காயல்பட்டினத்தில் பல ஆண்டு காலங்களாக குறைந்தழுத்த மின்சார விநியோக பிரச்சனை (Low Voltage) உள்ளது. இதனை நிவர்த்தி செய்யும் முகமாக - கடந்த டிசம்பர் மாதம், ஐக்கிய பேரவை சார்பில் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவ்வேளையில் - காயல்பட்டினத்தில் புதிய 33/11 KV துணை மின் நிலையம் அமைக்க மின்சார வாரியம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அதற்காக நிலம் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. நிலத்தினை வாங்க தனவந்தர்களின் நிதி உதவியும் அக்கூட்டத்தில் கோரப்பட்டது.
இது குறித்து - காயல்பட்டணம்.காம் கடந்த மார்ச் மாதம், தகவல் அறியும் சட்டத்தின் கீழ், மின்சார வாரியத்திடம் கேட்டிருந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது, துணை மின் நிலையத்திற்கான 1 ஏக்கர் நிலம் - LF ரோடு பகுதியில் துளிர் பள்ளிக்கூடத்திற்கு அருகில் அல்லது திருச்செந்தூர் நெடுஞ்சாலை பகுதியில் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலத்தினை தனியாரிடம் வாங்க ஆகும் தொகையினை திரட்டும் வேலையை காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை மேற்கொண்டு வந்தது. இதற்கான கோரிக்கை ஐக்கிய பேரவை சார்பாக உள்ளூர் மற்றும் வெளியூர்களில் வாழும் காயலர்களுக்கு வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சுமார் 23 லட்சம் ரூபாய் திரட்டப்பட்டதாக - செப்டம்பர் 8 அன்று நடந்த ஐக்கிய பேரவை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் துணை மின் நிலையத்திற்கான நிலம் - LF சாலையில், துளிர் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் வழியில் (சாலையின் மேற்கு புறமாக) - வாங்கப்பட்டு, செப்டம்பர் 2 (வெள்ளிக்கிழமை) அன்று மின்சார வாரியம் பெயரில், ஐக்கிய பேரவை சார்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்ட் ஒன்றுக்கு 100 ரூபாய் என்ற மதிப்பில், சுமார் 9000 ரூபாய் பெறப்பட்டு இந்த நிலம் மின்சார வாரியத்திற்கு விற்கப்பட்டுள்ளது.
1. நல்ல உள்ளங்களுக்கு ஒட்டு மொத்த காயலர்களின் சார்பாக உளப்பூர்வமான நன்றியும் பாராட்டும். posted byசட்னி.செய்யது மீரான். (காயல்பட்டினம் )[10 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7845
அஸ்ஸலாமு அலைக்கும்....
மின் வாரியத்திற்கு இடம் அளிக்க 15 நாளில் இருபத்தி மூன்று லட்சம் ரூபாய் வசூல் செய்து இடமும் வாங்கி
கொடுத்த நல்ல உள்ளங்களுக்கு ஒட்டு மொத்த காயலர்களின் சார்பாக உளப்பூர்வமான நன்றியும் பாராட்டும்.
இதற்காக வேண்டி உழைத்த,உதவிய
நல்ல உள்ளங்களாகிய உங்கள் அனைவருக்கும் இரு உலகிலும்
அல்லாஹ் நற் கூலியினை தருவானாக ஆமீன்.
அன்று நடந்த பேரவை கூட்டத்தில் இந்த நல்ல செய்தி
நம் மக்கள்களின் காதுகளில் ஏனோ உரக்க கேட்கவில்லை போல் உணர்கின்றோம்.இது யார் தவறோ ?????
3. Re:நகரில் துணை மின் நிலையம் ... posted byAbdulKader (Abu Dhabi)[10 September 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7849
அஸ்ஸலாமு அழைக்கும்,
ஐக்கிய சபையை கொண்டு நமதூர் மக்கள் பயன் பெற்ற அம்சங்களில் இது ஒரு முக்கியமான ஒன்று.
ஐக்கிய சபைக்கு எனது மனமார்ந்த நன்றிகள், ஜசாகல்லாஹு கைராஹ்.
முக்கியம் நமக்கு இப்படி ஒரு ஐக்கிய ஜமாஅத் அமைப்பு இருப்பதால் இந்த காரியத்தை நம்மால் செய்ய இயன்றது. அல்லாஹ் நம்மிடையே ஒற்றுமையை கண்டிப்பாக நிலைநாட்டுவான், இன்ஷாஅல்லாஹ். ஆனால் நமக்கு ஐக்கிய சபை எடுக்கும் முடிவுகளில் நம்பிக்கையும், பொறுமையும் வேண்டும்.
4. Re:நகரில் துணை மின் நிலையம் ... posted byAbdul Wahid Saifudeen (A.W.S.) (Kayalpatnam)[10 September 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 7851
Collecting such an amount from general public is a Herculean Task. Aikkiya Peravai (A.P) did it in a very short time. A.P's effort should be congratulated.
As far as the the land deal between A.P. and E.B. is concern, Rs 100 for a cent ? The amount it received from government (E.B.) is very very low.
( Rs 9,000 for an acre that works out to Rs 90 /cent not Rs 100)
When we buy a land, we need to pay stamp duty (I think 9% of the value) according to the rate fixed by government. Government has fixed the land rate and it varies from area to area. Nowhere in Kayalpatnam government's rate is as low as Rs 100 / cent. That too near Thulir school ...?. Impossible.
I suggest Kayalpatnam.com to write to Tamil Nadu government using RTI to find out the government fixed rate for that particular land and help AP to get the fair, if not better deal from the E.B.
5. Good job & Appreciated.. posted byAhamed mustafa (Dubai)[10 September 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7858
AJ's great effort in collecting the funds in a record time is exemplary.This is one of the good deeds that we are seeing, from this body.
This reminds us of our ancestors who have done such noble acts, sometimes even individually. well appreciated...
6. Sub-station- Superb Achievement posted byAbdul Kader (U.S.)[10 September 2011] IP: 76.*.*.* United States | Comment Reference Number: 7863
It is really very much heartening to notice this good deed. This act could be compared to that of the water pumping project (Authoor) that was established in the good old days by our ancestors.
This is no mean achievement. Having read depressing and misleading news against ஐக்கிய பேரவை in this website, I was very much disillusioned with ஐக்கிய பேரவை. However, when I was in Kayal a few months ago, I happened to meet our Late Beloved S.K. He ushered me into the office and explained the activities of the ஐக்கிய பேரவை. He was listing accomplishments such as the establishment of Madurai Muthu Chavadi, Tirunelveli Muthu Chavadi, procurement of Land that was misused in the Tsunami Rehabilitation Scheme, Discreet Matrimonial Mediations etc. and many more which I cannot recollect. He further added that certain activities of ஐக்கிய பேரவை such as Discreet Matrimonial Mediations cannot be publicized. After explaining in greater details of their work he blamed young people like us for not actively involving in its activities.
So, rather than cursing the darkness let us light a candle. Let us leave our past behind and join hands with them for a prosperous Kayal.
7. Re:நகரில் துணை மின் நிலையம் ... posted bySADAK V D THAMBY (Guangzhou(China))[10 September 2011] IP: 69.*.*.* United States | Comment Reference Number: 7866
Rs.9000 க்கு பத்திரபதிவு செய்திருப்பதில் தவறு ஒன்றுமிருக்காது.பத்திரபதிவு விதிகளுக்குட்பட்டு செய்திருப்பார்கள்.
நம் நோக்கம் மின்சாரவாரியத்திற்கு இலவசமாக நிலம் கொடுப்பதுதான்.
எல்லாவற்றிற்கும் கேள்விகேட்பதும் , இணையதளங்களில் பதில் அளிப்பதும் நடைமுறை சாத்தியமில்லை
நமதூரின் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றான குறைந்த மின் அழுத்தம் ஐக்கிய பேரவையின் மாபெரும் முயற்ச்சியால் இன்ஷா அல்லாஹ் முடிவுக்கு வருகிறது,அல்ஹம்துலில்லாஹ்.பெரியவர்களின் இந்த முயற்ச்சி நமதூருக்கு நல்ல வெளிச்சத்தை தர போகிறது.
நாம் எல்லா விஷயத்திலும் பேரவையை குறை சொல்ல கூடாது.நல்லதை பாராட்டவேண்டும்.குறையை நாமும் உள்ளில்(பேரவையில்) இருந்து எடுத்து சொல்லவேண்டும். அவர்களும் என்ன வேற வேல வெட்டி இல்லாமலா இங்கே வந்து வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். அல்லது அவர்கள் வீட்டு காரியத்தை செய்ய வந்து இருக்கிறார்களா?
அவர்களும் நம்மை போல ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இருக்கிறார்கள்.அவர்களும் என்ன சொல்கிறார்கள் என்றால் இளைஞ்சர்கள் பேரவைக்கு வாருங்கள், நீங்கள் நடத்துங்கள் என்றுதான் சொல்கிறார்கள்.
ஆகவே நாம் நல்லதை பாராட்டுவோம், தப்பு செய்தால் சுட்டி காட்டுவோம். கண்டிப்பாக கேட்பார்கள். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம், இன்ஷா அல்லாஹ் நமதூருக்கு நிறைய்ய வேலைகள் செய்ய வேண்டி இருக்கிறது. ஒன்றாக செய்வோம். நமதூரை குறைவில்லாத ஊராக மாற்றுவோம். எல்லாவற்றிற்கும் அல்லாஹ் தௌபீக் செய்வானாக.
10. Re:நகரில் துணை மின் நிலையம் ... posted byMohiadeen (Phoenix)[11 September 2011] IP: 71.*.*.* United States | Comment Reference Number: 7904
Great effort by great people:
------------------------------------
It is good achievement by our respected seniors.
I was in a bad perception that these people would always come to Madurai Muthu Savadi had special briyani in hotel Amsavalli and then they would disappear.
May be i did not know these people past achievements. Thanks to Kayalpatnam.com to highlight their achievements.
12. தர்போது காயலர்களுக்கு புரியும் பேரவையின் அவசியம். posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[11 September 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7940
அஸ்ஸலாமு அழைக்கும்.
பேரவையின் ஈடுபாடு ஒரு சில நேரங்களில் தவறாகவோ அல்லது செயல் இழந்தோ இருந்தாலும் கூட உண்மையில் மக்களின் மகிழ்வான வாழ்விற்கு மிக குறைந்த கால அவகாசத்தில் இதனை சிரமத்துடன் செய்து முடித்துள்ளார்கள்
என்றால் அது மிகையாகாது.வல்ல அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் ஈருலக பாக்கியத்தை அருள்வானாக ஆமீன்.
13. Re:நகரில் துணை மின் நிலையம் ... posted byK S MUHAMED SHUAIB (KAYALPATNIAM)[11 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7945
மிகவும் ஆக்கபூர்வமான காரியம். நமதூரில் முதன் முதலாக குடிநீர்தொட்டி அமைக்க அன்றுள்ள பெரியவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் யாபகத்திற்கு வருகிறது. ஐகிய பேரவை பனி சிறக்க வாழ்த்துக்கள்....!
அல்ஹம்துலில்லாஹ். நமதூருக்கு துணை மின் நிலையம் அமைய இருக்கும் செய்தி மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும்.
அதைவிட மகிழ்ச்சி இந்த நிலம் ஏற்பாடு நமதூரின் "ஐக்கிய பேரவை'
மூலம் முயற்சித்து ,அதில் வெற்றியும் கிடைத்து இருப்பது.காயல் நகரம்
இன்னும் பல தேவைகளை பெற காத்து இருக்கிறது. அவைகள் "ஐக்கிய பேரவை"
மூலம் நடைபெறவேண்டும் என பெருமிதம் கொள்கிறது.
இந்நேரத்தில் சில "மனக்கசப்புகள் "
ஏற்பட்டது நினைத்து உள்ளம் நோவுகிறது. எப்படி இருந்தாலும் அவைகள் ஒரு தாயுக்கும்,
பிள்ளைக்கும் மத்தியில் நடந்ததாக நினைத்து மறந்து விடுகிறது. தகுந்த ஆலோசனை சொல்ல ,
தன்னலமற்ற, வூர்நல விரும்பிகளான , அனுபவம் வாய்ந்த பெரியோர்களும் ,நல்லவர்களும் ,துடிப்பாக செயல்படும்இளைஞ்சர்களும் ,
வாலிபர்களும் என இரு கைகள் இணைந்தால்தான் "ஓசை " எனும் பொதுசேவை ஏற்படும்.
ஆகவே! நமதூரின் வருங்காலம் செழிப்பு பெற "தாயான "ஐக்கிய பேரவையும்" , சேய்களான
காயல் இணைய தளம் .மற்றும் அனைத்து உலக காயல் நல மன்றங்கள் , ஊரின் அனைத்து
பொதுநல சேவை மன்றங்கள் என அனைவரும் இணைந்து "தனிமரம்" தோப்பாகாது ,பலமரங்கள்
சேர்ந்தே "தோப்பாகும் " என நினைத்து இணைந்து செயல் படுவோம் இன்ஷா அல்லாஹ். வல்ல
அல்லாஹ் அதற்க்கான அனுமதியை வழங்குவானாக ! ஆமீன்! யா ரப்பல் ஆலமீன்!
16. Re:நகரில் துணை மின் நிலையம் ... posted bymackie Noohuthambi (kayalpatnam)[12 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7993
நகரில் துணை மின்நிலையம் அமைக்க ஐக்கிய பேரவை எடுத்த முயற்சிகள், பொருள் உதவி செய்த பெருந்தகைகள் இவர்களை மனமார வாழ்த்துகிறேன். ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தால் செயின் என்று வள்ளுவம் கூறுகிறது. புதிதாக அமைந்துள்ள மக்கள் நலத்தில் அக்கறை உள்ள அரசு இனி இந்த வேலையை ஆறப்போடாமல் உடனடியாக எங்கள் ஊருக்கு வெளிச்சம் தர வேண்டும் என்ற கோரிக்கையையும் புரட்சி தலைவி அவர்களிடம் இதன் மூலம் வேண்டிக்கொள்கிறேன்.
அடுத்து கூட்டுக்குடிநீர் திட்டத்தையும் செயல்படுத்த ஐக்கிய பேரவை முயற்சி எடுத்து, வெற்றி காண நாம் எல்லோரும் அவர்களுக்கு தோள் கொடுப்போமாக.
எதிர்வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் கோமான் தெரு ஜமாஅத் வேட்பாளர் கொடுத்துள்ள உறுதிமொழியை எல்லா வேட்பாளர்களிடமும் பெற்று இந்த ஊரில் எல்லா முஸ்லிம்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள் என்ற நல்ல செய்தியையும் ஐக்கிய பேரவை மக்களுக்கு அறிவித்தால் வாழ்நாள் சாதனயாளர்களாக அவர்கள் மாறி விடுவார்கள் என்பதில் ஐயமில்லை . அல்லாஹ் அந்த நல்ல சூழ்நிலையை இந்த ஊரில் ஏற்படுத்துவானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross