செயல்ப்பட்டால் அரசு நமது கோரிக்கைகளை செயல்படுத்தும், இதற்க்கு முதல்வரை தெரிந்தவரை தான் தேர்வு செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:முன்னாள் நகர்மன்ற தலைவி வ...
posted by ibnunahvi (abudhabi) [14 September 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8114

பெண்கலை தலைவியாக ஆக்குவது நமது ஊருக்கு ஏற்படும் பெரிய சோதனை அந்த சோதனை விட்டு அல்லாஹ் நமது ஊர் மக்களை பாதுகாப்பனாக ஆமீன்

இப்னு நஹ்வி ஆலிம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:முன்னாள் நகர்மன்ற தலைவி வ...
posted by OMER K.M.S. (Bangalore / Kayalpatnam) [14 September 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 8116

அஸ்ஸலாமு அழைக்கும்...பெண்களை கண்டிப்பாக தலைவர் பதவிக்கு கொண்டு வரக்கூடாது, மீண்டும் நமது தற்போதைய தலைவர் வாவு செய்யிது அப்துல் ரஹ்மான் ஹாஜி அவர்களை தலைவராக ஆக்குவது மிக மிக நல்லது,

தற்போதைய நகராட்சி வுறுப்பினர்கல் (எல்லோரையும் அல்ல) செய்த காரியங்களால் நாம் வுஷாராக செயல்பட வேண்டி இருக்கின்றது. சில வருஷத்துக்கு முன்னால் நமது ஊரின் பெயரை கெடுத்து அசிங்கம் படுத்தினது நாம் மறக்க முடியாத ஒன்று..

பூவுடன் சேர்ந்த நாறும் மணக்கும் என்ற சொல்லை வைத்து பார்க்கும் பொழுது நமது தலைவர் வாவு செய்யிது அப்துல் ரஹ்மான் ஹாஜி அவர்களை நாம் தேர்ந்து எடுக்கின்ற இந்த நல்ல வுருப்பினர்களோடு அவரையும் சேர்த்து தலைவராக்கி நமது ஊருக்கு நல்லது பண்ண வாய்ப்பு அளிக்க வேண்டும்...THE RIGHT PERSON SHOULD BE WITH THE RIGHT PERSONS & TEAMS....தற்போதைய கவுன்சிலர்களோடு (எல்லோரையும் அல்ல) அவர் இருக்க கூடிய நபர் அல்ல..அதனால் நாம் தேர்ந்து எடுக்கின்ற இந்த நல்ல கவுன்சிலர்கலோடு அவரையும் இணைத்து தலைவராக்க வேண்டும்.... வஸ்ஸலாம்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:முன்னாள் நகர்மன்ற தலைவி வ...
posted by Sayna (Bangkok) [14 September 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 8117

புதியவர்களுக்கு வாய்பு குடுங்க ஆனால் யாருவந்தலும் நம்ம ஊரு தண்ணீர் பிரச்னை தீராது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:முன்னாள் நகர்மன்ற தலைவி வ...
posted by Riluvan (Michigan) [14 September 2011]
IP: 99.*.*.* United States | Comment Reference Number: 8120

I echo the views of Salih and Abdul Cader Alim Bukhari. There isn’t data to prove those with political background excel in deliverance. Political background is immaterial for a capable panchayat leader. All it takes tireless efforts, steadfastness and vision. Not only those with national party background delivered too little, but also none of the national parties operate democratically anyway. None of them practice democracy within the party and are all individuals’ fiefdoms. Although, quiet understandably, for the benefit of town the national parties should be kept out of this local body election, the process should give room for a healthy democratic competition.It is for the good of the town to elect a president with principles and who identifies himself or herself with the people than who can bend the rules to achieve the goal.

People who have interest should be allowed to put forward their social service vitae and their vision for the town. There is nothing wrong for a person to express his or her interest to run for office. Atleast some are brave enough to brush the leadership; and needless to remind this is not a feather on the crown and this is not a decorative position.

There should be fresh blood in the leadership every five to ten years regardless of the deliverance by incumbent town president. This will bring new thoughts and new way of looking at matters. It is necessary to keep the society vibrant and progressive. The town president should be active and approachable by people from all wakes of life. Should be open minded, but strong minded; humble, but determined; pragmatic, but uncompromising.

If a woman is capable, she should be allowed to hold office. The prejudice against women in leadership is unhealthy and setting up a wrong precedence. There isn’t any data to prove women as bad leaders and men as better leaders. Irony is women are already in leadership roles in many kayalpatnam homes where the figurative head of house, the father, is missing for most part of a healthy family relationship and women in kayalpatnam doing much better than their male counterparts when it comes to acquiring knowledge.

Give podium for all candidates to put forward their vision; let people question them in public; and let the people decide. When there is already a process to elect the president, why innovate another process and why attempt to project single leader? Just like there is no data to prove those with political background can deliver, there isn’t any data to prove fielding more than one candidate would undermine the unity. If people think there will be problem with the unity, then it is really shame that people haven’t learned their lessons and mature in intellectual plurality.

But whoever are the candidates – make sure

a) The sign up in writing that they will resign their position if they doeth wrong when in the office. They will resign if more than half the eligible voters in the town signs up for recall.

b) They will be accountable for each and every promise they make.

c) They understand what it means to be a town president.

d) They understand the current issues in the town.

e) They understand the Himalayan efforts.

The rights to elect and recall should reside with the commoners. Those take up responsibility should be made accountable that they live up to it. There isn’t anything like democracy for making change without spilling the bloods; however, democracy as practiced in India has lot of its flaws. It fails to assure confidence to the same people who elects the leaders and often they are let down by the system; nevertheless, it shouldn’t hinder any value-add covenants for checks and balance.

(Requesting the admin again:- hide the email ids - please.

a) my email id don't assure you that it is me who is posting;

b) it adds more bad than good.)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:முன்னாள் நகர்மன்ற தலைவி வ...
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [14 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 8147

Reg the comment by Sis Lareefa Seyed Omer. The Surah name is clear. But the figure pointed to Surah Al Imran.

அரசியல் பின்னணி இல்லாத ஒரு அரசியல் காயலில் அமைய இறைவனை பிரார்த்திப்போமாக.

புரியவில்லையே.. முதலாம் அரசியலாக இங்கே நான் குறிபிட்டது அசிங்கமான தமிழக அரசியல்.

இரண்டாம் மற்றது இறைவனின் துணையோடு ஏகோபித்த மக்களின் தேடுதல் வேட்டையில் நடைபெற போகும் அரசியல். இன்ஷாஅல்லாஹ். நன்மையை நாடுவோமாக.

அப்புறம் என்ன. ஆபிரகாம் லிங்கன் போல

Government of the people, by the people, for the people, shall not perish from the Earth.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:முன்னாள் நகர்மன்ற தலைவி வ...
posted by Shamsudeen (Abu Dhabi) [15 September 2011]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8163

நாமாக மசுரா செய்து தேர்ந்தேடுப்பவரே நல்ல தலைவன் .

சிந்திப்போம் செயல்படுவோம் .

Administrator: Commented edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. ஒத்துழைப்பை கொடுக்க வேண்டியது உங்களது கடமையாகும்.
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [15 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8183

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

மக்களே!

உள்ளாட்சி அமைப்பு என்பது - அரசியல் , அதிகார தொடர்பு இல்லாமல் - மக்களை நேரிடையாக சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் அமைப்பு.

இதில் எந்த அரசியல் கட்சியும் தலையிட்டால் - அது ஆளும் கட்சியானாலும் சரி, எதிர் கட்சியானாலும் சரி - அந்த அமைப்பு முழுக்க , முழுக்க ஊழல் நிறைந்தவகையாகத்தான் இருக்கும், அதற்கு எந்த நகரும், நாடும் விதிவிலக்கல்ல.

இந்த சூத்திரத்தை மக்கள் விளங்கிக் கொண்டால் - அதன்படி செயல்பட்டால் நல்ல நகர்மன்றங்கள் உருவாகும்.

------------------------------------

விதிவிலக்கு :-

சகோதரியும் நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கிற நமது மார்க்கத்தின்படி ஒரு பெண் இந்தமாதிரி பதவிக்கு வருவதை முடிந்தவரை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் அரசாங்கத்தின் சட்டப்படி ஒரு பெண்தான் போட்டியிட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிறபோது அதிலே விதிவிலக்கு உண்டு அந்த விதிவிலக்கை பயன்படுத்தியே முன் சென்ற காலங்களில் நமது ஊரிலே இரு சகோதரிகள் நகர்மன்ற தலைவியாக பதவி வகித்தார்கள்.

அவர்கள் எல்லாம் நல்ல நிர்வாகத்தை செய்தார்களா? என்றால் இல்லை என்றே சொல்வேன் . காரணம் அவர்கள் நல்ல திறமையானவர்களாக இருந்திருந்தால் இன்று நமது நகர்மன்றம் ஊழல் குறைந்ததாக இருந்திருக்கும் - ஊழல் இவ்வளவு அதிகமாக பெருகி இருக்காது.

-------------------------------------

ஆண்களின் காலம் :-

அரசாங்கம் பெண்களுக்கும் ஆட்சி அதிகாரங்களில் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக காலங்களை ஒதுக்கி இருக்கிறது. அதன்படிதான் நமது இரு சகோதரிகளும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட காலங்களில் நின்று பதவி வகித்தார்கள்.

ஆனால் இப்போது நடக்க இருக்கும் தேர்தல் ஆண்களுக்காக ஒதுக்கப்பட்ட காலம் என்பதால், சகோதரி, இப்போது போட்டியிட இருப்பதாக சொல்வது பொருத்தமன்று.

-------------------------------------

ஊர் ஒற்றுமை :-

நமது ஊரை பொறுத்தவரை சட்டசபை தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும்தான் அரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டிலும் - நகர்மன்ற தேர்தல் ஊர் ஒற்றுமைக்காக ஊர் பெரியவர்களின் கட்டுப்பாட்டிலும் , அறிவுறுத்தலின்படியும் நடந்துக்கொண்டிருக்கிறது.

அதனால் சகோதரி அவர்கள் ஊர் ஒற்றுமைக்கு அணி சேர்க்கும் வகையில் 1) இந்த தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்திருக்கலாம். 2) ஊர் ஒற்றுமையை விரும்பி ஐக்கிய பேரவையின் மூலம் / தாங்கள் சார்ந்திருக்கும் ஜமாஅத்'தின் மூலம் அவர்கள் அனுமதி பெற்று இந்த செய்தியை வெளியிட்டிருக்கலாம்.

அப்படி ஊர் ஒற்றுமையில்லாமல் நீங்கள் தலைவி பதவியை நாடுவதில் என்ன அர்த்தமிருக்கிறது ? சிந்தித்துப் பாருங்கள்.

------------------------------------------

முடியாததை செய்தீர்களா ?

சகோதரி , தாங்கள் முன்பு நம் நகர்மன்ற தலைவியாக இருந்தபோது அதை செய்தேன், இதை செய்தேன் என்று பட்டியலிட்டிருப்பதை மீண்டும் படித்து பாருங்கள் - இதை ஊர் தலைவராக இருக்கும் யாரும் செய்ய முடியாதா? இது உங்களுடைய கடமை இல்லையா ? அல்லது எந்த ஊரிலும் யாரும் செய்யாததை நீங்கள் பிரத்தியேகமாக செய்திருக்கிறீர்களா ? இதையும் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.

------------------------------------------

ஊழல் அல்லாத நிர்வாகம் நடந்ததா ???

சகோதரி, தாங்கள் சென்ற முறை நகர்மன்ற தலைவியாக பதவி வகித்த காலத்தில் - ஊழல் அற்ற நிர்வாகம் நடந்ததா ? ஊழலை ஒழிக்க ஏதும் முயற்சித்தீர்களா ? - நகர்மன்றத்தை நாடி வந்த மக்களில் சிலராவது தங்கள் தேவைகளை சரியான நேரத்தில் , முறையாக பெற்று சென்றார்களா ?

இல்லை மீண்டும் போட்டியிட போகிறதாக சொல்லும் நீங்கள் ஊழலை , ஒழிப்பேன் - ஊழலற்ற நிர்வாகம் நடத்துவேன் , மக்கள் குறைகளை என்னிடம் நேரில் சொல்லலாம் என்ற உத்திரவாதத்தையாவது உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்களா ? இல்லையே ???.

------------------------------------------

தமிழக முதல்வருடனான நெருங்கிய தொடர்பு :-

உங்களுக்கு தமிழக முதல்வருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதனால் - ஊருக்கு நல்லதை செய்வதற்கு இந்த நகராட்சி தலைவி பதவி அவசியமில்லை , அந்த பதவியை பெறாமலே நிறைய செய்யலாம்.

மிகவும் முக்கியமாக நமது ஊரில் பரவி கிடக்கின்ற கொடும் வியாதியான புற்று நோய் பரவ காரணியாக இருப்பவைகளை கண்டறிந்து அதை நமது முதல்வருடைய கவனத்திற்கு கொண்டு சென்றால் உங்களுடைய நெருக்கத்தின் காரணமாக அவைகளை களைந்திட உதவிடுவார், எனவே அப்படி நல்லவைகளை நம் ஊருக்கு செய்து உங்கள் பொது வாழ்வை சிறப்படைய செய்யுங்கள்.

-----------------------------------------

மக்களின் தேவை :-

இன்றைய சூழலில் நமது ஊருக்கு தேவை தடங்கலில்லாத தண்ணீரோ , மின்சாரமோ அல்லது நல்ல பல திட்டங்களோ அல்ல. மிக மிக்கியமான தேவை ஊர் ஒற்றுமையும், ஊழலற்ற நகர்மன்ற சேவையும்தான்.

ஆகையால் அதற்கு தங்களால் இயன்ற ஒத்துழைப்பை கொடுக்க வேண்டியது உங்களது கடமையாகும்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:முன்னாள் நகர்மன்ற தலைவி வ...
posted by Vilack Sd.Md.Ali (Kangxi) [16 September 2011]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 8207

அஸ்ஸலாமு அழைக்கும்.

N .S .E . மஹ்மூது மாமா , நீங்கள் குறிப்பிட்டது போல , அன்று இரண்டு சகோதரிகள் ஆட்சி செய்தது , பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்ற முறையில் . ஆனால் இப்போது நடக்க இருப்பதோ பொதுவான ஒரு தேர்தல். இதில் ஆண்கள் மட்டும்தான் கலந்து கொள்ள வேண்டும் , ஆண்களுக்கான இட ஒதுக்கீடு என்றெல்லாம் எந்த விதி முறையும் இல்லை. மனதில் திடம் உள்ள ஆண் , பெண் யார் வேண்டுமானாலும் போட்டி இடலாம்.

சகோதரி வஹீதா அவர்கள் போட்டி இட விரும்பியது அவர்கள் விருப்பம் . இதில் தவறு ஏதும் இல்லை . ஆனால் சகோதரியின் அணுகுமுறைதான் தவறானது .

நாமெல்லாம் , ஒற்றுமையுடன் , போட்டியின்றி ஒருவரை தேர்ந்தெடுக்க முயற்ச்சி செய்யும் இந்த வேளையில் , இவர் தனியாக ஆதரவு கேட்பது ஊர் நலனை குலைக்க வழி வகுக்கும். காயல் ஐக்கிய சங்கமும் , தற்போது யார் மேண்டுமானாலும் application தரலாம் என்று அறிவிப்பு செய்திருக்கிறார்கள் .

சகோதரி அவர்கள் விரும்பினால் உங்களை சார்ந்த ஜமாத்திடம் , உங்கள் திறமைக்கான சான்றிதல் பெற்று application போடலாம். காயல் ஐக்கிய சங்கம் பரிசீலித்து முடிவு எடுப்பார்கள்.

மேலும் , மாமாவின் ஆதங்கம் , சகோதரி " நான் லஞ்சம் வாங்க மாட்டேன் , நேர்மையாக இருப்பேன் " என்றெல்லாம் சொல்ல வில்லையே என்று ! பதவிக்கு வருபவர் , பதவி பிரமாணம் எடுக்கும்போது " கடவுள் அறிய , நான் சுத்தமானவன், உண்மையானவன் " என்றெல்லாம் சொல்லித்தான் பதவி பிரமாணம் எடுக்கிறார்கள். பிறகுதான் , , அவர் அதை எடுத்து விட்டார் , இதை எடுத்து விட்டார் , அப்படி , இப்படி என்றெல்லாம் சொல்லி நாம் புலம்பிக்கொண்டு இருக்கிறோம்.

ஆகையால் சகோதரி இப்படியெல்லாம் சொல்ல வில்லையே என்பதை ஒரு பொருட்டாக எடுக்க வேண்டாம். எல்லோரையும் போல அவர்களும் application போடட்டும் . காயல் ஐக்கிய சங்கம் பரிசீலித்து முடிவு எடுப்பார்கள்.

சகோதரிக்கு வேண்டுகோள் : தயவு செய்து , தனியாக போட்டிக்கு நின்று ஊரின் ஒற்றுமையை குலைக்க முயற்சிக்காதீர்கள் . விருப்பம் இருப்பின் காயல் ஐக்கிய சங்கத்திற்கு application போடுங்கள் . உங்கள் திறமையை பரிசீலித்து முடிவு செய்வார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. யாவருக்கும் இஷ்டம் இல்லை......
posted by AbdulKader (Abu Dhabi) [16 September 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8210

அஸ்ஸலாமு அழைக்கும்.....

இன்றுவரை பதிவு செய்யப்பட்ட கருத்துக்களில் யாருமே முன்னாள் நகர்மன்ற தலைவி வஹீதா மீண்டும் போட்டி இடுவதை ஆதரிக்கவில்லை.

ஆகையால், சகோதரி வஹீதா அவர்கள் ஊரின் ஒற்றுமைக்காக தங்களின் போட்டி இடும் நோக்கத்தை கைவிட்டால் நல்லது. இது என்னுடைய சொந்த கருத்து. அப்படி அவர்கள் செய்வார்களேயானால், ஊரின் ஒட்டுமொத்த நன்மதிப்பையும் அவர்கள் பெருவார்கள் என்று நான் நினைக்கிறேன்.

வஸ்ஸலாம்
அப்துல்காதர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:முன்னாள் நகர்மன்ற தலைவி வ...
posted by M.A.RAHIM (MADURAI) [16 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 8226

Dear brothers of Kayal, Salams!

It is really interested to see few of your comments on the above captioned subject. As my dear freind, Seyed Omer has rightly noted (though his wife has a different opinion altogether), our Ex.President Mrs. Waheedha has a cordial relationship with the current ruling party of Tamilnadu and it will always yield better results to our community in general.

I have seen most of the comments have an emotional value instead of having anything practical. Few people normally speaks emotionally in all sort of the life and may lose to harvest the right crop at the right time. If someone talks on the practical way of getting some good works to our Kayal community through the goverment, we irrespective of all category, echoes sentimental / emotional feelings and make an age old cries viz... women contesting is not permissable and political personalities should be avoided as such.

Kindly let me know in what way if an influential person like Mrs.Waheedha contested the election would affect the unity of our native? Are we all so united now in all the issues??. She has had a very good past record of being in the helm of affairs last time. We should not forget that our out-going Chairman is also having a political affinity in terms of Muslim League and he himself is NOT APOLITICAL! Then why not we have a highly educated women like Mrs.Waheedha to contest this election with the consent of all our Jamaths. It will indeed benefit our town in many ways as the present government is going to be there for next five years for sure! Nothing will happen to any local bodies adminsitration with out the support of either Amma or Aiyya!

We should not forget that our Tuticorin district is comprised of two muncipalities in Kovilpatti & Kayalpatnam which is very much a prestiegious issue for all political parties. Hence, the present goverment may also look in to our municipality without any doubt. So, we should have a consensus in having a reasonable person like Mrs.Waheedha who will definitely do justice to her position as she did last time and will get lots of benefits to our town aswell. Let us all pray for the best to the Almighty!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:முன்னாள் நகர்மன்ற தலைவி வ...
posted by Solukku Seyed Mohamed Sahib SMI (Jeddah, Saudi.) [18 September 2011]
IP: 168.*.*.* United States | Comment Reference Number: 8368

இது ஒரு தவறான முன்னுதாரணம், எல்லோருமாக ஒருமித்த கருத்தோடு தலைவரை தெரிவு செய்யும் நேரத்தில் இப்படி தனியாக போட்டியிடும் முடிவு ஒருமித்த கருத்துக்கு எதிரானது, அப்படி தனியாக போட்டியிட்டால் புறக்கணிப்பதே சரியாகும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2018. The Kayal First Trust. All Rights Reserved