Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:34:43 PM
சனி | 9 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1927, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:0715:2818:0119:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:41
மறைவு17:54மறைவு---
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4119:06
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7216
#KOTW7216
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், செப்டம்பர் 13, 2011
முஸ்லிம் லீக் கட்சியின் பொது செயலாளராக அபூபக்கர் மீண்டும் தேர்வு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4344 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (31) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில புதிய பொதுக்குழு கூட்டம் 10-09-2011 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு தஞ்சை மாவட்டம் ஆடுதுறையை அடுத்துள்ள திருமங்கலக்குடி அஸ்ஸலாம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மேலிடப் பார்வையாளரும், தேசிய செயலாளருமான டெல்லி குர்ரம் அனீஸ் உமர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ் நாடு மாநில தலைவராக பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநில பொதுச் செயலாளராக - காயல்பட்டினத்தை சார்ந்த - கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர், பொருளாளராக ராமநாதபுரம் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் ஆகியோரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தகவல்:
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி இணையதளம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:முஸ்லிம் லீக் கட்சியின் ப...
posted by Mohamed Salih (Bangalore) [13 September 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 8038

மாஷா அல்லாஹ் ..

வாழ்த்துக்கள் மிஸ்டர் அபூபக்கர் ..

உங்கள் பனி சிறக்க என் மற்றும் பெங்களூர் காயல் நல மன்றம் சார்பாக வாழ்த்துக்கள் ..

பெங்களூர் ரில் இருந்து
முஹம்மத் ஸாலிஹ் ...
மற்றும் KWA - Bangalore.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:முஸ்லிம் லீக் கட்சியின் ப...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (காயல்பட்டினம் ) [13 September 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 8042

சகோ.அபூபக்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

தங்களுக்கும் நம் ஊருக்கும் மீண்டும் பெருமை கிடைத்துள்ளது.

பற்பல பிரிவுகளாக பிரிந்து இருக்கும் நம் சமுதாயத்தை ஒரே அணியாக, பலமிக்க அணியாக உருவாக தங்கள் முயற்சி செய்து, அப்படியே நடக்கும் காலத்தை காண ஆவலாக இருக்கின்றோம். வல்ல ரஹ்மான் அதற்க்கு துணைபுரிவானாக.

சாளை S.I.ஜியாவுதீன், காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. அண்ணன் தமிழர் தொல், திருமாவளவன் அவர்களுடன் தோழமை வைத்து கைகூர்த்து வாருங்கள்... வெற்றி நிச்சயம்..
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [13 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8043

அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ் நாடு பொது செயலாளராக மீண்டும் அபூபக்கர் தேர்வு செய்யபட்டமைக்கு வாழ்த்துக்கள்... இனி வர கூடிய சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம் லீக் கட்சி பழைய தோழமை கட்சிகளுடன் கூட்டணி சேராமல் 3 வது அணி அமைத்து குறைந்தது 10 தொகுதிகளிலாவது நிற்க முயற்சி எடுங்கள்..

மாறி மாறி இங்கேயும் அங்கேயும் (A D M K - D M K) என்று செல்லாமல் 3 வது அணி உடன் நின்று வெற்றி பெற முயற்சி எடுங்கள்.

அண்ணன் தமிழர் தொல், திருமாவளவன் அவர்களுடன் தோழமை வைத்து கைகூர்த்து வாருங்கள்... வெற்றி நிச்சயம்..

3 வது அணி உடன் நின்று வெற்றி பெற வாழ்த்துக்கள்..

என்றும் நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.
(தொண்டன் - விடுதலை சிறுத்தைகள் கட்சி)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:முஸ்லிம் லீக் கட்சியின் ப...
posted by SUPER IBRAHIM S.H. (RIYADH - K.S.A.) [13 September 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8045

மாஷா அல்லாஹ் ..

வாழ்த்துக்கள் தம்பி ஹாஜி அபூபக்கர் அவர்ஹள்!!! தாங்கள் சின்ன பிள்ளையஹா இருக்கும் பொழது முஸ்லிம் லீக் கொடியை தெருவில் பறக்க விட்டவர் என்பது மறக்கமுடியாத உண்மை. தேர்தல் நேரங்களில் படு பிஸி ஆஹா பணியாற்றி வருவீர்ஹல். ஒரு முறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரளிங்கத்துடன் சண்டை போட்டதும் நினைவுக்கு வருகிறது, சுமார் இருபது ஆண்டுஹளுக்கு முன்பு. வாவு. சம்சுதீன் ஹாஜியார் நாம் எல்லோர்ஹளுகும் தேர்தல் களப்பணி பயிற்சி கொடுதர்ஹள்.

இன்ஷா அல்லாஹ் நிச்சயம் நீங்கள் ஒரு நாள் சட்ட சபைக்கு செலக்ட் ஆஹி செயல் பட வேண்டும் என்பது எனது ஆசை. தொடரட்டும் உங்கள் பணி!!!! தம்பி!!!

என்றும் அன்புடன் சஹோதரன்,

சூப்பர் இப்ராகிம் ச.ஹ.
சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இதயப்பூர்வ நல்வாழ்த்துக்கள்..
posted by சட்னி.செய்யது மீரான், (,காயல்பட்டினம் ) [13 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8047

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

என் அன்பினும் இனிய தம்பி ஹாஜி ,குளம்,எ.எம்.முஹம்மது அபூபக்கர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ் நாடு மாநில பொதுச் செயலாளராக காயல்பட்டினத்தை சார்ந்த நீங்கள் மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி...மப்ரூக் ,,மப்ரூக்

மேலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ் நாடு மாநில தலைவராகதேர்ந்து எடுக்கப்பட்டுள்ள பேராசிரியர்,ஹாஜி கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கும் மற்றும் நிர்வாகிகளாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள அனைத்து பெரியோர்களுக்கும்,நல்லோருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்...

வல்லோன் அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் நீங்கள் செய்யும் அனைத்து நல்ல காரியங்களுக்கும் துணை இருந்து நல் அருள் புரிவானாக ஆமீன்.

இதயப்பூர்வ நல்வாழ்த்துக்கள்....

அன்புடன்.சட்னி.செய்யது மீரான்,காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:முஸ்லிம் லீக் கட்சியின் ப...
posted by SHOLUKKU AJ.MD.MANSOOR (LONDON) [13 September 2011]
IP: 86.*.*.* United Kingdom | Comment Reference Number: 8052

ASSALAMUALAIKUM ..... CONGRADULATION & ALL THE BEST 4 KEEP GOING UR STATUS ....NOW U HAVE MORE RESPONSIBLE TO DO UR TEAM & PUBLIC .........KEEP IT UP MY DEAR FRND ......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. உளமார வாழ்த்துகிறோம்
posted by சாளை ஷேக் சலீம் (Dubai) [13 September 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8054

அன்புத்தம்பி அபூபக்கர் அவர்களே, காயலரகள் சார்பில் எங்களின் அன்பான வாழ்த்துக்கள். மீண்டும் நீங்களே இவ்வளவு பெரிய ஒரு சமுதாய கட்சிக்கு பொது செயலாளர் ஆகி இருப்பது காயல்பட்டினம் புகழுக்கு மற்றுமோர் கிரீடம். தமிழகத்தின் இஸ்லாமியர்களுக்கு நீங்கள் என்றும் ஓர் எடுத்துக்காட்டாய் திகழ்ந்து, நீங்கள் எந்த உச்சத்தை அடைந்தாலும், நம் சமுதாயத்திற்க்காக குரல் கொடுத்து, தன்னலமற்ற சேவையில் இன்னுமொரு காயிதே மில்லத் ஆக திகழ வல்ல அல்லாஹ் அருள் பாளிப்பானகவும். ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:முஸ்லிம் லீக் கட்சியின் ப...
posted by Abumisbah (Jeddah) [13 September 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8056

தம்பிக்கு காக்காவின் வாழ்த்துக்கள். உன் சமுதாய பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவன் என்றென்றும் உதவி புரிவானாக. ஆமீன்

குளம் அஹமது முஹியதீன்
ஜெட்டாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:முஸ்லிம் லீக் கட்சியின் ப...
posted by OMER ANAS (DOHA QATAR.) [13 September 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 8058

வாழ்த்துக்கள் நம் குடும்பம் சார்பாக தம்பி! மிக்க பெரூமை அடைகிறோம். நல்ல பல காரியங்களை தான் நம் இஸ்லாமிய சமுதாயத்திற்கு பெற்றுத்தர துஆ செய்கிறோம்! ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:முஸ்லிம் லீக் கட்சியின் ப...
posted by Fuad (Singapore) [13 September 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 8062

அன்புச்சகோதரர் அபூபக்கர் அவர்கள் மீண்டும் தமிழ் நாடு முஸ்லிம் லீக் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பது நமதூருக்கு கிடைத்த நல்ல அங்கீகாரம். சகோதரர் அவர்களை நான் நேரில் பார்த்ததில்லை. அவரின் பணிகள் சிறக்க வல்ல அல்லாஹ் துணை புரிவானாகவும். ஆமீன்.

நமதூருக்கு அவரால் முடிந்த உதவிகளை செய்வார் என்று மனதார நம்புகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. எங்கள் மனம் குளிர்கிறது!...
posted by kavimagan (dubai) [13 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8065

அருமைச் சகோதரர் அபூபக்கர் அவர்களே!

உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? மூன்றாண்டுகளுக்கு முன்பு,சகோதரர் டெல்லி குர்ரம் அனீஸ் சார் அவர்களை கத்தரில், நானும், கே.வி.ஏ.டி.ஹபீப் ஹாஜியார் அவர்களும் மரியாதை நிமித்தமாக சந்தித்த போது , எங்களை காயல் பட்டணம் என்று சுயஅறிமுகம் செய்தபோது, அவர் முதலில் கேட்டது " தம்பி அபூபக்கர் நலமாக இருக்கிறாரா? " என்ற கேள்விதான்.அதன்பிறகு ஹபீப் அவர்கள் அங்கிருந்தே அலை பேசியில் தொடர்பு கொண்ட போது " இயக்கத்தில் என்னை விடவும் சீனியர் " என்று ஹபீப் அவர்களை உமர் சாரிடம் பெருந்தன்மையுடன் அறிமுகப்படுத்தி என்னோடும் பேசினீர்கள்.

இவை அத்தனையும் நான் எழுதக்காரணம்,அந்த அலைபேசி உரையாடலுக்குப் பிறகு உமர் அவர்கள் எங்களிடம் சொன்னது," இயக்கம் கண்டெடுத்த எழில்முத்து இவர். இவரால் பெருமை உங்கள் ஊருக்கு மட்டுமல்ல! ஒட்டுமொத்த தமிழகத்திற்கும்".

அப்போது எங்கள் இதயம் குளிர்ந்தது! இப்போதும்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. அபூபக்கர் மீண்டும் தேர்வு!
posted by AbdulKader (Abu Dhabi) [13 September 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8068

அஸ்ஸலாமு அழைக்கும்,

தம்பி அபூபக்கர்...மப்ரூக்..... வாழ்த்துக்கள் பல குவிந்து கொண்டு இருக்கிறது....

அருமை தம்பி அபூபக்கர் அவர்களை முஸ்லிம் லீக் கட்சியின் பொது செயலாளராக மீண்டும் தேர்வு செய்ததற்காக, நான் காயல்பட்டிணம் மக்கள் சார்பாக என்னுடைய நன்றியினை முஸ்லிம் லீக் கட்சிக்கு தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் இவருடைய முஸ்லிம் சமுதாய பணி சிறக்க அனைவர்களும் துஆ செய்ய வேண்டுகிறேன்.

வஸ்ஸலாம்
அப்துல்காதர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:முஸ்லிம் லீக் கட்சியின் ப...
posted by Salai Syed Mohamed Fasi (AL Khobar) [13 September 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8069

Congratulation
Pleasure to see this glad news.He is able and capable person.He is magnanimous and helping tendency person.My hearty wish for his second time selected.
Best regards
Salai Syed Mohamed Fasi
AL Khobar


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:முஸ்லிம் லீக் கட்சியின் ப...
posted by mohmed younus (chennai) [13 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 8077

சரியான நபர், தவறான கட்சி. இதுதான் என் ஆதங்கம். அவர் ஆற்றுகின்ற பணிகளுக்கு அவர் வீரியமான இயக்கத்தில் இருந்தால்,அவரால் நம் சமுதாயத்திற்கு நிறைய நன்மைகள் கிடைத்து இருக்கும்.

என்னால், என் நண்பர்களிடத்தில்,வரவிருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்க பட்டவர்.

அவரோடு இயக்கத்தில் ஒன்றாக இருந்தபோது ஏற்பட்ட அனுபவத்தினால் சொல்லுகிறேன். மிக சரியான நபர். இறைவன் உங்களின் அயராத உழைப்பினால், உங்கள் இயக்கத்தை வீரியம் கொண்ட இயக்கமாக ஆக்குவனாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:முஸ்லிம் லீக் கட்சியின் ப...
posted by Moulavi Hafil M.S.Kaja Mohideen Mahlari. (Singapore. ) [13 September 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 8080

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பின் சகோதரர் அபூபக்கர் அவர்கள் மீண்டும் முஸ்லிம் லீக் கட்சியின் பொது செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளது அவருக்கும், நமது காயல் நகருக்கும் பெருமை. இதற்க்காக அக்கட்சியின் நிர்வாகம் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம். அவரின் சமுதாய பணிகள் மென்மேலும் சிறந்தோங்க எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கும், அவர் சார்ந்த கட்சிக்கும், நம் ஒற்று மொத்த முஸ்லிம் சமுதாயத்திற்கும் பேரருள் புரிவானாக! ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. உள்ளங்கனிந்த வாழ்த்துக்கள்
posted by SEYED MUSTAFA (DOHA - QATAR) [13 September 2011]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 8084

உங்களுக்கு கிடைத்த இந்த வெற்றிக்கு எனது உள்ளங்கனிந்த வாழ்த்துக்கள். இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் உங்கள் பணி சிறக்க வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:முஸ்லிம் லீக் கட்சியின் ப...
posted by ABU HURAIRA (ABU DHABI) [13 September 2011]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8086

அன்புள்ள காக்கா அபு பக்கர் அவர்கள் மீண்டும் பொது செயலராக தேர்வு செய்யப்பட்டது நமக்கு எல்லாம் மிகவும் பெருமையாக இருக்கின்றன.

அவரின் சேவை, காயல் மண்ணிருக்கு என்றும் தேவை. உங்களின் சேவை தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். அஸ்ஸலாமு அழைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:முஸ்லிம் லீக் கட்சியின் ப...
posted by mohamed yoonus (qatar) [13 September 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 8090

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

வாழ்த்துக்கள் ....

என் அன்பின் நண்பர் ஜனாப் அபுபக்கர் அவர்களை செயலாளர் பதவிக்கு மீண்டும் தேர்வு செய்த தாய் சபையின் உறுப்பினர்களுக்கு நன்றிகள்.

உங்கள் சமுதாய சேவை தொடர வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. ஜிந்தாபாத்...!!! ஜிந்தாபாத்...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக். (புனித மக்கா.) [14 September 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8096

முன்பு ஓர் முறை நான் லீக்கை யும் அதன் பொருப்பில் உள்ளவர்களையும் சாடி எழுதியிருந்தேன்.ஆனால் தாங்கள் சமுதாய அக்கரை உள்ளவர்கள் தாம் என தற்போதைய பொருப்பாளர்களும்,அதன் நிர்வாகிகளும் திறம்பட செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.ஓர் புதிய வேகம்,உற்சாகம்,ஆர்வம்,அக்கரை என அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இளவல் அபூபக்கர் போன்ற துடிப்பு மிக்க இளைஞர்கள் இன்னும் லீகில் சேர்ந்து சமுதாயப் பணியாற்ற வேண்டும்.(தமிழ் நாட்டில்)அனுபவத்தால்,பழமையால் கூண் விழுந்த லீக்கிற்கு ஓர் ஊன்றுகோலாய் நின்று பேரியக்கம் மீண்டும் தழைக்க முன்வர வேண்டும்.முஸ்லிம் லீக் கட்சியின் பொது செயலாளராக அபூபக்கர் மீண்டும் பதவியேற்றிருப்பதில் மகிழ்ச்சி!!!வளர வாழ்த்துக்கள்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:முஸ்லிம் லீக் கட்சியின் ப...
posted by Muhammad Ibrahim (Guangzhou) [14 September 2011]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 8104

அஸ்ஸலாமு அழைக்கும் அபூ,

வாழத்துகள் நண்பா! இன்ஷாஅல்லாஹ் நீ ஒரு நாள் சட்ட சபைக்கு செலக்ட் ஆஹி செயல் பட வேண்டும் என்பது எங்களுடைய ஆசை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. காயல் நகரத்துக்கே பெருமை சேர்க்கும் ஒரு பேரியக்கத்தின் செயல் வீரரே வாழ்க !
posted by K.V.A.T.HABIB MOHAMED (QATAR) [14 September 2011]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 8133

அன்புடையீர் ! இங்கே நமக்கெல்லாம் பூரிப்பு அடைகிற நற்செய்தியாக அன்பு நண்பர் இளவல் அபூபக்கர் ஹாஜியார் அவர்கள் மீண்டும் தாய் சபையாம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ் மாநில செயலாளராக ஏகமனதாக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுத்திருப்பது பெருமைக்குரிய விஷயமே ...நாம் அனைவரும் ஒன்று சேர கட்சி பேத மின்றி இந்த வலை தளத்தின் மூலம் வாழ்த்துவதை இந்த தமிழகமே உற்று நோக்கும் . வாழ்த்துக்களை இங்கே பதியுங்கள் ....அட்லீஸ்ட் ஒரே ஒரு வார்த்தை...அது நம்ம ஊருக்கு பெருமை சேர்க்கும் .

மேலும் இங்கே கருத்தை பதிவு செய்தவர்களெல்லாம் தாய் சபையின் அங்கத்தினர்கள் அல்லர் . இருந்தும் பெருமை பட பதிவு செய்திருக்கிறார்கள் . கவிமகன் காதர் அவர்கள் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கத்தார் வந்திருந்த தேசிய செயலாளர் குர்றம் அவர்கள் சந்திப்பில் நண்பர் அபூபக்கர் பற்றிய ஒரு குறிப்பை இந்த தருணத்தில் கூறி இருப்பது அபு பக்கர் அவர்களின் பெருந்தன்மையை வெளிப்படுத்திக்காட்டியது என்பதை தெரிவிப்பதற்கே....சாளை சலீம் அவர்கள், சட்னி மீரான் அவர்கள் போன்றோர்களெல்லாம் பெருமை பட தாய் சபையாம் முஸ்லிம் லீகை பேரியக்கம் என்று கண்ணிய மாக எழுதி இருக்கிறார்கள்..ஏனோ யூனுஸ்(சென்னை) அவர்கள் கண்ணனுக்கு மட்டும் தவறான இயக்கமாக தெரியுதோ? காட்சியில் குழப்பம் என்றும் வருவதில்லை...மாறாக காணும் கண்ணில் தான் கோளாறு...ஒரு குடும்பத்தைப்பற்றி வெளியே நின்று கொண்டிருப்பவன் விமர்சனம் செய்வதற்கு அருகதை அற்றவன் ...மாறாக அந்த குடும்பத்தில் ஒருவனாக உள்ளே வந்து , தகுந்த ஆலோசனைகளை வழங்கினால் உங்களை ஆரத்தழுவி அரவணைத்து பாராட்டும் ....உங்களைப்போன்ற சமுதாய சிந்தனை நிரம்பிய நல்ல உள்ளங்களை இந்த தருணத்தில் தாய் சபைக்கு வாருங்கள் என்று அன்பு அழைப்பு விடுக்கிறோம்...அபூபக்கர் அவர்களோடு இணைந்து சமுதாய சேவை ஆற்ற வாருங்கள் . காயல் நகருக்கு மட்டும் அல்லாமல் இந்த ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயத்துக்கும் பெருமை சேர்ப்போம் .

தாய் சபையாம் முஸ்லிம் லீகின் தகுதிவாய்ந்த தலைவர் ...செயலாளர் ...பொருளாளர் ...மாநில ஒட்டு மொத்த நிர்வாகிகளையும் மகிழ்வோடு காயல் நகர மக்கள் சார்பாகவும் ..எங்கள் K.V.A.T.புஹாரி ஹாஜி அறக்கட்டளை சார்பாகவும் உளமார வாழ்த்து வதோடு , இந்த சமுதாயம் உங்களிடம் நிறைய எதிர்பார்போடு காத்து கிடக்கிறது என்பதை இந்த தருணத்தில் உங்கள் முன்பாக இந்த வளைய தளத்தின் மூலமாக பதிவு செய்கிறேன் .

ஒன்று சேர்வோம் ! எல்லா நிலைகளிலும் வென்று காட்டுவோம் !! அல்லாஹ் அக்பர்!

என்றும் பாசத்துடன் ,

சமுதாய நலன் நாடும் சகோதரன் ,

K.V.A.T.ஹபீப் முஹம்மத்
தோஹா
கத்தார்
kvat.habib@gmail.com
00974 55657147


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:முஸ்லிம் லீக் கட்சியின் ப...
posted by sulaiman lebbai (RIYADH - S.ARABIA) [14 September 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8134

முஸ்லிம் லீக் கட்சியின் பொது செயலாளராக அபூபக்கர் மீண்டும் தேர்வு செய்து இருப்பதை அறிந்து மிகுந்த சந்தோஷம். அந்த பதவிக்கு மிக தகுதியான நபர். அவருடைய வேகமான, திறமையான பணிகள் தொடர வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:முஸ்லிம் லீக் கட்சியின் ப...
posted by K S Muhamed shuaib (Kayalpatnam) [14 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8135

முஸ்லீம் லீக் குறித்து எனக்கு மாறுபாடான அபிப்பிராயம் இருப்பினும் ஒரு அகில இந்திய கட்சியின் பொது செயலாளராக நமதூரை சார்ந்த ஒரு தம்பி பதவி வகிப்பது நமக்கெல்லாம் நிச்சயம் பெருமை தரும் விஷயம்தான். தம்பியின் பனி சிறக்க வாழ்த்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:முஸ்லிம் லீக் கட்சியின் ப...
posted by kudack (doha-qatar) [14 September 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 8138

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்புள்ள காக்கா அபு பக்கர் அவர்கள் மீண்டும் பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டது அவரின் சேவை,அயராத உழைப்பினால், உங்களுக்கு கிடைத்த இந்த வெற்றியால் நம் ஊருக்கும் பெருமை கிடைத்துள்ளது. உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்.என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். இன்னும் பல பதவிகள் உங்களுகாக காத்திருகிறது,

Administrator: தங்களின் முழு பெயரை சமர்ப்பித்து ஒத்துழைக்கவும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. முஸ்லிம் லீக் கட்சியின் ப...
posted by Solukku Seyed Mohamed Sahib SMI (Jeddah) [14 September 2011]
IP: 168.*.*.* United States | Comment Reference Number: 8140

அன்பின் அபூபக்ர் உனது பொதுப்பணி சிறப்பு பெற்றிட துஆ செய்கின்றேன். நீ செல்லும் இடத்திலெல்லாம் உன் சமுதாய சிந்தனை கொண்டு எல்லோரையும் ஒன்று சேர்ப்பாய். நட்தூரில் இக்ரா உதயத்திற்கு உனது பங்கையும் யாரும் மறந்திட முடியாது. உனது பொது வாழ்வும் புற வாழ்வும் அக வாழ்வும் மேன்மை பெற்றிருக்க எல்லாம் வல்ல அல்லா அருள்புரிவாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:முஸ்லிம் லீக் கட்சியின் ப...
posted by ALS maama (Kayalpatnam) [14 September 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 8144

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் பொது செயலாளராக காயல் நகர கே.ஏ.எம். அபூபக்கர் என்ற எனது அன்புத்தம்பி தேர்வு செய்யப்பட்டது .இன்றைய பத்திரிகையிலும், இணைய தளத்திலும் கண்டேன் ,மிக்க மகிழ்ச்சி .

தமிழக மக்களுக்கும், பிறந்த பூமியான காயல் நகரின் பல்துறை வளர்ச்சிக்கும் உங்களின் சேவை தேவை . இஸ்லாமிய பெண்களின் கல்வி மறுமலர்ச்சிக்கும் , தொழிற்கல்விக்கும், உங்களின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் .

நமதூரில் இதுவரை எந்தவித உற்பத்தி தொழிற்சாலையும்மில்லை . அதனால் நமதூர் மக்களும் , அருகாமையில் உள்ள மக்களும் சிறு சிறு கூலி வேலைகளில் மூழ்கி இருக்கிறார்கள். முக்கிய பொறுப்பில் இருக்கும் உங்கள் சிந்த்தனையில் இத்தகைய கருத்தை வைக்க ஆசைபடுகிறேன்.

உங்களை பொது செயலாளராக தேர்வு செய்தது குறித்து எனது வாழ்த்துக்களையும், உள்ளப்பூர்வமான துஆக்களையும் இறைவனிடம் கேட்டுக்கொள்கிறேன் . நீங்கள் எடுக்கும் அனைத்து நன்மையான செயல்களை அல்லாஹ் வெற்றிபெற செய்வானாக , ஆமீன்.

எழுத்தாளர், பொதுசேவை

ALS ,
தலைவர் மஜ்லிசுல் கௌது சங்கம் ,
சீதக்காதி நூலகம் ,
ஆலோசகர் ரஹ்மானியா பள்ளி , கல்வி வளர்ச்சிக்குழு ,
அமைப்பாளர் - carrybag ஒழிப்பு இயக்கம் ,(2005 முதல் )
காயல்பட்டினம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:முஸ்லிம் லீக் கட்சியின் ப...
posted by Muthu Muhammad (Dubai) [14 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8148

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நண்பருக்கு வாழ்த்துக்கள்.
தாய்ச்ச்சபைக்கு நன்றிகள்.

தங்களுடைய சமுதாய பணிகள் அல்லாஹ்வின் அருளோடு சிறப்பாக நிறைவேற பிரார்த்திக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:முஸ்லிம் லீக் கட்சியின் ப...
posted by s.a.h.dawood naina (qatar) [14 September 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 8150

மப்ரூக் .மப்ரூக்,

எனது அன்புத்தம்பி இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் பொது செயலாளராக தேர்வு செய்யபட்டமைக்கு வாழத்துகள்,தொடர்ந்து இவருடைய சமுதாய பணி தொய்வு இல்லாமல் தொடர்ந்திட மீண்டும் ஒருமுறை என் குடும்பத்தினரோடு சேர்ந்து வாழத்துகிறேன்,எல்லாம் வல்ல இறைவன் உனக்கு நீடித்தே ஆயுள் தந்தருள்வானாக ஆமீன்,

சாளை S.A.H. தாவுத்நெய்னா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:முஸ்லிம் லீக் கட்சியின் ப...
posted by mohmedyounus (Chennai ) [15 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 8190

சகோதரர் ஹபீப் அவர்களுக்கு,

இங்கே,கமெண்ட் அடித்தவர்கள் எல்லோரும் தாய் சபையை பாராட்டவில்லை. அபுபக்கர் என்ற தனி நபரையே பாராட்டி இருக்கிறார்கள். அபுபக்கர் மூலமாக தாய் சபை வெளிச்சம் போட்டு காட்டப்பட்டு உள்ளது.அவ்வளவு தான்.

கண்ணியத்திற்குரிய காயிதமிள்ளத் கண்ட தாய் சபை இன்று இல்லை.

அன்னாரின் மறைவிற்கு பிறகு, வந்த தலைவர்களின் செயல்பாட்டின்மையாலும், விவேகமற்ற தன்மையாலும், அது சிறுக,சிறுக தேய்ந்து, இன்று அது தோழமை கட்சி என்று கூட அழைக்க தகுதி இழந்து, இன்று அது "கழகங்களின் சிறுபான்மை அணி" என்ற அந்தஸ்துக்கு தள்ளப்பட்டு விட்டது.

இதற்கு, கடந்த கால அதன் போக்கை பார்த்தல், அறிந்து கொள்ளலாம்.

இன்று முளைத்த கட்சியான கொங்கு வேள முன்னேற்ற கட்சிக்கும், ம.ம க விற்கும் தனி சின்னத்தில் போட்டியிட அனுமதிக்கும் கழகங்கள், நூற்றாண்டு கட்சியான தாய் சபை கேட்டல் மட்டும் காத தூரம் ஓடுவதன் மர்மம் என்ன? இதற்கு என்ன காரணம்என்ன? என்று சற்றேனும் அலசி பாருங்கள்.

கடந்த பாராளு மன்ற தேர்தலிலே, ராமநாதபுறத்தில் மட்டும் , ம.ம.க வை தனி சின்னத்தில் நிற்க சொன்ன கழகம் ,தாய் சபையை மட்டும்,வேலூரில் சூரியன் சின்னத்தில் நிற்க சொன்னதன் காரணம் என்ன ? என்பதை நாம் என்றாவது யோசித்து பார்த்தது உண்டா?

சட்டசபையில் ஜவஹிருல்லாஹ் ம.ம க உறுப்பினர். ஆனால், அப்துல் ரஹ்மான் தி.மு.க நாடாளு மன்ற உறுப்பினர் என்று தானே பதிவேட்டில் உள்ளது. இது எப்போதாவது நம்மை உறுத்தியது உண்டா?

பிளவு பட்ட சமுதாய இயக்கங்களின் இணைப்பு விழா, காயித மில்லத் மன்ஜிலில் அல்லவா நடத்த பட வேண்டும். அண்ணா அறிவாலயத்தில் அல்லவே.!

துறைமுக தாய் சபை வேட்பாளர் அல்தாப் ஹுசைன் அவ்வாறு தானே இணைந்தார்.ஒரு வேலை, வை.கோ. தி.மு.க. வில் இனைய வந்தால் அதை காயித மில்லத் மன்ஜிலில் வைத்து நடத்த தி. மு. க அனுமதிக்குமா? இது நம் சுய மரியாதைக்கு விடப்பட்ட சவால் அல்லவா?

தாய் சபை நடத்திய எந்த சமுதாய மாநாட்டிலாவது, கழகங்களின் தலைவர்களை அழைக்காமல் நடத்தியது உண்டா? அதில், தோழமை கட்சி தலைவர்களை,கடை மட்ட தொண்டன் வரை முகம் சுளிக்கும் அளவுக்கு புகழ்ந்து பாராட்டி பேச உங்கள் தலைவர்களுக்கு எப்படி மனம் வந்தது? நீங்கள் அடிக்கும் போஸ்டர்களில் கூட, கண்ணியதிகுரிய காயித மில்லத், மரியாதைக்குரிய சிரார்ஜுல்மிள்ளதிற்கு பதில் அண்ணாவும், கருணாநிதியும், ஸ்டாலினும்,ஜெயலலிதா அம்மையாரும் தானே இடம் பிடித்தார்கள்.

கண்ணியத்திற்குரிய காயித மில்லத் கண்ட தாய் சபை, தேர்தலுக்கு மட்டும் பிறந்தது அல்லவே. மருத்துவ முகாம்கள், இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட துயர் துடிப்பு பணி, கல்வி வழிகாட்டும் முகாம்கள், இரத்த தான முகாம்கள் , மதுவுக்கு எதிரான பிரச்சாரங்கள்- தாய் சபை நடத்தியது எத்தனை?

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் தாய் சபை, பாபரி மஸ்ஜித் போராட்டத்திற்கு போஸ்ட் கார்டு அல்லவா அனுப்ப சொல்லுகிறது.இதற்கு பெயர்தான்" இந்திய யூனியன் முஸ்லிம் லீகா?." போராட்டம் நடத்தியவர்களை எல்லாம் தீவிரவாதிகளின் போராட்டம் என்றும், சமுதாயத்தை பிளவு படுத்த நடத்திய போராட்டம் என்று அல்லவா கொச்சை படுத்த பட்டது

இந்த காரணங்களை எல்லாம், கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எரிந்து சொல்ல தேவை இல்லை. கடை மட்ட தொண்டன் கூட அறிவான். விரக்தியில் இருக்கும் இன்னும் சில தொண்டர்கள் என் காதில் போட்ட குமுறல்களின் விளைவாய் இந்த மடல்.

என்றும் நட்புடன்

முஹம்மது யூனுஸ்.
முன்னால் நகர அமைப்பாளர்,
எம்.எஸ்.எப். காயல்பட்டணம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:வரலாற்றுப் பேரியக்கம் முஸ்லிம் லீக்
posted by கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் (சென்னை) [19 September 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 8479

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எனக்கு வாழ்த்து தெரிவித்து, துஆச் செய்த நல் உள்ளங்களுக்கு மிக்க நன்றி. பல லட்சம் உறுப்பினர்களை கொண்ட வரலாற்றுப் பேரியக்கத்தில் ஆயிரத்திற்கு ஒரு மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் என்ற வகையில் அங்கம் பெற்றிருந்த 41 மாவட்டங்களிலிருந்தும் வந்தவர்கள் 41 வயதே உடைய இந்த எளியேனை மாநில பொதுச் செயலாளராக ஏகமனதாக தேர்வு செய்தனர். இது வரலாற்று பெருநகர் காயல்பட்டினத்திற்கு நம் சமுதாயம் அளித்த பெருமையாக கருதுகிறேன். அப்பொறுப்பிற்குரியவனாக பணியாற்ற துஆச் செய்யுங்கள். நமது ஊரின் ஒற்றுமை, முன்னேற்றம், தனி மனித ஒழுக்கம், தொலைநோக்கு பார்வை என நாம் ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றது.

ஒரு விளக்கத்தை நான் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்திய சுதந்திரத்திற்கு முன் சர் ஆகாகான், மெளலானா முஹம்மது அலி, சவுக்கத் அலி, ஜின்னா சாகிப், சுதந்திரத்திற்கு பின் காயிதெ மில்லத், சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாகிப் மறுமலர்ச்சி பத்திரிக்கை ஆசிரியர் நாவலர் திருச்சி ஏ.எம். யூசுப் சாகிப், ஷரீஅத் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிலை நிறுத்திய குலாம் மஹ்முது பனாத்வாலா சாகிப், அரபி மொழியை அரசு பாடத்தில் சேர்த்த கேரள முன்னாள் முதல்வர் முஹம்மது கோயா, பாங்கு ஒலிக்க தடை செய்த போது எதிர்த்து வீர முழுக்கமிட்டு தடுத்த ரவண சமுத்திரம் பீர் முஹம்மது, உள்ளிட்ட தியாக தலைவர்கள் கட்டிக் காத்த வரலாற்று பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக். இந்திய முஸ்லிம்களுக்கு எண்ணற்ற வாழ்வியல் நன்மைகளை பெற்றுத் தந்த இந்த பேரியக்கம் தவறான கட்சி என்பது முற்றிலும் தவறான வாதம்.

கட்சி மாநாடுகளில் அரசியல் தலைவர்களை அழைத்தது தவறு என்று சொல்ல முடியாது. அவர்கள் வருகையால் பல கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு சமுதாயம் நன்மை அடைந்ததை யாரும் மறுக்க முடியாது. மாநாட்டு மேடையில் அந்த தலைவர்களை அதிகம் புகழ்ந்தது எங்களுக்கும் உடன்பாடான ஒன்றல்ல. அந்த ஒன்றுக்காக மட்டும் ஒட்டு மொத்த இயக்கத்தை எப்படி குறை கூற முடியும். பி.ஜே.பி யில் இருக்கும் வாஜ்பாயை குறிப்பிடுவது போல் முஸ்லிம் லீகில் இருக்கும் எங்களை RIGHT MAN IN WRONG PARTY என்ற குறிப்பிடுவதை சமுதாய உணர்வு உள்ள யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. வரலாற்று பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல்பாடுகளில் சில குற்றம் குறைகள் இருக்கலாம், அவைகளை காலத்தால் எங்களை போன்றவர்கள் அவ்வப்போது சுட்டிக்காட்டி திருத்தி வருகின்றோம். தினமும் போராட்டம் நடத்தியவர்கள் ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களாக ஆன பின் சமுதாயத்திற்கு சில காரியங்களை செய்ய வேண்டுமானால் முதல்வரை ’சமுக நீதி காத்த மாபெரும் வீராங்கனை’ என இன்று புகழ்ந்து கொண்டு இருப்பதையும் நீங்கள் பார்க்கிறீர்கள். தனி மனித புகழ் கூடாது என சொன்னவர்களின் நிலையும் இப்படி தான். மொத்தத்தில் நான் எந்த இயக்கத்தையும் புன்படுத்த விரும்பவில்லை.

இறைவன் நம் எண்ணங்களையே பார்க்கின்றான்.

ஒன்றுபடுவோம் வெற்றி பெறுவோம்

அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மீண்டும் என் நன்றி.

அன்புள்ள,
கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்
மாநில பொதுச் செயலாளர், இ.யூ. முஸ்லிம் லீக்
நிர்வாக இயக்குனர் – வெளியீட்டாளர், ’மணிச்சுடர்’ நாளிதழ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:முஸ்லிம் லீக் கட்சியின் ப...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH KSA) [21 September 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 8559

என் அன்பு சகோதரர் அபூபக்கர் மீண்டும் தாய் சபையின் மாநில பொது செயலாளர் ஆக தெரிவு ஆகி இருப்பதை அறிந்து மட்டில்லா மகிச்சி அடைகிறேன். சமுதாய பணி சிறக்க மனமுவந்து வாழ்த்துகிறேன். நன்றி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved