விளையாட்டுத் துறை மூலம் காயலர்களை ஒருங்கிணைக்கும் வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில் ஆண்டுதோறும் க்ரிக்கெட், கால்பந்து மற்றும் கைப்பந்து
உள்ளிட்ட போட்டிகளடங்கிய சுற்றுப்போட்டிகள் காயல் ப்ரீமியர் லீக் என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் சார்பில் - நோன்பு பெருநாளை தொடர்ந்து - காயல்பட்டினம் ஐக்கிய
விளையாட்டு சங்க வளாகத்தில் - காயல் ப்ரீமியர் லீக் கைப்பந்து சுற்றுப்போட்டிகள் நடைபெற்றன. அது குறித்து அவ்வமைப்பு சார்பாக
வெளியிடப்பட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:-:-
கடந்த வெள்ளி (செப்டம்பர் 2), சனி (செப்டம்பர் 3) மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் (செப்டம்பர் 4) நடைபெற்ற வீ-யுனைடெட் காயல் பிரிமியர்
லீக் கைப்பந்து போட்டியில் 8 அணிகள் பங்குபெற்றன. இப்போட்டியின் முதல் சுற்று லீக் முறையில் வெள்ளி மற்றும் சனி கிழமைகளில்
நடைபெற்றது. இதன் அரையிறுதிப் போட்டி மற்றும் இறுதிப் போட்டிகள் நேற்று (04/09) நடைபெற்றது.
முதலாவது அரையிறுதியில் மேன் யுனைடெட் அணியும் கேளரி பேர்ட்ஸ் அணியும் விளையாடின, இதில் மேன் யுனைடெட் அணி வெற்றி பெற்றது.
இரண்டாவது அரையிறுதியில் ஸ்டேஞ் ஸ்பைக்கர்ஸ் அணியும், நைட்ரைடர் அணியும் விளையாடின, இப்போட்டியில் நைட்ரைடர் அணி
வெற்றிபெற்றது.
பின்னர் நடைபெற்ற மூன்றாம், நான்காம் இடங்களுக்கான போட்டியில் கேளரி பேர்ட்ஸ் அணி மூன்றாம் இடத்தையும், ஸ்டேஞ் ஸ்பைக்கர்ஸ் அணி
நான்காம் இடத்தையும் பெற்றன.
பின்னர் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த நைட்ரைடர்ஸ் அணியுடன் விளையாடிய மேன் யுனைடெட் அணி இரண்டு நேர் செட்களில்
வெற்றிபெற்று கோப்பையை தட்டிச் சென்றது.
இப்போட்டியின் சிறப்பு விருந்தினராக காவாலங்காவின் துணை செயலாளர் ஜனாப்.ரஃபீக் அவர்கள் கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணிக்கு ரொக்கப்
பரிசினையும், கோப்பையை வழங்கினார்கள். ஏ.கே.எம்.ஜூவல்லர்ஸ் உரிமையாளர்களில் ஒருவரான ஜனாப்.முஹம்மது தம்பி அவர்கள் இரண்டாம்
இடத்தை பிடித்த நைட்ரைடஸ் அணிக்கு கோப்பையையும், ரொக்கப் பரிசினையும் வழங்கினார்கள். மூன்றாம் இடத்தை பிடித்த அணிக்கு கத்தர் காயல்
நல மன்றத்தின் துணை செயலாளர் ஜனாப்.செய்யது முஹியத்தீன் தனிநபர் பரிசுகளையும், ரொக்கப் பரிசுகளையும் வழங்கினார்கள்.
நான்காம் இடத்தை பிடித்த ஸ்டேஞ் ஸ்பைக்கர்ஸ் அணி வீரர்களுக்கு தனிநபர் பரிசுகளையும், ரொக்க பரிசையும் முன்னால் விளையாட்டு வீரரும்
தற்போது துபாயில் பணிபுரிந்து வருபவருமான ஜனாப் சாமு சிஹாபுத்தீன் வழங்கினார்கள்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பாக,
S.R.B.ஜஹாங்கீர்,
அல்தாஃப் எண்டர்ப்ரைசஸ், தைக்கா பஜார், காயல்பட்டினம்.
|