வரும் நகர்மன்ற தேர்தலை கருத்தில் கொண்டு நகரில், நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. அக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கடந்த சில தினங்களுக்கு முன் 1-வது வார்டு கோமான் ஜமாஅத்தார்கள் ஒருமித்த கருத்தில் பொது வேட்பாளரை தேர்வு செய்தார்கள்.
அதன் தொடராக, நமதூரின் பைபாஸ் ரோடு, சீதக்காதி நகர், உச்சிமாகாளியம்மன் கோவில் தெரு, மங்கள விநாயகர் கோயில் தெரு மற்றும் சிவன்கோயில் தெரு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 15-வது வார்டில் உள்ள பிரமுகர்களை நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் நிர்வாகிகள் நேற்று (11/09) இரவு அப்பகுதிக்கு சென்று அவர்களுடன் சுமூகமாக ஓர் குடையின் கீழ் எவ்வாறு தேர்தலை சந்திப்பது, அதற்கான சாத்தியக் கூறுகள் என்ன என்பதனை விரிவாக விவாதித்தனர்.
நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழு நடத்திய கலந்தாலோசனைக்கு பிறகு சம்மந்தப்பட்ட பிரதிநிதிகள் இன்ஷாஅல்லாஹ் விரைவில் தங்களது ஜமாஅத்தை கூட்டி நல்ல முடிவை எடுப்பதாக அறிவித்துள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன்,
செய்தி தொடர்பாளர், நகராட்சி தேர்தல் ஓருங்கிணைப்பு குழு. |