விரைவில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் உள்ளாட்சித் தேர்தலின்போது, காயல்பட்டினம் நகர மக்களுக்கு நகர்மன்றத் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக துவக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது MUNICIPAL ELECTION GUIDANCE ASSOCIATION - MEGA எனும் ‘நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘.
அக்குறிக்கோளின் ஒரு அங்கமாக நகரளிவிலான கட்டுரை போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை வருமாறு:-
நிறைவான அருளன்பின் இறைஏகன் திருப்பெயரால்!
அன்புநிறை காயல் சொந்தங்களே! அஸ்ஸலாமுஅலைக்கும்!
நல்லதோர் நகர்மன்றத்தை அமைக்க,மக்களுக்கு வழிகாட்டும் எங்களின் முயற்சியின் தொடர்ச்சியாக,நகர மக்களுக்கான மாபெரும் கட்டுரைப் போட்டிகள், இரண்டு தலைப்புகளில் அறிவிக்கப்பட்டு அதற்கான பிரசுரங்கள், கடந்த வெள்ளியன்று இரண்டு ஜும்மாக்கள் மற்றும் மக்கள் கூடும் முக்கிய இடங்களில் விநியோகிக்கப்பட்டது. அதன் நகலை இத்துடன் தங்களது பார்வைக்காக இணைத்திருக்கிறோம்.
போட்டிக்கான தலைப்புகள்:
1) நமது நகர் மன்றத் தலைவரை எவ்வாறு முடிவு செய்ய வேண்டும் ?
2) நகர்மன்றத் தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களின் தகுதியும், பண்பும்
விதிமுறைகள்:
1) A4 அளவு தாளில் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் எழுத வேண்டும்
2) போட்டியில் கலந்து கொள்ள குறைந்தபட்சம் பதினெட்டு வயது நிரம்பியிருக்க வேண்டும்
3) ஆண்கள்,பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியே இருவகைப் பரிசுகள் வழங்கப்படும்
4) கட்டுரைகளை ஒப்படைக்க கடைசி நாள்: செப்டம்பர் 18
5) MEGA வின் உயர்மட்டக்குழு,செயற்குழு உறுப்பினர்களும் அவர்களது குடும்பத்தினரும் கலந்துகொள்ள அனுமதி இல்லை
6) கட்டுரையுடன், எழுதியவருடைய பெயர், வயது, விலாசம், முகவரி மற்றும் தொலைபேசி எண் விவரமாகக் குறிப்பிடப்பட வேண்டும்
பரிசு விவரங்கள்:
முதல் பரிசு: ரூபாய் ஆயிரம்
இரண்டாம் பரிசு: ரூபாய் எழுநூற்று ஐம்பது
மூன்றாம் பரிசு: ரூபாய் ஐநூறு
இந்தப்பரிசுகள் ஆண்களில் இருவருக்கும், பெண்களில் இருவருக்குமாக மொத்தம் ஒன்பதினாயிரம் ரூபாய் வழங்கப்படவிருக்கிறது.
கட்டுரை ஒப்படைக்கப்பட வேண்டிய இடங்களின் முகவரிகள்:
1) MEGA அலுவலகம்
2) AKM ஜூவல்லர்ஸ்
3) ஸ்டார் டெக்ஸ்டைல்ஸ்
4) மாஸ்டர் கம்ப்யுடர் அகாடமி
5) LTS ஜூவல்லர்ஸ்
நகர மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த உங்கள் கட்டுரைகள் பயன்படுத்தப்படும். பரிசுக்கான கட்டுரைகளை தேர்வு செய்யும் முழு அதிகாரம் MEGA உயர்மட்டக் குழுவிற்கு மாத்திரமே!
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
கவிமகன் காதர்,
செய்தித் தொடர்பாளர், MEGA.
|